என் மலர்
நடிகையின் ஆசையை நடிகர் ஒருவர் பாழாக்கிவிட்டதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அது யார்? என்பதை கீழே பார்ப்போம்.
மேடி நடிகருடன் ஜோடி போட்ட குத்துச்சண்டை நடிகை, தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கிராமத்து பின்னணியிலேயே படம் எடுத்து வந்த முத்தான இயக்குனர், தனது அடுத்த படமாக சூர்யமானவரை வைத்து படம் எடுக்கும் முயற்சியில் இருந்தார்.
சூர்யமானவரை வைத்து இயக்கினால் அந்த படத்திற்கு கதாநாயகியாக குத்துச்சண்டை நடிகையை நியமிக்கலாம் என்று இயக்குனரும் முடிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இயக்குனரின் ஆசைக்கும் சூர்யமானவர் ஓகே சொன்னதாக கூறப்படுகிறது.
இதனால், அடுத்த படத்தில் சூர்யமானவருடன் சேர்ந்து டூயட் பாடலாம் என்று ஆசையில் இருந்த அந்த குத்துச்சண்டை நடிகைக்கு பெரிய அதிர்ச்சியான ஒரு செய்தி கிடைத்துள்ளது. அதாவது, அந்த முத்தான இயக்குனரின் படத்தில் சூர்யமானவர் நடிக்கவில்லை என்பதுதானாம்.

முத்தான இயக்குனரின் சமீபகால படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் சூர்யமானவர் அவருடைய படத்தில் நடிக்க விருப்பப்படவில்லையாம். இதனால், தனக்கு பிடித்தமான நடிகருடன் சேர்ந்து டூயட் பாட காத்துக் கொண்டிருந்த அந்த நடிகைக்கு பெரிய ஏமாற்றமே கிடைத்துள்ளதாம். இருப்பினும், எப்படியாவது அவருடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர்ந்துவிட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளாராம்.

லட்சம் கோடி கொடுத்தாலும் நான் பேசுறதைத்தான் பேசுவேன் என்று டி.ஆர், கவண் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
விஜய் சேதுபதி - டி.ராஜேந்தர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கவண்’ படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக மடோனா செபஸ்டியான் நடித்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் இந்நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இந்த சந்திப்பில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது டி.ராஜேந்தர் பேசும்போது,

கவண் படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம் கே.வி.ஆனந்த்தான். எனக்கு அவர் ரொம்பவும் பிடித்தமான கேமராமேன். முதல்வன் படத்தில் அவர் படமாக்கிய ஷக்கலாக்க பேபி ஒரு உதாரணம். அந்த பாடலில் நிறைய புதிய விஷயங்களை செய்திருப்பார். ஒளிப்பதிவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.
ஒரு இயக்குனர் ஒரு நிறுவனத்தில் படம் பண்ணினால் அதற்கு அடுத்தப் படத்தை அந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது கடினம். ஆனால், கே.வி.ஆனந்த் ஏஜிஎஸ் பிலிம்சில் மூன்று படம் பண்ணிவிட்டார். அந்தளவுக்கு தயாரிப்பாளர் மனதில் அவர் இடம்பிடித்துள்ளார். பெரிய நடிகர்களை வைத்து படம் எடுப்பதற்கு பல இயக்குனர்கள் இருக்கலாம். ஆனால், கதைதான் எனது ஹீரோ, ஹீரோவெல்லாம் அடுத்ததுதான் என்று கூறும் கே.வி.ஆனந்துக்கு தலைக்கணம் அல்ல. அவருடைய தன்னம்பிக்கை என்றுதான் கூறவேண்டும்.

கே.வி.ஆனந்த் என்னை தேடி வந்து கதை சொன்னார். முதலில் இதில் நடிப்பதற்கு நான் தயங்கினேன். அவர் கதை சொன்னவிதம் என்னை கவர்ந்தது. நான் வெளியில் யார் படத்திலும் நடிப்பது கிடையாது என்று அவரிடம் சொன்னேன். நீங்கதான் நடிக்கணும்னு பிடிவாதமாக இருந்தார். என்னுடைய கதாபாத்திரத்திற்கு வேறு யாரையாவது நடிக்க வைக்கலாமே என்றேன்.
ஆனால், அவரோ, உங்களோட மரியாதை கெட்டுடாம, உங்களுக்குன்னு ஒரு முழு சுதந்திரத்தை கொடுப்பேன். என்மேல நம்பிக்கை இருந்தா பண்ணுங்கன்னு சொன்னார். அப்படியொரு வார்த்தையை நான் இதுவரை எங்கேயும் கேட்டதில்லை. அவரது வார்த்தை எனக்கு ரொம்பவும் பிடிச்சது.

நான் பல படங்கள் தயாரிச்சிருக்கிறேன். ஆனா ஏவிஎம் அழைச்சும் அவங்களுக்கு நான் ஒரு படம் கூடிய பண்ணினது கிடையாது. வாஹினியில் செட் போட்டு படமாக்கியிருக்கிறேன். ஆனால், அந்த நிறுவனத்துக்கும் இதுவரை நான் படம் பண்ணினது கிடையாது. கோடியுள்ள மனிதனை மதிக்கறவன் இல்லை இந்த தாடி. நான் பல கோடி பார்த்துட்டேன், லட்சம் கோடி இருந்தாலும் நான் பேசுறதைதான் பேசுவேன். ஏன்னா, அதுதான் என் சுபாவம்.
இந்த கதையில் நான் நடிக்க முடியும்னு தன்னம்பிக்கையோடு நடித்தேன். ஒருபடத்தில் நடிச்சாலே தலையை தூக்கிவிட்டுட்டு போற காலத்துல, எத்தனை வெற்றி கொடுத்தாலும் பணிவுடன் இருக்கக்கூடிய நடிகர் விஜய் சேதுபதி. ஒருமுறை தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துவிட்டு திரும்பி வரும்போது, ஒரு பையன் என்னிடம் ஆட்டோகிராப் கேட்டு ஓடி வருகிறான். அவர் யாருன்னு பார்த்தால் விஜய் சேதுபதி. அவருடன் நடிக்கும்போது எனக்கு ரொம்பவும் சவுகரியமாக இருந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.

மலேசியாவில் தமிழ் படம் ஒன்று ஐந்தே நாட்களில் உருவாகியுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
முழுக்க முழுக்க மலேசியாவிலேயே எடுக்கப்பட்ட தமிழ் படம் ஒன்று அடுத்த மாதம் மலேசியாவில் வெளியாகவிருக்கிறது. RIP என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படம் வெறும் 1.30 மணி நேரம் ஓடக்கூடியது. இந்த படத்தை 5 நாட்களில் படமாக்கியிருக்கிறார்கள்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் கூறும்போது, மலேசியாவில் நேரடி தமிழ் படங்கள் கடந்த 7 வருடங்களாகத்தான் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவுக்கு வயது 100 என்று சொன்னால், மலேசிய தமிழ் சினிமாவுக்கு வயது 7 தான். மலேசியாவில் தமிழ் படங்கள் பார்க்ககூடியவர்கள் 3 முதல் 4 லட்சம் பேர்தான் இருப்பார்கள். அவர்களுக்காக, எவ்வளவு செலவு செய்து படத்தை எடுக்கமுடியும் என்று ஆராய்ந்ததில், குறுகிய பட்ஜெட்டில்தான் படம் எடுக்கமுடியும்

இப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்துதான் மலேசியாவில் படங்கள் எடுத்து வருகிறோம். இப்படியான வகையில் உருவானதுதான் ‘RIP’. இந்த படம் ஒரு மனிதன் வாழும்போது வேலையே கதியென்று எந்நேரமும் அலைந்து கொண்டே இருப்பது, தன்னுடைய உடல் ரீதியாக பிரச்சினை என்றாலும் அதற்கு நேரம் ஒதுக்காமல் இருப்பது, இன்றைக்கு இருக்கக்கூடிய சோசியல் நெட்வொர்க்கின் உள்ளே வாழ்க்கையை தொலைத்துக் கொண்டு, தன்னுடைய குடும்பத்தினரிடம் சரியாக நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை, இப்படியாக ஓடிக்கொண்டே இருக்கிற நாம், கடைசியில் எதை கொண்டு செல்லப் போகிறோம்.

இந்த மாதிரி வாழ்கிற மனிதன் கடைசியில் இறந்தபிறகு அவன் சார்ந்த குடும்பம் என்ன மாதிரியான சூழ்நிலையை சந்திக்கிறது. அவன் இறந்தபிறகு, அவனுடைய ஆத்மா அந்த இடத்தில் இருந்தால் எந்த மாதிரி பீல் பண்ணும் என்பதை இரண்டு நாட்களில் நடைபெறும் கதையாக இதை எடுத்திருக்கிறார்கள்.
மொத்தமே 1.30 மணி நேரம் ஓடக்கூடிய இந்த படத்தை மொத்தமே 5 நாட்கள் படமாக்கியிருக்கிறார்கள். இயக்குனர் மலேசியாவை சேர்ந்தவராக இருந்தாலும், இப்படத்தின் எடிட்டர், கேமராமேன் ஆகியோர் சென்னையை சேர்ந்தவர்கள். இந்த படத்தில் ஒரு சோசியல் மெசேஜும் இருக்கிறது.

படம் பார்க்கும் ஒவ்வொருவரும், உடல்ரீதியாக தனக்கு இருக்கும் பிரச்சினையை மருத்துவரிடம் சென்று ஆலோசிக்கிறோமா? அதற்கான தீர்வை காண்கிறோமோ? டிஜிட்டல் உலகத்தில் தொலைபேசியிலேயே பாதி நேரத்தை செலவிடுபவர்கள், வீட்டில் உள்ளவர்களுக்கு சரியான நேரத்தை ஒதுக்குகிறார்களா? என்பது போன்று பல கேள்விகளை எழுப்பி, அவர்கள் வாழ்க்கையில் சிந்தித்து செயல்படுவதற்குண்டான வழிவகைகளையும் செய்யக்கூடிய படமாக இயக்குனர் எஸ்.டி.பாலா எடுத்திருக்கிறார்.
இந்த படம் மலேசியாவில் மட்டும் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் ஆத்மாவாக எஸ்.டி.பாலா நடித்திருக்கிறார். சுலோச்சனா தேவி, தமிழரசி தனபாலன், சுசானா, சிவாஜி, வேனுமதி பெருமாள், நந்தகுமார், நவீன், சுந்தரா, ராமசுந்தரம் என குறிப்பிடும்படியான கதாபாத்திரங்களே நடித்திருக்கிறார்கள். சதீஷ் பி.சரண் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜெயராகவேந்திரா இசையமைத்துள்ளார். எடிட்டிங் முத்தராஜ் அருணாச்சலம். கதை, திரைக்கதை, வசனம், எழுதி எஸ்.டி.பாலா இயக்கியிருக்கிறார்.

ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்தில் நடிப்பதாக வெளிவந்த செய்தி குறித்து குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
ரஜினி தற்போது சங்கர் இயக்கத்தில் 2.ஓ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ள நிலையில், அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்திலும் ரஜினி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில், 2.ஓ படப்பிடிப்பு முடிந்ததும் இப்படத்துக்கான வேலைகளில் தீவிரமாக ரஜினி களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்துவிட பா.ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வித்யாபாலன், தீபிகா படுகோனே ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகை குஷ்புவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இன்று செய்தி வெளியானது.
இதுகுறித்து குஷ்புவிடம் நேரடியாக தொடர்புகொண்டு கேட்டபோது, ரஜினியின் படத்தில் நான் நடிக்கப்போவதாக வெளிவந்த செய்தி, எனக்கும் செய்தியாகத்தான் தெரியும். மற்றபடி, அப்படத்தில் நடிப்பதற்காக யாரும் என்னை அணுகவில்லை. நான் இப்போதைக்கு எந்த படத்திலும் நடிப்பதில்லை என்று கூறியுள்ளார்.

இளையராஜா- எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையேயான மோதலுக்கான காரணம் என்ன? என்பது குறித்த பரபரப்பான தகவல்களை கீழே பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த கூட்டணியாக மறக்க முடியாத பாடல்களை கொடுத்த இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் 40 ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்தனர்.
2500-க்கும் அதிகமான பாடல்களை இளைய ராஜா வும், எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் சேர்ந்து வெளியிட்டுள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமானுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தாலும் தனக்கு பிடித்த இசையமைப்பாளர் இளையராஜா தான் என்று எஸ்.பி.பால சுப்பிரமணியம் பல மேடை களில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இளையராஜா கடந்த பல ஆண்டுகளாக தன்னுடைய பாடல்களின் காப்புரிமை பிரச்சினைக்காக போராடி வருகிறார். இது தொடர்பாக கோர்ட்டிலும் அவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் ‘இளையராஜாவின் பாடல்களை காப்புரிமை பெறாமல் வெளியிடக் கூடாது’ என்று ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

இதற்கிடையே கடந்த வருடம் அமெரிக்காவில் இளையராஜாவின் இசைக் கச்சேரி நடந்தது. அதுவரை இளையராஜா நடத்தும் கச்சேரிகளில் பாட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ரூ.7 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
அமெரிக்கா கச்சேரி யில் பாட எஸ்.பி. பால சுப்பிரமணியம் இளைய ராஜாவிடம் ரூ.20 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் கொடுக்க மறுத்ததால் அந்த கச்சேரியையே எஸ்.பி. பாலசுப்பிரமணியம் புறக் கணித்து அமெரிக்கா செல்ல வில்லையாம். ஆனால் இது பற்றி இளையராஜா இது வரை யாரிடமும் சொல்ல வில்லை.

இப்போது அமெரிக்காவில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கச்சேரி நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் இளையராஜா தான் இசை யமைத்த பாடல்களை பாடக் கூடாது என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இதன் மூலம் இளையராஜா - எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இடையேயான 40 ஆண்டு கால நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடித்த ‘சைத்தான்’ படத்தின் மூலம் அறிமுகமான அருந்ததி நாயர் தனக்கு கவர்ச்சி வேண்டாம், சவாலான வேடங்களில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி நடித்த ‘சைத்தான்’ படத்தில் கேரளாவில் இருந்து வந்து நாயகியாக அறிமுகமானவர் அருந்ததி நாயர். இதில் இவருடைய நடிப்பு பேசப்பட்டது.
தமிழ் சினிமா பற்றி அருந்ததி நாயரிடம் கேட்டபோது...
“ ‘சைத்தான்’ படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்தேன். நான் புதுமுக நடிகை என்றாலும், என்னை நம்பி அழுத்தமான வேடம் கொடுத்தார்கள். இயக்குனர், ஹீரோ ஆகியோரின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நடித்தேன். படம் வெளியானதும் என் நடிப்பை பலரும் பாராட்டினார்கள்.

இப்போது மலையாளத்தில் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். தமிழில் ஜவஹர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறேன். இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இதுதவிர மேலும் 3 பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அதில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று சொன்னதால் அந்த படங்களில் நடிக்கவில்லை. கவர்ச்சியாக நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லாததால் அதை ஏற்கவில்லை.
முதல் படத்திலேயே வெயிட் டான வேடத்தில் நடித்த என்னால், சவாலான எந்த வேடம் என்றாலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே, என் திறமைக்கேற்ற வேடங்களில் மட்டுமே நடிக்க ஆசைப்படுகிறேன். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ‘ரஜினிமுருகன்’ போன்ற கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். என் திறமைக்கு தீனிபோடும் நல்ல கதாபாத்திரங்களை இயக்குனர்கள் எனக்கு தரவேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்” என்றார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 14-ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘2.0’ படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி மீண்டும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் அவரது சொந்த படநிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

புதிய படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை வித்யா பாலன் நடிக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. அடுத்து தீபிகாபடுகோனே நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அடுத்தபடத்தில் ரஜினி ஜோடி யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. அதே நேரத்தில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை குஷ்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பா.ரஞ்சித் இந்த படத்தக்கான முதல் கட்ட வேலைகளை ஏற்கனவே தொடங்கி விட்டார். ‘2.0’ படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து விடும் என்று தெரிகிறது.
எனவே, அடுத்த மாதம் 14-ந் தேதி ரஜினியின் புதிய படம் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குள் ரஜினி புதிய படத்துக்கு தயாராகி விடுவார் என்று கூறப்படுகிறது.

கணவருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று நடிகை ரம்பாவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு குறித்த முழு தகவலை கீழே பார்ப்போம்.
நடிகர் பிரபு நடித்த `உழவன்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரம்பா என்ற விஜயலட்சுமி(வயது 39).
இவருக்கும், இலங்கை தமிழரான இந்திரகுமார் என்பவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்தனர்.
இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், ரம்பாவுக்கும், அவரது கணவர் இந்திரகுமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ரம்பா சென்னைக்கு வந்துவிட்டார்.
இதையடுத்து சென்னை குடும்பநல கோர்ட்டில் நடிகை ரம்பா ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ‘கணவரை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

‘தற்போது சினிமாவில் நடிக்காததால் தனக்கு வருமானம் எதுவும் இல்லை. அதனால், மாதந்தோறும் தனக்கு ரூ.1.50 லட்சமும், இரு மகள்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம், ரூ.1 லட்சமும், ஆக ரூ.2.50 லட்சம் ஜீவனாம்சம் வழங்க கணவர் இந்திரகுமாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த டிசம்ப்ர் 3ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, ரம்பா மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அதில், என்னுடைய கணவர் என்னுடன் தற்போது சேர்ந்து வாழவில்லை. குழந்தைகள் இருவரும் என்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் தான் உள்ளனர். அவர்கள் சென்னையில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கின்றனர். எனவே, இந்த இரு குழந்தைகளின் சட்டப்படியான பாதுகாவலராக என்னை (ரம்பாவை) அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பூங்குழலி முன்பு கடந்த ஜனவரி மாதம் வந்த போது, ரம்பா கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இதையடுத்து ரம்பாவுக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். வழக்கை தொடர்ந்து விட்டு, கோர்ட்டுக்கு வராமல் இருப்பதை ஏற்க முடியாது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில், நடிகை ரம்பா சென்னை ஐகோர்ட்டில் தன் கணவரை கண்டுபிடித்து தரும்படி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை ரம்பா தன்னுடைய குழந்தைகளுடன் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘இது குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்கு என்பதால், நடிகை ரம்பாவும், அவரது கணவர் இந்திரகுமாரும், சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் இன்று மாலையில் ஆஜராகவேண்டும். அங்கு இருவரும் தங்களுக்குள் பிரச்சினைகள் குறித்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.30லட்சம் நிதிஉதவி செய்து நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கி உள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
குன்றத்தூர் சென்னை தொழில்நுட்ப கல்லூரி சார்பில் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் கும்பங்களுக்கு நிதி வழங்க கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் ஸ்ரீராம் ஏற்பாடு செய்தார். இதற்காக சென்னை தொழில்நுட்ப கல்லூரியில் தக்ஷசீலா கலை விழா மூலம் நிதி திரட்டப்பட்டது.

கலை விழாவில் வசூலான ரூ.30 லட்சம் நிதியை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் லாரன்ஸ் தற்கொலை செய்து கொண்ட 4 விவசாயிகளின் குடும்பங்களுக்கு வழங்கினார். தனது பங்காக ரூ. 1 லட்சம் நிதி உதவியையும் அவர் வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கு கல்லூரி சார்பில் 4 வருடம் அனைத்து வசதிகளுடன் இலவசமாக கல்வி பயிலுவதற்கான அனுமதி கடிதத்தையும் அவர் வழங்கினார். கல்லூரி முதல்வர் சீனிவாசன், பேராசிரியர் மனோகர் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

பாடலுக்கு உரிமை மீறல் தொடர்பாக எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு இளையராஜா அனுப்பிய நோட்டீசுக்கு, எஸ்.பி.பி.சரண் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் என்ன தெரிவித்தார் என்பதை கீழே பார்ப்போம்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆவதைத் தொடர்ந்து, அவரது மகனும் பாடகருமான எஸ்.பி.பி.சரண், எஸ்.பி.பி. 50 என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்.
அதனைதொடர்ந்து, எஸ்.பி.பி 50 என்ற நிகழ்ச்சியை பல்வேறு நாடுகளில் நடத்த திட்டமிட்ட சரண், அமெரிக்காவில் முதல் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் முன்னிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடினார்.

இதனையடுத்து, தான் இசையமைத்த பாடலுக்கு தனது அனுமதி பெறாமல் எஸ்.பி.பி. பாடியதாக இளையராஜா தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், இளையராஜாவின் முன் அனுமதி பெறாமல் அவருடைய பாடல்களை இசைத்தாலோ, அல்லது மேடைகளில் பாடினாலே அது காப்புரிமை மீறலாகும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த பிரச்சனையில் கடுப்பான சரண், எனது தந்தை கடந்த 5 வருடங்களில் இதுவரை சுமார் 40,000 பாடல்களை பாடியுள்ளார். இளையராஜா இசையமைக்க வருவதற்கு முன்பே தனது தந்தை பாடல்களை பாட ஆரம்பித்து விட்டார். மேலும் இளையராஜா இசையில் தனது தந்தை சுமார் 2,000 பாடல்களை மட்டுமே பாடியுள்ளதாகவும், மீதமுள்ள 38,000 பாடல்களை வேறு இசையமைப்பாளர்களின் இசையிலேயே பாடியுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை நடத்த எங்களுக்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது.

மேலும் இளையராஜாவுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்று தனது தந்தை தெரிவித்துள்ளார். அவரது பேச்சுக்கு மதிப்பளிக்கும் வகையில் எங்கள் தரப்பில் இருந்து எந்த தேவையற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது என்றும் சரண் கூறினார். மாறாக அவர்கள் அனுப்பிய நோட்டீசுக்கு பதில் நோட்டீஸ் மட்டும் அனுப்ப உள்ளோம் என்றார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகையை நேரில் சந்தித்த மோகன்லால் ‘செல்பி’ எடுத்து மகிழ்ச்சி தெரிவித்தார். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
திருவனந்தபுரம் அருகே ஸ்ரீகாரியம் கட்லேரி பகுதியை சேர்ந்தவர் சுபத்ரா (வயது 68). இவர் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் தீவிர ரசிகை. மோகன்லால் நடித்த திரைப்படங்களை தியேட்டருக்கு சென்று பார்த்து ரசிப்பது இவரது வழக்கம்.
இந்த நிலையில் சுபத்ரா புற்றுநோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் தியேட்டருக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் அவர் டி.வி.யில் ஒளிபரப்பாகும் மோகன்லால் படங்களை தவறாமல் பார்த்துவிடுவார்.
சுபத்ராவுக்கு நோய் தாக்குதல் அதிகமானதால் அடிக்கடி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு தன்னை கவர்ந்த நடிகரான மோகன்லாலை ஒருமுறையாவது நேரில் சந்தித்துவிட வேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்து வந்தது.

இதைதொடர்ந்து சுபத்ரா மோகன்லாலை சந்திக்கும் தனது ஆசையை ‘வாட்ஸ்-அப்’ மூலம் அவருக்கு தெரிவித்தார். எனவே தனது ரசிகையை நேரில் சந்தித்து அவரது விருப்பத்தை பூர்த்தி செய்ய மோகன்லால் விரும்பினார். அதனை முன்னிட்டு நேற்று அவரது வீட்டிற்கு சென்று சுபத்ராவை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
மோகன்லாலை நேரில் பார்த்த இன்ப அதிர்ச்சியில் சுபத்ராவுக்கு பேச்சே வரவில்லை. அவருக்கு ஆறுதல் கூறிய மோகன்லால் விரைவில் புற்றுநோயில் இருந்து குணமாக தான் கடவுளை பிரார்த்திப்பதாக கூறினார். மேலும் சுபத்ராவுடன் செல்பியும் எடுத்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
மோகன்லால் வந்துள்ள தகவல் கிடைத்ததும் அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர். அவர்களை பார்த்து கையசைத்தபடி மோகன்லால் அங்கிருந்து விடைபெற்றார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது பாடல்களை பாடக்கூடாது என்று இளையராஜா சொல்வது அசிங்கமாக உள்ளது என்று அவரது தம்பி கங்கை அமரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது பாடல்களை இனி மேடைகளில் பாடக்கூடாது என்று இசையமைப்பாளர் இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இனிமேல் இளையராஜா இசையமைத்த பாடல்களை பாடமாட்டேன் என்று அறிவித்துள்ளார். இது இசையுலகில் பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இளையராஜாவின் தம்பியும், பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, இளையராஜாவின் இந்த முடிவு தவறானது. மாணிக்க வாசகர், வள்ளலார் போன்றவர்கள்கூட எங்களுடைய பாடல்களை யாரும் கேட்காதீர்கள் என்று சொன்னதில்லை. அப்படியிருக்கையில் உங்களுக்கு ஏன் இந்த ஆசை.
இனிமேலும் சம்பாதித்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். உங்களுக்கு அந்தளவுக்கா பணக் கஷ்டம் வந்துவிட்டது. இசையை நாம் வியாபாரமாக்கக்கூடாது. பாடல் இசையமைத்ததற்கான சம்பளத்தை ஏற்கெனவே நாம் வாங்கிவிட்டோம்.

நம்முடைய பாடல்களை பாடுகிறார்கள், கேட்கிறார்கள் என்றால் அது நமக்குத்தானே பெருமை. நீங்கள் பாடல்களுக்கு இசையமைத்தது மக்கள் பாடுவதற்காகத்தானே. அப்படி பாடக்கூடாது என்றால் எதற்காக இசையமைக்க வேண்டும். நீங்கள் இப்படி செய்வது அசிங்கமாக உள்ளது என்று தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்திருக்கிறார் கங்கை அமரன்.