என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒன்று சேர வேண்டும். அவர்கள் மோதல் போக்கு நீடித்தால் பின்னணி பாடகர்கள் எதிர்காலம் இருளடைந்து விடும் என்று பாடகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
    இளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் இடையிலான பாடல் காப்புரிமை மோதல் விவகாரம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தனது இசையில் உருவான பாடல்களை மேடை கச்சேரிகளில் பாடக்கூடாது என்று இளையராஜா அனுப்பி உள்ள வக்கீல் நோட்டீசால் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இனிமேல் இளையராஜா பாடல்களை பாட மாட்டேன் என்று அவர் அறிவித்து விட்டார்.

    இது, இசை உலகினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் பகையை மறந்து ஒன்று சேர வேண்டும் என்று பலர் வற்புறுத்தி வருகிறார்கள். இளையராஜா நோட்டீசு அனுப்பியதை இசையமைப்பாளர் கங்கை அமரன் கண்டித்து உள்ளார். இசை என்பது பொது சொத்து என்று அவர் கூறியுள்ளார்.

    பாடலாசிரியர் மதன் கார்க்கி, ஒரு பாடலுக்கான ராயல்டி இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் மூவருக்கும் சொந்தமானது என்றும், இளையராஜா வக்கீல் நோட்டீசு அனுப்பியது சட்டப்படி சரியான நடவடிக்கை என்றும், பட அதிபர்களும், பாடலாசிரியர்களும் நோட்டீசு அனுப்பினால் இளையராஜாவே தனது பாடல்களை கச்சேரிகளில் பாட முடியாது என்றும் கூறியிருக்கிறார்.

    மேலும் பல பாடகர்கள் இந்த பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்து உள்ளனர்.

    பின்னணி பாடகர் மனோ கூறியதாவது:-

    “இசை என்றதும் நமது ஞாபகத்துக்கு வருபவர்கள் இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இருவரும் இசை உலகின் சகாப்தமாக இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் சிறு வயதில் இருந்தே இவர்கள் இசையிலும் குரலிலும் வந்த அனைத்து பாடல்களையும் கேட்டு கைதட்டி ஆரவாரம் செய்து வளர்ந்து இருக்கிறோம்.

    40 ஆண்டு காலம் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ள இவர்கள், தற்போது 70 வயதை தாண்டி விட்டார்கள். இந்த வயதில் இவர்களுக்குள் பிரிவு எதற்கு? இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் அனைத்து ரசிகர்களும் கவலையில் இருக்கிறார்கள். சட்டரீதியான பிரச்சினையில் இருந்து இருவரும் மீண்டு சந்தோஷமாக வெளியே வந்து எங்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்.”

    இவ்வாறு அவர் கூறினார்.


    பாடகி எம்.எம்.ஸ்ரீலேகா, பாடகி சுனிதா

    பின்னணி பாடகி சுனிதா கூறியதாவது:-

    “இளையராஜா பாடல்கள் இல்லாமல் உலகில் எங்குமே தமிழ், தெலுங்கு இசை நிகழ்ச்சிகளை நடத்தவே முடியாது. இப்போது எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மட்டும்தான் நோட்டீசு வந்து இருக்கிறது. எதிர்காலத்தில் மற்ற பாடகர்களுக்கும் இதுபோல் தனது பாடல்களை பாடக்கூடாது என்று நோட்டீசு வரலாம். இளையராஜா செய்தது மாதிரி மற்ற இசையமைப்பாளர்களும் நோட்டீசு அனுப்பினால் பாடகர்களின் எதிர்காலமே இருளடைந்து விடும்”.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இசையமைப்பாளர் கீரவாணி சகோதரியும், பின்னணி பாடகியுமான எம்.எம்.ஸ்ரீலேகா கூறியதாவது:-

    “இளையராஜாவின் இசைக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரல் உதவி செய்து இருக்கிறது. இருவரும் சேர்ந்து இருந்தால்தான் ரசிகர்களுக்கு சந்தோஷம். இவர்களுக்குள் பாடல் காப்புரிமை சட்ட பிரச்சினை வந்து இருப்பது வேதனை அளிக்கிறது. பாலையும் தண்ணீரையும் பிரித்து விடுங்கள் என்றால் எப்படி முடியும்? அதுமாதிரி இவர்கள் கூட்டணியில் வந்த பாடல்களை யாராலும் பிரிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தெலுங்கு பாடலாசிரியர்கள் அனந்த் ஸ்ரீராம், ராமஜோகையா சாந்தினி ஆகியோர் கூறும்போது, “காப்புரிமை சட்டப்படி கச்சேரியில் பாடப்படும் பாடல்களுக்கான ராயல்டியில் தயாரிப்பாளருக்கு 50 சதவீதமும், இசையமைப்பாளருக்கு 25 சதவீதமும், பாடலாசிரியருக்கு 25 சதவீதமும் வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில்தான் இளையராஜா நோட்டீசு அனுப்பி இருக்கிறார். இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜானகி, சித்ரா ஆகியோர் தமிழ், தெலுங்கில் பாடிய அனைத்து பாடல்களுமே பிரபலமாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. இந்த இரண்டு இசை சிகரங்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது” என்றார்.
    அறிமுக இயக்குநர் மு மாறன் இயக்கத்தில் அருள்நிதி ஜோடியாக 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்ற படத்தில் மகிமா நம்பியார் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    அருண் விஜய் - மகிமா நம்பியார் இணைந்து நடித்த `குற்றம் 23' படத்தின் வெற்றியை தொடர்ந்து மகிமாவுக்கு படவாய்ப்புகள்  தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

    `குற்றம் 23' படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மகிமா, படம் முழுக்க அழகிய தோற்றத்தில் வந்து ரசிகர்களை  கவர்ந்திருந்தார். இதற்கு முன்பு நடித்த படங்களை விட இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்படும்படி இருந்தது. இந்த  படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் மகிமாவுக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வருவதால், தனது அடுத்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.



    அந்த வரிசையில் அறிமுக இயக்குநர் மு மாறன் இயக்கத்தில் அருள்நிதி ஜோடியாக 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்ற படத்தில்  மகிமா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நர்ஸ் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளதாகவும்  பேசப்படுகிறது. இப்படத்தை 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் டில்லி பாபு தயாரிக்க உள்ளார்.

    ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையமாக கொண்டு, இரவில் எடுக்கப்படும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' ஒரு  பிரச்சனையில் இருந்து ஒரு சராசரி மனிதன் எப்படி வெளியே வருகிறான் என்பதை காட்டும் படியாக உருவாக உள்ளது.

    இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 25-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
    இளையராஜாவை தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்தும் காப்புரிமை பிரச்சனை எழும்பத் தொடங்கி உள்ளது. டி.வி. சேனல்களுக்கு ஏன் பாடல், படங்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
    இளையராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியன் இடையேயான காப்புரிமை பிரச்சனை சினிமா வட்டாரங்கள் மட்டுமின்றி, அவர்களது  ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த பிரச்சனையில் இளையராஜா செய்தது சரியே என்று ஒருதரப்பினரும்,  அவரது முடிவு தவறு என்று மற்றொரு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.  

    எனினும் இந்த பிரச்சனைக்கு இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில், மற்றொரு காப்புரிமை பிரச்சனையும் அதனுடன் இணைய  உள்ளது. அது என்னவென்றால், தயாரிப்பாளர்கள் தங்களது படங்கள், பாடல்கள் மற்றும் காமெடிகளை தொலைக்காட்சி  சேனல்களுக்கு ஏன் இலவசமாக வழங்க வேண்டும். அதற்கு தயாரிப்பாளர்களாகிய எங்களிடம் காப்புரிமை உள்ளது. எனவே  அதற்குரிய தொகையை ஏன் வசூலிக்கக் கூடாது என்று ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தலைவரும், தயாரிப்பாளருமான  கே.இ.ஞானவேல்ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.



    தயாரிப்பாளர் சங்கத்துக்கு வருகிற ஏப்ரல் 2-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் டி.சிவா, கேயார், விஷால்  உள்ளிட்ட 5 அணிகள் களமிறங்குகின்றன. இதில் விஷால் அணி சார்பாக மதுரையில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள  ஞானவேல்ராஜா இதனை தெரிவித்தார்.

    மேலும் அவருடன் இயக்குநர் மிஷ்கின், பாண்டிராஜ், பிரபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும்  காப்புரிமை தொடர்பான முடிவுகள், தேர்தலுக்கு பின்னர் எடுக்கப்படலாம்.
    படப்பிடிப்பின் போது மக்கள் என்னை நிஜ போலீஸ் என்றே நம்பிவிட்டதாக 'ராஜா ரங்குஸ்கி' படத்தின் கதாநாயகன் ஷிரிஷ் கூறியுள்ளார். அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
    'பர்மா' மற்றும் 'ஜாக்சன் துரை' புகழ் தரணிதரன் இயக்கத்தில், 'மெட்ரோ' படப்புகழ் ஷிரிஷ் மற்றும் சாந்தினி தமிழரசன்   முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் படம் 'ராஜா ரங்குஸ்கி'. சக்திவாசன் மற்றும் 'பர்மா டாக்கீஸ்' இணைந்து தயாரித்து  வரும் இந்த ''ராஜா ரங்குஸ்கி' திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    கிரைம் கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வடசென்னையில் நடைபெற்று வருகிறது. 'ராஜா  ரங்குஸ்கி' படத்தின் முதல் போஸ்டர் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ராஜா ரங்குஸ்கி  படத்தில் நடிப்பது குறித்து நாயகன் ஷிரிஷ் கூறியதாவது,



    "ராஜா என்கின்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நான் இந்த ராஜா ரங்குஸ்கி படத்தில் நடித்து வருகின்றேன். வடசென்னையில்  உள்ள ஒரு பகுதியில் நாங்கள் படப்பிடிப்பை நடத்தி வரும்போது, அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே சிறிய சண்டை  ஏற்பட்டது. நானோ போலீஸ் உடையில், அதுவும் ரோந்து வாகனத்தில் உட்கார்ந்து இருந்ததால், ஒரு நபர் என்னிடம் வந்து "நீங்க  போலீஸ் தானே? ஏன் இவர்களை நீங்கள் கட்டுப்படுத்த கூடாது?" என்று கேட்டார்.

    சில நிமிடங்கள் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதற்கு பிறகு நான் அவரிடம், "நான் நிஜ போலீஸ் இல்லை"  என்று சொல்லிவிட்டு, அந்த இடத்தில் இருந்து கிளம்பிவிட்டேன்" என்று நகைச்சுவையாக கூறுகிறார் 'ராஜா ரங்குஸ்கி' படத்தின்  கதாநாயகன் ஷிரிஷ்.



    சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி, நல்லதொரு வரவேற்பை பெற்று வரும் அவரின் முதல் படமான 'மெட்ரோ' திரைப்படத்தை  பற்றி ஷிரிஷ் கூறுகையில்: மெட்ரோ திரைப்படத்திற்கு தெலுங்கு திரையுலகினர் மத்தியில் இருந்து கிடைக்கும்  பாராட்டுகளுக்கும், ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவிற்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
    ஈராஸ் இன்டர்நே‌ஷனல் மீடியா லிமிடெட் நிறுவனம் தயாரிப்பில் கிராமத்து சாயலில் உருவாகி உள்ள நகைச்சுவை படம் ‘ஒரு கிடாயின் கருனை மனு’. இப்படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    ஈராஸ் இன்டர்நே‌ஷனல் மீடியா லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ஒருகிடாயின் கருனை மனு’.

    இந்த படத்தில் விதார்த் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடைய ஜோடியாக டப்பிங் கலைஞர் ரவீணா நடிக்கிறார். இவர்களுடன்  ஜார்ஜ், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு- ஆர்.வி.சரண், இசை-எம்.ரகுமான், எடிட்டிங்-கே.எல்.பிரவீன், ஸ்டண்ட்-ஹரி தினேஷ், கலை-கிரவ் போர்டு, வசனம்-  வி.குருநாதன், சுரேஷ் சங்கையா, பாடல்கள்- வேல்முருகன், வி.குருநாதன்.

    இயக்கம்-சுரேஷ் சங்கையா. இவர் ‘காக்காமுட்டை’ இயக்குனர் மணிகண்டன் உதவியாளர்.



    “இது கிராமத்து பின்னணியில் 3 நாட்களில் நடக்கும் கதை. வேண்டுதலுக்காக பலியிட ஒரு ஆடு கோவிலுக்கு கொண்டு  போகப்படுகிறது. அப்போது நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களே கதை. இதில் ஆடு பலியிடுவது பற்றிய காட்சிகள் எதுவும்  கிடையாது. விதார்த், டப்பிங் கலைஞர் ரவீணா யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். அனைவரும் ரசிக்கும் நகைச்சுவை படம்.

    ராஜபாளையம் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது” என்றார்.

    விதார்த், “மைனா, படத்துக்குபிறகு என் மனதுக்கு நெருக்கமான கதை இது” என்று தெரிவித்தார்.

    சமீபத்தில் நடந்த இதன் பாடல் வெளியீட்டு விழாவில் நாசர், இயக்குனர் பிரபுசாலமன் மற்றும் படக்குழுவினர் கலந்து  கொண்டனர்.
    தனக்குப் பிடித்தமான 10 திரைப்படங்கள் எவை என்பதற்கு கே.பாலசந்தர் பதில் அளித்தார்.
    தனக்குப் பிடித்தமான 10 திரைப்படங்கள் எவை என்பதற்கு கே.பாலசந்தர் பதில் அளித்தார்.

    கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்று பல்வேறு துறைகளிலும் பாலசந்தர் பணியாற்றிய படங்கள் 125. (தமிழ் 87; தெலுங்கு 19; இந்தி 7; கன்னடம் 8; மலையாளம் 4)

    டைரக்ட் செய்தவை: படங்கள், டெலிவிஷன் தொடர்கள் உள்படமொத்தம் 100.

    "நீங்கள் இயக்கிய படங்களில், உங்களுக்கு மிகவும் பிடித்தமான 10 படங்களைச் சொல்லுங்கள்'' என்று பாலசந்தரிடம் கேட்கப்பட்டது.

    அவர் சிரித்துக்கொண்டே, "பத்துக்குள் அடக்குவது சிரமம். எனினும் சிரமப்பட்டு சொல்கிறேன்.

    1. அபூர்வ ராகங்கள், 2. பாமா விஜயம், 3. மரோசரித்ரா, 4. தண்ணீர் தண்ணீர், 5. சிந்து பைரவி, 6. வறுமையின் நிறம் சிவப்பு, 7. வானமே எல்லை, 8. புன்னகை மன்னன், 9. அச்சமில்லை அச்சமில்லை, 10. கல்கி.

    மேற்கண்டவாறு கூறிய பாலசந்தர், "படங்களின் பெயர்களைத்தான் கூறியிருக்கிறேனே தவிர, தரத்துக்கு ஏற்ப வரிசைப்படுத்தவில்லை'' என்றார்.

    "உங்களுடன் தொடர்பு இல்லாத படங்களில் உங்களை மிகவும் கவர்ந்த 10 படங்கள் எவை?'' என்று கேட்டதற்கு, பாலசந்தர் கூறியதாவது:-

    தமிழில் கல்யாணபரிசு, திரும்பிப்பார், 16 வயதினிலே, தில்லானா மோகனாம்பாள், கன்னத்தில் முத்தமிட்டால்... ஆகிய படங்கள் பிடிக்கும்.

    ஆங்கிலத்தில் "ரோமன் ஹாலிடே'', "சைக்கோ'' ஆகிய படங்களும், இந்தியில் "தோ ஆங்கேன் பாராஹாத்'', "மொகல் ஏ ஆஜாம்'', "பிளாக்'' ஆகிய படங்களும் என்னைக் கவர்ந்தவை.

    இவற்றையும் நான் தரத்தின்படி வரிசைப்படுத்தவில்லை.''

    இவ்வாறு கூறினார், பாலசந்தர்.

    பாலசந்தர் டைரக்ட் செய்யும் 101-வது படம் "பொய்.'' இதை நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரிக்கிறார்.

    இந்தப் படத்தின் கேசட் வெளியீட்டு விழா கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. கேசட்டை கமலஹாசன் வெளியிட, ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். சிவகுமார், சரிதா, சுகாசினி உள்பட, பாலசந்தர் படங்களில் நடித்த அனைத்து நடிகர்-நடிகைகளும் விழாவில் கலந்து கொண்டனர்.

    திரை உலக மேதைகளில் ஏவி.மெய்யப்ப செட்டியார், ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ஆகியோரிடம் பாலசந்தர் பெருமதிப்பு வைத்திருந்தார்.

    ஏவி.எம். பற்றி அவர் குறிப்பிட்டதாவது:-

    "ஏவி.எம். அவர்களுடன் சேர்ந்து ஒரு படத்திற்கு பணிபுரியும்போது தெரிந்து கொள்ளும் விஷயங்கள் வெளியே பத்து படங்கள் செய்யும்போது கிடைக்கும் விஷயங்களுக்கு சமம் ஆகும்.

    படத்தின் `ரஷ்' போட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, `இங்கு ஒரு பிரேமை வெட்டு' என்பார். அதனால் என்ன மாற்றம் நேரப்போகிறது என்று நம்மால் அப்போது கற்பனை பண்ண முடியாது. அவர் கூறியபடியே செய்த பிறகுதான் அதனுடைய மகத்துவம் தெரியும்.

    "மேஜர் சந்திரகாந்த்'' படம் முடிந்தபின், நாங்கள் படம் முழுவதையும் பார்த்த பிறகு, படத்தைப்பற்றி என் கருத்தை ஏவி.எம். கேட்டார். "வசூலைப் பொறுத்தவரையில்தான் பயமாக இருக்கிறது'' என்றேன்.

    "படம் எப்படி வேண்டுமானாலும் ஓடட்டும். ஆனால் ஏவி.எம். சார்பில் இப்படத்தைத் தயாரித்து வெளியிடுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்'' என்றார், ஏவி.எம்.

    படம் வெளியானதும், ஒரு பத்திரிகை "இது காசுக்காக எடுத்த படம் அல்ல; ஆசைக்காக எடுத்த படம்'' என்று எழுதியது. ஆம்; ஏவி.எம்.கருத்தையே விமர்சனம் பிரதிபலித்தது. ஆம்; அவர் கணிப்பு வென்றது.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    சொந்த முயற்சியினாலும், திறமையினாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என்ற முறையில் ஜெமினி எஸ்.எஸ்.வாசனிடம் பிரமிப்பு கலந்த மரியாதை கொண்டவர், பாலசந்தர்.

    "எஸ்.எஸ்.வாசனை முன்னோடியாகக் கொண்டு உழைக்கும் எவரும் வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள்'' என்று அடிக்கடி பலரிடம் கூறுவார்.

    நடிகர் ஜெமினிகணேசனுடன் பாலசந்தருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் விசித்திரமானவை.

    அதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது:-

    "1949-ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, வேலை தேடும் படலத்தில் இறங்கினேன். முதலாவதாக வேலை கேட்டு, ஜெமினி ஸ்டூடியோவுக்கு மனு அனுப்பினேன்.

    சில நாட்கள் கழித்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், "தங்களுக்கு தற்போது வேலை தரமுடியாத நிலையில் இருக்கிறோம். தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை இருக்கும்போது, தங்களுக்குத் தகவல் தரப்படும்'' என்று அதில் எழுதியிருந்தது. கீழே ஆர்.கணேஷ் என்று கையெழுத்து போடப்பட்டிருந்தது.

    "சந்தர்ப்பம் இல்லை'' என்கிற அந்தக் கடிதத்திலாவது மதிப்பிற்குரிய எஸ்.எஸ்.வாசன் அவர்கள் கையெழுத்து இருக்கும் என்று நினைத்து ஏமாந்தேன். என்றாலும் எனது அபிமான ஸ்டூடியோவிலிருந்து வந்த கடிதம் ஆதலால், அதை பெரும் பொக்கிஷம் போலக் கருதி பல ஆண்டுகள் பாதுகாத்து வந்தேன்.

    பல ஆண்டுகள் கழித்து அந்தக் கடிதத்தை நான் மீண்டும் எடுத்துப் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது, அதில் கையெழுத்திட்டு இருந்த ஆர்.கணேஷ்தான், பிற்காலத்தில் மிக புகழ் பெற்று விளங்கிய ஜெமினிகணேசன்!

    கமலஹாசனுக்கு அடுத்தபடியாக எனது டைரக்ஷனில் அதிக படங்களில் நடித்தவர் ஜெமினிகணேசன். எனக்கு வேலை இல்லை என்று சொன்னவருக்குத்தான் என் படங்களில் அதிக வேலை கொடுத்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    பாலசந்தர் தொடர்ந்து கூறியதாவது:-

    "கலாகேந்திரா'' பட நிறுவனம் எனது தாய் ஸ்தாபனம். துரை, கோவிந்தராஜன், கிருஷ்ணன், செல்வராஜ் நால்வரும் உரிமையாளர்கள்.

    நான் அவர்களுக்கு இயக்கி கொடுத்திருக்கும் திரைப்படங்கள் 15-க்கும் மேல். இவர்களைப்போன்ற நண்பர்கள் கிடைப்பது மிகமிகக் கடினம். நண்பர்களுக்காக உயிரையே தருவார் துரை. எனது நாடக நாட்களிலிருந்தே பி.ஆர்.கோவிந்தராஜ் எனக்குப் பக்க பலம். அந்தக் காலங்களில் என் ஓரங்க நாடகங்களில் பெண் வேஷம் போடுவார். அழகான பெண்கள் தோற்றுப் போவார்கள்.

    1991-ம் ஆண்டு எனக்கு மிகப்பெரிய இழப்பு துரை, கோவிந்தராஜ் இவர்களுடைய மரணம். ஓரிரு ஆண்டுகள் கழித்து கிருஷ்ணன் அகால மரணம் அடைந்தார்.

    எனது இன்னொரு பேரிழப்பு எனது அருமை நண்பரும், தயாரிப்பாளருமான அரங்கண்ணல் அவர்கள் மறைவு.

    என்னோடு தோளோடு தோள் நின்று என்னுடைய அலுவலக நாட்களிலிருந்தே ஏறத்தாழ நாற்பதாண்டு காலம் உற்ற நண்பனாக, சிறந்த உதவியாளராக, ஆலோசகராக மற்றும் இன்றைய தலைமுறை கலைஞர் பெருமக்களுக்கும், எனக்கும் ஒரு பாலமாக அமைந்த எனது அன்பு அனந்து அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானதுதான் தொழில் துறையில் எனக்கு ஏற்பட்ட ஒரு உச்சகட்ட இழப்பு.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டார்.

    இருகோடுகள் (1970), அபூர்வ ராகங்கள் (1974), தண்ணீர் தண்ணீர் (1982), அச்சமில்லை அச்சமில்லை (1984) ஆகிய படங்கள், சிறந்த மாநில மொழிப் படங்களுக்கான மத்திய அரசின் விருதைப் பெற்றன.

    பாமா விஜயம், தாமரை நெஞ்சம், எதிர்நீச்சல், அக்னிசாட்சி, வறுமையின் நிறம் சிவப்பு, புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை ஆகிய படங்கள், திரைப்படத்துறையின் பல்வேறு பிரிவுகளில் மாநில அரசின் பரிசுகளை பெற்றன.

    தமிழக அரசின் "கலைமாமணி'' விருதை 1973''-லும், "அண்ணா விருதை'' 1992-லும் பாலசந்தர் பெற்றார்.

    மத்திய அரசு 1987-ல் "பத்மஸ்ரீ'' விருது வழங்கியது.

    அழகப்பா பல்கலைக்கழகமும், சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் "டாக்டர்'' பட்டம் வழங்கி கவுரவித்தன.

    மற்றும் பிற மாநில அரசுகள், திரைப்பட அமைப்புகள், பத்திரிகைகள் வழங்கிய விருதுகளும், பரிசுகளும், பட்டங்களும் ஏராளம்.

    வாரிசு நடிகை ஒருவர் தனது அப்பா மற்றும் அக்காவின் பெயரை இழிவுபடுத்தும் வகையில் சமீபத்தில் நடந்துகொண்ட சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து கீழே விரிவாக பார்ப்போம்.
    பாலிவுட்டில் கொலவெறி நடிகருடன் அறிமுமாகி, தமிழிலும் தற்போது வீரமான நடிகரின் படத்தில் நடித்து வருகிறார். அந்த நடிகையின் அப்பா தமிழ் சினிமாவில் முன்னணி ‘நாயகன்’களில் ஒருவர். இந்த நடிகையின் அக்காவும் தற்போது பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லாவற்றிலும் நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

    ஆனால், அந்த நடிகையோ சமீபத்தில் நடந்துகொண்ட ஒரு சம்பவம் அவரது பெயரை மட்டுமில்லாது, அவரது அப்பா மற்றும் அக்காவின் பெயரையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. அது என்னவென்றால், அந்த நடிகை நடித்து இதுவரை ஒரு இந்தி படம்தான் வெளிவந்துள்ளது. அதற்குள் முன்னணி நடிகைபோல் ஒரு நிகழ்ச்சிக்கு இவ்வளவு நேரம்தான் இருக்கமுடியும் என்று கண்டிஷன் போட்டுதான் கலந்துக்கிறாராம்.



    அப்படித்தான் சமீபத்தில் இவர் நடிச்ச இன்னொரு இந்தி படத்துக்கான புரோமோஷனுக்கு இவ்வளவு நேரம்தான் ஒதுக்கமுடியும்னு சொல்லி அந்த நிகழ்ச்சியில கலந்திருக்கிறாரு. ஆனால், அவர் சொன்ன நேரத்தைவிட அந்த நிகழ்ச்சி நீண்டுகொண்டே போக, கடுப்பான நடிகை, உடனே அந்த படத்தின் மூத்த விநியோகஸ்தர் ஒருவரை பலபேர் முன்னிலையில் கடுமையாக திட்டிவிட்டு, பாதியிலேயே தனது அறைக்கு சென்றுவிட்டாராம்.

    பொது இடத்தில் நடிகை இப்படி கடுமையாக நடந்துகொண்டது அனைவருக்கும் அந்த நடிகையின் மீது அதிருப்தியை கொடுத்துள்ளதாம். அவருடைய அப்பாவுக்கு யார் மீதும் கோபமோ, பகையோ இருந்தாலும், அதை பொது இடத்தில் காட்டிக் கொள்ளமாட்டார். அப்படியிருக்கையில், அவருடைய வாரிசு இப்படி நடந்துகொண்டது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது என்று பாலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
    கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமான சந்திரஹாசன் முதலும், கடைசியுமாக நடித்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    நடிகர் கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன், கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் தனது மகள் அனுஹாசன் வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்தவர்கள், அரசியல் பிரமுகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். சந்திரஹாசன் பல்வேறு படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    ஆனால், அவர் ஹீரோவாக நடித்த முதலும், கடைசியுமான ஒரு படத்தை பற்றிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ஜி.பி.ஸ்டுடியோ நிறுவனத்திற்காக பிரான்சிஸ் ஆல்பர்ட் ஆண்டனி மற்றும் லியோ விஷன் நிறுவனத்திற்காக ராஜ்குமார் இணைந்து தயாரித்துள்ள ‘அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க’ படத்தில்தான் சந்திரஹாசன் ஹீரோவாக நடித்துள்ளார்.



    இப்படத்தின் கதாநாயகியாக நடிகர் விக்ராந்தின் அம்மா ஷீலா நடித்துள்ளார். இவர்களுடன் டெல்லி கணேஷ், காத்தாடி ராமமூர்த்தி, ஷண்முகசுந்தரம், ஜெயராவ் ஆகியோரும் நடித்துள்ளனர். ஸ்டீபன் ரங்கராஜ் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஒரு முதியோர் இல்லம், முதுமை காலத்தில் காதலை அனுபவிக்க எண்ணும் ஒரு ஜோடி, அவர்களின் காதலை தடுக்க நினைக்கும் உறவுகள், காதலை காப்பாற்ற கைக்கொடுக்கும் நண்பர்கள், இறுதியில் காதல் ஜோடிகள் ஒன்று சேர்ந்தார்களா என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படமாக இது உருவாகியிருக்கிறது.

    இந்நிலையில், சந்திரஹாசனின் மறைவு இப்படக்குழுவை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் இவ்வேளையில் அவரது நீங்கா நினைவாக இப்படம் அனைவரையும் கவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம், சென்னை ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. 
    ரஜினியும், இசையமைப்பாளர் கங்கை அமரனும் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளனர். அது எதற்காக? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு கூடிய விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில பா.ஜ.க. சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று ரஜினியை அவரது இல்லத்தில் கங்கை அமரன் நேரில் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார்.

    கங்கை அமரன் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ரஜினி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுடைய சந்திப்பு ஒருசில நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.



    கங்கை அமரன் சமீபத்தில்தான் தனது அண்ணன் இளையராஜா, பின்னணி பாடகர் பாலசுப்பிரமணியத்தின் விஷயத்தில் நடந்துகொண்டது ரொம்பவும் அசிங்கமானது என்று பரபரப்பு பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக நடிகர் கமல் மீது வழக்கு பதியக்கோரி மனு ஒன்று நீதிமன்பத்தில் கொடுக்கப்பட்டள்ளது. இதுகுறித்த முழு செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

    நடிகர் கமலஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர், இந்துக்களின் புனித நூலான மகாபாரதத்தையும், இந்துக்களின் கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தி பேசியதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியது.

    இதையடுத்து நடிகர் கமலஹாசனுக்கு எதிராக தமிழத்தில் பல்வேறு இடங்களில் முழுவதும் இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிய வேண்டும் என வள்ளியூர் கோர்ட்டில் ஒருவர் இன்று மனு தாக்கல் செய்தார்.

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அடுத்த பழவூரை சேர்ந்தவர் ஆதிநாத சுந்தரம். இவர் குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் கம்ப்யூட்டர் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அஞ்சுகிராமம் வியாபாரிகள் சங்க தலைவராகவும், பழவூர் நாறும்பூ நாதசுவாமி கோவில் பக்தர்கள் நல சங்க செயலாளராகவும் உள்ளார்.


    வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆதிநாத சுந்தரம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 12-ந்தேதி தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் கமலஹாசன் பேட்டியளித்தார். அப்போது அவர் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் மகாபாரதத்தை இழிவுப்படுத்தி அவதூறாக பேசியுள்ளார். எனவே நடிகர் கமலஹாசன் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    சென்சார் போர்டுக்கு பள்ளி மாணவி கூறிய குற்றச்சாட்டால் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    மயிலாடுதுறையில் 12 வகுப்பு பள்ளி மாணவி ஒருத்தி கடந்த வருடம் மே மாதம் தனது காதலுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள். தனது மகள் காணாமல் போய்விட்டதாக அவளுடைய பெற்றோர் போலீஸ் நிலையத்திலும் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் போலீசாரும் அந்த மாணவியை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கினர்.

    இந்நிலையில், அந்த மாணவி கிட்டதட்ட 9 மாதங்களுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் காதலனுடன் பிடிபட்டாள். காதலனுடன் பிடிபட்டபோது, அவள் 3 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறாள். அவளை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போது, அந்த மாணவி தான் நிறைய தமிழ் சினிமா பார்ப்பதாகவும், அதைப் பார்த்தே தனது காதலுடன் ஓடிச்சென்றதாகவும் கூறியிருக்கிறாள்.



    இதைக்கேட்ட நீதிபதி டென்ஷனாகி, சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இந்த மாணிவியின் குற்றச்சாட்டை பதிவு செய்து, சினிமாவை பார்த்து இளைஞர்கள் கெட்டுப்போகும் அளவுக்கா ஒரு படத்தை தணிக்கை செய்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதற்கு சென்சார் போர்ட்டு உயரதிகாரிகள் மார்ச் 27-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
    ‘டோரா’ படத்திற்காக ஒரு காட்சியில் நயன்தாரா நடுரோட்டில் உருண்டு புரண்டதாக இயக்குநர் தாஸ் ராமசாமி கூறியுள்ளார். அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
    தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘டோரா’. இது நாயகியை சுற்றி சுழலும் கதை. நயன்தாராவுடன்  தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    “நயன்தாரா முன்னணி நடிகை என்றாலும் கொடுத்த கதாபாத்திரத்துக்கு தேவையான காட்சிகளை அப்படியே நடித்துக்  கொடுப்பதில் ஆர்வமாக இருப்பார். படப்பிடிப்பு தளத்துக்கு வந்தால் நயன்தாரா எளிமையாக நடந்து கொள்வார். ஒவ்வொரு  காட்சி முடிந்ததும் கேரவனுக்குள் போய் உட்காரமாட்டார்.



    `டோரா' படத்துக்காக ஒரு காட்சியில் நடுரோட்டில் உருண்டு புரள வேண்டும் என்று சொன்னதும், அவர் நடுரோட்டில் உருண்டு  புரள மாட்டேன் என்று சொல்லி விடுவாரோ என்று படக்குழுவினர் தயங்கினார்கள். ஆனால் சொன்ன உடனே நயன்தாரா  உருண்டு புரண்டு நடித்தார். விடிய விடிய படப்பிடிப்பு நடத்தினாலும் முகம் சுளிக்காமல் நடிப்பவர் நயன்தாரா”.

    இப்படி சொல்பவர் `டோரா' பட இயக்குனர் தாஸ் ராமசாமி.

    மார்ச் 31-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கு, தணிக்கைகுழு `ஏ' சான்றிதழை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×