என் மலர்
ரஜினிகாந்துடன் ரசிகர்கள் புகைப்படும் எடுக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக வாட்ஸ்அப் மூலம் சூப்பர்ஸ்டார் ரஜினி தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன், ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஏப்ரல் 12 முதல் 17-ஆம் தேதிகளில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக, வாட்ஸ் ஆப் ஆடியோ மூலம் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதில் ரஜினி கூறியிருப்பதாவது,
தனித்தனியே ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பது சாத்தியமில்லை. எனவே எதிர்காலத்தில் மாவட்டந்தோறும் பயணம் செய்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது நடக்கவிருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக ரஜினி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், தனது படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்த சந்திப்புகள் நடைபெறவில்லை. ரசிகர்கள் தங்களை சந்தித்து பேசும்படி ரஜினிகாந்துக்கு வேண்டுகோள் விடுத்து கடிதங்கள் அனுப்பி வந்தனர். இதை தொடர்ந்து அவர்களை சந்திக்க அவர் முடிவு செய்திருந்தார்.
இதையடுத்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது, வருகிற 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை சென்னையில் இந்த நடக்கும் கூட்டத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்க உள்ளதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கலையரசன், தன்ஷிகா நடிப்பில் பேய் இல்லாத வித்தியாசமான திகில் கதையாக உருவாகியுள்ள `உரு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதி மற்றும் படம் குறித்த ஸ்வாரஸ்ய தகவலை கீழே பார்ப்போம்.
`கபாலி' படத்திற்கு பிறகு கலையரசன் மற்றும் தன்ஷிகா இணைந்து நடித்துள்ள படம் ‘உரு’. புகழ் பெற்ற ஒரு எழுத்தாளர் தனது கதை எழுதும் பாணியை காலத்துக்கு ஏற்ப மாற்ற விரும்புகிறார். இதற்காக கொடைக்கானல் செல்லும் அவர் சந்திக்கும் சம்பவங்களே கதையாகி இருக்கிறது.
‘உரு’ என்ற வார்த்தைக்கு உருவம் என்ற அர்த்தம் இருந்தாலும், அச்சம்-பயம் என்று மற்றொரு பொருளும் உண்டு. இதில் ‘பயம்’ என்பதையே மையமாக வைத்து ‘திரில்லர்’ கதையாக இந்த படம் உருவாகி இருக்கிறது. ஆனால் ‘உரு’ பேய் இல்லாத வித்தியாசமான திகில் கதை” என்று இயக்குநர் தெரிவித்துள்ளார்.

வையம் மீடியாஸ் சார்பில் வி.பி. விஜி தயாரிக்கும் இந்த படத்துக்கு பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் இசை அமைத்திருக்கிறார். இப்படம் வருகிற மே மாதம் 19-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

நடிகர் ஜெய் பிறந்தநாளில், நடிகை அஞ்சலி அவருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அது என்னவகையான அதிர்ச்சி என்பதை கீழே பார்ப்போம்.
ஜெய் தற்போது `பலூன்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இறுதிகட்டத்ததை எட்டியுள்ள இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், பிறந்தநாளை, நேற்று முன்தினம் பலூன் படக்குழுவினரோடு கொண்டாடினார்.
சினிஷ் இயக்கத்தில், உருவாகி வரும் இப்படத்தை '70 எம் எம்' நிறுவனத்தின் சார்பில் டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் `பலூன்' படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் 'ஆரா சினிமாஸ்' மகேஷ் கோவிந்தராஜ் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பலூன் படப்பிடிப்பு தளத்தில், ஒட்டுமொத்த படக்குழுவினரோடும் ஜெய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது. இதில் ஜெய் மற்றும் படக்குழுவினருக்கு இன்பஅதிர்ச்சி கொடுக்கும் விதமாக, `பலூன்' படத்தின் கதாநாயகி அஞ்சலி இந்த விழாவில் கலந்து கொண்டு ஜெய்யை வாழ்த்தினார். ஜெய்யும், அஞ்சலியும் காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெய்க்கு ஆச்சரியம் கொடுக்கும் வகையில் பிறந்த நாள் கேக்கை, ஹெலிகேம் எனப்படும் பறக்கும் கேமராவில் கொண்டு வரைவத்தார் இயக்குநர் சினிஷ். படக்குழுவினர் அனைவரும் ஜெய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

மறைந்த பழம்பெரும் டைரக்டர்கள் கிருஷ்ணன் - பஞ்சு பற்றிய ஆவணப்படத்தை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
பராசக்தி, ரத்தக்கண்ணீர், சதிலீலாவதி, பெற்றால்தான் பிள்ளையா, இதய வீணை, உயர்ந்த மனிதன், எங்கள் தங்கம், சர்வர் சுந்தரம், அன்னை உள்பட 56 படங்களை டைரக்டு செய்துள்ள மறைந்த பழம்பெரும் சினிமா டைரக்டர்கள் கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோரை பற்றிய ஆவணப்படம் தயாராகி உள்ளது. தனஞ்செயன் டைரக்டு செய்துள்ளார்.
இந்த படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் சிவகுமார் கலந்துகொண்டு ஆவணப்படத்தை வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார். விழாவில் சிவகுமார் பேசும்போது, “40 வருடங்களாக 4 தலைமுறைகளை வைத்து படம் எடுத்த கிருஷ்ணன்- பஞ்சுவை பற்றிய 2 மணி நேர சிறந்த ஆவணப்படமாக இது தயாராகி உள்ளது” என்றார்.

பாக்யராஜ் பேசும்போது, “இந்த ஆவணப்படம் ஒரு பொக்கிஷம். எந்தவிதமான கதையாக இருந்தாலும் அதை நன்றாக செய்வதே கிருஷ்ணன்-பஞ்சுவின் பலம்” என்றார்.
டைரக்டர் சங்க தலைவர் விக்ரமன் பேசும்போது, “கிருஷ்ணன்-பஞ்சு புராண படங்கள் வெளிவந்த காலத்தில் பராசக்தி மாதிரியான ஒரு படத்தை தைரியமாக வெளியிட்டு சாதனை படைத்தனர்” என்றார். விழாவில் டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன், வி.சி.குகநாதன், நடிகர் ராதாரவி, நடிகைகள் சவுகார் ஜானகி, எம்.என்.ராஜம், தயாரிப்பாளர்கள் ஏவி.எம்.சரவணன், ஏவி.எம்.குமரன், வசனகர்த்தா ஆரூர்தாஸ் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.

நில மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு நடிகர்கள் வடிவேலுவும், சிங்கமுத்துவும் நேரில் ஆஜராகவில்லை என்றால், அவர்களுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை புறநகரில் நகைச்சுவை நடிகர் வடிவேலு சில சொத்துக்களை வாங்கினார். இந்த சொத்துக்களை மற்றொரு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, வடிவேலுவுக்கு வாங்கிக் கொடுத்தார். இந்த சொத்துக்கள் போலி ஆவணங்கள் மூலம் வடிவேலுவுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் மோசடி வழக்குகளை பதிவு செய்தனர். இந்த மோசடி வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்ட கங்கா உள்பட 5 பேர் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து ஆகியோர் இடையே இருந்த பிரச்சினையை பேசி தீர்த்துக் கொண்டதாகவும், எனவே இந்த மோசடி வழக்கை ரத்து செய்யவேண்டும் என்றும் இருதரப்பு வக்கீல்கள் சார்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, வடிவேலுவையும், சிங்கமுத்துவையும் ஏப்ரல் 7-ந் தேதி (நேற்று) நேரில் ஆஜராகவேண்டும் என்று நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இருவரும் ஆஜராகவில்லை. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி எம்.வி.முரளிதரன் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்வதாக இருதரப்பினரும் கூறியதால், அதனால் அவர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டேன். ஆனால், அவர்கள் இருவரும் வரவில்லை. அதற்கு அற்பத்தனமாக காரணங்களை இருதரப்பினர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் கூறுகின்றனர். அவர்கள் நேரில் ஆஜராகாதது, கோர்ட்டு உத்தரவை அவமதிக்கும் செயலாகும்.
எனவே, இந்த வழக்கை வருகிற 20-ந் தேதி தள்ளிவைக்கிறேன். அன்று பிற்பகல் 2.15 மணிக்கு வடிவேலும், சிங்கமுத்துவும் நேரில் ஆஜராக வேண்டும். அப்படி ஆஜராகவில்லை என்றால், அவர்களுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கவும் இந்த ஐகோர்ட்டு தயங்காது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

"என் படங்களுக்கு 'வாலி' என்னும் புதிய கவிஞர்தான் இனி பாட்டு எழுதுவார்" என்று பொதுக்கூட்டத்திலேயே எம்.ஜி.ஆர். அறிவித்தார்.

"இன்றோடு உன் தரித்திரம் முடிந்தது" என்று வாலியிடம் முக்தா சீனிவாசன் சொன்னது உண்மை ஆயிற்று.
விஸ்வநாதன்-ராமமூர்த்தியுடன் பணியாற்றத் தொடங்கியவுடனேயே, வாலியை கோடம்பாக்கம் கவனிக்கத் தொடங்கியது.
கம்பெனி கம்பெனியாக, வாலியின் திறமை பற்றி எம்.எஸ்.விஸ்வநாதன் கூறியதன் பயனாக, வாய்ப்புகள் குவியலாயின.
"சாரதா" படத்திற்கு பிறகு டைரக்டராக பெரும் புகழ் பெற்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் இருந்து ஒரு நாள் வாலிக்கு அழைப்பு வந்தது. வாலி அவரை சந்தித்தார்.
"எம்.எஸ்.வி. உங்களைப் பற்றி நிறைய சொன்னார். முதலில் இப்போது ஒரு பாட்டு எழுதுங்கள். மற்றதை பிறகு பார்ப்போம்" என்றார், கோபாலகிருஷ்ணன்.
"ரொம்ப நன்றி சார்!" என்றார் வாலி. "எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு எழுதின ஏதாவது ஒரு பாட்டை சொல்லுங்கள்" என்று கே.எஸ்.ஜி. கேட்டார்.
"உறவு என்றொரு சொல் இருந்தால், பிரிவு என்றொரு பொருளிருக்கும். காதல் என்றொரு கதை இருந்தால், கனவு என்றொரு முடிவிருக்கும்" என்ற பாடலை, மெட்டோடு வாலி பாடிக்காட்டினார். இது, "இதயத்தில் நீ" என்ற படத்துக்காக எழுதப்பட்ட பாடல்.
"ஓகே! பாடல் நன்றாக இருக்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு அரிசி பதம். நீங்கள் போய்விட்டு, நாளைக்கு வாருங்கள். கார் அனுப்புகிறேன்" என்றார், கோபாலகிருஷ்ணன்.
நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்க, கிளப்ஹவுசுக்குத் திரும்பினார், வாலி. சொன்னபடி, மறுநாள் வண்டி அனுப்பினார், கோபாலகிருஷ்ணன். எம்.எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும், பக்கவாத்தியக்காரர்களுடன் அமர்ந்திருந்தார்கள்.
படத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியை விவரித்து, அதற்கான தாலாட்டுப் பாடலை எழுதும்படி வாலியிடம் கோபாலகிருஷ்ணன் சொன்னார். "அத்தைமடி மெத்தையடி, ஆடி விளையாடம்மா" என்ற பல்லவியை எழுதி, விஸ்வநாதனிடம் கொடுத்தார். அதை அவர் படித்துப் பார்த்துவிட்டு, கே.எஸ்.ஜி.யிடம் நீட்டினார்.
ஒரு சிட்டிகை பொடியை உறிஞ்சிவிட்டு, பல்லவியை கே.எஸ்.ஜி. படித்துப் பார்த்தார். மகிழ்ச்சியுடன் வாலி முதுகில் ஒரு தட்டு தட்டினார். பாட்டு "ஓகே" ஆயிற்று.
கோபாலகிருஷ்ணனின் முதல் தயாரிப்பான "கற்பகம்" படத்துக்கு அனைத்துப் பாடல்களையும் வாலிதான் எழுதினார். அந்தப் படம், அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை தேடித்தந்தது.
ஜி.என்.வேலுமணியின் சரவணா பிலிம்ஸ், வரிசையாக வெற்றிப் படங்களைத் தயாரித்து வந்தது. ஒருநாள், எம்.எஸ்.விஸ்வநாதன் தன்னுடைய காரை வாலிக்கு அனுப்பி, சரவணா பிலிம்சுக்கு வரச்சொன்னார்.
வாலி உடனே புறப்பட்டுச் சென்றார். வாலியை வேலுமணிக்கு விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார்.
சரவணா பிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் படத்தின் முழுக் கதையையும் கதாசிரியர் சக்தி கிருஷ்ணசாமி சொன்னார். "வாலி! கதையைக் கேட்டுட்டீங்க! இந்தக் கதைக்கு ஐந்து எழுத்தில் வருவது மாதிரி ஒரு 'டைட்டில் சொல்லுங்க!" என்றார், வேலுமணி. உடனே "படகோட்டி" என்று சொன்னார், வாலி.
"பிரமாதம்" என்று கூறியபடி, தன் கதர் ஜிப்பாவில் இருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து வாலியின் கையில் திணித்தார், வேலுமணி. "படகோட்டி"க்கு இரண்டு பாடல்கள் பதிவாயின. முன்பு இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசனால் நிராகரிக்கப்பட்ட "கொடுத்ததெல்லாம் கொடுத்தான், யாருக்காகக் கொடுத்தான்?" என்ற பாடலும் விஸ்வநாதன் இசை அமைப்பில், டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பிரமாதமாக அமைந்தது.
"படகோட்டி" படத்துக்கு வாலி பாட்டு எழுதுகிறார் என்பது, அதுவரை எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. இரண்டு பாடல்கள் பதிவான பிறகு, அவற்றை ராமாவரம் தோட்டத்துக்கு வேலுமணி கொண்டு சென்று, எம்.ஜி.ஆருக்குப் போட்டுக் காட்டினார். பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப்போயின. அன்று மாலை, பரங்கிமலையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், எம்.ஜி.ஆர். பேசினார். "என்னுடைய படங்களுக்கு வாலி என்னும் புதிய கவிஞர்தான் இனி பாட்டுகள் எழுதுவார்" என்று அக்கூட்டத்தில் அறிவித்தார்.
இதுபற்றி, வாலி கூறியிருப்பதாவது:-
"அப்போது எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் நிறைய இடைவெளி ஏற்பட்டிருந்தது. என்னைக் கொண்டு அதை சரி செய்து கொள்ளலாம் என்று எம்.ஜி.ஆர். எண்ணினார். அவர் எண்ணத்திற்கேற்ப என்னுடைய வளர்ச்சியும் அமைந்தது. 'படகோட்டி'யின் பாடல்கள் பெரும்பாலும் பதிவாகிவிட்ட நிலையில், ஒரே ஒரு பாடல் எழுதி ஒலிப்பதிவு செய்யவேண்டியிருந்தது.
அந்த நேரத்தில் நான் கடுமையான காய்ச்சல் பாதிக்கப்பட்டு, வீட்டில் படுத்த படுக்கையாகக் கிடந்தேன். வேலுமணி அவர்களுக்கோ, பாட்டு மிகமிக அவசரத்தேவை. உடனே ஒலிப்பதிவு செய்து மறுநாள் படப்பிடிப்பை நடத்தியாக வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் இன்னும் மூன்று மாதத்திற்கு எம்.ஜி.ஆர். கால்ஷீட் கிடைப்பது கடினம்.
இந்த ஒரு பாட்டை மட்டும், வேறு யாரையாவது வைத்து எழுதிவிடலாம் என்ற நிலை வந்தபோது, விஸ்வநாதன் அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. "அருமையான பாடல்களை வாலி அண்ணன் இந்தப் படத்துல எழுதியிருக்காரு. இந்த ஒரு பாட்டுக்காக இன்னொருவரைத் தேடிச் செல்வது தர்ம நியாயமல்ல..." என்று வாதாடினார்.
ஆர்மோனியப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, பக்கவாத்தியக்காரர்களோடு என் வீட்டிற்கே வந்துவிட்டார். அப்போது நான் தனிக்கட்டை; திருமணமாகவில்லை.
படுக்கையில் படுத்தவாறே, விஸ்வநாதன் அவர்களின் வர்ணமெட்டிற்கேற்ப நான் வார்த்தைகளைச் சொல்ல, உதவி இயக்குனர் ஒருவர் அதை எழுதி முடித்தார். "அழகு ஒரு ராகம்; ஆசை ஒரு தாளம்" என்பதே அந்தப்பாடல்."
இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
அஜித் பிறந்தநாள் கொண்டாட்டம் தற்போதே தொடங்கி உள்ள நிலையில், அவரது பிறந்தநாளான மே 1-ல் ரசிகர்களுக்கு அவரது ரசிகர்களுக்கு முழு விருந்து காத்திருக்கிறது. அது என்ன வகையான விருந்து என்பதை கீழே பார்ப்போம்.
`சிறுத்தை' சிவா இயக்கத்தில் தல அஜித் தற்போது நடித்து வரும் படம் `விவேகம்'. அஜித் நடித்துள்ள படங்களிலேயே பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமும் இதுதான். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பல்கேரியாவில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது. இதுவரை `விவேகம்' படத்தின் மூன்று மாறுபட்ட போஸ்டர்களை வெளியிட்டுள்ள படக்குழு, அஜித் பிறந்தநாளில், அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக படத்தின் டீசரை மே 1-ல் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் பிறந்தநாளை ஒரு மாதத்திற்கு முன்பாகவே, அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அவ்வாறு அஜித் பிறந்தநாளில் டீசர் வெளியானால், அஜித் ரசிகர்களுக்கு இது இரட்டை விருந்தாகும்.

அதுமட்டுமல்லாமல், கடந்த 1999-ல் சரண் இயக்கத்தில் வெளியான `அமர்க்களம்' படத்தை அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக மீண்டும் திரையிட படக்குழு முடிவு செய்துள்ளது. அஜித்-ஷாலினி இணைந்து நடித்த படம் என்பதால், தல ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள் என்ற நோக்கத்தில் மீண்டும் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அஜித் பிறந்தநாளான வருகிற மே 1-ஆம் தேதி இப்படத்தை மீண்டும் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு மே 1-ல் `அமர்க்களம்' மீண்டும் ரிலீசானால், அஜித்-ஷாலினி சேர்ந்து வைக்கும் விருந்தாக அஜித் ரசிகர்கள் அதனை கொண்டாடுவர் என்பதில் சந்தேகமில்லை. மேலும் `வேதாளம்' படத்தையும் மீண்டும் திரையிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தல்களை பற்றி அலசும் கதையான ஜூலியும் நாலு பேரும் படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
கலிபோர்னியாவில் ராசியான நாயாக கருதப்படும் ஜுலியை கடத்தல் கும்பல் ஒன்று அதன் உரிமையாளரை கொன்றுவிட்டு சென்னைக்கு கடத்தி வருகிறது. அந்த நாயை கடத்தி வரச் சொன்னது நாயகி அல்யாவின் தந்தைதான். அந்த நாயை கடத்தி வந்ததற்காக அந்த கடத்தல் கும்பலுக்கு ரூ.1 கோடி ரூபாய் கொடுக்கிறார் அல்யாவின் தந்தை.
இதுஒருபக்கம் போய்க் கொண்டிருக்கையில், வெவ்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் அமுதவாணன், சதீஷ், விஜய் ஆகிய மூன்று பேரும் வேலை வாங்கித் தருவதாக கூறும் ஒரு மோசடி கும்பலிடம் பணத்தை இழந்து நிற்கின்றனர். அந்த நேரத்தில் இவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் ஆட்டோ ஓட்டுனரான ஜார்ஜ் உடன் நட்பாகிறார்கள்.

தாங்கள் இழந்த பணத்தை குறுக்கு வழியிலாவது சம்பாதித்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்நிலையில், ஒருநாள் ஜுலி வீட்டைவிட்டு வெளியேறி, எதையோ சாப்பிட்டு மயக்கமடைகிறது. அதை பார்க்கும் நான்கு நண்பர்களும் ஜுலியை காப்பாற்றி, அதன் உரிமையாளரான நாயகியிடம் ஒப்படைக்க, நாயகியும் இவர்களுக்கு நண்பர்களாகிறாள்.
நடந்த விஷயத்தை நாயகி தனது அப்பாவிடம் கூற, அவர் தனது உதவியாளரை அழைத்து நண்பர்களுக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கும்படி கூறிவிட்டு செல்கிறார். ஆனால், அவரது உதவியாளரோ இவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு ஏமாற்றிவிடுகிறார். இதனால் கோபமடைந்த நண்பர்கள் ஜுலியை கடத்திவிடுகிறார்கள்.

ஜுலியை கடத்தியது யாரென்று தெரியாத நாயகியின் அப்பா, ஜுலி எங்கு சென்றது என்று தேடிவர, மறுபக்கம், ஜுலியை வெளிநாட்டில் இருந்து கடத்திக் கொண்டு வந்த கும்பல், மறுபடியும் அதை கடத்துவதற்கு திட்டம்போட்டு ஜுலியை தேடி வருகிறார்கள். இன்னொரு பக்கம் ஜுலி என்ற பெயரில் காணாமல் போன பெண்ணை தேடி அலையும் போலீசார், சந்தேகத்தின் பெயரில் இவர்கள் பக்கம் பார்வையை திருப்புகின்றனர்.
இறுதியில், அந்த அதிர்ஷ்ட நாய் ஜுலி யாரிடம் சேர்ந்தது? அந்த நாயால் நண்பர்கள் நன்மை அடைந்தார்களா? அல்லது அவர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகர்கள் அமுதவாணன், சதீஷ், விஜய், ஜார்ஜ் உள்ளிட்ட நான்கு பேரும் தொடக்கம் முதல் கடைசி வரை ஒன்றாகவே வலம் வருகின்றனர். அந்த வகையில் அனைவருமே தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர். அவர்களது நகைச்சுவையும் ரசிக்கும்படி இருக்கிறது. நாயகி அல்யா மனாசா, தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் மகாநதி சங்கர், வழக்கம்போல் நகைச்சுவை கலந்த வில்லத்தனத்தில் ரசிக்க வைக்கிறார்.

இப்படத்தின் இயக்குனர் சதீஷ் ஆர்.வி. ஐடி கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். அப்படியிருக்கையில் சினிமாவில் சாதிக்கவேண்டும் என்ற அவரது முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். தான் அறிமுகமாகிய முதல் படத்தையே திரையில் அழகாக காட்டியிருக்கிறார். இயக்குனராக மட்டுமில்லாமல், இப்படத்தில் நல்லதொரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தும் இருக்கிறார். நண்பர்கள் 4 பேர் ஒன்றாக சேர்ந்தால், என்னென்ன கலாட்டாக்கள் நடக்குமோ அத்தனையையும் நகைச்சுவையாக காட்டியிருப்பது படத்திற்கு ப்ளஸ். அதேநேரத்தில் படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் கொஞ்சம் விறுவிறுப்பு கூடியிருக்குமோ என்று நினைக்க தோன்றுகிறது.
இசையமைப்பாளர் ரகு ஷ்ரவன் குமார், திரைக்கதைக்கு ஏற்றபடி நல்ல இசையை அளித்திருக்கிறார். பின்னணி இசை படத்திற்கு ப்ளஸ். கே.ஏ.பாஸ்கரின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில் ‘ஜுலியும் 4 பேரும்’ ஓட்டம்.

`ஜோக்கர்' படம் 2 தேசிய விருதுகளை வென்றது கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று செய்தியாளர்களை சந்தித்த `ஜோக்கர்' படக்குழு பேட்டி அளித்துள்ளது. இதுகுறித்த விரிவான பேட்டியை கீழே பார்ப்போம்.
2 தேசிய விருதுகளை பெற்ற ஜோக்கர் திரைப்படத்தின் படக்குழு கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு , இயக்குநர் ராஜு முருகன் , நாயகன் சோம சுந்தரம் , இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜு முருகன் பேசிய போது, நான் ஒரு நல்ல படத்தை இயக்க வேண்டும் என்று நினைத்தேன் , இப்படம் அனைவரின் ஒத்துழைப்பில் திரையரங்குக்கு வந்ததே மிகப்பெரிய வெற்றி. ஜோக்கர் திரைப்படம் இங்கு இருக்கும் அனைவரும் தங்களுடைய கருத்தை சுதந்திரமாக பேச வழிவகுத்து தந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்படத்தின் நாயகன் குரு சோமசுந்தரம் பாலிவுட் நடிகர் நாவசுதின் சித்திக் போன்ற மிக சிறந்த நடிகர் என்றார் இயக்குநர் ராஜு முருகன்.

நடிகர் குரு சோம சுந்தரம் பேசியதாவது, ஜோக்கரில் நர்ஸ் வேடத்தில் நடித்த நடிகை ஒருவர் என்னை கைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துவிட்டு , நானும் இப்படத்தில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று பெருமையாக கூறினார். எனக்கு அது சந்தோஷத்தை தந்தது. இந்த படத்தில் எழுத்து, இசை, தயாரிப்பு என்று அனைத்தும் ஒருங்கே இணைந்து மிகச்சிறப்பாக அமைந்தது. நான் இந்த படத்தில் இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது என்றார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசும் போது, ஜோக்கர் கதையை கேட்டதும் நிச்சயம் படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என்று நான் இயக்குநர் ராஜு முருகனிடம் கூறினேன். அதற்கு அவர் கிடைத்தால் நன்றாக இருக்கும் , மிகப்பெரிய அங்கீகாரமாக இருக்கும் என்றார். தேசிய விருது பெற்றுள்ள சுந்தர் ஐயர் “ஜாஸ்மீன்“ பாடலை வெறும் இருபதே நிமிடத்தில் பாடினார் என்பது சிறப்பு. சுந்தர் ஐயர் இப்பாடலில் நிறைய புதிய விஷயங்களை கொண்டு வந்தார். அது மட்டுமல்லாமல் பாடலில் நிறைய எமோஷனை சேர்த்தார் என்றார் ஷான் ரோல்டன்.

தயாரிப்பாளர் S.R.பிரபு பேசியது, ஜோக்கர் படத்துக்கு தேசிய விருது கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோசம் இருந்தாலும் எங்கள் நாயகன் குரு சோமசுந்தரம் அவர்களுக்கும் விருது கிடைக்கும் என்று ரொம்பவே எதிர்பார்த்தோம் அவருக்கும் கிடைத்து இருந்தால் எங்களுக்கு மேலும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். எல்லாம் கூடி வரும்போது `ஜோக்கர்' திரைப்படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்றார்.

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடித்து வரும் படத்திற்கு `ஸ்கெட்ச்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்திற்கு `ஸ்கெட்ச்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. `வாலு' படத்தை அடுத்து விஜய் சந்தர், தற்போது விக்ரமை இயக்கி வருகிறார். வடசென்னை பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். 2-வது நாயகியாக நடிக்க ஸ்ரீபிரியங்கா ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார்.
விக்ரம் ஒரே நேரத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும், விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்' படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து மே மாதம் முதல், ஹரியின் இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

7-வது முறையாக தேசிய விருது வென்றுள்ள கவிஞர் வைரமுத்து தனது மகிழ்ச்சியை அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை கீழே பார்ப்போம்.
சிறந்த படங்கள், சிறந்த கலைஞர்களுக்காக இந்திய அரசால் வழங்கப்படும் தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த பாடலாசிரியர் விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மதுரை படத்திற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. வைரமுத்துவுக்கு இது 7-வது தேசிய விருதாகும்.
இதுகுறித்து அவர் கூறும்போதும், இந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் என்று குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் தேசிய விருதை ஏழாவது முறையாகப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இதில் நானடையும் மகிழ்ச்சியைவிட நாடு அடையும் மகிழ்ச்சியே பெரிதென்று கருதுகிறேன்.

அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் 22 தேசிய மொழிகளில் திரைப்பாடலைப் பொறுத்தவரையில் தமிழ்தான் முன்னிற்கிறது என்பதில் என் சமகாலச் சமூகம் மகிழ்ச்சி அடைகிறது. பெருமையுறுவது மொழியே தவிர நானல்ல; நான் ஒரு கருவி மட்டுமே.
‘தர்மதுரை’ படத்தின் இயக்குநர் சீனுராமசாமி, இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் சுகுமார், நடித்த விஜய்சேதுபதி - தமன்னா, தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், குரல் கொடுத்த பாடகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி சொல்வதில் நாகரிகம் அடைகிறேன்.
இந்தப் பாடல் தற்கொலைக்கு முயன்றவனைத் தாங்கிப் பிடிக்கும் பாடலாகும். தற்கொலை என்பது தேசத்தின் நோயாகப் பெருகிவருகிறது. காதல் தோல்வி - மன அழுத்தம்- அச்சம்- வறுமை என்ற காரணங்களே மனிதர்களைத் தற்கொலைக்கு தள்ளுகின்றன. எந்த ஒரு தோல்வியிலும் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. தோல்வி என்பது அடுத்த வாசலுக்கான கதவு என்று உணர்த்தவேண்டும். அதைத்தான் இந்தப்பாடலை பாடும் நாயகி நாயகனுக்கு நினைவுறுத்துகிறாள்

பொழுதுபோக்கு மட்டுமே நோக்கமல்ல. தன்முனைப்பும் தன்னெழுச்சியும் தன்னம்பிக்கையும் ஊட்டுவதே கலையின் நோக்கம். இதைச் சொல்லும் படங்களும் பாடல்களும் களிப்பூட்டுவதோடு மக்களுக்குக் கற்பிக்கவும் செய்கின்றன நல்ல சிந்தனைக்கும் மொழிவளத்துக்கும் இடமளிக்கிற பாடல்கள் எல்லாப் படங்களிலும் இடம் பெறுவது நிகழ்காலக் கலையின் கடமையாகிறது.
இந்த விருது என் எதிர்காலப் பொறுப்பையே அதிகமாக்குகிறது. புதிய பொறுப்போடும் விருப்போடும் என் பயணத்தைத் தொடரத் தமிழ்மக்களின் வாழ்த்துக்களையே வரமாய்க் கேட்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கவிஞர் வைரமுத்து இதுவரை தேசிய விருது பெற்ற படங்களும் வருடங்களும் பின்வருமாறு: 1986 - முதல் மரியாதை, 1993 - ரோஜா, 1995 - கருத்தம்மா, பவித்ரா, 2000 - சங்கமம், 2003 - கன்னத்தில் முத்தமிட்டால், 2011-தென்மேற்கு பருவக்காற்று, 2017 - தர்மதுரை.
கவிஞர் வைரமுத்துவுக்கு தர்மதுரை படத்தில் தேசிய விருது பெற்றுக்கொடுத்த பாடல் இதுதான்.

நடிகர் ஆர்யா தமிழில் தம்பியாகவும், தெலுங்கில் அண்ணனாகவும் அவதாரம் எடுக்கவுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘கடம்பன்’. இப்படத்தை ‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவா இயக்கி வருகிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடித்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார்.
இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். இப்படம் தமிழ் மட்டுமில்லாது தெலுங்கிலும் வெளியாகவிருக்கிறது. அதன்படி, இரண்டு மொழிகளிலும் வருகிற 14-ந் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. தமிழில் கடம்பன் என்ற பெயரிலும், தெலுங்கில் கஜேந்திரடு என்ற பெயரிலும் இப்படம் வெளியாகிறது.

கடம்பன் என்றால் முருகன், கஜேந்திரடு என்றால் விநாயகர். எனவே, தமிழில் தம்பியாகவும், தெலுங்கில் அண்ணனாகவும் அவதாரம் எடுக்கவுள்ளார் ஆர்யா. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் காடுகள், மலைகளில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.