என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    கூட்டத்தோடு கூட்டமாக "கோரஸ்'' பாடத்தொடங்கிய எல்.ஆர்.ஈஸ்வரி வெகு விரைவிலேயே சிறந்த பின்னணி பாடகியாக உயர்ந்தார்.
    கூட்டத்தோடு கூட்டமாக "கோரஸ்'' பாடத்தொடங்கிய எல்.ஆர்.ஈஸ்வரி வெகு விரைவிலேயே சிறந்த பின்னணி பாடகியாக உயர்ந்தார்.

    எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் ஒருவித வசிய சக்தி இருக்கும், பாடும் முறையில் "கிக்'' இருக்கும். எனவே, லட்சக்கணக்கான ரசிகர்களை அவர் பெற்றார்.

    "இது எனக்கு இறைவன் கொடுத்த வரம்'' என்று கூறிய ஈஸ்வரி, தொடர்ந்து சொன்னார்:

    "ஏழ்மையில் பிறந்த நான், இந்த அளவு உயர்ந்திருக்கிறேன் என்றால், அதற்காக நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம். எனக்குப் பெற்றோர்கள் வைத்த பெயர் டி.எல்.ராஜேஸ்வரி. பரமக்குடிதான் எங்களுடைய பூர்வீகம். ஆனால், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை புதுப்பேட்டைதான்.

    எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில்தான் நான் பிறந்தேன். எனது தந்தை பெயர் அந்தோணி தேவராஜ். தாயார் ரெஜினா மேரி நிர்மலா. எனக்கு அமல்ராஜ் என்ற தம்பியும், எல்.ஆர்.அஞ்சலி என்ற தங்கையும் உண்டு.

    எனது தந்தை இளம் வயதிலேயே (36 வயது) இறந்து விட்டார். அப்போது எனக்கு வயது 6. வறுமையின் பிடியில் சிக்கி தவித்த எங்களது குடும்பத்தை எனது தாயார் சினிமாவில் கோரஸ் பாடி, அதில் கிடைத்த மிக சொற்ப வருமானத்தைக் கொண்டு காப்பாற்றி வந்தார்.

    எப்படியோ கஷ்டப்பட்டு என் தாயார் என்னைப் பள்ளி இறுதி வகுப்பு வரை படிக்க வைத்தார். அதற்கு மேல் கல்லூரிக்கு என்னை அனுப்பி படிக்க வைக்க முடியாத சூழ்நிலை எனது தாயாருக்கு. ஆகவே, எனது தாயாருக்கு உதவி செய்ய நான் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டேன்.

    அப்போது எனக்கு வயது 16. என் தாயார் சினிமாவில் கோரஸ் பாடச் செல்லும்போது, அவருடன் செல்வேன். அவர்கள் பாடுவதை கேட்டு அதே மாதிரி நானும் பாடுவேன்.

    ஒரு நாள் ஏ.பி.நாகராஜன் தயாரித்த "வடிவுக்கு வளைகாப்பு'' என்ற படத்திற்கு கோரஸ் பாட எனது தாயார் சென்றபோது, நானும் அவருடன் சென்றேன். பாடலின் இடையே "ஹம்மிங்'' கொடுக்க வேண்டிய பெண் அன்று வராததால், தற்செயலாக நான் அந்தப் பாட்டுக்கு "ஹம்மிங்'' கொடுத்தேன். இதுதான் நான் முதன் முதலில் சினிமாவிற்கு கொடுத்த குரல்.

    இதைக்கேட்ட அங்கிருந்த ஏ.பி.நாகராஜனும், இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனும் "உனக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. நீ எதிர்காலத்தில் பெரிய பாடகியாக வருவாய், பார்!'' என்று மிகவும் பாராட்டினார்கள்.

    இதைக்கேட்டவுடன் அந்த நிமிடமே எங்களது குடும்ப கஷ்டமெல்லாம் பறந்து விட்டதுபோல் உணர்ந்தேன். இது எனக்கு வாழ்க்கையில் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.

    "வடிவுக்கு வளைகாப்பு'' படத்தை அடுத்து ஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும் சேர்ந்து "லட்சுமி பிக்சர்ஸ்'' என்ற படக்கம்பெனியைத் தொடங்கி, "நல்ல இடத்து சம்பந்தம்'' என்ற படத்தைத் தயாரித்தனர். அதில் கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் எனக்கு பாட வாய்ப்பு கிடைத்தது.

    "புதுப்பெண்ணே புதுப்பெண்ணே நிமிர்ந்து பாரு; உன் பிறந்த இடத்தை மறந்து விடாதே நினைத்துப்பாரு.''

    "பொண்ணு மாப்பிள்ளை ஒன்னா போகுது ஜிகு ஜிகு வண்டியிலே.''

    "இவரேதான் அவரு அவரேதான் இவரு''

    "துக்கத்திலும் சிரிக்கணும்; துணிவுடனே இருக்கணும்'' என்ற 4 பாடல்கள் பாடுமë வாய்ப்பை எனக்கு ஏ.பி.நாகராஜன் வழங்கினார்.

    எனது பெயர் டி.எல்.ராஜேஸ்வரி என்று இருந்ததை சுருக்கமாக "எல்.ஆர்.ஈஸ்வரி'' என்று மாற்றி வைத்தவரும் ஏ.பி.நாகராஜன்தான்.

    அப்போதெல்லாம் ஒரு பாடல் பாடினால் 100 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அக்காலத்தில் அது பெரிய தொகை. வறுமையில் வாடிக்கொண்டிருந்த என் குடும்பத்தை, வசதியாக வாழ வைக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது'' என்றார் எல்.ஆர்.ஈஸ்வரி.

    நடிகை ஒருவர் பிரபலமான நடிகருடன் ராத்திரியில் ரவுண்ட்ஸ் வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    விஷாலமான நடிகரும் வாரிசு நடிகையும் ஆரம்ப காலத்தில் காதலர்களாக வலம் வந்தனர். ஏழு வருடங்களாக காதலித்தவர்கள் ஒருகட்டத்தில் பிரிந்து போயினர். காதலியை பிரிந்ததால் சோகத்தில் ஆழ்ந்தியிருப்பார் என்று நினைக்கையில், அடுத்ததாக வேறொரு நடிகையுடன் தனது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் அந்த நடிகர்.

    டார்லிங்கான அந்த நடிகையுடன்தான் தற்போது அந்த நடிகர் ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறாராம். இத்தனைக்கும் அந்த நடிகை விஷாலமானவருடன் ஒருபடம்கூட நடித்தது கிடையாது. அப்படியிருக்கையில் இவர்களுக்குள் எப்படி இந்த நெருக்கம் ஏற்பட்டது என்று யோசிக்கையில், விஷாலமானவரின் நண்பர் மூலமாகத்தான் அந்த நடிகையின் அறிமுகம் நடிகருக்கு கிடைத்தாக கூறப்படுகிறது.



    அந்த நண்பரும் ஒரு நடிகர்தானாம். டார்லிங் நடிகை அந்த நடிகரோடு ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அந்த வகையில் நடிகையை தனது நண்பனுக்கு அறிமுகம் செய்துவைக்க, அதன்பிறகு நடிகையுடன் பேசி நெருக்கமாகி தற்போது தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டாராம். தற்போது விஷாலமானவரும், அந்த நடிகையும் இரவு நேரங்களில் அடிக்கடி ரவுண்ட்ஸ் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்களாம்.
    கண்ணப்பன் என்ற தயாரிப்பாளர் விஷாலை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் தேதி நெருங்கிவரும் சமயத்தில், தேர்தல் பிரச்சாரங்கள் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. இதில் ஒரு அணியாக இருக்கும் விஷாலை கடுமையாக சாடியுள்ளார் தயாரிப்பாளர் கண்ணப்பன். இவர் ‘பாஸ்மார்க்’, ‘உளவாளி’ போன்ற படங்களை தயாரித்தவர். பல தியேட்டர்களையும் நிர்வகித்து வருகிறார். வினியோகஸ்தராகவும் பணியாற்றி வருகிறார்.

    அவர் பேசும்போது, ’ஆந்திராவில் ஒரு படத்தின் சம்பளத்தை பெரிய ஹீரோக்கள் மொத்தமாக வாங்குவது இல்லை. சில ஹீரோக்கள் சம்பளத்துக்கு பதில் ஏரியா வாங்கிக் கொள்கிறார்கள். சிலர் சிறிது, சிறிதாக வாங்கிக் கொள்கிறார்கள். இந்த நடைமுறை தமிழ் சினிமாவில் வர விஷால் உறுதிமொழி கொடுப்பாரா? பெரும்பாலான நடிகர்கள் வெளியூர் படப்பிடிப்பில் தங்கள் சொந்த காரை பயன்படுத்துவது இல்லை. சிலர் தங்கள் காருக்கு பெட்ரோல் கேட்கிறார்கள்.

    நடிகர்கள் சொந்த பணத்தில் சாப்பிடுவது இல்லை. தயாரிப்பாளர் செலவில்தான் சாப்பிடுகிறார்கள். தங்கள் உதவியாளர்கள், மேக்கப், ஹேர் டிரசருக்கு கூட பேட்டா கொடுக்க தயாரிப்பாளரிடம் பணம் வாங்குகிறார்கள். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள் அதைகூட கொடுக்கக்கூடாதா? பைக்கில் சென்று ஓட்டு வேட்டை நடத்துகிறார் விஷால். படப்பிடிப்புக்கும் ஹெல்மெட் மாட்டிக் கொண்டு வந்தால் எவ்வளவு செலவு மிச்சம்.



    முழு சம்பளத்தையும் செட்டில் செய்யாவிட்டால் சில நடிகர்கள் டப்பிங் பேச வருவது இல்லை. இதனால் கடைசி நேரத்தில் பல தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள். நடிகர்கள் நாசர் ஆட்டோவிலே படப்பிடிப்புதளம் வருவார். நடிகர் சத்யராஜ் கேரவன் கேட்கமாட்டார். சம்பளத்தை மிரட்டி வாங்க மாட்டார். அந்த மாதிரி மற்ற நடிகர்களும் மாற விஷால் நடவடிக்கை எடுகக் வேண்டும், உறுதி மொழி கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் நானே அவருக்காக பிரச்சாரம் செய்வேன்.

    நான் பல தியேட்டர்களை நடத்தி வருகிறேன். வெள்ளி, சனி, ஞாயிறு மட்டுமே ஓரளவு கூட்டம் வருகிறது. மற்ற நாட்களில் 100-க்கும் குறைவான ஆட்களே படம் பார்க்க வருகிறார்கள். அப்படி இருக்க ஹீரோக்கள் எதுக்காக இவ்வளவு பில்டப் கொடுக்கிறார்கள் என தெரியவில்லை.

    இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.

    2.ஓ படப்பிடிப்பில் நடந்த அடிதடிக்கு இயக்குனர் ஷங்கர் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    சென்னையில் நடந்த 2.ஓ படப்பிடிப்பின்போது தனியார் பத்திரிகை புகைப்படக் கலைஞர்களை படக்குழுவினர் தாக்கியதால், அவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில், ஷங்கரின் உதவி இயக்குனரும், அவரது உறவினருமான பப்புவை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் இயக்குனர் ஷங்கர் பத்திரிகையாளர்களை சற்றுமுன் சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, என்னுடைய படப்பிடிப்பின்போது பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமுடன் இருப்பேன்.



    இருப்பினும், இந்த மாதிரியான ஒரு சம்பவம் நடந்தது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது. இந்த விஷயம் என்னுடைய கவனத்துக்கு வராமல் நடந்துள்ளது. இனிமேல் இதுபோல் நடக்கவிடாமல் பார்த்துக் கொள்வது என்னுடைய பொறுப்பு என்று பேசினார்.

    இதையடுத்து, 2.ஓ படக்குழுவினர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாக பாதிக்கப்பட்ட நபர்களின் சார்பாக பத்திரிகையாளர்கள் ஒன்றுகூடி அறிவித்தனர். இதையடுத்து, இயக்குர் ஷங்கர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
    ரஜினியின் 2.ஓ படப்பிடிப்பில் அடிதடி ஏற்பட்டதால் இயக்குனர் ஷங்கருடைய உறவினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘2.ஓ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை தற்போது சென்னையில் இயக்குனர் ஷங்கர் படமாக்கி வருகிறார். ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்துவிட்டதால், மற்ற நடிகர்களுக்குண்டான பகுதிகளை இயக்குனர் படமாக்கி வருகிறார்.

    இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் ‘2.ஓ’ படப்பிடிப்பு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு தளத்தை படம்பிடிப்பதற்காக பிரபல நாளிதழை சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் அதை படம்பிடிப்பதற்காக அங்கு சென்றுள்ளனர். அப்போது, பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே விட மறுத்துள்ளனர்.



    தங்களை அனுமதிக்கவேண்டும் என்று பாதுகாவலர்களிடம் புகைப்பட கலைஞர்கள் வாக்குவாதம் செய்ய, அது கடைசியில் கைகலப்பில் முடிந்துள்ளது. இதில், புகைப்பட கலைஞர்களில் ஒருவருக்கு பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து, அவர் ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் அளித்துள்ளனர்.

    அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஐஸ் அவுஸ் போலீசார் இயக்குனர் ஷங்கரின் அக்கா பையனும், உதவி இயக்குனருமான பப்புவை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். இதனால், ‘2.ஓ’ படப்பிடிப்பில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.  
    புதுமுக இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் சூரிக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கும் நயன் லேடி  சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். தாஸ் ராமசாமி இயக்கத்தில் அவர் நடிப்பில் உருவாகி உள்ள `டோரா' படம் மார்ச்  31-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

    இதுதவிர தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பல படங்களில் நடித்து வரும் நயன்தாரா, தற்போது `அறம்',  `கொலையுதிர் காலம்', `இமைக்கா நொடிகள்', `வேலைக்காரன்' உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.



    இந்நிலையில் புதுமுக இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் சூரிக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நயன்தாரா நடிக்க உள்ளதாக  கூறப்படுகிறது. இயக்குநரிடம் கதையை கேட்ட நயன்தாராவுக்கு கதை பிடித்துப் போக அந்த படத்தில் நடிக்க ஒத்துக்  கொண்டாராம்.

    சூரி நாயகனாக நடிக்க உள்ள இப்படம் முழுக்க முழுக்க காமெடி பின்னணியில் உருவாக உள்ளது. இப்படம் குறித்த  அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
    `கடம்பன்' படத்தில் சண்டை காட்சிகளில் ஆர்யா மற்றும் கேத்தரின் தெரசா டூப் இல்லாமல் நடித்ததாக படத்தின் இயக்குநர் ராகவா தெரிவித்துள்ளார். அவர் அளித்த முழு தகவலை கீழே பார்ப்போம்.
    ஆர்யா, கேத்தரின் தெரசா நாயகன் நாயகியாக நடிக்கும் படம் ‘கடம்பன்’. ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ், ஆர்யாவின்  பீப்பிள் பட நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருப்பவர் ராகவா.

    படம் தயாரான விதம் பற்றி அவரிடம் கேட்ட போது...

    ‘கடம்பன்’ படத்தின் கதை மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டது. வனம் சார்ந்த படம். இயற்கை வளத்தை  அழித்தால் பாதிக்கப்படுவது நாம் தான் என்பது இந்த படத்தின் கரு.



    வனக்கடவுள் முருகனின் மற்றொரு பெயர் கடம்பன். இந்த படத்தில் நாயகனாக நடிக்க தயாரான ஆர்யாவிடம், கட்டுமஸ்தான  உடல் அமைப்பு கொண்ட ஒரு அனுமார் படத்தை காட்டி இது போல் உங்கள் உடல் அமைப்பை மாற்ற வேண்டும் என்றேன்.

    அவர் இரண்டே மாதத்தில் கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் அமைப்பை மாற்றினார். இது அவருக்கு ஒரு ஹைலட்  படமாக இருக்கும். காலில் செருப்பு அணியாமல் நடித்தார்.

    நாயகனும், நாயகியும் சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறார்கள். திலீப்புராயன் சிறப்பாக பயிற்சி அளித்தார்.

    முழுக்க முழுக்க வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. படக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்பு கருவிகளை ஒத்தையடி  பாதையில் சுமந்து சென்றோம். கிளைமாக்ஸ் காட்சி பாங்காங்கில் உள்ள சியாங்கை என்ற இடத்தில் படமானது. இதில் 60  யானைகள் இடம் பெற்றுள்ளன. ‘அவ்வையார்’ படம் வெளியாகி 65 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே காட்சியில் இத்தனை யானைகள்  இடம் பெறுவது இந்த படத்தில் தான். ‘கடம்பன்’ நிச்சயம் அதிகம் பேசப்படும் படமாக இருக்கும்” என்றார்.
    ஓட்டல் சர்வரிடம் இந்தி நடிகை ஒருவர் ‘செக்ஸ்’ வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த நடிகை யார் என்பதை கீழே பார்ப்போம்.
    பாரதிராஜாவின் ‘தாஜ்மகால்’ படம் மூலம் நடிகை ஆனவர் ரியாசென். பிரசாந்துடன் ‘குட்லக்’ படத்திலும் நடித்தார். பிரபல இந்தி  நடிகை மூன்மூன் சென்னின் இளைய மகள். இவரது அக்காள் இந்தி நடிகை ரைமாசென்.

    ரியாசென் சமீபத்தில் மும்பை அந்தேரியில் உள்ள பிரபல ஓட்டலுக்கு தனது தோழிகளுடன் சாப்பிட சென்றார். அப்போது அங்கு  வந்த சர்வர் ‘என்ன வேண்டும்’ என்று கேட்டார். உடனே ரியாசென் ‘செக்ஸ் தான் வேண்டும் தருகிறீர்களா?” என்று சொல்ல அந்த  சர்வரும், நடிகையுடன் வந்த தோழிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.



    இதை பார்த்த ரியாசென் அதிர்ச்சியில் இருந்தவர்களைப் பார்த்து சிரித்து மழுப்பி பேச்சை மாற்றினார்.

    தற்போது ஓரின சேர்க்கையாளர்கள் பற்றிய குறும் படத்தில் நடித்து வருகிறார். இதுபற்றி கூறியுள்ள ரியாசென், “என்னைப்  பார்த்தால் பெண்களுக்கே வைத்த கண் வாங்காமல் பார்க்க தோன்றும்” என்று பெருமை அடித்துள்ளார். இப்போது இப்படி ‘பச்சை’  யாகவே பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
    மலையாளத்தில் டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்கும் படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலமாக தயாரிக்க உள்ளார். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
    விஜய், அஜீத், சூர்யாவுக்கு மலையாளத்திலும், தனி ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் மம்முட்டி, திலீப் நடித்த ‘கம்மத் அண்ட் கம்மத்’ என்ற படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இதில் நடிகர் தனுஷ் ஆகவே வருகிறார்.

    தற்போது தனுஷ் மலையாளத்தில் படம் தயாரிக்கிறார். தனுசின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மலையாளப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகரான டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இதை டோமினிக் அருண் என்பவர் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. நாயகன் இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

    மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படத்தின் மூலம் நாயகி ஆன பிரயாகா மார்ட்டின், மேக்கப்மேன் தனது கையை முறுக்கி அடித்ததாக புகார் ஒன்றை கூறியுள்ளார். அவரது முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
    மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படம் மூலம் நாயகி ஆனவர் பிரயாகா மார்ட்டின். கேரளாவை சேர்ந்த இவர், தற்போது மலையாள  படங்களில் நடித்து வருகிறார்.

    பி.டி.குஞ்சு முகமது இயக்கத்தில் ‘விஸ்வாச பூர்வம் மன்சூர்’ என்ற படத்தில் நடிப்பதற்காக சமீபத்தில் சென்றபோது நடந்த  சம்பவம் பற்றி கூறிய பிரயாகா...

    “இந்த படத்தில் நான் இஸ்லாமிய பெண்ணாக நடிக்கிறேன். எனவே மேக்கப் தேவை இல்லை என்றார்கள். சம்பவத்தன்று நான்  அதிகாலை 4.30 மணிக்கு செட்டுக்கு சென்றேன். முகம் டல்லாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார். மேக்கப்  மேனிடமும் இதை தெரிவித்தார்.



    இதற்காக மேக்கப் மேனிடம் சென்றபோது அவர் என்னை கேவலமாக பார்த்ததுடன், அசிங்கமாகவும் திட்டினார். படப்பிடிப்பு  முக்கியம் என்பதால் அதை கவனிக்காதது போல இருந்தேன். படப்பிடிப்பு முடிந்தபிறகு அம்மாவிடம் சொன்னேன்.

    அவர் வந்து கேட்டபோது, மேக்கப்மேன் கண்டபடி ஏசினார். நான், மரியாதையாக பேசும்படி கூறினேன். உடனே அவர் என்  கையை முறுக்கி அடித்தார். ஆனால், அவரது நண்பரான ஆர்ட் டைரக்டரை வைத்து நான் அவரை தாக்கியதாக பேஸ்புக்கில்  பொய்யான தகவலை பதிவு செய்துள்ளார்.

    என்னை தாக்கிய மேக்கப்மேன், பொய்யான தகவலை பேஸ்புக்கில் பதிவு செய்த ஆர்ட் டைரக்டர் ஆகியோர் மீது போலீசில்  புகார் செய்ய இருக்கிறேன்” என்றார்.
    தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் என்றழைக்கப்படும் பவண் கல்யாண், விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான `தெறி' படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    தெலுங்கு சினிமாவில் நடிகர் சிரஞ்சீவி, விஜய் நடித்த `கத்தி' படத்தின் ரீமேக்கான `கைதி எண் 150' என்ற படத்தின் மூலம்  ரீஎன்ட்ரி ஆனார். அவரைத் தொடர்ந்து அவரது தம்பியும் நடிகருமான பவண் கல்யாண், அஜித் நடித்து கடந்த 2014-ஆம் ஆண்டு  வெளியாகி மெகாஹிட்டான ‘வீரம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார்.

    தெலுங்கில் ‘கட்டமராயுடு’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ள இப்படத்தில் பவன் கல்யாண் ஜோடியாக ஸ்ருதி ஹாசன்  நடித்துள்ளார். வருகிற 24-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள இந்த படத்தை கிஷோர் குமார்  இயக்கியுள்ளார்.



    இப்படத்தை தொடர்ந்து பவண் கல்யாண், திரிவிக்ரம் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  அதேநேரத்தில், அஜித்தின் `வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் பவண் நடிக்க உள்ளார்.

    வேதாளம் படத்தின் தெலுங்கு பதிப்பில் நடித்து முடித்த பிறகு அட்லி - விஜய் கூட்டணியில் உருவாகி சூப்பர்ஹிட்டான `தெறி'  படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் பவண் நடிக்க உள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
    மலையாள திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாரான மோகன்லால் தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    மலையாள திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாரான மோகன்லால் தனது நீண்ட நாள் ஆசை ஒன்றை தானே நிறைவேற்றிக்  கொண்டுள்ளார். அது என்னவென்றால், திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னால் கேரள தலைநகரான திருவனந்தபுரம் முழுவதும்  தனது சைக்கிளில் சுற்றிவந்தவர் மோகன்லால்.

    ஆனால் நடிகராக மாறிய பின்னர் அவரால் ஒருமுறை கூட சாலைகளில் முன்பு போல போக முடியவில்லை. வெகு நாட்களாக  திருவனந்தபுரம் முழுவதும் தனது சைக்கிளிலேயே பயணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த ஆசை தற்போது  நிறைவேறி உள்ளது.



    கடந்த 20-ஆம் தேதி மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் நள்ளிரவு வேளையில், தனது பழைய சைக்களை  எடுத்துக்கொண்டு புறப்பட்ட மோகன்லால், திருவனந்தபுரத்தின் முக்கிய சாலைகளில் மகிழ்ச்சியுடன் வலம் வந்துள்ளார்.  வெள்ளை வேஷ்டி, சட்டை உடுத்திக் கொண்டு சென்ற அவரது தோற்றம் பார்க்க `ஜில்லா' படத்தில் அவரது தோற்றத்துக்கு ஒத்து  இருந்தது.
    ×