என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    90-களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த முன்னணி நடிகை, 25 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த நடிகை யார்? என்பதை கீழே பார்ப்போம்.
    பிராம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் `2.0' படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கும் ரஜினி அடுத்ததாக பா.ரஞ்சித்  இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். `கபாலி' படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினி - பா.ரஞ்ஜித் இணையும்  பெயரிடப்படாத படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார்  பிலிம்ஸ் தலைப்பில் தயாரிக்க உள்ளார்.

    இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அவருடன் `கோச்சடையான்' படத்தில் நடித்த தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாக செய்திகள்  வெளியாகின. அதனை மறுத்த இயக்குநர் ரஞ்சித், மாறாக படத்திற்கான நாயகி குறித்த தேர்வு நடைபெற்று வருவதாக  தெரிவித்திருந்தார்.



    2010-ஆம் ஆண்டுக்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்களில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகைகளே  நடித்திருந்தனர். இந்நிலையில், 90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு, 25 வருடங்களுக்கு பிறகு  ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு நடிக்க உள்ளதாக  கூறப்படுகிறது.

    இதற்கு முன்பாக ரஜினி - குஷ்பு கூட்டணி இணைந்து `அண்ணாமலை', `மன்னன்', `பாண்டியன்', `நாட்டுக்கு ஒரு நல்லவன்'  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதியதாக தொடங்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் இரண்டாவது பாதியில் ஆரம்பமாகிறது.
    அண்ணனின் கனவுகளில் பாதியைக் கூட தான் நிறைவேற்றவில்லை என்று சந்திரஹாசனின் தமையனும், நடிகருமான கமல்ஹாசன் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததை கீழே பார்ப்போம்.
    நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திர ஹாசன் தனது 82-வது வயதில் நேற்று லண்டனில் மாரடைப்பால் காலமானார்.  பரமக்குடியில் பிரபல கிரிமினல் வழக்கறிஞராக திகழ்ந்த டி.சீனிவாசனின் மகனாக பிறந்த சந்திர ஹாசன் வழக்கறிஞர் பட்டம்  பெற்றவர்.

    கமல்ஹாசன் நடிப்பில் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த, ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தை நிர்வகித்து வந்த  சந்திர ஹாசன்(82), லண்டனில் உள்ள தனது மகளும், நடிகையுமான அணு ஹாசன் வீட்டில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.



    அவரது பிரிவில் வாடும் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தென்னிந்திய நடிகர்  சங்கம் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான செய்தி  ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    "நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய் அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு. எனக்காக அவர் கண்ட  கனவுகளில் பாதியைக் கூட நான்  நிறைவேற்றவில்லை."

    இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.
    நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் லண்டனில் உள்ள தனது மகள் இல்லத்தில் இன்று காலை மரணமடைந்தார். சந்திரஹாசனின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்துவருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ,” எனது நண்பர் கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் மறைவுக்கு, கமல்ஹாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்னுடைய இதயபூர்வ அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறேன். சந்திரஹாசனின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்” என பதிவு செய்துள்ளார்.

    இதேபோல், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “ நடிகர் கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் லண்டனில் இயற்கை எய்திய செய்தி அவரை பெரும் துன்பத்தில் ஆழ்த்தியிருக்கும், அவரது துக்கத்தில் பங்கேற்பதோடு, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

    சந்திரஹாசனின் மறைவுக்கு அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    டைரக்டர் பாலசந்தர் டைரக்ஷனில் குஷ்பு நடித்த ஒரே படம் "ஜாதிமல்லி.'' குஷ்பு புகழின் சிகரத்தில் இருந்த நேரத்தில், தங்கள் படத்தில் அவரை நடிக்கச் செய்யவேண்டும் என்று பட அதிபர்களும், டைரக்டர்களும் விரும்பினர்.
    டைரக்டர் பாலசந்தர் டைரக்ஷனில் குஷ்பு நடித்த ஒரே படம் "ஜாதிமல்லி.'' குஷ்பு புகழின் சிகரத்தில் இருந்த நேரத்தில், தங்கள் படத்தில் அவரை நடிக்கச் செய்யவேண்டும் என்று பட அதிபர்களும், டைரக்டர்களும் விரும்பினர்.

    பாலசந்தரும் குஷ்புவை வைத்து "ஜாதிமல்லி'' என்ற படத்தை உருவாக்கினார். சரிதாவின் கணவரான மலையாள நடிகர் முகேஷ், இதில் கதாநாயகனாக நடித்தார். புகழ் பெற்ற பாடகியாக இப்படத்தில் குஷ்பு நடித்தார். படம் நன்றாகவே இருந்தது. ஆனால் ஓட்டம் சுமார்தான்.

    இதே காலக்கட்டத்தில் பாலசந்தர் இயக்கிய "வானமே எல்லை'' சிறந்த படமாக அமைந்தது. ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை இப்படம் அலசியது. ரம்யாகிருஷ்ணன், மதுபாலா சிறப்பாக நடித்தனர்.

    இந்தப் படத்தில் ஒரு விசேஷம்: ஊனமுற்றவர்கள் மனம் தளரக்கூடாது, உழைத்து முன்னேறலாம் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசு அதிகாரியாக இருந்த எச்.ராமகிருஷ்ணன், கால் ஊனமுற்றவராக இருந்தும், படித்து முன்னேறி அரிய சாதனைகளை நிகழ்த்திய காட்சி, படத்தில் இடம் பெற்றது.

    இதன் பிறகு பாலசந்தர் இயக்கிய படம் "டூயட்'' (1994) இந்தப் படத்தின் மூலம்தான் பிரகாஷ்ராஜ் தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகமானார். அவருடன் பிரபு இணைந்து நடித்தார்.

    தன்னை அறிமுகப்படுத்திய பாலசந்தர் மீது மிகவும் அன்பும், மரியாதையும் வைத்திருப்பவர் பிரகாஷ்ராஜ். தன் படக்கம்பெனிக்கு, தான் நடித்த முதல் படத்தின் பெயரையே ("டூயட்'' மூவிஸ்) சூட்டியுள்ளார்.

    1996-ல் "கல்கி'' என்ற படத்தைத் தயாரித்தார் பாலசந்தர். கதாநாயகியை புரட்சிப் பெண்ணாகப் படைத்தார். அந்த வேடத்தில் ஸ்ருதி நடித்தார்.

    10 ஆண்டுகள் கழித்து சொல்ல வேண்டிய கருத்தை, மிகவும் முன்னதாக சொன்னதால், அதை ரசிகர்கள் ஜீரணிக்க முடியவில்லை. படம் தோல்வி அடைந்தது.

    பாலசந்தர் தயாரித்த சில படங்களை வேறு டைரக்டர்கள் டைரக்ட் செய்தனர். அவற்றில் முக்கியமான படம் "ரோஜா'' (1992). மணிரத்தினம் இயக்கிய இந்தப் படத்தின் மூலமாகத்தான் இசை அமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் அறிமுகமானார்.

    காஷ்மீர் தீவிரவாதிகளைப் பற்றிய இப்படத்தில், அரவிந்தசாமியும், மதுபாலாவும் ஜோடியாக நடித்தனர். தமிழில் வெளிவந்துள்ள மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக "ரோஜா'' மதிப்பிடப்படுகிறது.

    இந்தக் காலக்கட்டத்தில், டெலிவிஷன் சீரியல்கள் தயாரிப்பதில் பாலசந்தர் கவனம் செலுத்தினார்.

    "ரெயில் சினேகம்'', "கையளவு மனசு'', "காசளவு நேசம்'', "காதல் பகடை'', "ப்ரேமி'', "அண்ணி'', "சஹானா'' உள்பட சுமார் 12 மெகா சீரியல்களை உருவாக்கியுள்ளார். இவற்றில் "அண்ணி'' 338 நாட்களும், "சஹானா'' 317 நாட்களும் ஒளிபரப்பாயின.

    பாலசந்தரின் நீண்ட திரை உலகப்பயணத்தில், 1982-ம் ஆண்டு மே மாதம் 6-ந்தேதி நடந்த விபத்து, மிக பயங்கரமானதாகும்.

    நினைத்தாலே நெஞ்சை பதறச் செய்யும் அந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

    தமிழில் கமலஹாசன் - ஸ்ரீதேவி நடித்த "வறுமையின் நிறம் சிவப்பு'' படத்தை, இந்தியில் "ஜராசி ஜிந்தகி'' (வாழ்க்கையின் ஒரு துளி) என்ற பெயரில் தயாரித்தார், பாலசந்தர்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு இமாசலபிரதேசத்தில், இயற்கை அழகு மிக்க "குளு'' பள்ளத்தாக்கில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும், பாலசந்தர், கமலஹாசன், ஒளிப்பதிவாளர் லோகநாதன் ஆகியோர் விமானம் மூலம் சென்னை திரும்பி விட்டனர்.

    படப்பிடிப்பு குழுவினர் ஒரு பஸ்சில் மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். பஸ்சில் 29 பேர் இருந்தனர்.

    வளைந்து வளைந்து சென்ற மலைப்பாதையில், பஸ் கீழே இறங்கிக் கொண்டிருந்தது. கடைசியாக இன்னும் ஒரே ஒரு வளைவுதான். அதைத் தாண்டிவிட்டால், சம வெளிக்கு வந்து விடலாம்.

    அந்த சமயத்தில்தான், எதிர்பாராத விதமாக பயங்கர விபத்து ஏற்பட்டது. எதிரே வந்த ஒரு காரின் மீது மோதி விடாமல் தடுக்க பஸ்சை திருப்பினார் டிரைவர்.

    பஸ் ஒரு பாறையில் மோதி, உருண்டு, அதள பாதாளத்தில் விழுந்தது.

    இந்த பயங்கர விபத்தில், ஒளிப்பதிவாளர் லோகநாதனின் சகோதரர் உள்பட 8 பேர் மாண்டனர். இணை இயக்குனர் அமீர்ஜான் படுகாயம் அடைந்தார். அப்போது உதவி நடன ஆசிரியையாக இருந்த கலாவும், உதவி இயக்குனராக இருந்த சுரேஷ்கிருஷ்ணாவும் அதிக காயம் இல்லாமல் தப்பினர்.

    இறந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை. எட்டுப் பேர்களின் உடல்களும் அங்கேயே தகனம் செய்யப்பட்டன.

    இந்த பயங்கர விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள பாலசந்தருக்கு நீண்ட காலம் பிடித்தது.

    ரஷ்ய மொழித் திரைப்படம் தமிழில் ‘கார்ட்டியன்ஸ் தி சூப்பர் ஹீரோஸ்’ படமாக வெளிவந்திருக்கிறது. இப்படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    உலகப்போருக்கு பின்னால் 1940-ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் பேட்ரியாட் என்ற அமைப்பு மரபணு சோதனையின் மூலம் ரகசியமாக பல கண்டுபிடிப்புகளில் ஈடுபடுகின்றனர். இந்த மரபணு சோதனையில் பல மனிதர்களையும், மிருகங்களையும் பயன்படுத்துகின்றனர். இந்த கண்டுபிடிப்புகள் எல்லாம் சோவியத் யூனியனில் இருந்து மறைக்கப்பட்ட நாடுகளில் நடைபெற்று வருகிறது.

    இந்த அமைப்பில் இருக்கும் பேராசிரியரான ஷெரின் மோட்டார் வாகனங்களை கட்டுப்பாட்டில் வைக்கும் எந்திரத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் வெறித்தனமாக இறங்குகிறார். ஆனால், துரதிருஷ்டவசமாக அவருக்கு அதில் தோல்வி ஏற்படுகிறது. ஆனால், இவரது சக ஊழியர் ஒருவர் மரபணு சோதனையில் வெற்றிகண்டு பலரது பாராட்டுக்களை பெறுகிறார்.



    ஷெரின் இனி எந்த கண்டுபிடிப்புகளிலும் ஈடுபடவேண்டாம் என்ற பேட்ரியாட் அமைப்பு உத்தரவிட, அவர்களுக்கு தான் சிறந்த விஞ்ஞானி என்று நிரூபித்து காட்ட ஷெரின், மரபணு சோதனைக்கான குறிப்புகளை திருடிச் சென்று தனித்து இயங்குகிறார். அவருடைய சோதனைக்காக பல மனிதர்களை பலிகடா ஆக்குகிறார்.

    இந்நிலையில், ஷெரினை கொல்வதற்காக சோவியத் யூனியன் களமிறங்கும்போது, இவருடைய விஞ்ஞான கூடத்தை வெடிகுண்டாக மாற்றி வெடிக்க செய்கிறார். அப்போது அங்குள்ள கெமிக்கல்கள் எல்லாம் வெடித்து சிதறியதில், மரபணு மாற்றத்தின் மூலம் ஷெரின் சக்திவாய்ந்த மனிதராக உருவெடுக்கிறார். அதற்குள், அவர் இயந்திரங்களை கட்டுக்குள் கொண்டுவரும் தன்னுடைய முயற்சியிலும் வெற்றி பெற்றிருக்கிறார். மேலும், சில மிருக மனிதர்களையும் அவர் மரபணு சோதனையின் மூலம் கண்டுபிடித்து, தனக்கு எதிரானவர்களை அழிக்க திட்டமிடுகிறார்.

    இந்நிலையில், சோவியத் யூனியனில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ராணுவத்தில் மனிதர்களுக்கு பதிலாக இயந்திரங்களை வைத்து சண்டையிடுவதற்கான சோதனை முயற்சி நடந்து வருகிறது. அப்போது நடக்கும் சோதனையில், அந்த இயந்திரங்கள் எல்லாம் சோவியத் யூனியனின் ராணுவத்தையே தாக்குகிறது. இந்த தவறு எங்கிருந்து நடக்கிறது, என்று யோசிக்கையில் ஷெரின்தான் இதையெல்லாம் செய்கிறார் என்பது தெரிகிறது.



    அவரை அழிப்பதற்கு இயந்திரங்களையும் சாதாரண மனிதர்களையும் அனுப்பினால் முடியாது என்று முடிவெடுக்கும் ராணுவம், அவர் உருவாக்கிய மிருக மனிதர்களை தேடிக் கண்டுபிடித்து, அவர்களை மனமாற்றம் செய்து, ஷெரினுக்கு எதிராக திரும்ப வைக்க முயல்கிறார்கள்.

    இதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்தா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

    ஆங்கிலத்தில் வெளிவந்த ரஷ்ய மொழிப்படமான ‘கார்டியன்’ படமே தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு கார்டியன்ஸ் தி சூப்பர் ஹீரோ என்ற பெயரில் தமிழில் வெளிவந்திருக்கிறது. படத்திற்கு மிகப்பெரிய பலமே படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள்தான்.

    குறிப்பாக, மிருக மனிதர்களின் ஆக்ரோஷமான சண்டை காட்சிகள் எல்லாம் கிராபிக்ஸ் காட்சிகள் என்று தெரியாதவாறு தத்ரூபமாக அமைந்திருக்கிறது. சூப்பர் ஹீரோ படங்களில் இந்த படமும் ஒரு முக்கிய இடம் பிடிக்கும். குறிப்பாக, காற்றைவிட வேகமாக போகக்கூடிய மனிதர், கற்களை தன்வசமாக்கிக் கொள்ளக்கூடியவர், தண்ணீராக மாறக்கூடிய பெண் ஆகியோரின் சண்டைக் காட்சிகளை தத்ரூபமாக உருவாக்கியெதல்லாம் அருமை.

    பின்னணி இசையும் படத்திற்கு விறுவிறுப்பு கொடுக்கிறது. சண்டைக்காட்சிகளுக்கு அமைத்திருக்கும் பின்னணி இசை படத்தை மேலும் விறுவிறுப்படைய வைக்கிறது.

    மொத்தத்தில் ‘கார்டியன்ஸ் தி சூப்பர் ஹீரோ’ சூப்பர்.
    ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நான்கு கெட்டப்பில் நடிப்பதாக இருந்த ரகசியத்தை சிம்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்ருது வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார் என்பது அனைவருக்கு தெரிந்ததே. தற்போது நான்காவதாக ஒரு கெட்டப்பிலும் இதில சிம்பு நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சிம்புவே கூறியுள்ளார்.

    அவர் சொல்லும்போது, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் டீசரை பார்த்துவிட்டு, நீங்களாக கற்பனை செய்து இந்த கதை இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது ஒரு வித்தியாசமான படம். நாங்கள் புதிதாக ஒரு முயற்சி எடுத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். இந்த படத்தில் மூன்று மெயின் கதாபாத்திரங்கள் வருவதால் படத்திற்கு இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து வைத்தோம்.



    இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களை தாண்டி இன்னொரு கதாபாத்திரமும் இருக்கிறது. மொத்தமாக நான்கு கதாபாத்திரங்களில் நான் நடித்திருக்கிறேன். இதை நான் வெளியிட்டதற்கு ஆதிக் ரவிச்சந்திரன் என்னிடம் கோபித்து கொள்வார் என்று நினைக்கிறேன். இருந்தாலும், இதை வெளியிடுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று தோன்றியதால் சொல்லிவிட்டேன். நான்காவது கதாபாத்திரம் படத்தில் உங்களுக்கு கண்டிப்பாக சர்ப்ரைஸாக இருக்கும். எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கமலின் அண்ணனும், வழக்கறிஞருமான சந்திரஹாசன் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    பிரபல வழக்கறிஞரும், நடிகர் கமல்ஹாசனின் அண்ணனுமான சந்திரஹாசன் நேற்று இரவு லண்டனில் காலமானார்.  சந்திரஹாசன், கமல் நடத்திவரும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரரும்கூட. இந்நிலையில் அவரது மரண செய்தி திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    சந்திரஹாசன் மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சங்கமும் அவரது மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-



    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர் நடிகர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களது ரெண்டாவது சகோதரர் சந்திரஹாசன் லண்டனிலுள்ள அவரது மகள் அனுஹாசனின் இல்லத்தில் நேற்று இரவு காலமானார் என்பதை அறிந்து வேதனையடைந்தோம். பால்யகாலம் முதல் கமல்ஹாசன் அவர்களுக்கு வழிகாட்டியாக, உறுதுணையாக, அவரது வளர்ச்சிக்கு காரணமாக இருந்து வந்தவர் சந்திரஹாசன்.

    எனவேதான் அவரை தனது மூத்த சகோதரர் என்றில்லாமல் அப்பா என்றே எப்போதும் குறிப்பிடுவார். அப்பேர்ப்பட்ட அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறோம். அவரது இழப்பால் துக்கத்தில் வாடும் கமல்ஹாசன், முத்த சகோதரர் நடிகர் சாருஹாசன் மற்றும் அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களது ஆழுந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஆக்சன் சிங் அர்ஜுன், சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    சசிகுமார் அடுத்தாக ‘குட்டிப்புலி’ இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘கொடி வீரன்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் நடைபெறுகிறது. அர்ஜுன் கிராமத்து அதிரடி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையரின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில், அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    இப்படத்தை சசிகுமார் தன்னுடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார். வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.  

    இனிமேல் இளையராஜா பாடல்களை பாடப்போவதில்லை என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிரடி முடிவு எடுத்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    இசையமைப்பாளர் இளையராஜாவும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியும் இணைந்து காலத்தால் அழியா காவியப் பாடல்களை கொடுத்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த பல பாடல்கள் இசை ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்திருக்கின்றன. இந்த நிலையில், தற்போது இருவருக்குள்ளும் ஒரு சிறு பிரிவு ஏற்பட்டிருக்கிறது.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகுக்கு வந்து இந்த ஆண்டோடு 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பல்வேறு நாடுகளில் சுற்றுப்பணம் செய்து இசை நிகழ்ச்சிகளை செய்து வருகிறார். இந்த இசை நிகழ்ச்சிகளை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகனும், பின்னணி பாடகருமான சரண் முன்னின்று நடத்தி வருகிறார்.



    அமெரிக்காவில் தற்போது சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிகளை நடத்திவரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இளையராஜா தரப்பிலிருந்து அதிர்ச்சி தரக்கூடிய நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதாவது, இந்த சுற்றுப்பயணத்தை முன்னின்று ஏற்பாடு செய்த நிறுவனத்துக்குத்தான் இளையராஜா தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    அந்த நோட்டீஸில் என்னுடைய முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை எப்படி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மேடையில் பாடலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த சர்ச்சைக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதில் கூறியுள்ளார்.



    அவர் கூறும்போது, அமெரிக்காவில் கடந்த வாரம் சியாட்டெல், லாஸ் ஏஞ்செல்ஸ் மாகாணங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். தாங்கள் என்மீது காட்டிய அன்புக்கு நன்றி. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இளையராஜா சார்பில் வழக்கறிஞர் ஒருவர் எனக்கு சில நோட்டீஸ்களை அனுப்பியிருந்தால். எனக்கு மட்டுமில்லாமல், பாடகி சித்ரா, சரண், விழா ஒருங்கிணைப்பாளர்கள், மற்றும கச்சேரி நடைபெறும் இடங்களில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டிருக்கிறது.

    அதில், இளையராஜாவின் முன் அனுமதி பெறாமல் அவருடைய பாடல்களை இசைத்தாலோ, அல்லது மேடைகளில் பாடினாலே அது காப்புரிமை மீறலாகும். அதுமாதிரியான உரிமை மீறலுக்கு பெருந்தொகையை அபாராதமாக செலுத்த வேண்டியிருக்கும், அதேநேரத்தில் சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆளாக வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.




    ‘SPB 50’ என்ற இந்த நிகழ்ச்சி என்னுடைய மகனால் தயாரிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் டொராண்டோவில் இந்நிகழ்த்தியை தொடக்கினோம். பின்னர் ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளிலும், இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் இந்நிகழ்ச்சியை நடத்தியுள்ளோம்.

    அப்போதெல்லாம் இளையராஜாவிடமிருந்து எனக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. ஆனால், இப்போது அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு வருகிறது என்பது எனக்கு தெரியவில்லை. இந்த சட்டங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இருந்தாலும், சட்டத்தை மதிக்க வேண்டியது என்னுடைய கடமை. ஆகையால், இனி மேடைகளில் இளையராஜாவின் பாடல்களை நான் பாடப்போவதில்லை.



    ஆனாலும், ஏற்கெனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை நடத்தியாக வேண்டும் என்ற கட்டாயமும் எனக்கு உண்டு. இறைவன் அருளால் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களையும் நான் அதிகளவில் பாடியிருக்கிறேன். இனி நடைபெறும் எனது நிகழ்ச்சிக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    இப்பிரச்சினை தொடர்பாக எவ்வித கடுமையான வாதங்களையும் கருத்துக்களையும் யாரும் சொல்லவேண்டாம் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பல்வேறு வெற்றிப் பாடல்களை கொடுத்த இளையராஜா-எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூட்டணி பிரிந்துள்ள திரையுலகிலும், இசை ரசிகர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 
    விஷ்ணு விஷால் தன்னுடைய மகனுக்கு பிரபல நடிகரின் பெயரை வைத்துள்ளார். அந்த பிரபல நடிகர், அந்த பெயர் என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    நடிகர் விஷ்ணு விஷால்-ரஜினி நட்ராஜ் தம்பதியினருக்கு கடந்த ஜனவரி மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிறந்து மூன்று மாதங்கள் ஆகியுள்ள நிலையில், நேற்று தனது குழந்தைக்கு விஷ்ணு விஷால் ‘ஆர்யன்’ என்று தலைப்பு வைத்துள்ளார். இந்த செய்தியை தனது டுவிட்டர் பக்கத்திலும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, என்னுடைய ராக் ஸ்டாருக்கு ஆர்யன் என்று பெயர் வைத்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நடிகர் ஆர்யாவின் பெயரை அங்கே குறிப்பிட்டு, உன்னுடைய பெயரை என்னுடைய குழந்தைக்கு வைக்கவேண்டும் என்ற உன்னுடைய ஆசையை நான் நிறைவேற்றிவிட்டேன். இது உனக்கு மகிழ்ச்சிதானே என்று கூறியுள்ளார்.



    விஷ்ணுவின் இந்த டுவிட்டுக்கு ஆர்யா பதிலுக்கு நன்றி கூறிவிட்டு, இதுதான் உண்மையான நட்பு. அவன் வளர்ந்து என்னைப்போலவே சிறந்த ஜென்டில்மேனாக வருவான். இதை நான் காமெடிக்காக சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.

    ஆர்யாவின் இந்த பதிலை விஷ்ணு விஷாலின் மனைவி கிண்டலடித்துள்ளார். தன்னைப்போலவே சிறந்த ஜென்டில்மேனாக வருவான் என்று ஆர்யா சொன்னதை கேட்ட ரஜினி, ‘நாசமாப் போச்சு. இருந்தாலும் உன்னைப்போல நல்ல உள்ளம் என்னுடைய மகனுக்கு கிடைத்தால், அதுவே எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

    இதில் குறிப்பிடத்தக்க விஷயம் இன்னொன்று என்னவென்றால் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனுடைய பெயரும் ஆர்யன் என்பதுதான். 
    நடிகர் கமல் ஹாசனின் மூத்த சகோதரர் சந்திர ஹாசன் தனது 82-வது வயதில் லண்டனில் மாரடைப்பால் காலமானார்.
    லண்டன்:

    நடிகர் கமல் ஹாசனின் மூத்த சகோதரர் சந்திர ஹாசன் தனது 82-வது வயதில் லண்டனில் மாரடைப்பால் காலமானார்.

    பரமக்குடியில் பிரபல கிரிமினல் வழக்கறிஞராக திகழ்ந்த டி. சீனிவாசன் மகனாக 1936-ம் ஆண்டு பிறந்த சந்திர ஹாசனும் வழக்கறிஞர் பட்டம் பெற்றவராவார்.

    கமல்ஹாசன் நடிப்பில் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தை நிர்வகித்து வந்த சந்திர ஹாசன்(82), லண்டனில் உள்ள தனது மகள் நடிகை அணு ஹாசன் வீட்டில் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சந்திர ஹாசனின் மனைவி கீதா மணி, கடந்த ஜனவரி மாதம் சென்னையில் காலமானார் என்பது நினைவிருக்கலாம்.
    ரஹ்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஒரு முகத்திரை' படத்தின் விமர்சனத்தை கீழே படிப்போம்.
    படத்தின் கதை நாயகிகளான அதிதி ஆச்சர்யா மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரை வைத்தே நகர்கிறது. நாயகிகள் இருவரும் ஒரே   கல்லூரியில் மனோநல மருத்துவ பிரிவை எடுத்து படித்து வருகின்றனர். கல்லூரியில் எலியும்-பூனையுமாக இருக்கும் அதிதி-ஸ்ருதி  கல்லூரியில் அடிக்கடி சண்டை பிடிக்கின்றனர். அதே நேரத்தில் அதிதி எப்போதும் பேஸ்புக்கே கதி என்று கிடக்கிறாள். பேஸ்புக்கில்  ரோஹித் என்ற இளைஞருடன் தொடர்ந்து பேசி வருவதுடன், தனது வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்தையும் ரோஹித்துடன் பகிர்ந்து  வருகிறார்.

    இந்நிலையில், இருவருக்கும் இடையேயான சண்டை ஒருகட்டத்தில் கல்லூரியின் மூத்த பேராசிரியர் வரை வந்ததால் இருவரையும்  சமாதனம் செய்ய அவர் முயல்கிறார். சமாதானத்திற்கு நாயகிகள் இருவரும் ஒத்துவராததால் அவர்களுக்கு ஒரு போட்டி கொடுக்க  வேண்டும் என்று அவர் முடிவு செய்கிறார்.



    அதேநேரத்தில் மனோதத்துவத்தில் பிரபல மருத்துவரான ரஹ்மானை, கல்லூரிக்கு அழைத்து மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த  கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஆனால் கல்லூரிக்கு வர ரஹ்மான் மறுப்பு தெரிவித்து வருகிறார்.  இந்நிலையில், அதிதி-ஸ்ருதி ஆகிய இருவரும் குறிப்பிட்ட தேதிக்குள் ரஹ்மானை கல்லூரிக்கு அழைத்து வர வேண்டும் என்று  கல்லூரியின் தலைமை நிர்வாகியான பாண்டு உத்தரவிடுகிறார்.

    அதற்கான முயற்சியில் இருவரும் இறங்கிய போது, அதிதி தனது பேஸ்புக் நண்பரான ரோஹித்தின் உதவியை நாடுகிறார். கடைசியில்  இருவராலும் ரஹ்மானை கல்லூரிக்கு அழைத்து வர முடியவில்லை. ஆனால் குறிப்பிட்ட அதே தேதியில் ரஹ்மான் கல்லூரிக்கு  வருகிறார். தான் இந்த கல்லூரிக்கு வர அதிதியே காரணம் என்கிறார். அதிதியின் நண்பர் ரோஹித் கேட்டுக் கொண்டதாலேயே தான்  கல்லூரிக்கு வந்ததாக அவர் கூறுகிறார். பின்னர் அங்கு ஒருவாரம் தங்கியிருந்து பயிற்சி வகுப்பு எடுக்கும் ரஹ்மான் அதிதி-ஸ்ருதியை  சேர்த்து வைக்கிறார்.



    பின்னர் தோழிகளாக மாறிய அதிதி-ஸ்ருதி இருவரும் கல்லூரி படிப்பை முடித்து வீடு திரும்புகின்றனர். ஆனால் அதிதி தனது வீட்டுக்கு  செல்லாமல் சென்னையில் உள்ள ரோஹித்தை பார்க்க செல்கிறார். ஆனால் அதிதி சந்திக்க மறுக்கிறார் ரோஹித். அந்த நேரத்தில்,  அதிதியை சந்திக்கும் ரஹ்மான், அதிதியை தனது வீட்டிலேயே தங்க வைக்கிறார்.

    மறுபுறத்தில் படத்தின் ஹீரோவான சுரேஷ் ஒரு பிரபல ஐ.டி.கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவருக்கும் அந்த  கம்பெனியில்புதிதாக வேலையில் சேரும் மற்றொரு நாயகியான தேவிகாவுக்கும் இடையே காதல் மலர்கிறது. பின்னர் வேறு  கம்பெனிக்கு மாறும் தேவிகா சுரேஷை கலட்டி விடுகிறார். இதனால் வருத்தத்தில், நாயகன் போதை பழக்கத்திற்கு ஆளாகிறான்.  அதனைத்தொடர்ந்து போதை பழக்கத்தில் இருந்து மீள மனோ தத்துவ நிபுணரான ரஹ்மானிடம் சிகிச்சை பெறுகிறார் சுரேஷ்.



    அப்போது அதிதிக்கு ரஹ்மான் தான், ரோஹத் என்ற பெயரில் தன்னை ஏமாற்றி வருகிறார் என்ற உண்மை தெரிய வருகிறது. மேலும்  தன்னை வேண்டுமென்றே ரஹ்மான் சென்னை வரவழைத்துள்ளதை தெரிந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் உண்மை அனைத்தையும்  தெரிந்து கொண்ட அதிதியை கொலை செய்ய முடிவு செய்யும் ரஹ்மான், நாயகன் சுரேஷை கொலை செய்ய தூண்டுகிறார்.  கடைசியில் அதிதி என்ன ஆனார்? ரஹ்மானிடம் இருந்து தப்பித்தாரா? ரஹ்மான் ஏன் அதிதியை சென்னை வரவழைத்தார்? ஹீரோ  அதிதியை கொன்றாரா? இல்லையா? என்பது படத்தின் மீதிகதை.

    படத்தில் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ள ரஹ்மான் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான பங்களிப்பை சிறப்பாக அளித்திருக்கிறார்.  முந்தைய படங்களில் போலீசாக நடித்த ரஹ்மான் இப்படத்தில் மனோதத்துவ நிபுணராக அந்த கதாபாத்திரத்தை அவரது அனுபவ  நடிப்பால் சிறப்பாக ஏற்று நடித்துள்ளார்.

    படத்தின் நாயகனான சுரேஷ் ஐ.டி. ஊழியராகவும், காதலராகவும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். நாயகிகளில் ஒருவரான அதிதி திரையில்  சிறப்பாக நடித்துள்ளார். அழகான பெண்ணாக வரும் ஸ்ருதி, அதிதியுடன் சண்டை போடும் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். மற்றொரு  நாயகியான தேவிகா அழகான ராட்சசியாக வலம் வருகிறார். குறிப்பாக காதல் காட்சிகளில் அனைவரையும் கவரும் தேவிகா, காதலை  தூக்கி எறியும் காட்சியிலும் தனது சுயநலத்தை தெளிவாக வெளிப்படுத்தியிருப்பது ரசிக்க வைக்கிறது.



    பாலாஜி மற்றும் சுவாமிநாதன் அவர்களது கதாபாத்திரத்தை சிறப்பாக அளித்திருந்தாலும் காமெடியைப் பொறுத்தவரை இயக்குநர்  கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்.

    படத்தின் இயக்குநர் செந்தில் நாடன் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படும் உறவால் பெண்கள் மாட்டிக் கொண்டு  பல இன்னல்களை அனுபவிப்பதை சிறப்பாக காட்டியுள்ளார். அதற்கேற்ப படத்தின் திரைக்கதையை சிறப்பாக அமைத்துள்ளார்.  விறுவிறுப்புடன் காட்சிகள் இருந்தாலும் வேகம் இல்லாததது படத்திற்கு சற்றே பின்னடைவு. சுரேஷ்-தேவிகா இடையேயான காதல்  காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.

    படத்தின் ஒளிப்பதிவை பொறுத்தவரை சரவணபாண்டியன் சிறப்பாக செயல்பட்டுள்ளார். படத்தை திரையில் காட்ட அவர்  மெனக்கிட்டிருக்கிறார். படத்தின் பின்னணி இசை ரசிக்கும்படி உள்ளது.

    மொத்தத்தில் `ஒரு முகத்திரை' மெதுவாக நகர்கிறது.
    ×