என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    தான் ஏன் காமெடியனாக மாறினேன் என்பதற்கு ஆனந்த்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதை கீழே பார்ப்போம்.
    90-களில் வில்லனாக தமிழ் சினிமாவில் கலக்கிய ஆனந்த்ராஜ் தற்போது காமெடி நடிகராக மாறிவிட்டார். ‘நானும் ரவுடிதான்’ படத்தில் இவருடைய காமெடியை ரசிக்காதவர்களே இருக்கமுடியாது. அந்தளவுக்கு அந்த படத்தில் காமெடியில் கலக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு காமெடி வேடங்களே குவிந்து வருகிறது.

    தான் ஏன் காமெடி நடிகராக மாறினேன் என்பதற்கு ஆனந்த்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து இன்று நடந்த ‘மரகதநாணயம்’ ஆடியோ வெளியீட்டில் மேடையிலேயே கூறிவிட்டார். அப்போது அவர் பேசும்போது, இன்று சினிமாவில் ஒரு ஈ வில்லனாக ஆகிவிட்டது. அடுத்த படத்தில் நாய் வில்லனாக ஆகிவிட்டது.



    அதன்பிறகு, பேய்களெல்லாம் இப்போது வில்லன்களாக மாறிவிட்டன. ஆண் பேய்களாக இருந்தாலும் சண்டை போடலாம். பெண் பேய்களாக வருகின்றது. அப்படியிருக்கையில் நாம் ஏன் வில்லனாக இருக்கவேண்டும் என்றுதான் காமெடியனாக மாறிவிட்டேன் என்றார்.

    இந்த விழாவில் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சந்தோஷ் நாராயணன், அருண் ராஜா காமராஜ், ஆதி, கார்த்திக் நரேன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். 
    மாநகரம் படக்குழுவினருக்கு ரஜினி சர்ப்ரைஸான ஒரு பரிசு கொடுத்துள்ளார். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    சந்தீப் கிஷன், ஸ்ரீ, சார்லி, ரெஜினா கஸாண்ட்ரா, ராம்தாஸ் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் ‘மாநகரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் என்பவர் இயக்கியிருந்தார். டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தை நடத்திவரும்  எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோரும், இன்னும் சில தயாரிப்பாளர்களும் இணைந்துள்ள பொட்டான்சியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.

    பலராலும் பாராட்டப்பட்ட இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினியும் கண்டுகளித்துள்ளார். படத்தை பார்த்தபிறகு அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தியுள்ளார்.



    இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் கூறும்போது, " ஒரு phone call "கண்ணா ஹா ஹா" அவர்தான் அவரேதான் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி மாநகரம் பார்த்துவிட்டு... இன்னிக்கு தூங்கனமாதிரிதான்..” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கும் ரஜினி போட்டு பேசியுள்ளார். ரஜினியின் பாராட்டால் பூரித்துப்போன எஸ்.ஆர்.பிரபு, லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தையும் தயாரிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

    எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் ஏற்கெனவே வெளிவந்த ‘ஜோக்கர்’ படத்தையும் ரஜினி பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 
    தேசிய விருதுபெற்ற ஐஸ்வர்யா ராஜேசுடன் நடித்தபோது தனக்கு பதட்டமாக இருந்ததாக சிபிராஜ் கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    சிபிராஜ்- ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘கட்டப்பாவ காணோம்’. அறிமுக இயக்குனர் மணி சேயோன் இயக்கியுள்ள இந்த படத்தில் சாந்தினி தமிழரசன், காளி வெங்கட், மைம் கோபி, யோகி பாபு, லிவிங்ஸ்டன், உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    இயக்குனர் மணி சேயோன் படம் பற்றி கூறும்போது, இது இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு மீனை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்றார்.



    சிபிராஜ் கூறும்போது, இந்த படத்தில் கதாநாயகன், கதாநாயகிக்கு மட்டுமல்ல, இதில் நடித்த அனைவருக்கும் சமமான முக்கியத்துவம் உண்டு . ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு தேசிய விருது பெற்ற நடிகை. எனவே, அவரோடு நடிக்க முதலில் எனக்கு பதட்டமாக இருந்தது.

    இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமாக மீன் இருந்தும், கதாநாயகி ஐஸ்வர்யாவுடனும் ரொமான்ஸ் செய்ய வாய்ப்பு கிடைத்தது. முதலில் காதல் காட்சிகளில் நடிக்க தயக்கமாக இருந்தது. ஆனால் அவருடைய சகஜமாக பழக கூடிய குணம், என்னை அந்த பதட்டத்தில் இருந்து வெளியே கொண்டு வந்துவிட்டது என்று தெரிவித்தார்.


    தனக்கு ஏன் திடீர் நிச்சயதார்த்தம் நடந்தது என்பது குறித்து நடிகை பாவனா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதை கீழே பார்ப்போம்.
    பாவனாவுக்கும் அவரது காதலரும் படத் தயாரிப்பாளருமான நவீனுக்கும் திடீர் என்று நிச்சயதார்த்தம் நடந்தது. அது ஏன் என்ற கேள்விக்கு பாவனா பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நவீன் மற்றும் அவரது குடும்பத்தார் பெண் பார்க்கும் சம்பிரதாயத்துக்காக எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். இரு வீட்டுக்காரர்களும் பேசிக் கொண்டிருந்தபோது மோதிரம் மாற்றிக் கொள்ளலாமே என்ற பேச்சு கிளம்பியது.

    அதனால் தான் திடீர் என்று நிச்சயதார்த்தம் நடந்து விட்டது. உடனே இதற்கு ஏற்பாடு செய்ததால் நெருங்கிய நண்பர்களுக்குகூட தெரிவிக்க முடியவில்லை. திருமணம் நடக்கும் வரை நிச்சயதார்த்தம் பற்றி யாருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பினேன். ஆனால் தெரிந்து விட்டது” என்று கூறினார்.



    பாவனா தமிழ் மற்றும் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில், ‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ‘தீபாவளி’, ‘அசல்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளனர்.
    அஜித்தை வைத்து முகவரி என்ற படத்தை கொடுத்த இயக்குனர் அடுத்ததாக சமுத்திரகனியை வைத்து படம் எடுக்கவிருக்கிறார். அதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    அஜித் நடிப்பில் வெளிவந்த ’முகவரி’ படத்தை இயக்கியவர் வி.இசட்.துரை. இப்படத்திற்கு பிறகு சிம்புவை வைத்து ‘தொட்டி ஜெயா’,  பரத்தை வைத்து ‘நேபாளி’, ஷாமை வைத்து ‘6 மெழுகுவர்த்திகள்’ ஆகிய படங்களை இயக்கினார். ஆனால், இந்த படங்கள் எல்லாம் பெரிதளவில் பேசப்பட்டாலும், வி.இசட்.துரைக்கு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை வாரி வழங்கவில்லை.

    இந்நிலையில், 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு சமுத்திரகனியின் மூலம் வி.இசட்.துரைக்கு தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் கிடைத்துள்ளது. வி.இசட்.துரை அடுத்ததாக சமுத்திரகனி நடிப்பில் உருவாகவிருக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘ஏமாளி’ என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.



    இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. நிறைய பேரை சுற்றி நடக்கும் கதையாக இது உருவாகவிருக்கிறது. ஜெயமோகன் இப்படத்திற்கு வசனங்களை எழுதவுள்ளார். நிதிஷ்-பிரகாஷ் என இரண்டு ஒளிப்பதிவாளர்கள் இப்படத்தில் பணியாற்றவிருக்கிறார்கள். சுதர்சன் படத்திற்கு எடிட்டிங்கை செய்யவிருக்கிறார். துபாயை சேர்ந்த இசையமைப்பாளர் ஒருவர் இப்படத்திற்கு இசைமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
    பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் ‘பாகுபலி-2’ படத்தின் டிரைலர் நாளை வெளியிடப்படுவதையடுத்து, அந்த டிரைலர் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பாகுபலி-2’ படத்தின் டிரைலர் நாளை வெளியாகப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த டிரைலர் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

    ‘பாகுபலி-2’ டிரைலர் 2 நிமிடம் 20 வினாடிகள் ஓடக்கூடியதாக தயாராகியுள்ளதாம். இந்த டிரைலரில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இடம்பெறும்படியும் அமைக்கப்பட்டுள்ளதாம். படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கிராபிக்ஸ் காட்சிகளில் அற்புதமான சிலவையும் இந்த டிரைலரில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த டிரைலருக்கு தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.



    இந்த டிரைலரை நாளை காலை 9 மணிக்கு திரையரங்குகளில் வெளியிடவுள்ளனர். தெலுங்கில்தான் இப்படத்தின் முதல் டிரைலர் வெளியிடப்படுகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 250 முதல் 300 திரையரங்குகளில் இந்த டிரைலரை ஒளிபரப்பப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், நாளை மாலை 5 மணிக்கு இணையதளங்களில் இந்த டிரைலர் வெளியிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 
    ஈரோட்டில் நடிகர் கமல்ஹாசன் உருவபொம்மையை எரிக்க முயற்சி செய்த இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நடிகர் கமல்ஹாசன் இந்துக்களின் புனித நூலான மகாபாரதம் மற்றும் இந்துக்களின் கலாசாரத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசி வருவதாக கூறி இந்து மக்கள் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்ட இந்து மக்கள் கட்சியினர் ஈரோடு எம்.ஜி.ஆர். சிலை அருகில் நடிகர் கமல்ஹாசனின் உருவபொம்மையை நேற்று எரிக்க முயன்றனர்.


    ஈரோட்டில் நடிகர் கமல்ஹாசனின் உருவபொம்மையை எரிப்பதற்காக இந்து மக்கள் கட்சியினர் ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.

    அப்போது போலீசார், நடிகர் கமல்ஹாசனின் உருவபொம்மையை எரிக்க விடாமல் தடுத்தனர். பின்னர் இந்து மக்கள் கட்சியின் ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ், செயலாளர் ஆறுமுகம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்தி நடிகர் அமீர்கான் தன்னுடைய 52-வது பிறந்தநாளை நேற்று மும்பையில் குடும்பத்தினருடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
    இந்தி நடிகர் அமீர்கான் நேற்று 51 வயது முடிந்து, 52-வது வயதில் அடியெடுத்து வைத்தார். இதையொட்டி, மும்பையில் உள்ள தன்னுடைய வீட்டில் குடும்பத்தினருடன் ‘கேக்’ வெட்டி உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அமீர்கான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் என்னுடைய குடும்பத்தினருடன் இருப்பேன். ஆனால், இப்போது என்னுடைய குடும்பம் விரிவடைந்து விட்டது. மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத் குடும்பத்தினரை என்னுடைய குடும்ப உறுப்பினர்களாக நினைக்கிறேன். என் பிறந்தநாளை அவர்களுடன் சேர்ந்து கொண்டாடி இருந்தால், இன்னமும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.

    என் பிறந்தநாளையொட்டி, மகாவீர் சிங் போகத் குடும்பத்தினரிடம் இருந்து இதுவரை எந்தவொரு பரிசுப்பொருளும் வரவில்லை. அவர்கள் ஏதாவது தருவார்கள் என்று இன்னமும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.


    நடிகர் அமீர்கான் பாந்திராவில் உள்ள வீட்டில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய போது எடுத்த படம்.

    என்னுடைய தாயாரும் பிறந்தநாள் பரிசு தரவில்லை. ஆனால், ஒவ்வொரு பிறந்த நாளன்றும் செய்து தருவது போல், இந்த ஆண்டும் ‘சீக் கேபப்ஸ்’ (ஒரு வகை உணவு) செய்து கொடுத்தார். நேற்று இரவு (அதாவது நேற்று முன்தினம்) 12 மணிக்கு வழக்கம்போல், புத்தகம் படித்தேன். அதன்பின்னர், படுத்து தூங்கினேன். காலையில் எழுந்ததும் ஏராளமான வாழ்த்துகள் எனக்காக காத்திருந்தன.

    என்னை பொறுத்தமட்டில், படங்களில் நான் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரத்துக்கு உண்மையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும். சில சமயங்களில் உடல் அளவில் மாற்றம் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்படும்.

    எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போது கடினமாக பயிற்சி மேற்கொள்வேன். வரும்காலத்திலும் இதனை பிரதிபலிப்பேன். இதனால், என்னுடைய ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். ஆனாலும், அதனை பற்றி நான் சிந்திப்பது இல்லை.

    இவ்வாறு அமீர்கான் தெரிவித்தார்.

    அமீர்கான் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியாகி வசூலை வாரி குவித்த ‘தங்கல்’ படம், மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    ரசிகர் ஒருவர் வித்யாபாலனிடம் தவறான நடக்க முயன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    ‘தி டர்டி பிக்சர்ஸ்’, ‘கஹானி’ ஆகிய படங்களின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் பாலிவுட் நடிகை வித்யாபாலன். இவர் எப்போதும் ரசிகர்களுடன் நெருங்கி பழகும் தன்மை கொண்டவர். ரசிகர்களும் வித்யாபாலனிடம் அத்துமீறாமல் நடந்துகொள்வர். அதனால், தொடர்ந்து ரசிகர்களிடம் அன்பாக நடந்துகொண்டு வருகிறார் வித்யாபாலன்.

    அப்படியிருக்கையில்,  சமீபத்தில் ரசிகர் ஒருவர் வித்யாபாலனிடம் அத்துமீறி நடந்துகொண்டுள்ளார். கொல்கத்தா ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்த வித்யாபாலன் ரசிகர்களை நோக்கி கையசைத்துக் கொண்டே சென்றிருக்கிறார். அப்போது, ரசிகர்களில் ஒருவர், அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.



    உடனே வித்யாபாலனும் ரசிகரின் வேண்டுகோளை ஏற்று அவருடன் செல்பி எடுக்க தயாரானார். அப்போது, அந்த ரசிகர் வித்யாபாலன் தோள்மீது திடீரென்று கையை போட்டுள்ளார். இதைப் பார்த்ததும் வித்யாபாலன் அந்த ரசிகரை எச்சரித்துள்ளார். உடனே மன்னிப்புக்கேட்ட ரசிகர், மீண்டும் வித்யாபாலனுடன் செல்பி எடுக்க கேட்க, மறுபடியும் அவரது தோள்மீது கையை வைத்துள்ளார் அந்த ரசிகர். இதையடுத்து, அந்த ரசிகரை பயங்கரமாக திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார் வித்யாபாலன்.

    இந்த செய்தியை சமீபத்திய பேட்டி ஒன்றில் வித்யாபாலன் கூறியுள்ளார். சமீபகாலமாக நடிகைகளுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு சம்பந்தமான செய்திகளில் வித்யாபாலனும் தப்பவில்லை என்பதுதான் வருத்தத்திற்கு உரிய ஒன்று. ரஜினி-பா.ரஞ்சித் மீண்டும் இணையும் படத்திற்கு வித்யாபாலனை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்துவருவது இங்கே குறிப்பிடத்தக்கது. 
    நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்து விட்டது. திருமணத்துக்கு எல்லோரையும் அழைப்பேன் என்று நடிகை பாவனா கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
    நடிகை பாவனாவுக்கும், கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும் கடந்த வாரம் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் திடீர் நிச்சயதார்த்தம் நடந்தது. பாவனா வீட்டில் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நெருங்கிய உறவினர்களை மட்டும் வைத்து ரகசியமாக நடத்தினார்கள். திரையுலகில் இருந்து நடிகை மஞ்சு வாரியர் மட்டும் கலந்து கொண்டார்.

    நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்ட ஒருவர் அந்த படங்களை இணையதளத்தில் கசியவிட்ட பிறகே வெளி உலகத்துக்கு தெரியவந்தது. பாவனாவும், நவீனும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். கடந்த வருடம் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். ஆனால் பாவனா தந்தையும், நவீன் தாயும் அடுத்தடுத்து மரணம் அடைந்ததால் திருமணத்தை தள்ளி வைத்தனர்.

    இந்த நிலையில்தான் கொச்சியில் மலையாள படப்பிடிப்பை முடித்து விட்டு திரும்பிய பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாவனா புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



    இதனால் பாவனா திருமணம் நடக்குமா என்பது கேள்விக்குறியானது. இந்த நிலையில்தான் திருமண நிச்சயதார்த்தம் திடீரென்று நடந்து முடிந்துள்ளது. நிச்சயதார்த்தம் அவரசமாக நடந்தது ஏன்? என்பது குறித்து பாவனா அளித்த பேட்டி வருமாறு:-

    “நானும், நவீனும் நீண்ட காலமாக பழகி திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்தோம். நவீன் குடும்பத்தினர் சம்பிரதாயத்துக்காக என்னை பெண் பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்தனர். இருவீட்டாரும் திருமணம் பற்றி கலந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். இப்போதே மோதிரம் மாற்றிக்கொள்ளலாமே என்ற யோசனை கிளம்பியதால் அவசரமாக நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது.

    நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கூட தெரியப்படுத்த முடியவில்லை. எனக்கு திருமணம் நடப்பது வரை நிச்சயதார்த்தம் நடந்ததை வெளியில் சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் நிச்சயதார்த்த படங்கள் எனக்கு தெரியாமல் வெளியாகி விட்டன. ஏராளமானோர் போனில் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். என் திருமணத்தை நடிகர்-நடிகைகள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அழைத்து விமரிசையாக நடத்துவேன்”.

    இவ்வாறு நடிகை பாவனா கூறினார்.
    நடிகை ராக்கி சாவந்த் ஆபாச வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது. இதனால் அவர் அதிர்ச்சியில் இருக்கிறார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    சினிமா பின்னணி பாடகி சுசித்ரா டுவிட்டர் பக்கத்தில் நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களும், வீடியோக்களும் இரண்டு வாரமாக தொடர்ந்து வெளியாகி திரையுலகை பரபரப்பாக்கி விட்டு ஓய்ந்து இருக்கிறது. தனுஷ், அனிருத், திரிஷா, ஹன்சிகா, ஆன்ட்ரியா, அனுயா, சஞ்சிதா ஷெட்டி என்று பலரது படங்கள் இந்த டுவிட்டர் பக்கத்தில் வந்ததால் அவர்கள் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.

    இந்த படங்களை பதிவிறக்கம் செய்து வாட்ஸ் அப்களில் இன்னும் பலர் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். தற்போது சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் மூடப்பட்டு விட்டதால் நடிகர்-நடிகைகள் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள். இந்த நிலையில் பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் ஆபாச வீடியோ புதிய வரவாக வெளியாகி சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது.

    ராக்கி சாவந்த் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். கம்பீரம், முத்திரை ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஓட்டல் அறையொன்றில் தங்கியபோது கேமராவை மறைத்து வைத்து அவரை ஆபாசமாக படம்பிடித்து உள்ளனர்.



    ராக்கி சாவந்த் ஆடைகளை முழுமையாக களைந்து உடைமாற்றுவது போன்ற காட்சிகளும் உள்ளன. இவற்றை வாட்ஸ் அப்பிலும் பரப்பி வருகிறார்கள்.

    இந்த வீடியோ இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அறிந்ததும் ராக்கி சாவந்த் அதிர்ச்சி அடைந்தார். அவர் கூறியதாவது:-

    “என்னைப்பற்றி பரவும் ஆபாச வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். பார்க்க என்னைப்போல் இருக்கும் வேறு யாரோ ஒரு பெண்தான் அந்த வீடியோவில் இருக்கிறார். இதுபோல் நிறைய பிரச்சினைகளை சந்தித்து அவற்றை தாண்டித்தான் நான் வந்து இருக்கிறேன். இதுவும் கடந்து போகும். வீடியோவில் இருப்பது நானாக இருக்குமோ என்று கூட சில நேரம் என்னை நினைக்க வைக்கிறது. அந்த வீடியோ பற்றி சிந்திக்க விரும்பவில்லை”.

    இவ்வாறு ராக்கி சாவந்த் கூறினார்.
    பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் உறவினரும், நடிகை ஜெயசுதாவின் கணவருமான நிதின் துவர்காதாஸ் கபூர் மும்பையில் உள்ள குடியிறுப்புப் பகுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
    மும்பை:

    பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் உறவினரும், நடிகை ஜெயசுதாவின் கணவருமான நிதின் துவர்காதாஸ் கபூர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட நிதின் மன அழுத்தம் காரணமாக கடந்த ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    58 வயதான நிதின் மும்பையின் மேற்கு பகுதியில் உள்ள அந்தேரி குடியிறுப்புப் பகுதியின் 6 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து நேற்று மதியம் தற்கொலை செய்து கொண்டார். அதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    நிதின், அவரது தங்கையின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் நிதினுக்கு 18 வருடங்களாக வேலை இல்லை என்றும், அவரது குடும்பம் ஐதராபாத்தில் வாழ்ந்து வருவதாகவும், நிதின் மட்டும் மும்பையில் வாழ்ந்து வருவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார், சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக் கடிதம் ஏதும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது உயிரிழப்பு ஒரு விபத்தாக இருக்கக்கூடும் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×