என் மலர்
வருகிற தமிழ் புத்தாண்டில் விஜய் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கும் வகையில் ஒரு நிகழ்வு நடைபெற உள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘தெறி’. இப்படத்தை அட்லி இயக்கியிருந்தார். விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருந்தனர். ராதிகா சரத்குமார், மொட்டை ராஜேந்திரன், மீனா மகள் நைனிகா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
விஜய் ரசிகர்களை மட்டுமில்லாது அனைத்து தரப்பினரையும் கவர்ந்த இப்படம் தற்போது மீண்டும் ரிலீசாகவிருக்கிறது. வரும் தமிழ் புத்தாண்டையொட்டி விஜய் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ரோகிணி திரையரங்கம் ‘தெறி’ படத்தை மீண்டும் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

முன்னதாக, ஒரேயொரு காட்சிக்கு மட்டுமே ஏற்பாடு செய்திருந்த இந்த திரையரங்கம், தற்போது இந்த படத்தை மீண்டும் பார்க்க ரசிகர்களிடையே ஆர்வம் பெருகியுள்ளதால் கூடுதலாக இன்னொரு காட்சிக்கும் ஏற்பாடு செய்திருக்கிறது. காலை 8.45 மணிக்கு ஒரு திரையரங்கிலும், 9.00 மணிக்கு மற்றொரு திரையரங்கிலும் ‘தெறி’ படம் திரையிடப்படுகிறது. இதற்கான முன்பதிவுகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
‘தெறி’ படம் கடந்த தமிழ் புத்தாண்டில் வெளிவந்தது. ஒரு வருடம் கழித்து மீண்டும் வெளியாவது ரசிகர்களுக்கு பெரிய உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. திரையரங்கில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஆர்வமாக இருக்கின்றனர்.

திருட்டு விசிடியை ஒழிப்பதற்கு முன் நல்ல படங்களை எடுங்கள் என்று இயக்குனர் பாக்யராஜ் திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரோஜா மாளிகை’ படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் கே.பாக்யராஜ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது,
திருட்டு விசிடியால் சினிமாவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பது 10 சதவீதம்தான். ஆனால், நாம் நல்ல படம் எடுக்கவேண்டும் என்பதுதான் இங்கு முக்கியம். சமீபத்தில் வெளிவந்த ‘மாநகரம்’, ‘எட்டு தோட்டாக்கள்’ படங்கள் பெரிய நடிகர்கள் இல்லாவிட்டாலும் பேசப்படுகிறது என்றால் நல்ல கதைகள்தான் அதற்கு காரணம்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய அணி தேர்வாகியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பிடித்துப்போய் யாரும் தேர்வு செய்யவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் நிறைய பிரச்சினை இருக்கிறது. அதை நீங்களாவது சரிசெய்வீர்கள் என்பதற்காகத்தான் உங்களுக்கு ஓட்டு போட்டு தேர்வு செய்திருக்கிறார்கள்.

திரையரங்கு உரிமையாளர்கள் பெரிய படத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் சிறிய பட்ஜெட் படங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கவேண்டும். புதிய நடிகர்களின் படங்களுக்கு காலை காட்சி கொடுத்தால் அவர்களுக்கு பெரிய அளவில் பலன் இருக்காது. பெரிய நடிகர்களின் படங்களுக்கு காலைக் காட்சி கொடுத்தால்கூட அவர்களுக்காக ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள். ஆனால் புதிய நடிகர்களுக்கு அப்படியில்லை, அவர்களின் படங்களுக்கு மாலைக் காட்சிகள் கொடுத்தால்தான் பயனுள்ளதாக இருக்கும்.
நான் யாருக்கும் கதை சொல்லி சினிமாவுக்குள் வரவில்லை. நான் யாருக்கும் கதை சொல்ல மாட்டேன். என்மேல் நம்பிக்கை இருந்தால் படம் பண்ணலாம் என்பதை முதலிலேயே சொல்லிவிடுவேன். கதை விவாதத்தின் போது தயாரிப்பாளர் உள்ளே வந்து எட்டிப்பார்ப்பது எனக்கு பிடிக்காது. தயாரிப்பாளர் விழுந்துவிட்டால் அவரை காப்பாற்றிவிடுவதற்கு இன்னொரு இயக்குனர் கிடைப்பார். ஆனால், ஒரு இயக்குனர் விழுந்துவிட்டால், அவரே தானாகத்தான் எழுந்துவரவேண்டும். இதுதான் அதற்கு காரணம்.
இவ்வாறு அவர் பேசினார்.

கணவருடன் மீண்டும் சேர்ந்த ரம்பா, தனது குடும்பத்துடன் திருப்பதியில் தரிசனம் செய்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
நடிகை ரம்பாவுக்கு, கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனுக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு லான்யா, சாஷா என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக நீதிமன்றம் வரை சென்று தனது கணவரை பிரிய முடிவு செய்தார் ரம்பா.
பின்னர், மனம் மாறி தன்னை கணவருடன் சேர்த்து வைக்குமாறு நீதிமன்றத்திடம் முறையிட, அவர்களுக்கு நீதிமன்ற நல்ல தீர்ப்பை வழங்கி சேர்த்தும் வைத்தது. இந்நிலையில், கணவருடன் மீண்டும் சேர்ந்த ரம்யா முதல் வேலையாக தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

ரம்பா தற்போது எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இருப்பினும், தனியார் தொலைக்காட்சி நடத்தும் ரியாலிட்டி ஷோவில் நடுவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரம்யா தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த காட்சி

அந்த காலத்திலேயே பாக்யராஜ் பாகுபலி மாதிரியான படத்தை எடுத்தவர் என்று இயக்குனர் வி.சேகர் பேசியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரோஜா மாளிகை’ படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் நடந்தது. இதில், இயக்குனர் பாக்யராஜ், பொன்வண்ணன், வி.சேகர், விக்னேஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
அப்போது, வி.சேகர் பேசும்போது, நான் மக்களுக்கு பிடித்தமான ஜனரஞ்சகமான படங்களை கொடுத்து வெற்றி இயக்குனராக மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறேன் என்றால், அதற்கு முழு காரணமும் இயக்குனர் பாக்யராஜ்தான். அந்த காலத்தில் அவர் படம் ரிலீஸ் ஆகிறதென்றால் ரஜினி, கமல் ஆகியோரும் தயங்குவார்கள்.

இன்றைக்கு பிரம்மாண்ட வசூலை பெற்றுவிட்டதாக கூறப்படும் ‘பாகுபலி’ வசூலை, பாக்யராஜ் அந்த காலத்திலேயே ‘முந்தானை முடிச்சு’ என்ற படத்தின் மூலம் பெற்றுவிட்டார். அதனால், அந்த படத்தை அந்தகாலத்து ‘பாகுபலி’ என்று கூறலாம்.
பாக்யராஜ் ஒரு படத்தில் ஒரு காட்சிக்காகவே 2 மாசம் வரை எடுத்துக்கொள்வார். படத்தை எடுக்கும்போதே, இந்த காட்சியில் ரசிகர்கள் சிரிப்பார்கள்? இந்த காட்சியில் ரசிகர்கள் அழுவார்கள்? என்று சொல்லிக்கொண்டேதான் படத்தை எடுப்பார். அவர் சொன்னதுபோலவே திரையரங்கிலும் நடக்கும். அந்தளவுக்கு ஒரு விஞ்ஞானிபோல் ஒவ்வொரு காட்சியையும் ஆராய்ந்து எடுப்பார்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் இயக்குனர் அமீர் மீதான பிடிவாரண்டை ரத்து செய்து ராமநாதபுரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரத்தில் கடந்த 2008-ம் ஆண்டு தமிழ் திரையுலகத்தின் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கியூ பிரிவு போலீசார் அக்டோபர் 24-ந்தேதி வழக்கு தொடர்ந்தனர்.
ராமேசுவரம் கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை பின்னர் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் நேரில் ஆஜராகி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த மாதம் 13-ந்தேதி நடந்த வழக்கு விசாரணையின் போது இயக்குனர் அமீர் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜராகாததால், வழக்கை விசாரித்த நீதிபதி ராம், இயக்குனர் அமீருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நேற்று காலை அவர் ராமநாதபுரம் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.
மாவட்ட முதன்மை கோர்ட்டு நீதிபதி (பொறுப்பு) ராம் முன்னிலையில் ஆஜரான இயக்குனர் அமீர் தனது மீதான பிடிவாரண்டு உத்தரவை ரத்து செய்யக் கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவர் மீதான பிடிவாரண்டை ரத்து செய்து, வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 9-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முகம் காட்டிய பிரபுதேவா தற்போது பாடலாசிரியராகவும் மாறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
சிம்புவும், தனுஷும் தற்போது அவரவர் படங்களில் ஏதாவது பாடலை எழுதி வருகின்றனர். அந்த பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெறுகின்றன. இவர்கள் வரிசையில் தற்போது நடிகர் பிரபுதேவாவும் பாடலாசிரியராக மாறியுள்ளார்.
‘தேவி’ படத்திற்கு பிரபுதேவா நடித்து வரும் ‘எங் மங் சங்’ படத்திற்காகத்தான் பிரபுதேவா ஒரு பாடலை எழுதியிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். தங்கர் பச்சான், சித்ரா லட்சுமணன், கே.ராஜன், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். எம்.எஸ்.அர்ஜுன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

அம்ரீஷ் இசையமைப்பில் ‘அய்யனாரா வந்துட்டாங்க இங்க பாரு’ என்று பிரபுதேவா எழுதிய பாடல் சங்கர் மகாதேவன் குரலில் பதிவு செய்யப்பட்டது. இப்பாடலை கும்பகோணத்தில் 150 நடனக் கலைஞர்களுடன் பிரபுதேவா பங்கேற்க பிரம்மாண்டமாக படமாக்கி வருகிறார்கள். இந்த பாடலுக்கு ஸ்ரீதர் நடனம் அமைத்துள்ளார்.
இப்படத்தை வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இவர்கள் தயாரிப்பில் ‘ஒரு பக்க கதை’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’ ஆகிய படங்களும் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கும் இளையராஜாவுக்கும் இடையேயான பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும் என்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
அமெரிக்காவில் இசைக்கச்சேரியில் பிசியாக இருக்கும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இளையராஜாவுடனான காப்புரிமை பிரச்சனை குறித்து மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
இளையராஜாவும், நானும் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பே நண்பர்கள். தங்களுக்கிடையேயான பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும் என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். காப்புரிமை பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது என்பது நாம் அறிந்ததே.

எனினும் இளையராஜாவின் பாடல்களை பாட முடியாததால் மனதளவில் வருத்தப்பட்டேன். மேலும் தனக்கு காப்புரிமை பிரச்சனை குறித்த எதுவுமே தெரியாது. அவர் அனுப்பிய நோட்டீஸ் மூலமே இவ்வாறு சட்டம் உள்ளதை அறிந்தேன். இதுபோன்று சட்டம் இருப்பது முன்பே தெரிந்திருந்தால், இளையராஜாவிடம் தான் அனுமதி கேட்டிருப்பேன். இளையராஜா இதுபோன்று காப்புரிமை பெற்றுள்ளார் என்று தனக்கு தெரியாது.
எனினும் தங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. தனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. அதுவே தற்போது, இளையராஜாவுடன் தன்னை பேசவிடாமல் தடுக்கிறது. எனினும் தங்களுக்கிடையேயான பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும் என்றார்.

திரைப்படம் வெளியாகிய மூன்று நாட்களுக்குள் ஊடகங்கள் விமர்சனங்களை வெளியிடக்கூடாது என்று `நெருப்புடா' பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஷால் கூறினார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நெருப்புடா’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் உள்ள சிவாஜியின் ‘அன்னை இல்லத்தில்’ நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்துகொண்டு படத்தின் ஆடியோவை வெளியிட்டார்.
இந்த விழாவில் நடிகர்கள் விவேக், விஷால், பிரபு, சத்யராஜ், தனுஷ், ராகவா லாரன்ஸ், கார்த்தி, விஜய்யின் மனைவி சங்கீதா, நிக்கி கல்ராணி, இயக்குனர் விக்ரமன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேசும்போது,
ஒரு திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களுக்கு, எந்த ஊடகமும் விமர்சனங்கள் வெளியிடக்கூடாது. ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் விமர்சனங்களால் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினருக்கு இழப்பு ஏற்படுகிறது. மூன்று நாட்களுக்குப் பிறகுதான் விமர்சனம் வெளியிட வேண்டும். படம் வெளியான அன்றே விமர்சிக்கும் சமூக வலைத்தளங்களை ஒழுங்குப்படுத்தவேண்டும். அதேபோல், விமர்சனம் பண்ணும்போதும் யாரையும் காயப்படுத்தாதீர்கள்.
தயாரிப்பாளர்களும் சினிமாவில் எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்பதை மனதில் வைத்தே படத்தை எடுக்க முன்வர வேண்டும். தான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்து படம் எடுக்கக்கூடாது. அதேபோல், முன்அனுபவம் வாய்ந்த விநியோகஸ்தர்களின் ஆலோசனைகளை பெற்று படங்களை விற்பனை செய்யுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.

புகழேணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணம்; ரகசியத் திருமணமும் கூட!

ஒரு நாள் எம்.ஜி.ஆரை வாலி சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, "வாலி! காலா காலத்தில் ஒரு கல்யாணம் செய்து கொள்ளுங்க! நிறைய பணம் சம்பாதிக்கிறபோது, தனி மனிதனா இருந்தா தப்புத் தண்டாவுலே புத்திப்போகும். நீங்க உங்களுக்குப் பிடிச்ச பொண்ணைச் சொல்லுங்க. நான் முன்நின்று உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்...'' என்று எம்.ஜி.ஆர். பாசத்துடன் சொன்னார்.
அப்படியிருந்தும், எம்.ஜி.ஆருக்கே தெரியாமல் வாலியின் ரகசிய திருமணம் நடந்தது.
பிரபல திரைப்பட கவிஞராக உயர்ந்த பிறகும், வாலிக்கு நாடக ஆசை விடவில்லை. "லவ் லெட்டர்'' என்ற நாடகத்தை எழுதினார். ஏவி.எம்.ராஜன், ஜாவர் சீதாராமன், `காக்கா' ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதில் நடிக்க இருந்தனர்.
நாடக ஒத்திகை, அடிக்கடி வாலியின் வீட்டில் நடந்தது.
இந்த நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க, திலகம் என்ற பெண்ணை வாலி ஒப்பந்தம் செய்திருந்தார். இவர், வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றவர். நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா ஆகியோருடன் சேர்ந்து நடனம் ஆடியவர். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் "குயில்'' நாடகத்தில் கதாநாயகியாக நடித்தவர்.
திலகத்தை மணந்து கொள்ள வாலி விரும்பினார். ஆனால் காதல் ஏற்படவில்லை.
இதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-
"நேசித்த பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்று, அல்லும் பகலும் அதே சிந்தனையில் இருந்தேன். அவள் பிடி கொடுத்துப் பேசவில்லை.
இருப்பினும், அவளது சித்திரத்தை அழித்துவிட்டு இன்னொரு சித்திரத்தை எழுதிப் பார்க்க என் மனம் தயாராயில்லை.
அப்படி ஒரு காதல் தவத்தில் நான் ஈடுபட்டிருந்த நாளில்தான், "எங்க வீட்டுப்பிள்ளை'' படத்திற்காக பாடல் எழுத உட்கார்ந்தேன்.
டைரக்டர் சாணக்யா, பாடல் காட்சியை விளக்கினார்.
"கதாநாயகன், தான் விரும்பும் பெண்ணின் உள்ளத்தில் இடம் பெற்று விடவேண்டும் என்று படாதபாடு படுகிறான்'' என்று கூறி, அதற்கேற்ப பாடல் எழுதச் சொன்னார்.
கதாநாயகனின் உள்ளுணர்விலேயே நானும் இருந்ததால், என் உள்ளக்கிடக்கையை அப்படியே பாடலாக்கினேன்.
"குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்; குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்?'' - இந்தப் பாட்டின் தாக்கத்தால், என் காதலி மனம் கசிந்தாள்; என் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள்.''
இவ்வாறு வாலி கூறியுள்ளார்.
திருமணத்தை எளிய முறையில் நடத்த வாலி விருமëபினார். அதனால், உடன் பிறந்த சகோதர -சகோதரிகளிடமோ, எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற மிக மிக நெருங்கிய நண்பர்களிடமோ கூட சொல்லாமல், திருமண பத்திரிகை கூட அச்சிடாமல், கீழத்திருப்பதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்தார்.
திருமணத்துக்கு மண்டபம் ஏற்பாடு செய்ய, தன் நண்பர் வி.கோபாலகிருஷ்ணனுடன் காரில் புறப்பட்டார், வாலி.
கோபாலகிருஷ்ணன்தான் காரை ஓட்டினார்.
அதன்பின் நடந்தது பற்றி வாலி கூறியதாவது:-
"ஒரு குக்கிராமத்தில் கார் நுழையும்போது எதிர்பாராதவிதமாக ஓர் ஐந்து வயதுப் பெண் குழந்தை குறுக்கே ஓடி வந்து, கார் ஹெட்லைட்டில் லேசாக அடிபட்டு, சிறிய காயத்தோடு தப்பியது.
குழந்தையின் தாய் பரபரப்போடு ஓடிவந்து, மகளை அள்ளி மார்போடு அணைத்துக்கொண்டாள். நானும், கோபியும் வண்டியை விட்டு இறங்கி, "குழந்தை எதிர்பாராமல் குறுக்கே ஓடிவந்ததால்தான், இப்படி ஆயிப்போச்சு... இதுல எங்க தவறு எதுவுமில்லை. இருந்தாலும், பெரிய மனசு பண்ணி நீங்க மன்னிக்கணும்'' என்று குழந்தையின் தாயிடம் சொன்னோம். அந்த அம்மையார் அதில் சமாதானமடைந்து, ஊரைக்கூட்டி விவகாரம் செய்யாமல் எங்களை மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தார்.
"வாலி! இப்படி ஒரு சின்ன ஆக்சிடெண்ட் ஆயிடுச்சே! மெட்ராசுக்கே திரும்பிடலாமா...?'' என்று கோபி என்னிடம் கேட்டார்.
"ஏன்? இதனால் என்ன?'' என்றேன் நான்.
"கல்யாணத்திற்கு இடம் பார்க்கப் போகிறோம், சகுனமே சரியில்லையே'' என்றார் கோபி.
"எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. இந்தக் கல்யாணத்துல கடவுளுக்கு இஷ்டமில்லைன்னாதான் நடக்காது. மத்தப்படி, இது மாதிரி விஷயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை'' என்றேன் நான்.
கோபி, மவுனமாகக் காரை ஓட்டிக்கொண்டு வந்தார். திடீரென்று வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று, வாலை நிமிர்த்தி சிலிர்த்துக்கொண்டு பாதையின் குறுக்கே ஓடிவந்தது.
அதன் மீது கார் மோதாமலிருக்க கோபி பிரேக்கின் பெடலை அமுக்க, எதிர்பாராமல் வண்டி நிலை குலைந்து பாதையை விட்டு வயக்காட்டில் இறங்கி ஒரு குலுக்கலோடு நின்றது. எனக்கும் கோபிக்கும் உச்சந்தலையிலும், முன் நெற்றியிலும் லேசான சிராய்ப்புகள்.
"சகுனம் சரியில்லை... வாங்க, வாலி! ஒழுங்கா நாம் மெட்ராசுக்கே திரும்பிடலாம்'' என்றார், கோபி.
வயக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் துணையோடு, எங்கள் கார், பள்ளத்திலிருந்து பாதைக்குக் கொண்டு வரப்பட்டது.
"இப்போதைக்கு உங்க கல்யாணத்தைத் தள்ளிப்போட்டுடுங்க. ஒண்ணு ஒண்ணா தடங்கல் வந்துக்கிட்டேயிருக்கு'' என்றார் கோபி. நான் அதற்கு உடன்படவில்லை.
"கோபி! எண்ணித் துணிஞ்சாச்சு... துணிஞ்சப்புறம் எண்றதே இழுக்கு... கல்யாணம் ஏப்ரல் 7-ந்தேதி, திருச்சானூர் கோவில் சத்திரத்தில் நடந்தே தீரணும்... என் முடிவை நான் மாத்திக்கறதா இல்லை... நீங்க வராட்டி, நான் நடந்தே திருப்பதி போயிடுவேன்'' என்று சொன்னதும் கோபி சிரித்து விட்டுப் பேசினார்.
"ஏப்ரல் 7-ந்தேதி சத்திரம் கிடைக்கல்லேன்னா...?''
"அப்ப, இந்தக் கல்யாணத்தைத் தள்ளிப்போடக் கடவுள் விரும்புறார்னு நினைப்பேன்.''
என் உறுதியைப் பாராட்டி கோபி, திருப்பதியை நோக்கிக் காரைச் செலுத்தினார்.
கோபி, சொன்னது ஒரு விஷயத்தில் உண்மைதான். கீழத்திருப்பதி, திருச்சானூர் கோவில் கல்யாண மண்டபம் அவ்வளவு சுலபமாகக் கிடைக்கக்கூடிய இடமில்லை. ஏனெனில் ஏகப்பட்ட முகூர்த்தங்களுக்கான மாதம் அது. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே பலர் ரிசர்வேஷன் செய்திருக்க நிறைய வாய்ப்பு உண்டு.
திருப்பதி தேவஸ்தான பேஷ்கார், கோபிக்கு மிக நெருங்கிய நண்பர். கீழத்திருப்பதியில் குடியிருந்த அவர் வீட்டுக்குப்போய்ச் சேர்ந்து விவரத்தைச் சொன்னோம்.
"ஏப்ரல் 7-க்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது... இப்போது கேட்டால் எப்படி? கண்டிப்பாகக் கல்யாண மண்டபம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாக இருக்கும்...'' என்று சொன்னார் கோவில் பேஷ்கார்.
"டெலிபோன் செஞ்சு கேட்டுப் பாருங்களேன்'' என்று பேஷ்காரிடம் என்பொருட்டு வேண்டினார், கோபி.
திருச்சானூர் கோவில் நிர்வாக அதிகாரியோடு போனில் பேசிவிட்டு பேஷ்கார் சொன்னார்:
"எல்லா முகூர்த்த நாட்களும் இன்னும் 3 மாதத்திற்கு `புக்' ஆகிவிட்டது. ஆனால் ஏப்ரல் 7-ந்தேதி காலியாயிருக்கு...''
உடனே நான் கோபியிடம், "இதுதான் கடவுள் திருவுள்ளம் என்பது!'' என்றேன்.
1965 ஏப்ரல் 7-ந்தேதி என் திருமணம் திருச்சானூரில் நடந்தது. மா.லட்சுமணன், "புலித்தேவன்'' பட இயக்குனர் ஏ.ராஜாராம், கோபி இவர்கள் முன்னிலையில் என் மனைவி திலகத்தின் நெற்றியில் நான் திலகம் இட்டேன்.
திருமண மண்டபத்தைத் தேர்வு செய்யப்போகும் போதே இவ்வளவு தடங்கல்கள் ஏற்படின் என்னைத்தவிர வேறு எவரேனும் இதுபோல் விடாப்பிடியாக நின்று, விவாகத்தை முடித்திருப்பார்களா என்பது சுலபமாக விடையிறுக்க முடியாத வினாவாகும்.
நான் ஆண்டவனிடத்தில் நம்பிக்கையுடையவன்.
சகுனங்களிலும், ஜாதகங்களிலும் நம்பிக்கையுடையோரை நையாண்டி செய்வது நாகரிகமற்ற செய்கை என்பதில் உறுதியாக நிற்பவன். எந்த சகுனமும், எந்த ஜாதகமும் பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட என் குடும்ப வாழ்க்கை, எந்த சஞ்சலமும், சங்கடமுமில்லாமல் நல்லபடியாகத்தான் நாயகன் அருளால் நடந்து கொண்டிருக்கிறது.''
இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
தன் திருமணம் பற்றி யாருக்கும் வாலி தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும், மறுநாள் பத்திரிகைகளில் "வாலி ரகசிய திருமணம்'' என்று செய்தி வெளியாகிவிட்டது.
அதைப் பார்த்துதான், எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.வி. ஆகியோருக்கு வாலியின் திருமண தகவலே தெரிந்தது.
இதனால் அவர்கள் வாலியிடம் கோபித்துக்கொண்டாலும், வாலி பெரும்பாடுபட்டு அவர்களை சமாதானப்படுத்தி, வாழ்த்து பெற்றார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘காற்று வெளியிடை’ படம் காப்பி படம் என்பதற்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடித்த ‘காற்று வெளியிடை’ கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்தது. மணிரத்னம் படங்களில் இதுவரை எந்தளவிற்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்திற்குதான் அதிகளவில் விமர்சனங்கள் எழுந்தன. அதேநேரத்தில், படம் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த படம் கொரியன் சீரியலான ‘டீசென்டன்ட்ஸ் ஆப் த சன்’ என்பதன் அப்பட்டமான காப்பி என்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது. இந்த தொடரின் நாயகன் ராணுவத்தில் பணிபுரிவர். நாயகி ஒரு டாக்டர். இருவருக்கும் இருக்கும் மோதல், காதல் இதுதான் இந்த தொடரின் கதை. அந்த தொடரின் கதையும், காற்று வெளியிடை படத்திற்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாக கருத்துக்கள் தெரிவித்து வந்தனர்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், இந்த படம் 1971-ல் போர் விமானியாக இருந்த திலீப் பரூல்கர் என்பவருடைய விமானம் பாகிஸ்தானால் சுடப்பட்டு வீழ்த்தப்பட்டது. அப்போது, அவர் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 1972-ல் அவர் தன்னுடன் அடைக்கப்பட்டிருந்த இரண்டு சிறை கைதிகளுடன் அங்கிருந்து தப்பிக்கிறார்.
இந்த உண்மை கதை ‘Four miles to Freedom’ என்ற பெயரில் புத்தகமாக பெய்த் ஜான்ஸ்டன் என்பவர் எழுதியிருக்கிறார். ‘காற்று வெளியிடை’ படத்தில் சில காட்சிகள் இந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டு படமாக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி எந்த சீரியலின், படத்தின் காப்பி கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.

சமுத்திகனி இயக்கும் ’ஆகாச மிட்டாய்’ மலையாள படத்தில் வரலட்சுமிக்கு பதிலாக இனியா நடிக்கவுள்ளார்.
சமுத்திரகனி இயக்கம், நடிப்பு, தயாரிப்பில் தமிழில் வெளிவந்த ‘அப்பா’ படம் வெற்றிப்பட வரிசையில் அமைந்தது. இந்த படத்தை தற்போது மலையாளத்தில் ‘ஆகாச மிட்டாய்’ என்ற பெயரில் சமுத்திரகனி ரீமேக் செய்து வருகிறார். இப்படத்தில் சமுத்திரகனி நடித்த கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கிறார்.
இப்படத்தின் கதாநாயகியாக வரலட்சுமி ஒப்பந்தமாகியிருந்தார். பூஜையுடன் கூடிய படப்பிடிப்பில் கலந்துகொண்ட வரலட்சுமி, அடுத்த சில நாட்களிலேயே ஆணாதிக்க பிரச்சினையால் இந்த படத்தில் இருந்து விலகுவதாக கூறி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கு வேறு நாயகியை தேடும் படலம் நடைபெற்று வந்தது.

கடைசியாக தற்போது இனியாவை இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் நடந்துவரும் படப்பிடிப்பில் இனியா கலந்துகொண்டு நடித்து வருகிறார். மலையாள படங்களில் சமுத்திரகனி நடித்திருந்தாலும், மலையாளத்தில் அவர் இயக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷாலின் வீட்டில் விரைவில் ஒருவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது யாருக்கு என்பதை கீழே பார்ப்போம்.
விஷாலின் உடன் பிறந்த தங்கை ஐஸ்வர்யா கிருஷ்ணா தற்போது விஷாலுடைய தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்துவைக்க கடந்த நவம்பர் மாதத்தில் இவரது பெற்றோர் மாப்பிள்ளை தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது மகளுக்கு பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்துவிட்ட நிலையில், நேற்று திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்துள்ளனர். இந்த நிச்சயதார்த்தம் சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடந்து முடிந்துள்ளது.

இந்த விழாவில் விஷால் குடும்பத்திற்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதத்தில் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா கிருஷ்ணாவுக்கு நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.