என் மலர்
நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் வழக்கு தொடர்ந்து இருந்தனர். எங்கள் மகன் கலைச்செல்வன் தான் நடிகர் தனுஷ். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது திடீர் என்று மாயம் ஆகிவிட்டார். தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். எங்களுக்கு வயதாகிவிட்டது. எனவே, எங்களுக்கு மாதாந்திர பராமரிப்பு தொகையாக ரூ. 65 ஆயிரம் வழங்க தனுசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தனர்.
இந்த வழக்கு மேலூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கதிரேசன்-மீனாட்சி தாக்கல் செய்துள்ள மனு பொய்யானது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
விவாதத்தின் போது மேலூர் தம்பதியர் சார்பில் ஆஜர் ஆன வக்கீல், கதிரேசன், மீனாட்சி தம்பதியர் டி.என்.ஏ பரிசோதனைக்கு தயாராக உள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனுஷ் தரப்பு வக்கீல், ‘மேலூர் தம்பதியர் தாக்கல் செய்துள்ள மனுவில் எந்தவித உண்மையும் இல்லை. எனவே டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு பரிசோதனை செய்வது தனுசின் தனித்தன்மையையும் சுதந்திரத்தையும் பாதிக்கும் என்று வாதாடினார்.
தனுஷ் யாருடைய மகன் என்பதை அறிய அவரது பள்ளி சான்றிதழ், அங்க அடையாளங்கள் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இது தவறானது என்று தம்பதியர் தரப்பு வக்கீல் வாதாடினார் டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயாராக இருக்கிறோம் என்றும் கூறினார். இதற்கு தனுஷ் தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். தம்பதியர் தரப்பில் கூறப்படும் ஆதாரங்கள் சரியானவை அல்ல என்றும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, காணாமல் போன கலைச்செல்வன் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் பிறந்த தேதி மாறுபடுகிறது. அங்க அடையாளங்களும் மாறுபடுகின்றன என்று கூறினார்.

அப்போது வாதம் செய்த தம்பதியர் தரப்பு வக்கீல் டைட்டஸ், ‘அங்க அடையாளங்களை முற்றிலும் அழிக்க முடியும் என்று தடயவியல் தகவல்கள் கூறுகின்றன என்றார். இதற்கு தனுஷ் தரப்பு வக்கீல் விளக்கம் அளித்தார். 3 மணிநேரம் நடந்த விசாரனையின் போது தனுஷ் தரப்பில் வக்கீல் ராமகிருஷ்ணன் ஆஜர் ஆனார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
அப்போது ‘டி.என்.ஏ. பரிசோதனை குறித்து குறிப்பிட்ட நீதிபதி கோர்ட்டு தான் அதை முடிவு செய்யும். இதற்கு மனு தாக்கல் செய்தவர்களின் பதிலும் பெறப்படவேண்டும் என்று தெரிவித்தார்..
இதுகுறித்து மேலூர் தம்பதி கதிரேசன்-மீனாட்சி ஆகியோர் கூறியதாவது:-
எங்களுக்கு வயதாகி விட்டது. பணம், விளம்பரத்துக்கு ஆசைப்பட்டு இந்த வழக்கை தொடரவில்லை. எங்கள் மகன் கலைச்செல்வன் தான் நடிகர் தனுஷ். அதனை நிரூபிக்கத்தான் போராடி வருகிறோம்.
எங்களிடம் அதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன. ஆனால் எதிர் தரப்பினர் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து உள்ளனர். எனவே எங்கள் மகன் தனுஷ் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனைக்கு கூட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
எங்களுக்கு எப்படியும் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் மகன் தனுஷ் என்பதை நிரூபிக்கும் வரை சட்ட போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் பிரபுதேவா தயாரித்து இயக்கும் படம் ‘கருப்புராஜா வெள்ளைராஜா’ விஷால்-கார்த்தி நடிக்கும் இந்த படத்தில் ஷாயிஷா நாயகியாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.
இந்த படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடந்தது. இதில் பிரபுதேவா, விஷால்,கார்த்தி, இயக்குனர் ஏ.எல்.விஜய், ஷாயிஷா, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரபுதேவா பேசும்போது, “ இது இரண்டு ஹீரோக்கள் கதை. விஷாலும், கார்த்தியும் ஒத்துக்கொண்டதால்தான் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படம் தொடங்குகிறது” என்றார்.

விஷால் “ நானும் கார்த்தியும் நடிகர் சங்க கட்டிடத்துக்கு பணம் கொடுக்க முடிவு செய்தோம். இந்த படத்தில் இருந்து அதற்கான பணத்தை சேர்க்க போகிறோம். ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறினார்.
கார்த்தி கூறும் போது, “இரண்டு நடிகர்கள் சேர்ந்து நடிப்பது எவ்வளவு பெரிய குழப்பம் என்பது எல்லோருக்கும் தெரியும். நெருக்கமான நண்பர்களாக இருந்தால் தான் இது நடக்கும். நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் முன்பு நானும் விஷாலும் பேசிக் கொண்டது கூட இல்லை. அதன் பிறகு நிறைய பேசி இருக்கிறோம். விஷால், சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்று 24 மணி நேரமும் உழைக்கிறார். இது இரண்டு நண்பர்கள் கதை. விஷாலுடன் நடிப்பது நல்ல அனுபவமாக இருக்கும். எங்களிடையே எப்போதும் நட்பு இருக்கும்” என்றார்.
கேரள திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் கலாபவன் மணி. இவர் கொச்சியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ந்தேதி மர்மமான முறையில் இறந்தார்.
இதபற்றி கேரள போலீசார் விசாரணை நடத்தினர். அவரது சாவில் மர்மம் இருப்பதாக மனைவி மற்றும் உறவினர்கள் புகார் கொடுத்தனர். அதன் பேரில் கலாபவன் மணியின் உடல் உறுப்புகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார். இதுபற்றி மாநில அரசுக்கும் மனு கொடுத்தார். இது தொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் கூறும்போது, தங்களுக்கு ஏராளமான வழக்குகளின் விசாரணை நிலுவையில் இருப்பதால் இப்போது இந்த வழக்கை விசாரிக்க இயலாது என்று தெரிவித்தனர்.

இதையடுத்து கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன், கேரள ஐகோர்ட்டில் மனு செய்தார். அதில், கலாபவன் மணி மரணத்தில் ஏராளமான மர்மங்கள் உள்ளது. அவர் இறந்து ஓராண்டு முடிந்த பின்பும் இதுவரை விசாரணை முழுமை பெறவில்லை. குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிடவேண்டும் என்று கோரி இருந்தார்.
மனுவை விசாரித்த ஐகோர்ட்டு இன்று கலாபவன் மணி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தது. ஒரு மாதகாலத்திற்குள் வழக்கின் ஆவணங்களை பெற்று விசாரணையை தொடங்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது.
இந்த படத்தின் கதாநாயகியாக ரெஜினா கஸாண்ட்ரா நடித்து வருகிறார். இவர் ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர். தற்போது சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த இன்னொரு நடிகையும் விஷ்ணு விஷாலின் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ‘மெரீனா’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஓவியதான் விஷ்ணு விஷாலின் இந்த படத்திலும் நடிக்கவிருக்கிறார். அதேபோல், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில்’ இடம்பெறும் வசனமான ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என்பதை இப்படத்தின் தலைப்பாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
செல்லா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல மலையாள நடிகர் திலீப். இவரும் நடிகை மஞ்சுவாரியரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகளும் உள்ளார்.
இந்த நிலையில் திலீப் - மஞ்சுவாரியர் இடையே கருத்துவேறுபாடு காரணமாக பிரிவு ஏற்பட்டது. இதன் பிறகு அவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விவாகரத்தும் பெற்றுக்கொண்டனர். அதன் பிறகு திலீப்பின் பராமரிப்பில் அவரது மகள் இருந்து வருகிறார். மேலும் நடிகை காவ்யா மாதவனை திலீப் 2-ம் திருமணமும் செய்து கொண்டார்.
மஞ்சுவாரியருடன் குடும்பம் நடத்தி வந்தபோதே திலீப்புக்கும் காவ்யாமாதவனுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதுபற்றி அப்போது திரையுலகில் கிசுகிசு நிலவியபோது அவர்கள் இருவரும் அதை மறுத்தனர். மஞ்சுவாரியரை விவாகரத்து செய்தபிறகு காவ்யாமாதவனை திருமணம் செய்யப்போவது பற்றியும் பரபரப்பு கிளம்பியது. அதையும் அவர்கள் மறுத்தனர். ஆனால் திடீரென்று திலீப்பும், காவ்யா மாதவனும் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில் நடிகர் திலீப் தனது 2-வது திருமணம் தொடர்பாக மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
நான் மஞ்சுவாரியரை விவாகரத்து செய்துவிட்டு காவ்யாமாதவனை 2-வது திருமணம் செய்துகொண்டதற்கு என் மீது எனது ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதை நான் அறிவேன். பலரும் இதுதொடர்பாக எங்களைபற்றி தவறாக பேசினார்கள்.
நான் கோர்ட்டு மூலம் முறைப்படி விவாகரத்து பெற்றுதான் காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டேன். எனக்கு 16 வயதில் மகள் உள்ளார். 16 வயது பெண்ணின் மனநிலை என்ன என்பது எனக்கு தெரியும். எனவே எனது மகளின் சம்மதம் பெற்றுதான் இந்த திருமணத்தை செய்தேன்.
முதலில் இந்த திருமணத்திற்கு காவ்யா மாதவனின் தாயாருக்கு விருப்பம் இல்லை. என்னிடமே காவ்யா மாதவனுக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்கும்படி கூறினார். ஆனால் எங்களை இணைத்து பேசப்பட்ட அவதூறுகளை மாற்றவே நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது மிகவும் தீவிரமான பிரச்சினை. இதுபோன்ற சூழலை சந்திக்கும் பெண்கள், இதுபற்றி தைரியமாக பேச வேண்டும். இதனை இந்த சம்பவத்துடன் ஒப்பிட்டு நான் பேசவில்லை. ஏனென்றால், எனக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு கிடையாது.

பொதுவாக சொல்லப்போனால், இதுபோன்ற பாலியல் தொல்லைகளை சந்திக்கும் பெண்கள், இதனை தைரியமாக வெளியில் கொண்டு வர அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் ஊக்குவிக்க வேண்டும். அவர்களை அவமானப்படுத்த கூடாது.
ஏராளமான பெண்கள் வெளியே வந்து, தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான், இதுபோன்ற பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். நிச்சயமாக, ஒவ்வொரு கதைக்கும் ஒரு மறுபக்கம் இருக்கும். எது சரி? எது தவறு? என்பதை தீர்மானிக்க அதிகார வர்க்கத்தினர் இருக்கிறார்கள்
இவ்வாறு கங்கனா ரணாவத் தெரிவித்தார்.
இதில், நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொண்டு, பாலியல் சம்பவங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அவர்களது குடும்பத்தினர், அதிகார வர்க்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும், அவர்களை புறக்கணிக்க கூடாது என்று வலியுறுத்தினார்.
மேலும், இது தொடர்பாக அமிதாப்பச்சன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண், தன்னுடைய கண்ணியத்தை இழந்தால், அது நமது கலாசார மனநிலையில் வலுவாக பதிவாகி விடுகிறது. ஆனால், அந்த பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கிய நபருக்கு தான் வெட்கக்கேடே தவிர, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அல்ல.
பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பாதுகாப்பான, நம்பத்தகுந்த மற்றும் ஆதரவான சூழலை நாம் உருவாக்க வேண்டும். கதைகள் வாயிலாக இதுபற்றி பேசவும், இதனை முன்னெடுத்து செல்லவும் உறுதியான தேவை தற்போது ஏற்பட்டிருக்கிறது. மேலும், இது பொதுமக்களின் மனநிலையை மாற்றுவதற்கான தூண்டுகோலாய் அமையும்.
இவ்வாறு அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அமலாக்கப்பிரிவினர், மதன் மீது புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நேற்று இந்த வழக்கு தொடர்பாக மதனிடம், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தினார்கள். மதனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணை முடிவுக்கு பிறகு அவர் கைது செய்யப்படுவாரா? என்பது தெரிய வரும் என்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் இந்த வழக்கில் உண்மை இல்லை. எனவே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதில் மனு தாக்கல் செய்த கதிரேசன். நடிகர் தனுஷ் எனது மகன்தான் என்று நிரூபிக்க போதிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என்று கூறி இருந்தார்.

மேலும் எனது மகன் கலைச்செல்வன் தான் தற்போது தனுஷ் என்று பெயரை மாற்றி சினிமாவில் நடித்து வருகிறார் என்றும் அவனது பள்ளிச்சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஐகோர்ட்டில் கதிரேசன் தாக்கல் செய்தார். இந்த மனுவை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் தரப்பு சார்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனுசின் அங்க அடையாளங்களை சரி பார்க்க உத்தரவிட்டனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் தனுசின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.
இதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-
ஒரு விழாவில், என் அருமை நண்பரும் தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான அவ்வை நடராஜன் பேசும்போது, "காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்! அதை கேட்டு வாங்கிப் போனாள் -அந்த கன்னி என்னவானாள்?'' என்று கவியரசர் கண்ணதாசன் எழுதினார். இப்படி எழுத இன்று யாரேனும் இருக்கிறார்களா?'' என்று கூறினார்.
என்னை பக்கத்தில் வைத்துக்கொண்டே அவ்வை நடராஜன் இவ்வாறு சொன்னபோது, அவை ஆரவாரித்து அதை ஆமோதித்தது.
என் அன்புச் சகோதரி மனோரமா அவர்கள் ஒரு பத்திரிகையில் கீழ்க்கண்டவாறு எழுதினார்:
"கண் போன போக்கிலே
கால் போகலாமா?
கால் போன போக்கிலே
மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே
மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை
மறந்து போகலாமா?''
என்று கவிஞர் கண்ணதாசன் அற்புதமான பாட்டை எழுதினார். இப்ப வர்ற சினிமாவிலே, இது மாதிரி யாரு கருத்தோட பாட்டு எழுதறாங்க?'' என்று ஒரு வினாவையும் எழுப்பியிருந்தார், மனோரமா.
பிரபல பட அதிபர் `ஜீவி' அவர்கள் ஒரு பத்திரிகையில், "நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ! நíரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ!'' என்று கண்ணதாசன் பாடல் எழுதினார். இது போல கற்பனை வளத்தோடு எழுத இப்போது யார் இருக்கிறார்கள்?'' என்று எழுதியிருந்தார்.
இது குறித்து நான் விசனப்படவில்லை; பேசியவர்களின் வார்த்தைகளால் எவ்வித மனத்தாங்கலும் ஏற்படவில்லை.
ஏனென்றால், நண்பர் நடராஜன் அவர்களும், மனோரமா அவர்களும், ஜீவி அவர்களும் சிறப்பித்துப் பாராட்டிய மூன்று பாடல்களும் கண்ணதாசன் எழுதியவை அல்ல; அடியேன் எழுதியவை.
நல்ல பாடல் என்றாலே, அதைக் கண்ணதாசன் எழுதியிருக்க வேண்டும் என்று மேற்சொன்ன மூவரும் நினைப்பதில் தப்பில்லை. இருப்பினும், எதை எவர் எழுதினார் என்று தெள்ளத்தெளிய அறிந்து வைத்துக்கொண்டு பேசுதல்தான் நயத்தகு நாகரீகமாகும்.
`வாலி பாட்டு எது, என் பாட்டு எது என்று எனக்கே சில சமயங்களில் தெரிவதில்லை' என்று கவியரசர் கண்ணதாசன் பலமுறை பாராட்டியிருப்பதை கவிஞர் நா.காமராசனை கேட்டுப்பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
`நான் எழுதுகிற மாதிரியே எழுதக்கூடியவன் வாலி. இப்ப இந்த சிச்சுவேஷனுக்கு நான் எழுதியிருக்கிற மாதிரி அவன் வேறு ஏதாவது படத்திலே எழுதியிருக்கானான்னு சரி பார்த்துக் கொள்ளுங்கள்' என்று இயக்குனர்களிடம் கண்ணதாசன் சொல்வது உண்டு என்பதை, புகழ் வாய்ந்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் கேட்டுப் புரிந்து கொள்ளலாம்.
இலங்கை வானொலிக்கு அளித்த பேட்டியில், என் பாடல் வரிகளை கண்ணதாசன் சிலாகித்துப் பேசியுள்ளார்.
"கண்ணதாசனும், வாலியும் எனக்கு இரண்டு கண்கள்'' என்று தன் கருத்தைப் பதிவு செய்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.''
இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
வாலியின் பாடல் குறித்து, இன்னொரு நகைச்சுவை நிகழ்ச்சியும் நடந்தது.
ஸ்ரீரங்கத்தில், வாலியின் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டுத் திருமணத்தில் சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமனின் கச்சேரிக்கு ஏற்பாடாகியிருந்தது.
வாலி, திரைப்படத் துறையில் புகழ் பெறத் தொடங்கிய நேரத்தில், சிதம்பரம் ஜெயராமன் அவ்வளவாக பின்னணி பாடவில்லை. எனவே இருவருக்கும் அறிமுகம் இல்லை.
இசை அமைப்பாளர் ராமமூர்த்தி மூலமாக கச்சேரிக்கு வாலி ஏற்பாடு செய்தார். சிதம்பரம் ஜெயராமனை அவரே காரில் அழைத்துச் சென்றார்.
தன்னைப்பற்றி ஜெயராமனிடம் ராமமூர்த்தி கூறியிருப்பார் என்று வாலி நினைத்தார். ஆனால், `நம்ம திருச்சிக்காரர், கச்சேரி விஷயமா உங்களைப் பார்ப்பார்!' என்று மட்டுமே ராமமூர்த்தி கூறியிருந்தார். எனவே, தன்னைக் காரில் அழைத்துச் செல்கிறவர் வாலி என்பது ஜெயராமனுக்குத் தெரியாது.
காரின் முன் வரிசையில் சி.எஸ்.ஜெயராமன் அமர்ந்திருந்தார். பின் வரிசையில் வாலி உட்கார்ந்திருந்தார்.
கார், செங்கல்பட்டைத் தாண்டியது. ஜெயராமன் ஒரு கச்சேரிப் பாடலை ஆலாபனம் செய்தார். ஆனந்தமாய் பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த வாலி, இடையில் "ஆகா! அற்புதம்!'' என்றார்.
உடனே ஜெயராமன் பாட்டை நிறுத்திவிட்டு, "தம்பி! உங்களுக்கு சங்கீதம் தெரியுமா?'' என்று கேட்டார்.
"ஓரளவு ரசிக்கத் தெரியும். சட்ட -திட்டம் எல்லாம் அவ்வளவாகத் தெரியாது'' என்றார், வாலி.
"நான் இப்போது பாடியது என்ன ராகம்?'' என்று ஜெயராமன் கேட்டார்.
"காமவர்த்தினி'' என்று பதில் சொன்னார், வாலி.
"பலே!'' என்று மகிழ்ச்சியுடன் கூவினார், ஜெயராமன்.
பிறகு, அவர் ஒவ்வொரு பாட்டாகப் பாட, "இது ஹரி காம்போதி'', "இது பைரவி'', "இது கல்யாணி'' என்றெல்லாம் ராகங்களின் பெயர்களைக் கூறிக்கொண்டே வந்தார், வாலி.
மனம் மகிழ்ந்து போன ஜெயராமன், "தம்பி! நீங்க காவேரி தண்ணியாச்சே! சங்கீத ஞானத்துக்கும் கேட்கணுமா?'' என்று வாலியை பாராட்டினார்.
பிறகு, "தம்பி! நீங்க என்ன தொழில் பண்றீங்க...'' என்று கேட்டார்.
"பாட்டு எழுதிக்கிட்டு இருக்கிறேன்'' என்று வாலி சொன்னதும், "அப்படியா!'' என்று வியப்புடன் கூறினார், ஜெயராமன்.
பிறகு, "கிராமபோன் ரிக்கார்டுலே யாராது பாடியிருக்காங்களா?'' என்று கேட்டார்.
டி.எம்.சவுந்தர்ராஜன், பி.சுசீலா ஆகியோர் பாடியிருப்பதாக வாலி சொன்னார்.
"சபாஷ்! சபாஷ்! டி.எம்.சவுந்தரராஜன் என்ன பாட்டு பாடியிருக்காரு, கொஞ்சம் பாடிக்காட்டுங்க'' என்றார்,
சி.எஸ்.ஜெயராமன். டி.எம்.எஸ். பாடிய - "கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்'', "ஓராறு முகம்'' ஆகிய பாடல்களையும், பி.பி.சீனிவாஸ் பாடிய "இசையால் எதுவும் வசியமாகும்'' என்ற பாடலையும், வேறு சில பாடல்களையும் பாடிக்காண்பித்தார், வாலி.
பரவசப்பட்டுப்போன ஜெயராமன், "உங்க பாட்டுகள் எல்லாம் பிரமாதமாக இருக்கு. இந்த பாட்டுகளையெல்லாம் நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் எழுதியது என்று தெரியாது'' என்று கூறிவிட்டு, "தம்பி! உங்களுக்கு பாட்டெழுத நல்லா வருது. அருமையான சொற்கள். கருத்துக்களும் பிரமாதமா இருக்கு. நீங்க சினிமாவில் பாட்டு எழுத முயற்சி பண்ணினால், பிரமாதமாக வருவீங்க'' என்றார்.
"அண்ணே...!'' என்று குறுக்கிட்டார், வாலி. ஆனால் அவரை பேச விடாமல் ஜெயராமன் தொடர்ந்து கூறினார்:
"தம்பி! நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியுது. நம்ம பாட்டையெல்லாம் சினிமாவிலே யாரு எடுத்துப்பாங்கன்னு நீங்க சந்தேகப்படுறீங்க. இந்த சந்தேகம் எல்லாம் வேண்டாம். மகா மோசமா பாட்டு எழுதுகிறவன் எல்லாம் இப்ப சினிமாவுக்கு வந்துவிட்டான்'' என்று சொன்ன சிதம்பரம் ஜெயராமன், வெற்றிலையை மடித்து வாயில் திணித்தவாறே, "அத்தைமடி மெத்தையடி, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், புன்னகை என்ன விலை... இப்படி எல்லாம் மட்டகரமான பாட்டுக்கள் வர ஆரம்பிச்சுடுச்சு.
எவனோ ஒருத்தன் `வாலி'ன்னு இப்ப புதுசா வந்திருக்கிறான். விஸ்வநாதன் -ராமமூர்த்தி கிட்ட அவன்தான் நிறைய எழுதுறான். பாட்டெல்லாம் ஒரே கட்சிப் பாட்டா இருக்கு. நீங்க எவ்வளவோ தேவலை. விவரமா எழுதறீங்க'' என்று சொல்லி முடிப்பதற்கும், கார் திண்டிவனத்தில் ஒரு டீக்கடை எதிரே நிற்பதற்கும் சரியாக இருந்தது.
டிரைவர் டீ குடிக்கப்போனார்.
வாலியும், சிதம்பரம் ஜெயராமனும் மாறுபட்ட மன நிலையில் நாலாபுறத்தையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
திடீரென்று, பத்துப்பதினைந்து பள்ளி மாணவர்கள், "டேய்! கார்ல உட்கார்ந்து இருப்பது கவிஞர் வாலிடா... வாங்கடா ஆட்டோகிராப் வாங்கலாம்'' என்றபடி ஓடிவந்தனர்.
ஆட்டோகிராப் நோட்டை நீட்டிய மாணவர்களுக்கு, "நல்வாழ்த்துக்கள் -வாலி'' என்று கையெழுத்து போட்டுக்கொடுத்தார், வாலி. இதைப்பார்த்த சிதம்பரம் ஜெயராமன் `ஷாக்' அடித்தவர் போல சிலையானார்.
மாணவர்கள் போனபின், வாலியின் இரு கைகளையும் பற்றிக்கொண்டு, "தம்பி! நீங்கதான் வாலின்னு தெரியாம பேசிட்டேன். ஆமாம். நீங்களாவது உங்க பெயரை சொல்லியிருக்கக் கூடாதா?'' என்று பாசத்தோடு கேட்டார்.
"என் பெயர் என்னன்னு நீங்க கேட்கவே இல்லையேண்ணே! அதனால்தான் நானும் சொல்லலே'' என்றார் வாலி.
சிதம்பரம் ஜெயராமன் சிரித்துக்கொண்டே, "காவேரித் தண்ணீக்கே கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி'' என்று, வாலியின் கன்னத்தை செல்லமாகத் தட்டினார்.
இந்த நடிகைக்கு தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நல்ல மார்க்கெட் உள்ளதால் அங்கேயும் நடிகையின் இந்த கொள்கை பரவ, தினமும் மூன்று மொழிகளிலும் சேர்த்து குறைந்தது 10 தயாரிப்பாளர்களாவது நடிகையிடம் போன் போட்டு என்னிடம் நீங்கள் நினைக்கிற மாதிரி ஒரு கதை இருக்கிறது, கேளுங்கள் என்று நச்சரித்து வருகிறார்களாம்.

அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்பது தெரியாமல் நடிகையும் ரொம்பவுமே திணறி வருகிறாராம். இருப்பினும், போன் பண்ணும் தயாரிப்பாளர்களுக்கு ஏதாவது ஒரு பதிலை சொல்லி கட் பண்ணி விடுகிறாராம் நடிகை. தயாரிப்பாளர்களின் நச்சரிப்பு தொடர்ந்துகொண்டே இருப்பதால், இனிமேல், கதை கேட்பதற்கு தனியாக ஒருவரை நியமிக்க நடிகை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த காட்சி போன்று தற்போது உண்மையான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கடந்த ஏப்ரல் 7-ந் தேதி நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு பயின்று வரும் விபின் காட்சே என்ற மாணவன் அகமதாபாத்தில் இருந்து புரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்துவந்தார்.

அப்போது, அதே பெட்டியில் வந்த ஒரு பெண் பிரசவ வேதனையால் துடிதுடித்துக் கொண்டிருந்தார். துரதிருஷ்டவசமாக அந்த பெட்டியில் பெண் டாக்டர்களோ, பிரசவம் பார்க்கும் மருத்துவச்சிகளோ யாரும் இல்லாததால் வலியால் துடிக்கும் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க விபின் முன்வந்தார்.
அனுபவம் இல்லாத விபின், வாட்ஸ் அப்பில் தனது டாக்டர் நண்பர்களின் ஆலோசனை கேட்டு, அவர்களின் அறிவுரையின்படி அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். அந்த பெண்ணும் அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்தார். சமயோஜிதமாக செயலாற்றி தாய்-சேய் இருவரின் உயிரையும் காப்பாற்றிய விபினுக்கு, அந்த பெண்ணின் உறவினர்கள் நன்றியுடன் பாராட்டும் தெரிவித்தனர்.








