என் மலர்
‘பாகுபலி-2’ படத்தில் நடித்தபோது தமன்னாவுக்கும், தனக்கும் போட்டி ஏற்பட்டதா? என்பது குறித்து நடிகை அனுஷ்கா விளக்கம் அளித்துள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்துள்ள ‘பாகுபலி-2’ படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். நடிகை அனுஷ்கா படம் பற்றி கூறியதாவது:-
“பாகுபலி படத்தின் முதல் பாகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்ததால் அதன் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. முதல் பகுதியில் தமன்னாவுக்கு அதிக காட்சிகளும், எனக்கு குறைவான காட்சிகளும் இருந்தன. இரண்டாம் பாகத்தில் நான் அதிக காட்சிகளில் வருகிறேன். என் வாழ்க்கையில் பாகுபலி முக்கிய படமாக இருக்கும்.
5 வருடங்கள் இந்த படத்தின் இரண்டு பாகங்களுக்காகவும் நடிகர்-நடிகைகளும், தொழில்நுட்ப கலைஞர்களும் கடுமையாக உழைத்து இருக்கிறோம். ‘பாகுபலி-2’ படத்தில் நான் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து இருக்கிறேன். இதற்காக சண்டை பயிற்சியாளர்கள் வைத்து பல மாதங்கள் சண்டை கற்றேன். வாள் சண்டை பயிற்சியும் எடுத்தேன். கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையையும் குறைத்தேன்.

இதில் நடித்தது பெரிய சவாலாக இருந்தது. தமன்னா எனது மருமகளாக நடித்து இருக்கிறார். படப்பிடிப்பில் எனக்கும், தமன்னாவுக்கும் இடையே யாருக்கு முக்கியத்துவம் என்பதில் போட்டி நிலவியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. போட்டி மனப்பான்மை எங்களுக்குள் இல்லை. மகிழ்ச்சியாகவே நடித்தோம். இரண்டு கதாநாயகிகள் கதையில் நடித்து இருக்கிறீர்களே? என்று கேட்கிறார்கள். என்னை பொறுத்தவரை கதைக்கும் எனது கதாபாத்திரத்துக்கும்தான் முக்கியத்துவம் கொடுப்பேன்.
நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் நடிக்க சம்மதிப்பேன். அந்த படத்தில் எத்தனை கதாநாயகிகள் இருந்தாலும் கவலைப்பட மாட்டேன். பாகுபலி-2 படத்தால்தான் நான் திருமணம் செய்துகொள்வதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்வதில் உண்மை இல்லை. திருமணம் நடக்கும்போது நடக்கும்”.
இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
நடிகை தமன்னா கூறும்போது “பாகுபலி-2’ படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். எனது கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. சண்டை காட்சிகளிலும் நடித்து இருக்கிறேன். பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளன. முதல் பாகத்தை விட சிறப்பாக வந்துள்ளது” என்றார்.

ஒரு படத்தை விமர்சனம் பண்ணும்போது யாரையும் காயப்படுத்தாதீர்கள் என்று ரஜினி பேசியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நெருப்புடா’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் உள்ள சிவாஜியின் ‘அன்னை இல்லத்தில்’ நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்துகொண்டு படத்தின் ஆடியோவை வெளியிட்டார். இந்த விழாவில் நடிகர் ரஜினி பேசும்போது,
அன்னை இல்லம் எனக்கு ரொம்பவும் நெருக்கமானது. நான் இந்த இல்லத்திற்கு இரண்டு முறை வந்திருக்கிறேன். ஒருமுறை சிவாஜி, அன்னை இல்லத்திற்கு என்னை சாப்பிட அழைத்திருந்தார். என்னை மட்டும்தான் வரச்சொல்லியிருக்கிறார் என்று நினைத்து நானும் வந்தேன். எனக்கு முன்பே, 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு அங்கு தடபுடலாக விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதேபோல், அன்னை இல்லத்தில் அன்று பரிமாறப்பட்ட உணவுகளும் எக்கச்சக்கமாக இருந்தது. அதை என்னால் மறக்கமுடியாது.

என்னுடைய நடிப்பில் வெளியான இரண்டு படங்களைத்தான் சிவாஜி அவர்கள் திரையரங்கில் பார்த்துள்ளார். ஒன்று அண்ணாமலை, மற்றொன்று படையப்பா. படையப்பா படத்தில் அவர் நடித்திருந்தார் என்பதற்காக வந்து பார்த்தார். அண்ணாமலை படத்தில் இரண்டாம் பாதியில் நான் நடித்திருந்த கதாபாத்திரத்தை சிவாஜியை மனதில் வைத்துதான் நடித்தேன். அதை பார்த்துவிட்டு சிவாஜி என்னை ரொம்பவும் பாராட்டினார். சிவாஜி அவர்கள் உயிரோடு இருந்தவரை அவருக்கு போட்டியாக யாரும் இருந்ததில்லை.

தாத்தா, அப்பாவின் பெயரை காப்பாற்றவேண்டும் என்ற சுமை விக்ரம் பிரபுவுக்கு இருக்கிறது. விஷால் பேசும்போது ஒரு படத்தின் விமர்சனத்தை மூன்று நாட்கள் கழித்து வெளியிட்டால், தயாரிப்பாளர்களுக்கும், அந்த படத்துக்கும் நல்ல விடிவுகாலம் பிறக்கும் என்று பேசியிருந்தார். அது வரவேற்கத்தக்கது. அதேபோல், விமர்சனம் பண்ணும்போதும் யாரையும் காயப்படுத்தாதீர்கள்.

தயாரிப்பாளர்களும் சினிமாவில் எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்பதை மனதில் படத்தை எடுக்க முன்வர வேண்டும். தான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்து படம் எடுக்கக்கூடாது. அதேபோல், முன்அனுபவம் வாய்ந்த விநியோகஸ்தர்களின் ஆலோசனைகளை பெற்று படங்களை விற்பனை செய்யுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் நடிகர் விவேக், விஷால், தனுஷ், ராகவா லாரன்ஸ், கார்த்தி, விஜய்யின் மனைவி சங்கீதா, நிக்கி கல்ராணி, இயக்குனர் விக்ரமன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் இடையே மிகுந்த பாசமும், ஆழ்ந்த நட்பும் இருந்தபோதிலும் இடையிடையே கருத்து வேற்றுமைகளும் ஏற்பட்டன.

இதுபற்றி வாலி கூறியதாவது:-
"ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம் ஏதோ தனியாகப் பேசவேண்டும் என்று சொல்லி, ஒலிப்பதிவு கூடத்துக்கு வெளியே ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்றார்.
"வாலி! உங்களால் எனக்கு ஒரு தர்மசங்கடமான நிலைமை'' என்று எம்.ஜி.ஆர். சொன்னதும், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.
"என்ன அண்ணே?'' என்று பதற்றத்துடன் கேட்டேன்.
"நீங்கள் ஸ்டூடியோவுக்கு வரும்போது, நெற்றியில் விபூதி -குங்குமம் இட்டுக்காமல் வந்தால் தேவலே...'' என்று சற்று தயக்கத்தோடு சொன்னார், எம்.ஜி.ஆர்.
"ஏன் அண்ணே! இதனால் என்ன வந்தது?'' என்று கேட்டேன்.
எம்.ஜி.ஆர். சற்று விளக்கமாகச் சொன்னார்:
"வாலி! நீங்கள் தி.மு.க.வில் உறுப்பினர் இல்லை, அரசியல் தொடர்பு இல்லாதவர் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். இருந்தாலும் நீங்க எனக்குப் பாட்டு எழுதறீங்க. உங்க திறமையாலேதான் நீங்க முன்னுக்கு வந்திருக்கீங்க. நீங்க நல்லா எழுதறதாலே நான் உங்களைப் பயன்படுத்திக்கிறேன். ஆனால், நான் இருக்கிற கட்சியில் இருக்கிற என்.வி.நடராசனைப் போன்ற பெரியவர்கள், "கட்சியிலே இருக்கிற கவிஞர்களை ஆதரிக்காமல், பகுத்தறிவு கொள்கைக்கு புறம்பா விபூதி -குங்குமம் இட்டுக்கிற வாலியை ஆதரிக்கிறீங்களே!'' என்று சொல்றாங்க.
உங்களை விடறதிலே எனக்கு இஷ்டம் இல்லை. நீங்க வீட்டிலே எப்படி வேண்டுமானாலும் பக்திமானா இருந்துக்குங்க... வெளியே வரும்போது, நான் இருக்கிற கழகத்தின் கொள்கைக்கு ஏற்ப, நெற்றியில் விபூதி - குங்குமம் இல்லாமல் வந்தால் தேவலை.''
எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னதும், நான் ஒரு விநாடி சிந்தனையில் ஆழ்ந்தேன். பிறகு, எம்.ஜி.ஆரிடம் ஒரு தன்னிலை விளக்கத்தை மிகத் தெளிவாக அளித்தேன்.
"அண்ணே! நான் தீவிரமான முருக பக்தன். என்னை உங்களோட இணைச்சதும் அந்த முருகன்தான். அப்படி இருக்கும்போது, நான் விபூதியை விடமுடியாது. என்னால் உங்களுக்கு தர்ம சங்கடமான நிலைமை வேண்டாம். நான் ஒதுங்கிக் கொள்கிறேன்'' என்று நான் சொன்னவுடன், எம்.ஜி.ஆர். என் இரு கரங்களையும் பற்றி, "சரி... இந்த விஷயத்தை இத்துடன் நìறுத்திக் கொள்வோம். என்னுடன் வாங்க!'' என்று கூறியபடி, என் தோளில் கை போட்டவாறு, ரிக்கார்டிங் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார்.
தி.மு.கழகத்தை விட்டு எம்.ஜி.ஆர். விலகாதிருந்த நாளில் (1972) கலைஞரின் மகன் மு.க.முத்துவைக் கதாநாயகனாகக் கொண்டு "பிள்ளையோ பிள்ளை'' என்னும் வண்ணப் படத்தை பூம்புகார் புரொடக்ஷன்சார் தயாரித்தனர். கிருஷ்ணன் பஞ்சு இயக்க, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, நான் பாடல்களை எழுதினேன்.
படம் தயாரானதும், அந்தப் படத்தின் பிரத்தியேகக் காட்சி ஒன்று, தேவி பாரடைஸ் தியேட்டரில் ஒரு நாள் காலைப் பொழுதில் ஏற்பாடாகியிருந்தது.
படத்தைப் பார்க்க முதல்வர் கலைஞரோடு, அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். படத்தின் இடைவேளையில் மு.க.முத்துவின் நடிப்பை எம்.ஜி.ஆர். பாராட்டிப்பேசி, ஒரு கைக்கடிகாரத்தையும் அன்பளிப்பாகத் தந்து வாழ்த்தினார்.
நானும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறும்போது, எம்.ஜி.ஆர். என்னை அவருடைய தோட்டத்திற்கு மறுநாள் காலை சிற்றுண்டிக்கு வரச்சொன்னார்.
மறுநாள், நான் தோட்டத்திற்கு சென்றேன்.
விருந்தோம்பலில் எம்.ஜி.ஆருக்கு இணையே கிடையாது. இட்லிகளும், தோசைகளும் அவர் கையாலேயே எனக்குப் பரிமாறப்பட்டன.
சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, எம்.ஜி.ஆர். என்னிடம் மெல்லப் பேசத்தொடங்கினார். "என்னங்க வாலி! மூன்று தமிழ் தோன்றியது மு.க.முத்து கிட்டதானா?''
இப்படி எம்.ஜி.ஆர். என்னைக்கேட்டதும், அவரது மனதில் உள்ளது என்னவென்று மறுவினாடியே எனக்குப் புரிந்துவிட்டது.
"பிள்ளையோ பிள்ளை'' படத்தின் இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு. திரு.பஞ்சு மூலம், கலைஞர், தன் மகன் முத்துவை வாழ்த்தி நான் பாட்டெழுத வேண்டுமென்று சொல்லியனுப்பியிருந்தார்.
அதன் காரணமாகப் படத்தின் கதாநாயகி, கதாநாயகனைப் பார்த்து - "மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ! - நீ மூவேந்தர் வழிவந்த மன்னவனோ!'' என்று பாடுவதாக பாடலைப் புனைந்தேன்.
எம்.எஸ்.வி.யும், சாருகேசி ராகத்தில் அந்த பாடலுக்கு அற்புதமாக இசையமைத்திருந்தார்.
இதைப் படத்தில் பார்த்துவிட்டுத்தான் எம்.ஜி.ஆர். என்னிடம் "மூன்று தமிழ் தோன்றியது மு.க.முத்துக்கிட்டதானா? என்று என்னைக் கேட்டார்.
எம்.ஜி.ஆரிடம் நான் சொன்னேன்:
"அண்ணே! மு.க.முத்து வளர வேண்டிய இளம் கலைஞன். ஆகவே நான் வாழ்த்தி எழுதும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். என்னுடைய தமிழ் எல்லாரையும் வாழ்த்துவதாக இருக்க வேண்டும் என்று நீங்களே பல தடவை சொல்லியிருக்கீங்க... அதனாலதான் அப்படி எழுதினேன்'' என்று நான் சொன்ன விளக்கத்தை எம்.ஜி.ஆர். நியாயமென்று ஏற்றுக்கொண்டாலும், அவர் மனம் முழுமையாக அதை ஒப்பவில்லை என்பதை அவர் முகம் காட்டிற்று.
மேற்கண்ட பாடல் தன்னுடைய படத்தில் எழுதப்பட்டிருந்தால், அது இன்னும் அதிக அளவு பிரபல்யம் அடைந்திருக்கக்கூடும் என்பதை, எனக்கு அவர் சொல்லாமலேயே சொன்னார் என்று நான் புரிந்து கொண்டேன்.
இதற்கு முன் (1970) மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படமாகிய "எங்கள் தங்கம்'' எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்க, கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் உருவாயிற்று.
இதற்கும் நான்தான் பாடல்கள் எழுதினேன். எம்.எஸ்.வி.தான் இசையமைத்தார்.
இதில் "நான் செத்துப் பிழைச்சவன்டா -எமனைப் பார்த்து சிரிச்சவன்டா'' என்று ஒரு பாடலை எழுதினேன்.
எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு இறைவனருளால் மீண்டு வந்திருந்த நேரம் அது. ஆகவே, அந்தப் பல்லவி அந்நேரத்திற்கு மிகமிகப் பொருத்தமாக இருந்தது.
முழுப் பாடலையும் எழுதி முடித்த பிறகு, பாடலை எம்.ஜி.ஆரிடம் காட்டுவதற்காக, நானும் நண்பர் முரசொலி மாறனும் ஜெமினி ஸ்டூடியோ சென்றோம்.
மாறன் வெளியே தங்கிவிட நான் மட்டும் எம்.ஜி.ஆரின் மேக்கப் ரூமிற்குள் சென்றேன்.
அப்போது எம்.ஜி.ஆர். ஜெமினியில் `நீரும் நெருப்பும்' படப்பிடிப்பிற்கான ஒப்பனையில் இருந்தார்.
முழுப் பாடலையும் நான் எம்.ஜி.ஆரிடம் பாடிக் காண்பித்தேன். அந்தப் பாடலில், உயிருக்கு அஞ்சாது நாட்டுக்கு உழைத்தோர் பற்றியெல்லாம் சரணங்களில் எழுதியிருந்தேன்.
எம்.ஜி.ஆர். பாட்டைக்கேட்டுவிட்டு வெகுவாக சந்தோஷப்பட்டார். நான் விடை பெற்றுக் கிளம்பும்போது என்னை மறுபடியும் தன் ரூமுக்குள் அழைத்தார்.
"வாலி! நாட்டுக்காக, உயிரைத் துச்சமா நினைச்சவங்களப்பத்தி இந்தப் பாட்டுல எழுதியிருக்கீங்க... அதெல்லாம் நல்லாயிருக்கு... இருந்தாலும், தமிழ் மொழிக்காகத் தண்டவாளத்துல தலை வெச்சுப் படுத்தவரு, நம்ம கலைஞர்... அவரைப்பற்றி ஒரு சரணம் எழுதி இந்தப் பாட்டுல சேத்துடுங்க...'' என்று எம்.ஜி.ஆர். என்னிடம் கேட்டுக்கொண்டார். அவர் சொன்னது போலவே பாட்டின் இரண்டாவது சரணத்தை நான் அமைத்தேன்.
(அந்த இரண்டாவது சரணம்: `ஓடும் ரெயிலை இடைமறித்து -அதன் பாதையில் தனது தலை வைத்து, உயிரையும் துரும்பாய்த்தான் மதித்து -தமிழ்ப்பெயரை காத்த கூட்டமிது'')
இந்தப் படத்தில் என் பாட்டில் கலைஞரை உயர்த்தி நான் சொல்ல வேண்டுமென்று எம்.ஜி.ஆர். விரும்பியதுபோல், இதே படத்தில் இன்னொரு பாட்டில் எம்.ஜி.ஆரை உயர்த்தி நான் சொல்ல வேண்டுமென்று கலைஞர் விரும்பினார்.
படத்தின் கதாநாயகனாகிய எம்.ஜி.ஆர், "நான் அளவோடு ரசிப்பவன்...'' - என்று பாடுவதாக ஒரு பாடலை நான் "எங்கள் தங்கம்'' படத்தில் எழுதினேன்.
"நான் அளவோடு ரசிப்பவன்'' என்று முதல் வரியை எழுதிவிட்டு, இரண்டாவது வரியை சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, என் பக்கத்தில் அமர்ந்திருந்த கலைஞர், "வாலி! இரண்டாவது வரியை - `எதையும் அளவின்றி கொடுப்பவன்' என்று போட்டா நல்லாயிருக்குமே!'' என்று என்னிடம் சொன்னார்.
நான் அவ்வாறே எழுதினேன்.
இப்படி கலைஞரும், எம்.ஜி.ஆரும் பரஸ்பர அன்பு பாராட்டிய காலம் அது.
இந்த இடத்தில், இன்னொரு உண்மையையும் நான் சொல்ல வேண்டும்.
அண்ணன் எம்.ஜி.ஆர். எந்தக் காலத்திலும், தன்னுடைய இமேஜை உயர்த்துமாறு பாடல் வரிகளை நான் எழுதவேண்டும் என்று என்னிடம் சொன்னதேயில்லை.
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்'', "கொடுத்ததெல்லாம் கொடுத்தான்'', "நான் செத்துப் பிழைச்சவண்டா'', "நான் ஆணையிட்டால்'' போன்ற பாடல்களெல்லாம் நானாகத் தன்னிச்சையாகப் புனைந்ததே தவிர, எம்.ஜி.ஆர். எழுதச் சொல்லி எழுதியவை அல்ல; இது கடவுள் சத்தியம்.
இன்னும் உண்மையைக் கொஞ்சம் அகலமாகச் சொல்லப்போனால் -தன்னை `வள்ளல்', `மன்னன்' என்றெல்லாம் எழுதப்படுவதை அவர் கூச்சத்தோடு என்னிடம் மறுத்திருக்கிறார்.
அவர்பால் எனக்கு இருந்த அன்பின் காரணமாகவும், விருந்தோம்பல், எளிமை முதலிய அவரது உயர்ந்த பண்புகளை உடனிருந்து பார்த்தாலும் -நானே அவ்வாறு அவரைப் போற்றிப் புகழ்ந்து பாடல்கள் எழுதினேன்.''
இவ்வாறு வாலி கூறியுள்ளார்.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பாகுபலி-2’ படம் விளம்பரமே இல்லாமல் ஹிட்டாகும் என்று நாசர் பேசியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவந்து வெற்றிநடை போட்ட ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வருகிற ஏப்ரல் 28-ந் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ் பதிப்பின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது.
இதையொட்டி படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர் சந்தித்து படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பரிமாறிக் கொண்டனர். அப்போது, இப்படத்தில் பிஜிபல்லவ தேவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாசர் பேசும்போது,
‘பாகுபலி-2’ ஒரு விளம்பரமே இல்லாமல் ரிலீஸ் தேதியை மட்டும் அறிவித்து வெளியிட்டிருந்தாலே ஹிட்டாகியிருக்கும். ஆனால், விளம்பரம் செய்யவேண்டும் என்ற கடமையில் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எல்லா ஊர்களிலும் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு வேறு எந்த ஹீரோவும் பொருந்தமாட்டார். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் எல்லோருக்கும் தெரியும். இப்படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் இயக்குனர் கஷ்டமான ஒரு விஷயத்தை கொடுத்தார். அதாவது, அனுஷ்கா உள்ளிட்ட அனைவரும் சிக்ஸ் பேக் வைக்கவேண்டும் என்பதுதான். ஆனால், எனக்கு மட்டும்தான் பேமிலி பேக் வைக்கவேண்டும் என்று சொன்னார்.
ராஜமௌலி முதலில் இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னதும், அவர் சொன்னதுமாதிரி இந்த படத்தை எடுத்துவிட முடியுமா? என்ற பயம் இருந்தது. கடைசியில், இந்த படத்தில் நீங்கள் இல்லையென்றால் கதையே கிடையாது என்று சொன்னார். அந்த நேரத்தில்தான் எனக்குள் ஒரு பொறி தட்டியது. நான் தான் பாகுபலி என்பதுபோல் எனக்கு ஒரு உத்வேகத்தை ராஜமௌலி கொடுத்தார்.

இந்த படம் எத்தனை கோடிகள் சம்பாதிக்கும் என்பதெல்லாம் ஒரு பெருமை கிடையாது. இப்படத்தை தயாரித்தது, இயக்கியது, நடித்தது, வெளியிட்டது ஆகியவைதான் பெருமை. எல்லோரையும் போல் நானும் இப்படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு பேசினார்.

விஜய் சேதுபதி மகா கஞ்சனாக மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
விஜய்சேதுபதியை வைத்து ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில், இப்படத்திற்கு தற்போது ‘கஞ்சன் ஜங்கா’ என்று பெயர் வைக்கப்போவதாக படக்குழுவினருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. படத்தில் விஜய் சேதுபதியின் பெயர் ஜங்காவாம். படத்தில் இவர் யாருக்கும் எதுவும் கொடுக்காத மகா கஞ்சனாக நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஐரோப்பாவில் நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. முகேஷ் என்பவர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கவுள்ளார். மேலும், இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

வெங்கட் பிரபுவின் அடுத்த பட ஹீரோ யார்? என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘சென்னை 600028’ இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தை ‘அம்மா’ கிரியேசன்ஸ் சிவா தயாரிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த படத்திற்காக பூஜையும் போடப்பட்டது. ஆனால், அப்படத்தில் யார்? யார் நடிக்கப் போகிறார்கள் என்பது குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த படத்தில் கயல் சந்திரன், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகுபலியைப் போல் மீண்டும் ஒரு பிரம்மாண்ட படம் எடுக்கமுடியாது என்று எஸ்.எஸ்.ராஜமௌலி கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி வெளியாகவுள்ள ‘பாகுபலி-2’ படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக, படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்வில், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், ராஜமௌலி பேசும்போது, ‘பாகுபலி’ படம் பெரிய ஹிட்டாகவேண்டும் என்று நினைத்துதான் படத்தை எடுத்தோம். ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நினைக்கவில்லை. இப்படத்தை ஒரு மொழி சார்ந்த படமாக கொடுக்கவேண்டும் என்று நினைத்து படத்தை எடுக்கவில்லை. எல்லோருக்குமான படமாக இருக்கவேண்டும் என்று நினைத்துதான் படத்தை எடுத்தோம். படம் வெளிவந்த பிறகு இது இன்னொரு படத்தின் சாயல் மாதிரி இருக்கிறது என்று யாரும் சொல்லாதது பெரிய சந்தோஷம்.

‘பாகுபலி’ படத்தின் கதை பெரியதாக இருந்ததால் இரண்டு பாகமாகத்தான் இதை கொடுக்குமுடியும் என்று தீர்மானித்துதான் இரண்டு பாகமாக எடுத்தோம். இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளிவருமா? என்றால், அது நிச்சயமாக வராது. இருந்தாலும், ‘பாகுபலி’ கதையை ஒட்டி நிறைய கதைகள் இருக்கிறது. அதை சீரியலாகவோ, நாவலாகவோ அல்லது வேறு வகையில்தான் சொல்ல முடிவு செய்துள்ளோம். இதை தவிர்த்து படமாக எடுக்கும் முடிவு இல்லை.
மீண்டும் இதேபோல் ஒரு பிரம்மாண்ட படம் பண்ணமுடியுமா? என்று எனக்கு தெரியவில்லை. இந்த மாதிரி 5 வருடம் ஒரு படத்தை எடுக்கவேண்டுமானால் இந்த படத்திற்கு அமைந்ததுபோல் என்மேல் முட்டாள்தனமாக நம்பிக்கை வைத்த நடிகர்களும், கலைஞர்களும் கிடைக்கவேண்டும். அதுபோல் மறுபடியும் எனக்கு கிடைக்குமா? என்று தெரியவில்லை. எனவே, எனது அடுத்த படத்தை கிராபிக்ஸ் இல்லாமல் ஒரு சாதாரண படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன்.

‘பாகுபலி’ முதல் பாகத்தில் எல்லோரையும் நான் அறிமுகப்படுத்தியிருந்தேன். இரண்டாம் பாகத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குண்டான கதையை சொல்லியிருக்கிறோம். முதல் பாகத்தில் உள்ள பிரம்மாண்டம், இரண்டாம் பாகத்திலும் இருக்கும்படி செய்திருக்கிறோம். முதல் பாகத்திற்கு கொடுத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கும் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அட்லி தயாரிப்பில் உருவாகும் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்
அட்லி தற்போது விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை இயக்குவதற்கு இடையில் ‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’ படத்தை ஏ பார் ஆப்பிள் என்ற நிறுவனம் மூலம் தயாரித்தும் வருகிறார். அட்லி தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் ஜீவா, திவ்யா, சூரி உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை ஐக் என்பவர் இயக்கி வருகிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். அதன்படி வருகிற மே 19-ந் தேதி இப்படத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இப்படம் திகில் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8 தோட்டாக்கள் படத்தின் இயக்குனருக்கு எம்.எஸ்.பாஸ்கர் தங்க சங்கிலி அணிவித்து பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
புதுமுக இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த ‘8 தோட்டாக்கள்’ படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்த அனைவருடைய கதாபாத்திரங்களும் பேசப்பட்டாலும், குறிப்பாக எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பும், அவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
திரைப்பட நடிகர்கள், இயக்குனர், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என பலரும் எம்.எஸ்.பாஸ்கரை நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு, அவருடைய நடிப்புக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதனால் உற்சாகம அடைந்த எம்.எஸ்.பாஸ்கர் தன்னுடைய கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை வெளிக்கொண்டு வர காரணமாக இருந்த இயக்குனர் ஸ்ரீகணேஷை பாராட்ட முடிவு செய்து தனது வீட்டுக்கு வரவழைத்தார்.

இயக்குனர் ஸ்ரீகணேஷும், பட விமர்சனங்களை பற்றி பகிர்ந்துகொள்ளத்தான் எம்.எஸ்.பாஸ்கர் தன்னை அழைத்திருக்கிறார் என்று நினைத்து வந்துள்ளார். வந்தவருக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுக்கும்விதத்தில் எம்.எஸ்.பாஸ்கர் தங்க சங்கிலி ஒன்றை அவருக்கு பரிசாக அளித்து பாராட்டியுள்ளார். இதனால், இயக்குனர் ஸ்ரீகணேஷ் ரொம்பவும் நெகிழ்ந்து போயுள்ளார்.

எம்.ஜி.ஆரின் ஏராளமான படங்களுக்கு வாலி பாடல் எழுதிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் (1964), சிவாஜி படங்களுக்கும் பாட்டு எழுத அழைப்பு வந்தது.

சிவாஜியின் அன்பைப் பெற்றவரும், அவருடைய நீண்ட கால குடும்ப நண்பருமான பெரியண்ணன், தனது சாந்தி பிலிம்ஸ் சார்பாக "அன்புக்கரங்கள்'' என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தார். படத்தின் கதாநாயகன் சிவாஜிதான். அப்படத்துக்கு வாலி பாடல் எழுதவேண்டும் என்று பெரியண்ணன் விரும்பினார்.
வாலியை அழைத்துச்சென்று சிவாஜியிடம் அறிமுகம் செய்தார்.
அதன்பின் நடந்தது பற்றி வாலி கூறியதாவது:-
"கணேசு! இவருதான் வாலி. நம்ம ஊர்க்காரர். திருச்சி'' என்று, சிவாஜியிடம் பெரியண்ணன் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.
அப்போது நான் ஏகப்பட்ட எம்.ஜி.ஆர். படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொண்டிருப்பது சிவாஜிக்குத் தெரியும். அதன் காரணமாக, என்பால் அவருக்கு ஒரு எரிச்சல் இருக்கக்கூடும் என்று எண்ணினேன்.
ஆனால் என் எண்ணத்திற்கு மாறாக, சிவாஜி சிரித்த முகத்தோடு "வாங்க'' என்று என் வலக்கரத்தில் தன் வலக்கரத்தை கோத்து வரவேற்றார்.
1964-ல் ஆரம்பமான இந்த அறிமுகம், பிறகு நான் 60 சிவாஜி படங்களுக்கு பாடல்கள் எழுத ஓர் ஆரம்பமாக அமைந்தது.
`பராசக்தி' காலத்திலிருந்தே சிவாஜியின் நடிப்பில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்த நான் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றக் கூட்டங்களில், சிவாஜியை விமர்சித்துப் பேசவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானதுண்டு.
இதுகுறித்து சிவாஜிக்கு மனத்தளவில் என்பால் ஒரு கசப்புணர்வு மெல்லியதாய் பரவியிருந்தபொழுதும், அவர் படங்களுக்கு நான் பாடல் எழுதக்கூடாது என்றெல்லாம் தடை விதிக்கக்கூடிய குறுகிய கண்ணோட்டம் அவரிடம் இருந்ததில்லை.
தனிப்பட்ட முறையில் சிவாஜியும், எம்.ஜி.ஆரும் ஆரத்தழுவி அன்பு பாராட்டும் நண்பர்களாக இருந்தபோதும், தொழில் ரீதியாக அவர்களுக்கிடையே ஒரு போட்டி மனப்பான்மை இருந்தது முக்காலும் உண்மை.
சிவாஜி நடிக்கும் `அன்புக்கரங்கள்' படத்திற்கு நான் பாடல்கள் எழுதுவதாக, என் பெயரைத்தாங்கிய முழுப்பக்க விளம்பரம் நாளேடுகளில் வெளியான அன்று `தாழம்பூ' படப்பிடிப்பில், நான் எம்.ஜி.ஆரைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது.
என்னைப் பார்த்தவுடன், "உங்க `அன்புக்கரங்கள்' எப்ப ரிலீஸ்?'' என்று எம்.ஜி.ஆர். புன்னகைத்தவாறு என்னிடம் கேட்டார்.
"உங்க அன்புக்கரங்களில் இருந்து, என்றைக்குமே எனக்கு ரிலீஸ் கிடையாது'' என்று நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.
பிற்காலத்தில், தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி வகித்தபோது, புயல் - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, நட்சத்திரங்கள் நிதி திரட்டினார்கள். 5 முக்கிய நகரங்களில் எம்.ஜி.ஆர். தலைமையில் அனைத்துப் பிரபல நடிகர்களும் பங்கு பெறும் வகையில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியிருந்தன.
திருநெல்வேலியில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். தலைமை வகிக்கையில், நான் அவருக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தேன்.
அமைச்சர்கள் காளிமுத்து, எட்மண்ட் முதலானோர் பின் வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.
"அசோக சக்ரவர்த்தியின் கலிங்கத்துப்போர்'' என்னும் ஓரங்க நாடகத்தில் -சிவாஜி அவர்கள் சாம்ராட் அசோகனாக மேடையில் தோன்றி, அற்புதமாக நடித்தார்.
இந்த ஓரங்க நாடகம், முரசொலி மாறன் "அன்னையின் ஆணை'' படத்திற்காக எழுதியது. சிவாஜி அவர்கள் தனக்கே உரித்தான வசன உச்சரிப்பாலும், வியத்தகு நடிப்பாலும், வெகுவாகப் பலரையும் கவர, நான் உடனே எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்:
"அண்ணே! சிவாஜி மாதிரி ஒரு நடிகர், இந்த சகாப்தத்திலே வேறு யாருமில்லை... என்ன நடிப்பு பார்த்தீங்களா?'' என்றேன்.
"சிவாஜிக்கு அடுத்ததாக நடிகர் முத்துராமனையும் சொல்லலாம்...'' என்றார் எம்.ஜி.ஆர்.
பிறகு, எம்.ஜி.ஆர். தலைமை வகித்துப் பேச மேடைக்குச் சென்றுவிட்டார்.
உடனே, என் பின்னே அமர்ந்திருந்த அமைச்சர் எட்மண்ட், "என்னங்க வாலி! சிவாஜி நடிப்பைப் புகழ்ந்து எம்.ஜி.ஆர்.கிட்டயே பேசிட்டீங்களே... உங்களப்பத்தி, தப்பா நினைச்சுக்கப் போறாரு...'' என்று என்னிடம் சொன்னதும்தான், நான் நாகரிகக் குறைவான முறையில் நடந்து கொண்டுவிட்டேனோ என்னும் சந்தேகம் என்னைத் தொற்றிக் கொண்டது. இருப்பினும், எம்.ஜி.ஆர். அதைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல், என்னிடம் தொடர்ந்து அன்பு குறையாமலே பழகினார்.
எப்பொழுதுமே நான் ஒளிவு மறைவின்றிப் பேசியதாலேயே, என்னை எம்.ஜி.ஆர். விரும்பினார் என்று நான் நினைக்கிறேன்.
எம்.ஜி.ஆர். அறிய, சிவாஜியைப் பாராட்டியது போல் -சிவாஜி அறிய நான் எம்.ஜி.ஆரைப் பாராட்டும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது.
எம்.ஜி.ஆர். முதல்வராகப் பதவியேற்றதும், அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த நடிகர் சங்கம் தீர்மானித்தது. வாழ்த்து மடல் ஒன்றை வாசித்துக் கொடுக்கவும் ஏற்பாடாயிற்று.
அப்போது நடிகர் சங்கத்தின் தலைவராயிருந்த சிவாஜி, சங்கத்தின் செயலாளராயிருந்த மேஜர் சுந்தர்ராஜனை என்னிடம் அனுப்பி, எம்.ஜி.ஆரைப் பாராட்டி வாசித்தளிக்கும் வாழ்த்து மடலை எழுதி வாங்கி வரச்சொன்னார்.
அந்த வாழ்த்து மடலில், எம்.ஜி.ஆரின் இனிய பண்புகளையும், இயல்பான நடிப்பையும் மிகவும் சிலாகித்து நான் எழுதியிருந்தேன். படித்துவிட்டு, சிவாஜி, புன்னகைத்தாரே தவிர பொருமினார் இல்லை.''
இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

ரத்தன் கணபதி இயக்கத்தில் விருதகிரி, ஸ்வேதா நடிப்பில் உருவாகி இருக்கும் விருத்தாச்சலம் படத்தின் விமர்சத்தை கீழே பார்ப்போம்.
நாயகன் விருதகிரியின் முறைப் பெண்ணான நாயகி ஸ்வேதாவைத்தான் சிறுவயதில் இருந்தே திருமணம் செய்து வைக்கப்போவதாக இருவரது வீட்டிலும் சொல்லி வளர்க்கிறார்கள். இதனால், இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசத்துடன் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது, ஊர் தலைவரின் பையன் ஒருநாள் நாயகியை கீழே தள்ளிவிட, அவளை தள்ளிவிட்ட கையை நாயகன் வெட்டி விடுகிறான். தன் கையை வெட்டிய நாயகனை வெட்டச்செல்லும்போது தவறுதலாக நாயகியின் அண்ணனை வெட்டி விடுகிறார். இதனால் சம்பவ இடத்திலேயே நாயகியின் அண்ணன் இறந்து போகிறார்.

இதையடுத்து, போலீஸ் நாயகனையும், ஊர் பெரியவரின் மகனையும் சீர்திருத்த பள்ளியில் அடைக்கிறது. பல வருடங்கள் கழித்து வளர்ந்து பெரியவர்களாகி இருவரும் வெளியே வருகிறார்கள். அதற்குள், நாயகனின் அத்தை கணவனையும், மகனையும் இழந்த சோகத்தில் அந்த ஊரை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.
சீர்திருத்த பள்ளியில் இருந்து வெளியில் வந்ததால் ஊரில் யாரும் நாயகனுக்கு வேலை கொடுக்க மறுக்கிறார்கள். இந்நிலையில், ஒரு மரக்கடையில் சேர்ந்து வேலைபார்த்துக் கொண்டிருக்கும் நாயகனுக்கு அந்த ஊரில் டீச்சராக வரும் ஸ்வேதா தனது முறைப்பெண் என்பதை தெரிந்துகொண்டு அவளை பின்தொடருகிறார்.

ஆனால், ஸ்வேதாவோ, நாயகனை வெறுத்து ஒதுக்குகிறாள். தன்னுடைய நிலைமையை அவளிடம் எடுத்துக்கூற முயற்சி செய்தும் தோற்றுப்போகிறார். அதேநேரத்தில், தான் ஜெயிலுக்கு போக காரணமான நாயகனை எப்படியாவது தீர்த்துக்கட்ட வேண்டும் என்று ஊர் பெரியவரின் மகனான சம்பத் முடிவெடுக்கிறார்.
இறுதியில், நாயகன் நாயகியிடம் தன்னை பற்றி புரிய வைத்து ஒன்று சேர்ந்தாரா? சம்பத்திடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் விருதகிரி, வழக்கமாக வரும் நடிகர்களை போல வந்து நடித்துவிட்டு சென்றிருக்கிறார். குறிப்பிட்டு சொல்லும்படியாக எதுவும் இல்லை என்றாலும், படத்தில் கோபக்காரராக நடித்து மிரட்டியிருக்கிறார். நாயகி ஸ்வேதாவின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. மற்ற நடிகர்கள் அனைவரும், தங்களது கதாபாத்திரத்திற்கு தேவையானதை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர். மற்றொரு நடிகரான சம்பத்தின் நடிப்பு பாராட்டும்படியாக உள்ளது.

ரத்தன் கணபதி திரைக்கதையை அமைத்திருப்பதில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். மேலும் படத்தின் நீளத்தையும் கொஞ்சம் குறைத்திருந்தால் படம் ரசிக்கும்படியாக அமைந்திருக்கும். மற்றபடி படம் கரடுமுரடாக உள்ளது.
ஸ்ரீராம் இசையில் படத்தின் பாடல்கள் பார்க்கும்படியாக இருக்கிறதே, தவிர ரசிக்கும்படியாக இல்லை. படத்தின் பின்னணி இசை படத்திற்கு ஓரளவுக்கு பலம் சேர்த்திருக்கிறது. சிவனேசன் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது.
மொத்தத்தில் `விருத்தாச்சலம்' வெட்டுக்குத்து.

திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் பணிபுரியும் பெண் என்ஜினீயரை மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மகன் திருமணம் செய்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
மலையாள திரையுலகின் பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன். இவர் ஏராளமான படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் பல படங்களை இயக்கவும் செய்துள்ளார்.
இவரது மகன் தியான் ஸ்ரீனிவாசன். இவரும் சமீபத்தில் வெளியான `திரா' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
இவருக்கும் திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் என்ஜினீயராக பணிபுரியும் அர்பிதா செபாஸ்டின் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. பெற்றோர் இதற்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இதையடுத்து கண்ணூரில் உள்ள கிளப் ஹவுசில் நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் ஸ்ரீனிவாசனின் மனைவி விமலா, மணமகள் அர்பிதா செபாஸ்டியனின் தந்தை செபாஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் மலையாள முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் கலந்து கொண்டனர்.
நடிகர் ஸ்ரீனிவாசனின் நிலத்தில் விளைந்த நெற்கதிர்கள் திருமண சடங்கில் பயன்படுத்தப்பட்டன. திருமண விருந்திற்கும் அவரது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளே பயன்படுத்தப்பட்டன.