என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    பல படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக எழில் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். பின்னர் நடிகராக அவதாரம் எடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ் கைவசம், பல படங்கள்  உள்ளன. இந்நிலையில் மேலும் பல்வேறு படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி வருகிறார்.

    அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான `புரூஸ் லீ' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், அவர்  ‘நாச்சியார்’, ‘அடங்காதே’, ‘ஐங்கரன்’, ‘செம’, ‘குப்பத்துராஜா’, ‘4ஜி’ உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார்.



    மேலும் ராஜுவ் மேனனின் `சர்வம் தாள மயம்', சசி இயக்கத்தில் சித்தார்த் உடன் இணைந்து ஒரு படத்திலும், வெற்றிமாறன்  இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சீமான் இயக்கத்தில் `பகலவன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இவ்வாறு பிசியாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ், எழில் இயக்கத்தில் மற்றொரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.  தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘எக்கடிக்கிபோத்தாவு சின்னவாடா’. தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ள இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோ‌ஷன் பிச்சர்ஸ் சார்பில் மதன் தயாரிக்கிறார்.
    கர்ஜனை படத்திற்காக திரிஷா ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    திரிஷா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘கர்ஜனை’. இதில் திரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளுசபா சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சனி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். சுந்தர் பாலு என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். செஞ்சுரி இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுகூனம் சார்பில் ஜோன்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்பில் திரிஷா இருந்ததாக கூறி, இப்படத்தின் படப்பிடிப்புக்கு சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது, ஜல்லிக்கட்டு விஷயம் சுமூகமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது.



    இந்நிலையில், இப்படத்தின் கதை குறித்து இயக்குனர் சுந்தர் பாலு மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ஐந்து நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது அதை படமாக்கி சமூக வலைத்தளங்களில் பேரம் பேசி விற்று வருகிறார்கள். இந்நிலையில், காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள்.



    இதன் பின்னணியில் நடக்கும் கதையை ஆக்ஷன் திரில்லருடன் கலந்து படமாக்கி இருக்கிறேன். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் திரிஷா தயங்காமல் டூப் இல்லாமல் நடித்துள்ளார். இப்படத்தின் கதையே கேட்டவுடனே நடிக்க திரிஷா சம்மதித்தார்.



    காரைக்குடி, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளேன். இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திற்கு இசையமைத்த அம்ரிஷ் இந்த படத்திற்கும் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    எழில் துரை இயக்கத்தில் அவர், மதுமிலா, அபிநயா நடிப்பில் உருவாகி இருக்கும் `செஞ்சிட்டாளே என் காதல' படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
    நாயகன் எழில் துரை கல்லூரியில் படித்து வருகிறார். வழக்கறிஞரான தந்தை அஜய் ரத்னம், தாய், தங்கை என தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். ஒருநாள் தனது தங்கையின் தோழியான மதுமிலாவை பார்க்கும் நாயகனுக்கு அவர் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. பின்னர்  சில நாட்களுக்கு பிறகு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மதுமிலாவை மீண்டும் பார்க்க, அவள் மீதான ஈர்ப்பு காதலாக மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் தனது காதலை அவளிடம் தெரிவிக்க, மதுமிலாவும் சம்மதம் தெரிவிக்கிறாள்.

    பின்னர், இருவரும் சந்தோஷமாக காதலித்து வருகின்றனர். நாயகன் எழிலுக்கு வேலை கிடைக்கவில்லை. அன்றாட பிழைப்புக்கு தனது அப்பாவையே நம்பி இருக்கிறான். இந்நிலையில், கல்லூரி தலைமை பொறுப்புக்கு தேர்தல் வர, அதில் மதுமிலாவும் போட்டியிட்டு வெற்றி பெறுகிறாள். இதையடுத்து, அவளுக்கு மற்றொரு நபருடன் தொடர்பு ஏற்படுகிறது. இதனால் எழிலை பிரிய முடிவு செய்து அவனை வெறுத்து ஒதுக்குகிறாள். இருப்பினும், அவள் பின்னாலேயே சுற்றிவரும் எழில், ஒரு கட்டத்தில் அவளை பிரிகிறார்.



    எழில் அவளை பிரிந்த மனவேதனையில் தான் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று முடிவு செய்து புதிய கம்பெனி ஒன்றை தொடங்கி சமுதாயத்தில் பேசும்படியான நிலைக்கு வருகிறார். அவரது கம்பெனியிலேயே பணிபுரியும் மற்றொரு நாயகியான அபிநயா, எழில் மீது காதல் கொண்டு, தனது காதலை எழிலிடம் தெரிவிக்கிறார். அபிநயாவிடம் தனது முதல் காதல் குறித்து தெரிவிக்கும் எழில், அதேநேரத்தில் மதுமிலாவை இன்னமும் காதலிப்பதாகவும் கூறுகிறார்.

    மறுபக்கத்தில் எழிலை பிரிந்த மதுமிலா, தனது அடுத்த காதலில் தோல்வியடைந்து, பின்னர் மீண்டும் ஒருவரை காதலிக்க அந்த காதலும் தோல்வியடைகிறது. இந்த நிலையில், மதுமிலாவின் தந்தையான மைம் கோபி, எழிலும், மதுமிலாவும் காதலிப்பதாகக் கூறி எழிலின் பெற்றோரிடம் திருமண பேச்சுவார்த்தை நடத்துகிறார். இறுதியில், எழில் தன்னை வேண்டாமென்று ஒதுக்கிய மதுமிலாவுடன் ஒன்று சேர்ந்தாரா? அல்லது தன்னையே உருக உருக காதலிக்கும் அபிநயாவை திருமணம் செய்தாரா? என்பது படத்தின் மீதிக்கதை.



    நாயகன் எழில் துரை தனது முதல் படத்திலேயே சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது செய்கைகளும், பேச்சும் ஒரு முதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. குறிப்பாக வசன உச்சரிப்புகள் அவருக்கு ஏற்றபடி எழுதியிருப்பதாகவே தெரிகிறது. நாயகி மதுமிலாவை பொறுத்தவரை, ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில், சிறப்பாக நடித்திருக்கிறார். திரையில் அழகான தேவதையாக வரும் மதுமிலா, ஒரு கட்டத்திற்கு மேல் அவர் மீது வெறுப்பு ஏற்படும்படி நடித்திருப்பது சிறப்பு.

    நடிகை அபிநயாவை பற்றி சொல்ல வேண்டியதில்லை. வாய்பேச முடியாதவர் என்றாலும், எப்போதும் போல தனது எதார்த்தமான நடிப்பால் கலக்கியிருக்கிறார். திரையில் அபிநயா வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. ‘கயல்’ வின்சென்ட் காமெடியில் கலக்கி இருக்கிறார். மைம் கோபி, மகாநதி சங்கர் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

     

    தனது முதல் படத்திலேயே இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமாகி உள்ள எழில் துரை சிறப்பான பங்களிப்பை தந்திருப்பதற்காக அவருக்கு வாழ்த்துக்கள். இந்த காலகட்டத்தில் உள்ள இளைஞர்கள் தங்களது காதலில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் என்னென்ன இன்னல்களுக்கு ஆளாகின்றனர் என்பதை இப்படத்தின் மூலமாக தெளிவாக காட்டியிருக்கிறார். படத்தின் கதையை நிர்மானித்து, இயக்க முடிவெடுத்த எழில் துரை தனது திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டு இருக்கலாம். மற்றபடி அவரது இயக்கம் சிறப்பாக உள்ளது.

    படத்தின் இசையை பொறுத்தவரை எஃப்.ராஜ்பரத் சிறந்த இசையை தந்திருக்கிறார். அவரது இசையில் ஒருசில பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம். லாரன்ஸ் கிஷோர் ஒளிப்பதிவில், இந்த கால இளைஞர்களின் காதலை சிறப்பாக காட்டியிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘செஞ்சிட்டாளே என் காதல’ காதல் போராட்டம்.
    நிவின்பாலி நடித்து வரும் `சகாவு' படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் 65 வயது பெண்ணாக நடித்து அசத்தியிருக்கிறார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் நடிகைகள் அதிகம். இப்போது தமிழ் நாட்டில் இருந்து மலையாள பட உலகுக்கு சென்று பேசப்படும் நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். நாயகியாக மலையாள படங்களில் நடிக்கும் இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்புள்ள வேடங்கள் அமைந்து வருகின்றன.

    கடந்த ஜனவரியில் வெளியான ‘ஜோமோண்டே சுவிசே‌ஷங்கள்’ மலையாள படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். இதில் அவருடைய நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன.



    அடுத்து, நவின்பாலியுடன் ஜஸ்வர்யா நடித்துள்ள மலையாள படம் ‘சகாவு’விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதில் இரண்டு கெட்-அப்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று 65 வயது பெண் வேடம். இதற்கான நடிப்பை சிறப்பாக அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

    என்று படக்குழு தெரிவித்துள்ளது.

    தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் விஷால் பேசியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷால் வெற்றி பெற்றார். இந்த அணி சார்பில் துணை தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜ், கவுதம்மேனன், கவுரவ செயலாளர் பதவிக்கு ஞானவேல்ராஜா, கதிரேசன், பொருளாளர் பதவிக்கு எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் வெற்றி பெற்றனர். பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர்.

    புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா அறிமுக கூட்டம் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்தது. புதிய நிர்வாகிகளை எடிட்டர் மோகன் மேடைக்கு அழைத்தார். அவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ராஜ் கண்ணு, எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.டி.குஞ்சுமோகன், தாணு, கேயார், ஏ.எல்.அழகப்பன், டி.சிவா ஆகியோர் வழங்கினார்கள். ரஜினிகாந்த் வாழ்த்து செய்தியுடன் பூங்கொத்தும் கொடுத்து அனுப்பினார்.



    விழாவில் விஷால் பேசும்போது கூறியதாவது:- இது ஒரு மிகப்பெரிய குடும்பம். அதனால் தான் அனைத்து சங்கங்களும் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள். மாற்றம் வேண்டும் என்ற நம்பிக்கையால் நாங்கள் வந்துள்ளோம். தாணு சார், கேயார் சார், எஸ்.ஏ.சி சார் உட்பட அனைவரும் வந்து வாழ்த்தியதற்கு நன்றி. தமிழ் சினிமாவிற்கு பொற்காலம் பிறந்துவிட்டது.

    யார் வந்தாலும் நல்லது செய்யவேண்டும் என்று உழைக்கிறோம். நலிந்த என்ற வார்த்தையே இருக்க கூடாது. எங்களுடைய அணி 24 மணி நேரம் உழைக்கப் போகிறது. உறுப்பினர்களுக்கு பென்சன் தொகையை முதலில் செயல்படுத்தவுள்ளோம்.



    விவசாயிகள் பிரச்சினைக்கு ஏதாவது உதவ வேண்டும் என்று பேசினோம். தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, தமிழ் நாட்டில் திரையரங்கில் ஏதாவது ஒருநாளில் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் எடுத்து கொடுக்கவுள்ளோம். அது எத்தனை கோடி வரும் என எனக்கு தெரியாது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதில் வரும் மொத்த தொகையையும் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும்.

    அனைத்து சங்கங்களும் இணைந்தால் இன்னும் விவசாயிகளுக்கு நிறைய நல்லது செய்யலாம். தலைப்பு, சென்சார், வரிச்சலுகை உள்ளிட்ட அனைத்து வி‌ஷயங்களும், அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் பொதுவானதாக செயல்படும். திருட்டு விசிடிக்கு எதிராக ஒரு நல்ல வி‌ஷயம் நடைபெறவுள்ளது. அதுகுறித்த முறையான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.

    இந்த ஒற்றுமையை வைத்து நிறைய வி‌ஷயம் செய்யலாம். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. உங்களுக்காக உழைப்பேன். நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இணைந்து ஒரு பிரம்மாண்டமான விருது விழா நடத்தவுள்ளோம். இந்தாண்டே அவ்விழா நடத்தி 10 கோடி வரை தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டுவோம்.
    ஒட்டு மொத்த இந்திய திரையுலகமும் ஒன்றிணைந்து இளையராஜா சார் நிகழ்ச்சிக்கு ‘இசைவோம்‘ என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தவுள்ளோம். இவ்விரண்டு நிகழ்ச்சிகள் மூலமாக சுமார் 15 கோடி வரை இந்தாண்டுக்குள் தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டுவோம்.



    அனைத்து சங்கங்கள் இணைந்து செயல்பட்டால் ஆகஸ்ட் மாதத்துக்குள் திருட்டு விசிடி இருக்காது. படம் செய்ய எண்ணம் உள்ள தயாரிப்பாளர் அனைவருக்கும் படம் பூஜைப் போடப்பட்டதிலிருந்து படம் வெளியாகும் வரை என்ன பிரச்சினை என்றாலும் உடன் இருப்போம். மானியம் தொடர்பாக பேச தமிழக முதலமைச்சரிடம் நேரம் கேட்போம். 10 ஆண்டுகளாக மானியம் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக நேரில் பேசி வலியுறுத்துவோம்.



    விஷால் ஏன் போட்டியில் நிற்கவேண்டும். ஏன் 2 பதவிக்கு எனக் கேட்டார்கள். நானும் நிறைய தயாரிப்பாளரிடம் போய் தலைவர் பதவிக்கு நில்லுங்கள் என்று கேட்டேன். ஆனால், இறுதியில் நானே நிற்கவேண்டிய சூழல் வந்துவிட்டது. சத்தியமாக நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்று வந்தேன்.

    இவ்வாறு விஷால் கூறினார்.

    அப்போது மேடையில் முட்டி போட்டு அனைவரையும் வணங்கினார்.
    சிறந்த படங்களுக்கான 64-வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இயக்குனர் பிரியதர்சன் தலைமையிலான குழு இதை அறிவித்தது. அதன் முழுவிவரங்களை கீழே பார்ப்போம்.
    சிறந்த படங்களுக்கான 64-வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இயக்குனர் பிரியதர்சன் தலைமையிலான குழு இதை அறிவித்தது. அதன் விவரம் வருமாறு:-

    தேசிய அளவில் சிறந்த படமாக மராத்தி மொழியில் வெளிவந்த ‘காசவ்’ தேர்வு பெற்றது.

    சிறந்த நடிகராக அக்‌ஷய் குமார் விருது பெறுகிறார். ‘ருஷ்டம்’ படத்தில் நடித்தற்காக இந்த விருது கிடைத்துள்ளது. இவர் பெறும் முதல் தேசிய விருது இதுவாகும்.

    சிறந்த நடிகைக்கான தேசிய விருது சுரபி லட்சுமிக்கு கிடைத்து இருக்கிறது. இவர் நடித்த மலையாளபடமான ‘மின்னமினுங்கு’ படத்துக்காக கிடைத்திருக்கிறது.

    மாநில படங்களுக்கான தேசிய விருதுகளில் குரு சோமசுந்தரம் நடித்த ‘ஜோக்கர்’ படத்துக்கு சிறந்த தமிழ் படத்துக்கான விருது கிடைத்து இருக்கிறது.



    கவிஞர் வைரமுத்து சிறந்த பாடல் ஆசிரியருக்கான விருதை பெற்றுள்ளார். `தர்மதுரை' படத்தில் ‘எந்த பக்கம்‘ என்ற பாடலை எழுதியதற்காக இந்த விருது கிடைத்திருக்கிறது.

    சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு விருது சூர்யா நடித்த ‘24’ படத்துக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் திரு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார்.

    சிறந்த பின்னணி பாடகருக்கான விருது `ஜோக்கர்' படத்தில் பாடிய பாடகர் சுந்தர் ஐயர் பெறுகிறார். சிறந்த சினிமா எழுத்தாளர் விருது தனஞ்ஜெயனுக்கு கிடைத்திருக்கிறது.



    பீட்டர் கெய்னுக்கு சிறந்த சண்டை பயிற்சியாளர் விருது கிடைத்திருக்கிறது. மலையாளத்தில் தயாரான `புலிமுருகன்' படத்தில் அவர் அமைத்த சண்டை காட்சிக்காக இந்த விருதை பெறுகிறார்.

    ஸ்டண்ட் மாஸ்டருக்கான விருது கடந்த 63 ஆண்டுகளில் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    கார்த்தி - அதிதி ராவ் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘காற்று வெளியிடை’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    காற்று வெளியிடை படத்தின் கதை 1999-ல் தொடங்குகிறது. இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான கார்கில் போரில் பைலட்டான கார்த்தி, சண்டையின்போது இவர் பயணித்த போர் விமானம் எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாக அதிலிருந்து தப்பித்து பாகிஸ்தானில் விழுகிறார். பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு இருட்டு அறையில் அடைக்கப்படுகிறார். அங்கிருந்தபடியே, தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை கார்த்தி நினைத்துப் பார்ப்பதுபோல் கதை தொடங்குகிறது.

    இந்திய விமானப்படையில் பைலட்டாக இருக்கும் கார்த்திக்கு ஒருநாள் சிறிய விபத்து ஏற்படுகிறது. ராணுவத்தில் டாக்டராக இருக்கும் நாயகி அதிதி ராவ் இவருக்கு சிகிச்சை அளிக்கிறார். முதல் சந்திப்பிலேயே இருவருக்குள்ளும் ஒரு ஆழமான காதல் உருவாகிவிடுகிறது. இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கும்போது, அவர்களுக்குள் அவ்வப்போது ஈகோ ஏற்பட்டு மோதல் உருவாகிறது. இந்த மோதல் நெடுநேரம் நீடிக்காமல் அடிக்கடி சமரசமும் ஆகிக் கொள்கிறார்கள்.



    ஒருகட்டத்தில் திருமணத்திற்கு முன்பே இருவரும் நெருக்கமாகிறார்கள். இதனால், அதிதி ராவ் கர்ப்பமடைகிறாள். இவர்களுக்குள் இருந்த சிறுசிறு மோதல், ஒருநாள் பூதாகரமாகிவிட கோபத்தில் அதிதியை விட்டு பிரிந்துபோகிறார் கார்த்தி. அந்த நேரத்தில்தான் கார்கில் போர் ஆரம்பிக்க, கார்த்தி போருக்கு போய் பாகிஸ்தானில் சிக்கிக் கொள்கிறார்.

    கர்ப்பிணியாக விட்டுவந்த தனது காதலியிடம் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்று எண்ணத்தில் பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பிக்க நினைக்கிறார் கார்த்தி. இறுதியில், அவர் அங்கிருந்து தப்பித்து இந்தியாவுக்கு வந்து தனது காதலியை கரம்பிடித்தாரா? இல்லையா? என்பது படத்தின் மீதிக்கதை.



    கார்த்தி இப்படத்தில் பைட்டர் பைலட்டாக வருகிறார். அந்த கதாபாத்திரத்திற்கு ஓரளவுக்கு பொருந்தியிருக்கிறார் என்று சொன்னாலும், மணிரத்னம் படங்களின் கதாநாயகனுக்கு இவர் பொருந்தவில்லை என்றுதான் தோன்றுகிறது. பெரும்பாலான காட்சிகளில் இவரது முகத்தை குளோசப் காட்சிகளாக காட்டியிருக்கிறார். அந்த இடங்களில் எல்லாம் இவரை பெரிதாக ரசிக்க முடியவில்லை. நடிப்பை பொறுத்த அளவுக்கு தன்னால் எந்தளவுக்கு பெஸ்ட் கொடுக்க முடியுமோ அதை கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

    நாயகி அதிதி ராவ் ஹைதரி பார்க்க அழகாக இருக்கிறார். மணிரத்னம் படங்களுக்கு ஏற்ற முகம் இவருக்கு இருக்கிறது. நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார். காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் கொடுக்கவேண்டும். டெல்லி கணேஷ் ஒருசில காட்சிகள் வந்தாலும் நிறைவாக செய்துவிட்டு போயிருக்கிறார்.



    ஆர்.ஜே.பாலாஜி இதுவரையில் நடித்த படங்களைவிட இந்த படத்தில் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அவருடைய இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். அதிதியின் தோழியாக வரும் ருக்மிணி தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

    இயக்குனர் மணிரத்னத்தின் காதல் பட வரிசையில் இந்த படமும் முக்கியமாக பேசப்படும் என நம்பலாம். இராணுவத்தில் இருக்கும் இருவரிடையே வரும் காதல், ஈகோவை இப்படத்தில் காட்டியிருக்கிறார். படத்தில் ராணுவம் சம்பந்தப்பட்ட விஷயங்களை காட்டியிருந்தாலும், முழுக்க முழுக்க ஒரு காதல் கதையாகவே இதை படமாக்கியிருக்கிறார். மணிரத்னத்தால் மட்டுமே இப்படியொரு படத்தை கொடுக்கமுடியும். நிறைய காட்சிகளில் அவரது பழைய படங்களின் சாயல் இருக்கிறது. காதல் படங்களுக்கு மணிரத்னத்தின் வசனங்கள்தான் பெரிய பலம். அது இந்த படத்திலும் பக்கபலமாக அமைந்திருக்கிறது.



    ஏ.ஆர்.ரகுமான் இசைதான் படத்தின் கதையை பாலமாக தாங்கிச் செல்கிறது. பாடல்கள் ஒவ்வொன்றும் மணிமுத்தாக இருக்கிறது. அந்த பாடல்களுக்கு வைரமுத்துவின் வரிகள் கூடுதல் பலம் சேர்க்கிறது. காதல் படங்களுக்கு பின்னணி இசையமைப்பது ஏ.ஆர்.ரகுமானுக்கு கைவந்த கலை. அதை இப்படத்திலும் நேர்த்தியாக செய்திருக்கிறார். ரவிவர்மனின் ஒளிப்பதிவு காஷ்மீரை இன்னொரு கோணத்தில் காட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘காற்று வெளியிடை’ காதல் போராட்டம்.
    64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ் படமாக ஜோக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான குழு விருதுகளை அறிவித்தது.

    சிறந்த தமிழ் படமாக ஜோக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து அறிவிக்கப்பட்டுள்ளார். தர்மதுரை 
    படத்தில் ’எந்த பக்கம்’ என்ற பாடலை எழுதியதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த ஒளிப்பதிவாளவு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவற்றிற்காக இரண்டு தேசிய விருதுகள் "24" படத்திற்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.



    சிறந்த கதையாசிரியாக ஜி.தனஞ்செயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். "ருஷ்டம்" படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் அக்ஷ்ய் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த இந்தி படமாக சோனம் கபூர் நடித்த நீரஜ் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

    திருமணத்துக்கு முன்பு கர்ப்பமாகும் இளம்பெண்ணை பற்றிய படத்தில் அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு எதிராக விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள்.
    திருமணத்துக்கு முன்பு பெண்கள் கர்ப்பமாவது தவறு இல்லை என்பது போன்ற சர்ச்சை கருவை மையமாக வைத்து இந்தியில் புதிய படம் தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு ‘லாலி கி சாதி மெய்ன் லாட்டூ திவானி’ என்று பெயரிட்டு உள்ளனர். இதில் திருமணத்துக்கு முன்னால் கர்ப்பமாகும் 18 வயது இளம் பெண் கதாபாத்திரத்தில் அக்‌ஷரா ஹாசன் நடித்து இருக்கிறார். இவர் ஏற்கனவே ‘ஷாமிதாப்’ என்ற இந்தி படத்தில் அமிதாப்பச்சன்-தனுசுடன் நடித்துள்ளார். ‘விவேகம்’ படத்தில் அஜித்குமாருடன் நடித்துக்கொண்டு இருக்கிறார்.



    தற்போது திருமணமாகாமல் கர்ப்பமாகும் சர்ச்சை கதையில் அக்‌ஷரா ஹாசன் துணிச்சலாக நடித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வயிறு பெரிதாக இருக்கும் அவரது கர்ப்பவதி தோற்ற படங்கள் சமீபத்தில் வெளியானது. கர்ப்பமான நிலையில் மணமேடையில் இருப்பது போன்ற டிரையிலரும் வெளியிடப்பட்டது. இதைப் பார்த்த விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் படத்துக்கு எதிராக போராட்டங்களில் குதித்து உள்ளனர்.



    மும்பை அந்தேரியில் உள்ள பட தயாரிப்பாளர் அலுவலகத்தில் திரண்டு இந்திய கலாசாரத்துக்கு எதிராக படம் எடுத்து இருப்பதாக கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள். இது குறித்து படத்தின் இணை தயாரிப்பாளர் அகர்வால் கூறும்போது, “தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து ‘யு, ஏ’ சான்றிதழ் அளித்து உள்ளனர். எனவே படத்தில் இருந்து ஒரு காட்சியை கூட நீக்க மாட்டோம். யாரையும் புண்படுத்தும் காட்சிகள் இல்லை. நமது நாட்டுக்கு இந்த படத்தின் கரு புதுமையான விஷயமாக இருக்கும். இதில் அக்‌ஷரா ஹாசன் துணிந்து நடித்து இருக்கிறார்” என்றார்.

    அமெரிக்காவில் நான் நலமுடன் இருக்கிறேன் என்று பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ‘பேஸ்புக்’ பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி ‘எஸ்.பி.பி 50’ என்ற பெயரில் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். தற்போது அவர் அமெரிக்காவில் முகாமிட்டு இசை கச்சேரிகள் நடத்திக்கொண்டு இருக்கிறார். அங்கு தனது இசையில் உருவான பாடல்களை அவர் பாடக்கூடாது என்றும், மீறினால் காப்புரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் வக்கீல் நோட்டீசு அனுப்பினார்.

    இதனால் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பதில் அளித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், “இனிமேல் என்னுடைய மேடை கச்சேரிகளில் இளையராஜா பாடல்களை பாட மாட்டேன்” என்று அறிவித்தார்.

    இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு, ரொக்க பணம் போன்றவை அமெரிக்காவில் திருட்டு போய் விட்டதாக தகவல் வெளியானது. இதனால் அவர் தவிப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டது. பாஸ்போர்ட் தொலைந்து போன தகவலை அங்குள்ள இந்திய தூதரகத்தில் அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தூதரக அதிகாரிகள் அவருக்கு மாற்று ஏற்பாடாக புதிய பாஸ்போர்ட் வழங்கி உள்ளனர்.



    இதுகுறித்து தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    “அனைவருக்கும் வணக்கம். எனது பாஸ்போர்ட் உள்ளிட்ட உடைமைகள் பறிபோனது குறித்து ‘பேஸ்புக்’ பக்கத்தில் நான் தகவல் வெளியிட்டு இருந்தேன். இதனால் எனது ரசிகர்கள் பலரும் பெரிய வருத்தத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டேன். இது தொடர்பாக ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றன.

    நான் அமெரிக்காவில் தவிப்பதாகவும் தகவல் பரவி இருக்கிறது. நான் நலமாக இருக்கிறேன். எனது பாஸ்போர்ட்டை இந்திய தூதரகம் மூலம் திரும்ப பெற்று விட்டேன். இதுவரை 9 இசை நிகழ்ச்சிகளை சிறப்பாக முடித்து விட்டேன். மீதியுள்ள நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறும். நான் எதையும் இழந்து விடவில்லை. எல்லோருடைய அன்பையும் பெற்று இருக்கிறேன்.

    எனவே நீங்கள் யாரும் குழப்பமடைய வேண்டாம். எனக்கு எந்த கெடுபிடிகளும் இல்லை. அனைவருடைய ஆசீர்வாதத்தால் நலமுடன் இருக்கிறேன்”.

    இவ்வாறு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்து உள்ளார்.
    வெற்றி-அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிப்பில் கிரைம் பின்னணியில் வெளிவந்திருக்கும் ‘8 தோட்டாக்கள்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    கதாநாயகன் வெற்றி சிறுவயதிலேயே செய்யாத தப்புக்காக ஜெயிலுக்கு போகிறார். சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படும் வெற்றியை புரிந்துகொண்ட காவலர் ஒருவர் அவனுக்கு உதவி செய்ய நினைக்கிறார். அவனை போலீஸ் அதிகாரியாக ஆகும்படி வற்புறுத்துகிறார். போலீஸ் வேலையில் விருப்பம் இல்லாத வெற்றி, போலீஸ் அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க பெரியவனானதும் போலீசாகிறார்.

    மைம் கோபி இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் போலீஸ் ஸ்டேஷனில் இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். போலீஸ் வேலையில் நேர்மையாக பணிபுரிந்து வருகிறார். இது அந்த ஸ்டேஷனில் பணிபுரியும் மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால், அவரை எப்படியாவது அந்த ஸ்டேஷனில் இருந்து துரத்திவிடவேண்டும் என்று நினைக்கிறார்கள்.



    இந்நிலையில், பிரபல ரவடி ஒருவரை பின்தொடர வேண்டும் என்ற வேலையை வெற்றிக்கு கொடுக்கிறார் மைம் கோபி. இதற்காக எட்டு தோட்டாக்கள் அடங்கிய ஒரு துப்பாக்கியை அவருடைய பாதுகாப்புக்காக கொடுக்கிறார்கள். அதை வாங்கிக்கொண்டு ரவுடியை பின்தொடரும் வெற்றி, பஸ்ஸில் துப்பாக்கியை பிக்பாக்கெட் அடிக்கும் சிறுவனிடம் பறிகொடுக்கிறார்.

    துப்பாக்கி பறிபோனதும் பதட்டத்தில் இருக்கும் வெற்றி, நேரடியாக மைம் கோபியிடம் சென்று துப்பாக்கி தொலைந்துவிட்டது குறித்து முறையிடுகிறார். அவரோ, வெற்றிக்கு ஒருநாள் அவகாசம் கொடுத்து, துப்பாக்கியை அதற்குள் கண்டுபிடித்து வரவேண்டும் எனவும், இல்லையென்றால் மேலிடத்தில் தகவல் தெரிவித்துவிடுவேன் என்று எச்சரிக்கிறார்.



    இதையடுத்து துப்பாக்கியை தேடி நாயகன் பல்வேறு வகையில் முயற்சி செய்கிறார். ஆனால், அதற்குள் அந்த துப்பாக்கி தடயம் தெரியாத நபர்களிடம் சிக்கி, அதில் உள்ள 7 தோட்டாக்கள் நகரத்தின் பல்வேறு இடங்களில் வெடிக்கிறது. இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து நாசர் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் குழு விசாரணையில் இறங்குகிறது.

    அந்த துப்பாக்கி கடைசியில் யார் கையில் சிக்கியது? அந்த துப்பாக்கியை வைத்து நடந்த கொலைகளுக்கான காரணம் என்ன? என்றதுடன் கதை விறுவிறுப்புடன் நகர்கிறது.

    நாயகன் வெற்றி, சிறுவயதிலிருந்தே செய்யாத தப்புக்காக சிறை சென்றுவிட்டோமே என்ற குற்ற உணர்வுடன் படம் முழுக்க சோகமயமாகவே வலம் வந்திருக்கிறார். போலீஸ் கெட்டப்புக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் என்றாலும், அவரது கதாபாத்திரத்திற்கு கம்பீரம் தேவைப்படவில்லை. எனவே, அதற்கேற்றார்போல் கனகச்சிதமாக நடித்திருக்கிறார்.



    நாயகி அபர்ணா வழக்கம்போல் தமிழ் சினிமா கதாநாயகியாக வந்துபோகாமல் இந்த படத்தில் அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. டிவி ரிப்போர்ட்டராக வரும் இவரது நடிப்பு பலே சொல்ல வைக்கிறது. தன்னுடைய தேவைக்காக எதைவேண்டுமானாலும் செய்யத் துணியும் கதாபாத்திரத்தில், ரொம்பவும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். இவருடைய கதாபாத்திரத்தில் போலித்தனம் இல்லாதது சிறப்பு.

    எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் இன்னொரு நாயகன் என்று சொல்லலாம். அந்தளவுக்கு முக்கியமான கதாபாத்திரம் இவருடையது. தன்னுடைய வயதுக்கேற்ற கதாபாத்திரம் என்பதால் அதற்கு பொருத்தமாகவே இருக்கிறார். இவரது நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு படத்தில் ஒரு காட்சியில் 5 நிமிடத்திற்கும் மேல், இவர் தனது சோக கதையை சொல்லி அழும் காட்சிகளில், இவருடைய முகபாவணை மற்றும் நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது.



    விசாரணை அதிகாரியாக வரும் நாசர், வாராவாரம் வெளியாகும் படங்களில் ஏதாவது ஒரு படத்தில் இவருடைய பங்களிப்பு இருந்துகொண்டே இருக்கிறது. ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் வேறுபட்டு இருப்பது பாராட்டுக்குரியது. இந்த படத்திலும் இவருடைய நடிப்பு மெச்சும்படியாக இருக்கிறது.

    இன்ஸ்பெக்டராக வரும் மைம் கோபி, போலீஸ் ஏட்டாக வரும் டி.சிவா, ரவுடி கும்பலின் தலைவனாக வரும் சார்லஸ் வினோத் மற்றும் இவருக்கு மனைவியாக நடித்தவர் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள்.



    இயக்குனர் ஸ்ரீகணேஷ் சிறுவயதிலேயே தனது முதல் படத்தை இவ்வளவு பக்குவத்தோடு இயக்கியிருப்பது சிறப்பு. கிரைம் கதையில் செண்டிமெண்ட், மென்மையான காதல், துரோகம் எல்லாம் கலந்த ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையும் மிகவும் கைதேர்ந்தவர்போல் கையாண்டிருப்பது ஆச்சர்யத்தை கொடுக்கிறது. படத்தின் மிகப்பெரிய பலமே திரைக்கதையும், வசனங்களும்தான். படத்தை ரொம்பவும் வேகமாக கொண்டுசெல்லாமல், நிறுத்தி நிதானமாக கொண்டுசென்று கடைசியில் அழகாக முடித்திருப்பது சிறப்பு.

    தினேஷ் கே.பாபுவின் ஒளிப்பதிவும் பாராட்டும்படி இருக்கிறது. சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை கதையின் ஓட்டத்துக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘8 தோட்டாக்கள்’ வெடிக்கும்.
    கண்ணதாசனிடம் வாலியை வசனகர்த்தா மா.லட்சுமணன் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.
    கண்ணதாசனிடம் வாலியை வசனகர்த்தா மா.லட்சுமணன் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.

    "தெரியுமே! திருச்சி வானொலியில் நாடகம் எல்லாம் எழுதிக் கொண்டிருந்த வாலிதானே நீங்கள்?'' என்று கேட்டார், கண்ணதாசன்.

    அவருடைய ஞாபகசக்தியை எண்ணி வாலி வியந்தார். இருவருக்கும் காபி கொண்டுவரச்சொல்லி தன் கையாலேயே கொடுத்தார், கண்ணதாசன்.

    "நான் ஒரு தீவிர ஆஸ்திகன்... நீங்களும் இப்படி ஆஸ்திகனா மாறிவிட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்'' என்று வாலி கூற, "நான் எப்பவுமே ஆஸ்திகன்தான். ஜுபிடர் பிக்சர்சில் இருக்கிறபோது, விபூதி குங்குமத்தோடு இருப்பேன்'' என்றார், கண்ணதாசன்.

    வாலி, கண்ணதாசனைப் பற்றி எழுதிக் கொண்டு போயிருந்த ஒரு கவிதையைப் படித்தார்.

    "காட்டுக்குள் தேனீக்கள் கூட்டுக்குள் வைத்ததை, பாட்டுக்குள் வைத்தவனே!'' என்று தொடங்கும் அந்தப் பாடலை வாலி பாடிக்காட்ட, கண்ணதாசன் மகிழ்ந்தார்.

    "நாம் அடிக்கடி சந்திக்கலாம்...'' என்று கண்ணதாசன் கூறினார்.

    ஆனால் காலம், கண்ணதாசனையும், வாலியையும் எதிர் எதிர் அணியில் நிறுத்தி தொழில் புரிய வைத்தது.

    இந்தியில் மிகப்பெரிய வெற்றிப்படமான "தீதார்'' படத்தின் கதையை "நீங்காத நினைவு'' என்ற பெயரில் பத்மா பிலிம்சார் படமாக எடுத்தார்கள். இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளராக கே.வி.மகாதேவனும், இயக்குனராக தாதாமிராசியும் பணியாற்றினர்.

    இந்தப் படத்தின் அதிபர் சுலைமானிடம் வாலியை வசனகர்த்தா `மா.ரா.'' அறிமுகப்படுத்தினார். சுலைமானுக்கு வாலியின் பாடல் பிடித்திருந்தது.

    அதைத்தொடர்ந்து, மகாதேவனை வாலி சந்தித்தார். அந்தக் காலத்தில், எந்த இசை அமைப்பாளரும் ஒரு புதிய பாடல் ஆசிரியரை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கேற்ப, வாலியிடம் மகாதேவன் இறுக்கமாகவே இருந்தார்.

    வாலியை அவர் உதறவும் இல்லை; உற்சாகப்படுத்தவும் இல்லை. ஆயினும், பட அதிபர் சுலைமானும், வசன கர்த்தா "மா.ரா.''வும் வாலிக்கு பக்க பலமாக இருந்ததால், "நீங்காத நினைவு'' படத்தில் வாலியின் பாடல்கள் இடம் பெற்றன.

    (ஆரம்பத்தில் வாலியை முழு மனதுடன் மகாதேவன் வரவேற்கவில்லை என்றாலும், பிற்காலத்தில் வாலியின் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு இசை அமைத்தார்.)

    இந்தக் காலக்கட்டத்தில், வாலியின் வாழ்க்கையில் எதிர்பாராத பெரிய திருப்பம் ஏற்பட்டது.

    முக்தா பிலிம்சார் அப்போது "இதயத்தில் நீ'' என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். முக்தா சீனிவாசனிடம் "நீங்காத நினைவு'' படத்தயாரிப்பாளர் சுலைமானும், வசனகர்த்தா "மா.ரா.''வும் வாலியைப் பற்றி கூறினார்கள். இதன் விளைவாக, வாலிக்கு அப்படத்தில் பாட்டு எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

    அதன் பிறகு நடந்தது பற்றி வாலி கூறுகிறார்:

    "என் ஆனந்தத்திற்கு எல்லையேயில்லை. ஏனெனில் அந்தப் படத்தின் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. இவர்களிடம் பாட்டெழுதும் வாய்ப்புக்காகத்தானே நான் இத்தனை காலம் தவமிருந்தேன்!

    1963 ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஒரு மத்தியான வேளையில் முக்தா பிலிம்ஸ் மாடியிலுள்ள சின்ன அறையில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், ராமமூர்த்திக்கும் நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன்.

    நான் ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்திலும், எஸ்.எஸ்.ஆர். படத்திலும் பாடல்கள் எழுதியிருப்பதையெல்லாம் விஸ்வநாதனிடம் விவரித்துச் சொன்னார் முக்தா சீனிவாசன்.

    "நல்ல கவிஞர். பாட்டைப் பாருங்கள். பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒத்துவராது என்று தோன்றினால் நான் உங்களை வற்புறுத்தமாட்டேன்'' என்றெல்லாம் தெளிவாகச் சொன்னார் முக்தா சீனிவாசன்.

    எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நான் ஒரு வணக்கத்தைப் போட்டேன்.

    "ஏதாவது பல்லவி எழுதிக்கொடுங்கள்'' என்றார், விஸ்வநாதன். பாட்டுக்கான காட்சி விளக்கத்தை இயக்குனர் முக்தா சீனிவாசன் சொன்னார்.

    உடனே நான் ஒரு பல்லவியை எழுதி விஸ்வநாதனிடம் நீட்டினேன்.

    "பூவரையும் பூவைக்குப் பூமாலை போடவா?

    பொன்மகளே! வாழ்கவென்று பாமாலை போடவா?''

    - என்பதுதான் அந்தப் பல்லவி.

    "பூவைக்கு என்பதெல்லாம், டிïனுக்கு சரியாக வராதே...'' என்றார் எம்.எஸ்.வி.

    உடனே `பூங்கொடியே' என்று மாற்றிக் கொடுத்தேன்.

    ஒரு சிட்டிகை பொடியை எடுத்து மூக்கில் உறிஞ்சினார், விஸ்வநாதன். அப்போதெல்லாம் அவருக்குப் பொடி போடும் பழக்கமுண்டு.

    நான் எழுதிக் கொடுத்த பல்லவிக்கு ஐந்தே நிமிடங்களில் -ஐந்து விதமாக மெட்டமைத்துப் பாடியதைக் கேட்டு நான் அசந்து போனேன்.

    "சரணத்திற்கு, நான் கொடுக்கும் மெட்டுக்குத்தான் நீங்கள் பாட்டு எழுதவேண்டும்'' என்று விஸ்வநாதன் சரணத்திற்கான மெட்டை வாசித்தார்.

    விஸ்வநாதன் கொடுத்த மெட்டிற்கு கால்மணி நேரத்தில் நான்கைந்து சரணங்களை எழுதி அவரிடம் நீட்டினேன்.

    சரணங்களை வாங்கியவர், அவற்றைப் பாடாமல் திரும்பத் திரும்ப இரண்டு மூன்று முறை மனதிற்குள் படித்துப் பார்த்தார் விஸ்வநாதன்.

    பிறகு ஒரே ஒரு கேள்விதான் என்னை கேட்டார்:

    "இவ்வளவு நாளா எங்கே இருந்தீங்க?'' என்பதுதான் அந்த கேள்வி.

    நான் கண்கலங்கி மவுனி ஆனேன்.

    சரணங்களை உடனே `மளமள'வென்று பாடினார்.

    "சீனு அண்ணா! அடுத்த சிச்சுவேஷனையும், இவர்கிட்ட சொல்லுங்க...'' என்றார் விசு.

    சொன்னார் சீனிவாசன்.

    உடனே நான் எழுதினேன்:

    `ஒடிவது போல் இடையிருக்கும்

    இருக்கட்டுமே! - அது

    ஒய்யார நடை நடக்கும்

    நடக்கட்டுமே!

    சுடுவது போல் கண் சிவக்கும்

    சிவக்கட்டுமே! - அது

    சுட்டுவிட்டால் கவி பிறக்கும்

    பிறக்கட்டுமே!

    விஸ்வநாதன், மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போனார். உடனே விதவிதமான மெட்டமைத்துப் பாடிக்காட்டினார். வழக்கம்போல் அவர் கொடுத்த மெட்டுக்கு நான் சரணங்களை எழுதி முடித்தேன்.

    பிற்பகல் 3 மணியிலிருந்து 4 1/2 மணிக்குள் இரண்டு பாடல்களும் நிறைவடைந்தன.

    விஸ்வநாதன் அடுத்த கம்பெனிக்குப்புறப்பட்டுவிட்டார். போகும்போது, முக்தா சீனிவாசனைத் தனியாக அழைத்துக் காதில் ஏதோ சொல்லிவிட்டுப் போனார்.

    "தரித்திரம் ஒழிந்தது''

    `என்ன சொன்னாரோ?' என்று நான் பதை பதைத்துக்கொண்டே சீனிவாசனிடம் கேட்டேன்!

    "உன்னை வைத்தே மிச்சப் பாடல்களையும் எழுதலாம் என்று சொல்லிவிட்டுப் போனாரய்யா! இன்னியோடு உன் தரித்திரம் ஒழிந்தது'' என்றார் முக்தா.

    எனக்கு நா எழவில்லை. கண்களில் நீர் கோத்து விழிப்படலம் மறைக்க நின்றேன்.

    முக்தா சீனிவாசன் என் கண் முன்னால் எனக்குக் கடவுளாகவே காட்சியளித்தார். வறுமையில் வாடி நித்தநித்தம் செத்துக் கொண்டிருந்த எனக்கு வாழ்வுப் பிச்சை போட்ட முக்தா சீனிவாசனை நான் மூச்சுள்ளளவும் மறப்பதற்கில்லை''

    இவ்வாறு வாலி கூறினார்.
    ×