என் மலர்
1990-களில் முன்னணி வேடத்தில் நடித்த தேவயானி தற்போது ஆசிரியையாக அவதாரம் எடுத்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
1994-ல் வெளியான தொட்டா சினுங்கி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தேவயானி. அப்படத்திற்கு பின்னர் தொடர்ந்து படவாய்ப்புகள் வந்ததால், பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம்வந்தார். மேலும் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குநர் ராஜகுமாரனை திருமணம் செய்துள்ள தேவயானிக்கு, 2004-க்கு பின்னர் படவாய்ப்புகள் குறைந்தால், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். அவ்வப்போது, ஒருசில படங்களில் அக்கா, அம்மா வேடத்திலும் நடித்து வந்தார்.

இந்நிலையில், தேவயானி தற்போது மலையாளத்தில் ‘மை ஸ்கூல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு பள்ளிக்கூட ஆசிரியை வேடம். பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனை நாய் கடித்து விடுகிறது. அவனை காப்பாற்றுவதற்காக வகுப்பு ஆசிரியை போராடுவதே படத்தின் கதை. அடுத்து ஒரு தெலுங்கு படத்தில் இளம் ஹீரோவின் அக்காவாக தேவயானி நடிக்கிறார்.

அரவிந்த் ரோஷன் - கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள ‘செவிலி’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
நாயகன் அரவிந்த் ரோஷன் பேருந்து நிலையத்தில் வாட்டர் பாக்கெட் விற்பனை செய்பவர். சிறுவயதிலிருந்து இவருக்கு தாய் இருந்தும் அவளுடைய பாசம் கிடைக்காமல் ஏங்கி தவிக்கிறார். அதேபகுதியில் அரசியல்வாதியின் மகளான நாயகி கீர்த்தி ஷெட்டி, கல்லூரிக்கு சென்றுவரும் போது, அடிக்கடி நாயகனுடன் வாக்குவாதம் ஏற்படுகிறது.
ஒருகட்டத்தில் அவர், அம்மா மீது வைத்திருக்கும் பாசம், பெண்கள் மீது காட்டும் அக்கறை இவையெல்லாவற்றையும் நேரில் பார்க்கும் நாயகிக்கு அவரை பிடித்துப்போகவே காதலிக்க தொடங்குகிறாள். பாசத்துக்காக ஏங்கும் நாயகனும் அவளது காதலை ஏற்றுக் கொள்கிறார்.

இந்நிலையில் நாயகன், அம்மா பாசத்துக்காக ஏங்கிக் கொண்டு, அவருக்கு ஏதாவது செய்யவேண்டும் என நினைக்கிறார். ஆனால், அவனது அம்மாவோ இவனை வெறுத்து ஒதுக்கிறாள். இந்நிலையில், இவனுடைய தொல்லையில் இருந்து விடுபட, நாயகனுக்கு திருமணம் செய்துவைத்துவிட்டால் சரியாகிவிடும் என்று முடிவெடுக்கிறார் நாயகனின் அம்மா.
அதற்காக ஒரு பெண்ணும் பார்க்கிறார். இதை நாயகனிடம் சொல்ல, இதுநாள் வரை தன்னை வெறுத்து ஒதுக்கிய அம்மா, இன்று தனக்காக பார்த்திருக்கும் பெண்ணை திருமணம் செய்துகொண்டால் அவளது பாசம் கிடைக்கும் என்று நினைக்கும் நாயகன், நாயகியுடனான காதலை முறித்துவிட்டு, அம்மா பார்த்த பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுக்கிறான் நாயகன்.

இறுதியில், அம்மா பார்த்த பெண்ணை நாயகன் திருமணம் செய்தாரா? அவரது காதல் என்னவாயிற்று? அம்மாவின் பாசத்திற்காக ஏங்கிய நாயகனுக்கு அது கிடைத்ததா? எதற்காக அந்த தாய் தனது மகனை வெறுத்து ஒதுக்குகிறாள்? என்ற கேள்விகளுக்கு விடை கொடுத்திருக்கிறார்கள்.
நாயகன் அரவிந்த் ரோஷன் அம்மா பாசத்துக்கு ஏங்கும் காட்சிகளில் எல்லாம் ரொம்பவும் எதார்த்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில்தான் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். நடனமும் முடிந்தளவுக்கு முயற்சி செய்திருக்கிறார்.
நாயகி கீர்த்தி ஷெட்டி அழகு பதுமையாக வந்துபோயிருக்கிறார். படத்தில் இவருக்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதை சரியாக புரிந்துகொண்டு அழகாக நடித்திருக்கிறார். படத்தில் பாராட்டப்பட வேண்டியவர் நாயகனின் அம்மாதான். ஏற்கெனவே நிறைய படங்களில் அவரது நடிப்பு ரொம்பவும் எதார்த்தமாக அமைந்திருப்பதை பார்த்திருக்கிறோம். இந்த படத்திலும் அதே எதார்த்தத்தை பதிவு செய்திருக்கிறார்.

நெல்லை சிவா - ஷகிலா ஆகியோரின் காமெடி பெரிய அளவில் எடுபடவில்லை. மற்றபடி படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் அனைவரும் புதுமுகங்கள் என்பதால் அவர்களிடமிருந்து பெரிதாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை.
இயக்குனர் ரா.ஆனந்த் அம்மா பாசம், அதனூடே காதல் இரண்டும் கலந்து ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். படத்திற்கு பெரிய பலமே வசனங்கள்தான். வசனங்கள் ஒவ்வொன்றும் அழுத்தமாக அமைந்திருக்கிறது. மற்றபடி, திரைக்கதையில்தான் படத்தை ரசிக்க முடியாமல் செய்திருக்கிறார். அதேபோல், ஒருசில காட்சிகள் தமிழ் சினிமாவில் திரும்ப திரும்ப பார்த்து சலித்துப்போன காட்சிகளாகவே வருவதால், பெரிதாக ஈர்ப்பு இல்லை.
ஜீவனின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ரா.ஆனந்தின் ஒளிப்பதி பரவாயில்லை ரகம்தான்.
மொத்தத்தில் ‘செவிலி’ பாசப்பிணைப்பு.

விஜய் சந்தர் இயக்கத்தில் நடிகர் விக்ரம்-தமன்னா நடிக்கும் படம் குறித்த புதிய தகவல் இன்று வெளியாக உள்ளது. அது என்னவென்பதை கீழே பார்போம்.
நடிகர் விக்ரம் ஒரே நேரத்தில் `துருவ நட்சத்திரம்', விஜய் சந்தர் இயக்கும் பெயரிடப்படாத படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் கவுதம்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் பல போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் அமெரிக்காவில் தீவிரமாக நடைபெற்றும் வருகிறது. இதில் விக்ரம் ‘பெப்பர் அன்ட் சால்ட்’ தோற்றத்தில் தாடியுடன் நடிக்கிறார். மேலும் பிரித்விராஜ், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அடுத்து விஜய்சந்தர் இயக்கத்தில் வடசென்னை இளைஞனாக, தாடி இல்லாத மழித்த முகம், கருப்பு முடியுடன் விக்ரம் நடிக்கிறார். முதல் முறையாக அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஆர்.கே.சுரேஷ் வில்லனாக வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இரவு 12 மணிக்கு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. வடசென்னை சாயலில் எடுக்கப்பட்டு வரும், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து மே மாதம் முதல், ஹரியின் இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதுவரை ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகே அடுத்த படத்தில் நடிக்கும் நடைமுறையை விக்ரம் கடைபிடித்து வந்தார். இந்த ஆண்டு முதல் முறையாக ஒரே தடவை 3 படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

7 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடிக்கவிருந்த படத்தில், தற்போது விஜய் ஆண்டனி மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அது என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்.
பிரபல இயக்குநரான சீமான் தற்போது அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். `பாஞ்சாலங்குறிச்சி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சீமான், இதுவரை 5 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக அவர் இயக்கத்தில் மாதவன் நடித்த `வாழ்த்துக்கள்' திரைப்படம் வெளியானது. கடந்த 2013-ல் `நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்னர் அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் சீமான், நாம் தமிழர் கட்சியையும் நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில், மீண்டும் சினிமா பக்கம் கவனம் செலுத்த உள்ள சீமான், பாதியிலேயே விட்ட பகவலன் படத்தை மீண்டும் இயக்க முடிவெடுத்துள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டில் விஜய்யை வைத்து `பகலவன்' படத்தை இயக்கவிருந்தார். அப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், திடீரென அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

இந்நிலையில், 7 வருடங்களுக்கு பிறகு `பகலவன்' படத்தின் பணிகளை சீமான் மீண்டும் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு பதிலாக விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாக முன்பாகவே தெரிவித்திருந்தோம். இந்நிலையில், இசையமைப்பாளரிலிருந்து நடிகராக அவதாரம் எடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு விரைவில் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், அரசியலை மையமாக வைத்து மற்றொரு படம் ஒன்றையும் சீமான் இயக்க உள்ளாராம். அப்படத்திற்கு `கோபம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரபல பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து அஜித் பொன்மொழிகளுக்கு நவீன உதாரணம் என்று பாராட்டியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
வீரம், வேதாளம் ஆகிய படங்களை தொடர்ந்து அஜித் மீண்டும் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ‘விவேகம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அதைத் தொடர்ந்து இப்படத்தில் அஜித்தின் ஒவ்வொரு புகைப்படத்தையும் அப்படத்தின் இயக்குனர் சிவா வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் நேற்று இரவு விவேகம் படத்தில் உள்ள அஜித்தின் புகைப்படத்தை வெளியிட்டார். அதில், அஜித் கட்டுமஸ்தான உடம்புடன், ரொம்பவும் அழகான தோற்றத்துடன் கையில் ஒரு தற்காப்பு ஆயுதத்தை ஏந்தியபடி நடந்துவருவதுபோல் அமைந்திருந்தது.

இந்த புகைப்படத்தை பார்த்ததும் அவரது ரசிகர்கள் ரொம்பவும் குதூகலமாகியுள்ளனர். படத்தின் டீசர், டிரைலர், ஆடியோ என எதுவும் வெளியாகாத நிலையில், புகைப்படத்தை பார்த்தே இப்படத்தை பார்க்கும் ஆவல் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரபல கதாசிரியரும், பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து, அஜித்தின் இந்த தோற்றத்தை பார்த்து புகழ்ந்துள்ளார். அவர் கூறும்போது, “உடலினை உறுதி செய் - உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே போன்ற பொன்மொழிகளுக்கு தல அஜித் அவர்கள் நவீன உதாரணம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சங்கமித்ரா படத்திற்காக ஸ்ருதிஹாசன் தற்போது தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அப்படி அவர் என்னதான் செய்கிறார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’ படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படம் சரித்திர பின்னணியில் உருவாகவிருப்பதால் இப்படத்தில் நிறைய போர் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் இடம்பெறப் போவதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் நடிக்க ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இப்படத்தில் ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயினுக்கும் சண்டைக் காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், முதற்கட்டமாக ஸ்ருதிஹாசன் சண்டைக் காட்சிக்கான பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

அவருக்கு ஸ்டண்ட் கலைஞர்கள் சண்டைப் பயிற்சியை கொடுத்து வருகின்றனர். விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருக்கிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

வரலட்சுமி மீண்டும் மம்முட்டியுடன் ஒரு படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
தமிழில் போடா போடி, தாரை தப்பட்டை ஆகிய படங்களில் நடித்த வரலட்சுமி, கடந்த வருடம் மம்முட்டி நடித்த ‘கசபா’ படம் மூலம் மலையாள சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து அவருக்கு மலையாளத்தில் வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்திருந்தார். அதன்படியே, இந்த வருடம் சமுத்திரகனியின் அப்பா மலையாள ரீமேக்கில் வரலட்சுமி நடிக்க வாய்ப்பு கிட்டியது.
ஆனால், பூஜை போட்ட சில நாட்களிலேயே அந்த படத்தில் இருந்து வெளியேறுவதாக கூறிவிட்டு விலகிவந்தார். இந்நிலையில், இதை ஈடுகட்டும் விதமாக மலையாளத்தில் மீண்டும் மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வரலட்சுமி ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மம்முட்டியை வைத்து ‘ராஜாதி ராஜா’ என்ற மலையாள படத்தை இயக்கிய அஜய் வாசுதேவ் இந்த படத்தை இயக்கவிருக்கிறார். மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான ‘புலிமுருகன்’ படத்தின் கதாசிரியர் இப்படத்திற்கு கதை எழுதவிருக்கிறார். இப்படத்தில் வரலட்சுமிக்கு பதிலாக முதலில் ராய் லட்சுமியைத்தான் படக்குழுவினர் அணுகியுள்ளார். ஆனால், ஒருசில காரணங்களால் ராய் லட்சுமி நடிக்க முடியாமல் போகவே அந்த வாய்ப்பு வரலட்சுமிக்கு கிட்டியுள்ளது.
அஜய் வாசுதேவ் இயக்கத்தில் மம்முட்டி ஏற்கெனவே நடித்த ‘ராஜாதி ராஜா’ படத்தில் ராய் லட்சுமிதான் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவது தான் எழுத்தாளனுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி’ என்று சென்னையில் நடந்த பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் இரங்கல் கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேசினார்.
பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் கடந்த மாதம் 23-ந்தேதி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இவருடைய நினைவை போற்றும் வகையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள உமாபதி அரங்கத்தில் நினைவஞ்சலி கூட்டம் நேற்று நடந்தது. எழுத்தாளர் பிரபஞ்சன் தலைமை தாங்கினார். எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகித்து பேசினார்.
கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-
எழுத்துலகில் நல்லெழுத்து, வணிக எழுத்து என்று இரண்டு உள்ளது. வணிகச் சந்தையிலும் நல்லெழுத்தை எழுதியவர் அசோகமித்திரன். அவருடைய எழுத்தில் ஆரவாரமில்லை. அலங்காரங்களின் அணிவரிசையும் இல்லை. சத்தியம் மட்டும் அவர் எழுத்தில் அதிகம் இருந்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு மரணம் ஏற்படுகிறது. உடலுக்கு ஏற்படும் மரணத்தால் ஒரு மனிதன் முதல் முறை இறக்கிறான்.
அவனுக்குப் பிறகும் அவனை நினைத்துக் கொண்டே இருக்கும் சமூகத்தின் கடைசி மனிதன் இறக்கும் போது 2-வது மரணம் ஏற்படுகிறது. அசோகமித்திரனை நினைக்கும் மனிதர்கள் இன்னொரு நூற்றாண்டிலும் இருப்பார்கள். அதனால் இப்போதைக்கு அவருக்கு 2-வது மரணம் இல்லை.

நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வில் ஏற்படும் வலியை அவரைப்போல் எதார்த்தமாக எழுதியவர்கள் குறைவு. ‘கரைந்த நிழல்கள்’ என்ற நாவலில் ஒரு தயாரிப்பாளரையும், ஒரு நடிகையையும் படைத்திருக்கிறார். ‘படப்பிடிப்புக்கு வரமாட்டேன்’ என்று ஓர் இளம் நடிகை அடம் பிடிப்பாள்.
எவ்வளவோ போராடிப் பார்த்துவிட்டுக் கடைசியில் தயாரிப்பாளர், ‘தயவு செய்து வந்துவிடம்மா உன்னை இழிமொழியில் திட்ட விரும்பவில்லை, ஏனென்றால் நீ என் மகளாகக்கூட இருக்கலாம்’ என்று சொல்வார். இப்படி நகையோடு கூடிய வலியும், வலியோடு கூடிய நகையும் அவர் எழுத்தில் இழையோடிக் கொண்டு இருக்கும்.
அவரது ‘புலிக்கலைஞன்’ என்ற சிறுகதையைச் சிறந்ததாகச் சொல்வார்கள். அதைவிட அவரது ‘பிரயாணம்’ என்ற சிறுகதையைத்தான் ஆகச்சிறந்தது என்று அடையாளம் காட்டுவேன். ‘40 ஆண்டுகளாக எழுதும் என்னை எந்த அரசியல் கட்சியும் அழைக்கவில்லை, ஏனென்றால் என்னைப்போன்ற எதார்த்தவாதிகள் அரசியலுக்குத் தேவையில்லை, நாங்கள் எதிர்த்தும் கோஷம் இடமாட்டோம். அவர்களுக்கும் பயன்படமாட்டோம் என்று அரசியல்வாதிகளுக்குத் தெரிந்திருக்கிறது’ என்று அசோகமித்திரன் எழுதியிருக்கிறார்.

எழுத்தாளர் அசோகமித்திரன் இரங்கல் கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேசிய போது எடுத்தபடம்.
வாழும் போது எழுத்தாளர்களைத் திண்டாடவிடுவதும் வாழ்ந்த பிறகு கொண்டாடுவதும் எழுத்தாளனுக்குத் தரப்படும் இரண்டு தண்டனைகளாகும்.
அவருக்கு இனி பூப்போட வேண்டாம், பூஜைசெய்ய வேண்டாம். அவரைப்போன்ற எழுத்தாளர்களின் நூல்களை விமர்சனத்திற்கு இடமின்றி நூலகங்களுக்கு வாங்கி வாசிக்கச் செய்வது தான் அசோகமித்திரனுக்குச் செய்யப்படும் உண்மையான அஞ்சலி என்று கருதுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் எழுத்தாளர்கள் ரவி சுப்பிரமணியன், சசிகுமார், மொழிபெயர்ப்பாளர் தனுஷ்கோடி, பதிப்பாளர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக கவிதா முரளிதரன் நன்றி கூறினார். எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை காசி விஸ்வநாதன் முரளிதரன், இரா.தங்கதுரை உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
அசோகமித்திரனின் மகனும், பத்திரிகையாளருமான தி.ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

முன்னணி நடிகர் ஒருவர் இயக்குனர் ஒருவரின் பிடிவாதத்தால் ரொம்பவும் அப்செட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
மூன்றெழுத்து இயக்குனர் தளபதி நடிகரை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தளபதி நடிகரை வைத்து இரண்டாவது படம் பண்ணும் அளவுக்கு தன்னுடைய இமேஜ் உயர்ந்துவிட்டதாக நினைத்துவிட்ட அந்த இயக்குனரும், தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தினார். இதனால், தயாரிப்பாளர் தரப்பு தளபதியிடம் முறையிட, அப்போது எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார் அந்த நடிகர்.
ஆனால், தற்போது மீண்டும் அந்த மூன்றெழுத்து இயக்குனர் ரொம்பவும் பிடிவாதமாக ஒரு செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அந்த முன்னணி நடிகரை ரொம்பவும் அப்செட்டாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது என்னவென்றால், மூன்றெழுத்து இயக்குனரின் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை படமாக்குவதற்கு ஒட்டுமொத்த குழுவும் ராஜஸ்தான் போயிருக்கிறதாம்.

சென்னையிலேயே இவ்வளவு வெயில் வாட்டியெடுக்கும்போது, பாலைவனமான ராஜஸ்தானில் குளிரவா செய்யும். அங்கு இதைவிட அதிகமான வெயில் வாட்டியெடுத்திருக்கிறது. இதையெல்லாம் கண்ட படக்குழு கொஞ்சம் பதறிப்போக, இங்கிருந்து வேறு எங்காவது சென்று பாடலை படமாக்கலாம் என்று மூன்றெழுத்து இயக்குனரிடம் யோசனை கூறியுள்ளார்.
ஆனால், இயக்குனரோ, எவ்வளவு வெயில் இருந்தாலும் இங்குதான் பாடல் காட்சியை படமாக்கவேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறாராம். இதனால், ஒட்டுமொத்த படக்குழுவும் ரொம்பவும் அப்செட்டாகியுள்ளதாம். இது தளபதி நடிகரையும் ரொம்பவும் அப்செட்டாக்கியுள்ளதாம்.

பிரிந்து வாழும் நடிகை ரம்பாவும், அவரது கணவரும் சேர்ந்து வாழ்வதாக ஐகோர்ட்டில் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் தொடர்பான வழக்கை முடித்து வைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
‘உழவன், உள்ளத்தை அள்ளித்தா’ உள்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை ரம்பா என்ற விஜயலட்சுமி (வயது 39). இவருக்கும், இலங்கை தமிழரான இந்திரகுமாருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். திருமணத்துக்கு பின்னர், ரம்பா, கணவருடன் கனடா நாட்டில் வாழ்ந்தார். அங்கு அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து, கடந்த ஆண்டு கணவரை பிரிந்து குழந்தைகளுடன், ரம்பா சென்னை திரும்பினார். பின்னர், தன்னுடன் சேர்ந்து வாழ கணவர் இந்திரகுமாருக்கு உத்தரவிடக்கோரி சென்னை குடும்பநல கோர்ட்டில் ரம்பா வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையில், சென்னை வந்த இந்திரகுமார், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ‘என்னுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக குடும்பநல கோர்ட்டில் ரம்பா வழக்கு தொடர்ந்தாலும், இதுதொடர்பான சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுக்கிறார். மேலும், என் மகள்களை பார்க்க கடந்த டிசம்பர் மாதம் 23-ந் தேதி சென்னை வந்தேன். ஆனால், இதுவரை மகள்களை பார்க்க முடியவில்லை. என்னுடைய இரு மகள்களும் கனடா நாட்டில் பிறந்ததால், அவர்கள் அந்நாட்டின் குடிமக்கள். அதனால், மகள்களை என்னிடம் ஒப்படைக்கும்படி ரம்பாவுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, அனிதா சுமந்த் ஆகியோர், ‘இது குடும்ப பிரச்சினை என்பதால், ரம்பாவும், இந்திரகுமாரும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும். இருவருக்கும், சமரச பேச்சுவார்த்தை நடத்தும் நபராக மூத்த வக்கீல் ஜவாத் என்பவரை நியமிக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை ரம்பாவும், அவரது கணவர் இந்திரகுமாரும் நேரில் ஆஜரானார்கள்.
அவர்களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது, தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொண்டதாகவும், இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறினார்கள். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

வாலி கஷ்டப்பட்ட காலத்தில் கண்ணதாசனின் உதவியாளராக வேலை பார்க்கக்கூடிய வாய்ப்பு வந்தது. அதை ஏற்க வாலி மறுத்துவிட்டார்.

"நல்லவன் வாழ்வான்'' படத்துக்குப் பிறகு, அண்ணா கதை, வசனம் எழுதி, ப.நீலகண்டன் இயக்கிய "எதையும் தாங்கும் இதயம்'' படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.
"உன் அன்னை முகம் என்றெண்ணி - நீ என்னை முகம் பார்க்கின்றாய்! என் பிள்ளை முகம் என்றெண்ணி - நான் உன்னை முகம் பார்க்கின்றேன்'' என்பதுதான் அந்தப்பாடல்.
கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் நடித்த படம் இது.
இந்தப் படத்துக்குப் பிறகும் வாலிக்குப் பெரிய வாய்ப்பு எதுவும் வரவில்லை.
வாலி சிரமப்படும் போதெல்லாம் அவருக்கு உதவி செய்த சிலருள் இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் ஒருவர்.
ஒரு நாள் அவர் திடீரென்று வாலியைத் தேடி வந்தார்.
"வாலி! இனிமே நீ இரண்டு வேளை வயிறாரச் சாப்பிடலாம். உனக்கு மாதம் 300 ரூபாய் கிடைக்கிற மாதிரி ஒரு ஏற்பாடு பண்ணிட்டேன்... ஏறு, என் வண்டீல...'' என்று கையைப்பிடித்து இழுத்தார்.
"அண்ணே, எனக்கு ஆபீஸ் வேலை வேணாம்ணே.... பாட்டு எழுதற வேலைதான் வேணும்!'' என்று வாலி சொன்னார்.
"பாட்டு எழுதுற வேலைதாண்டா... கண்ணதாசன் பாட்டு எழுதச் சொல்லுவாரு... அதை நீ உடனே ஒழுங்காய்ப் பேப்பரில் எழுதணும். கவிஞர், உன்னை அசிஸ்டெண்டா வெச்சுக்க ஒத்துக்கிட்டாரு... உனக்கு அவர் மாதம் 300 ரூபாய் சம்பளம் தந்திடுவாரு...'' என்று வெங்கடேஷ் கூறினார்.
உடனே வாலி, "அண்ணே! கண்ணதாசன் கடைக்கு, எதிர்க்கடை விரிக்க நான் வந்திருக்கிறேன். அவர்கிட்டேயே உதவியாளனாகச் சேர்ந்தா, என் தனித்தன்மை காணாமல் போய்விடும்... டெய்லர் கிட்ட வேலைக்குச் சேர்ந்தா காலமெல்லாம் காஜாதான் எடுக்கணுமே தவிர, மெஷின்ல ஏத்தமாட்டாங்க...'' என்றேன்.
ஜி.கே.வி.யின் முகம் சிவந்து போயிற்று.
"நீ உருப்படமாட்டேடா'' என்று கோபமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
இதுகுறித்து வாலி எழுதியிருப்பதாவது:-
"கண்ணதாசனின் கீழ் பணியாற்றுவது கேவலம் என்று நான் எண்ணவில்லை. அது எள் முனையளவு கூட, என் முன்னேற்றத்திற்கு உதவாது என்பதால்தான் அந்த வாய்ப்பை நான் விலக்கினேன்.
ஒரு கவிஞன் தனக்கென்று -ஒரு முகவரியோடு இருத்தல் மிகமிக அவசியமானது. நம்மிடம் இருக்கும் தமிழ், நயாபைசா அளவுதான் என்றிருந்தாலும்கூட... அதை ரூபாயாக்கி முன்னேற வேண்டும் எனும் முனைப்பு இல்லாது போயின் நமக்கென்று ஒரு ஸ்தானத்தை சமூகம் வழங்காது.
விஸ்வநாதன் -ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் இவர்களது முக தரிசனமே கிட்டாத நிலையில், கோடம்பாக்கம் ஒரு தொலைதூரக் கனவாகவே ஆகிவிட்டது எனக்கு. தந்தை மறைந்து போனார்; தாயோ பம்பாயில் நோய்ப்படுக்கையில் இருக்கிறாள். எனக்காக நானே அழுது கொள்ள வேண்டுமே தவிர, ஈரம் துடைப்பார் எவருமில்லை.
இந்த லட்சணத்தில் சினிமாவை விடாமல் பிடித்துக்கொண்டு தொங்குவது, புத்திசாலித்தனமல்ல என்று புரிந்து கொண்டேன்.
மதுரையில் டி.வி.எஸ். அலுவலகத்தில் மிகப்பெரிய பதவியில் என் நண்பர் ஒருவர் இருந்தார். அவருக்கு வேலை கேட்டு ஒரு லெட்டர் எழுதினேன்.
அடுத்த வாரமே வந்து வேலையில் சேரச் சொல்லி அவர் பதில் எழுதியிருந்தார்.
சென்னைக்கு ஒரு பெரிய வணக்கத்தைப் போட்டுவிட்டு, மதுரைக்குப் போய்விடலாம் என்று முடிவு கட்டினேன்.
கைவசம் இருந்த நீலப் பெட்டியையும், சிகப்பு ஜமுக்காளத்தையும் தூக்கி கொண்டு மறுநாள் மதுரைக்கு புறப்பட இருந்தேன்.
அப்போதுதான் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் என் அறைக்கதவை தட்டினார்.
ஊரைவிட்டே நான் போவதாக இருக்கும் விஷயத்தை அவரிடம் சொல்லாமல், "சமீபத்தில் நீங்கள் பாடின நல்ல பாட்டு ஏதாவது இருந்தால் பாடிக்காட்டுங்க...'' என்று சொன்னேன்.
அவர் சிறிது சிந்தித்துவிட்டு வெளியாக இருக்கும், `சுமை தாங்கி' என்னும் படத்தில், கண்ணதாசன் எழுதி, விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருந்த ஒரு பாடலை முழுவதும் எனக்குப் பாடிக் காண்பித்தார்.
பாட்டு வரிகள் என் செவியில் பாயப்பாய, மதுரைக்குப் பயணமாவதை ரத்து செய்து, சென்னையிலேயே தங்கிவிடுவது என்று முடிவு கட்டினேன்.
ஆம்! ஒரு சினிமாப்பாட்டு என் திசையை மாற்றியது; என் எதிர்காலத்தை நிர்ணயித்தது. நான் தொடர்ந்து போராடுவதற்கான தெம்பையும், தெளிவையும் என்னுள் தோற்றுவித்தது. சோர்ந்து போன என் சுவாசப் பையில் பிராண வாயுவை நிரப்பி, எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்து என்னைப் புதுமனிதனாக்கியது.
`சுமை தாங்கி' படத்தில் இடம் பெற்று பின்னாளில் மிகமிகப் பிரபலமான அந்தப்பாடல், கண்ணதாசன் எனக்குச் செய்த கீதோபதேசமாகவே அமைந்தது.
எந்தத் துறையிலும் முட்டி மோதி முயற்சித்து முன்னுக்கு வரமாட்டாது, மனதொடிந்த எவரும் இந்தப் பாட்டை மந்திரம் போல் மனனம் செய்யலாம். அவ்வளவு அருமையான, ஆழமான, அர்த்தமான - அதே நேரத்தில் மிகமிக எளிமையான பாடல்.
பாடல் இதுதான்:
`மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
`வாழ்க்கையென்றால் ஆயிரமிருக்கும்;
வாசல் தோறும் வேதனையிருக்கும்;
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை;
எதையும் தாங்கும் இதயமிருந்தால் -
இறுதிவரைக்கும் அமைதியிருக்கும்!'
`ஏழை மனதை மாளிகை யாக்கு;
இரவும் பகலும் காவியம் பாடு;
நாளைப் பொழுதை இறைவனுக் களித்து,
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு;
உனக்கும் கீழே உள்ளவர் கோடி -
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!'
கண்ணதாசன் எழுதிய இந்த பாடலை, வரி வரியாக மனதிற்குள் சொல்லிப் பாருங்கள். வாழ்க்கையின் உண்மை விளங்கும்.
இவ்வாறு வாலி கூறியுள்ளார்.
வாலி சென்னைக்கு வந்து ஐந்தாண்டுகள் ஆகியிருந்தும், அதுவரை கண்ணதாசனை சந்திக்கவில்லை. அவரை உடனே சந்திக்க வேண்டும் என்று ஆவல் எழுந்தது.
அதன்படி, அடுத்த நாளே சென்று கண்ணதாசனை சந்தித்தார்.

ரத்தன் மௌலி, நாயனா நாயர் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அரசகுலம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
நாயகன் ரத்தன் மௌலி படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றி வருகிறார். இவருடைய அப்பா அந்த ஊரிலேயே பெரிய மனிதராக வலம் வருகிறார். அதேஊரில் டீச்சராக பணிபுரியும் ராஜஸ்ரீ, தனது மகளான நாயகி நாயனா நாயரை மிகவும் கண்டிப்புடன் வளர்த்து வருகிறார்.
ஒருநாள் வாகனத்தில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நாயகனும் நாயகியும் ஒருகட்டத்தில் காதலர்களாகிறார்கள். இவர்களுடைய காதல் ராஜஸ்ரீக்கு தெரியவரவே, இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால், நாயகனோ தனது வீட்டாரை சென்று ராஜஸ்ரீயிடம் நாயனாவை பெண் கேட்க செல்ல, பிறகு ராஜஸ்ரீ சம்மதிக்கிறார்.

இதற்கிடையில், நாயகன் தனது நண்பனின் காதலை சேர்த்து வைக்கிறார். வேறு ஜாதி பையனை திருமணம் முடித்ததால் பெண்ணின் அப்பா, இதுகுறித்து நாயகனின் அப்பாவிடம் முறையிடுகிறார். நாயகனின் அப்பா தனது மகன் செய்ததும் சரிதான் என்று தீர்ப்பு சொல்ல, அந்த பெண்ணின் அப்பாவுக்கு நாயகனின் அப்பா மீது பகை உருவாகிறது.
ஏற்கெனவே, நாயகனின் அப்பா மீது பகையில் இருக்கும் ராஜசிம்மாவுடன் அந்த பெண்ணின் அப்பாவும் சேர்ந்துகொண்டு, நாயகனையும், அவரது அப்பாவையும் தீர்த்துக்கட்ட நினைக்கிறார்கள். மறுமுனையில், ரத்தனுக்கும், நாயனாவுக்கும் திருமண பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும்போது, நாயகனின் வீட்டில் உள்ள ஆல்பத்தில் இருக்கும் ஒருவருடைய புகைப்படத்தை பார்த்ததும், ராஜஸ்ரீ இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறாள்.

அந்த புகைப்படத்தில் இருந்தது யார்? எதற்காக ராஜஸ்ரீ இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறாள். எதிரிகளிடம் இருந்து நாயகனும், நாயகனின் அப்பாவும் தப்பித்தார்களா? காதலர்கள் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் ரத்தன் மௌலி இளமை துள்ளலுடன் படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். ரொமான்ஸ், ஆக்ஷன் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் வேண்டும். நாயகி நாயனா நாயர் முகத்தில் ரொம்பவும் முதிர்ச்சி தெரிகிறது. நடிப்பில் ஓ.கே. ரகம்தான்.

நாயகனின் அப்பாவாக வருபவர் பெரிய மனிதராக பளிச்சிடுகிறார். வீட்டில் உள்ளவர்களுடன் நட்பாக பழகும் காட்சிகள் எல்லாம் ரசிக்கும்படி இருக்கிறது. ராஜஸ்ரீ, தனது அனுபவ நடிப்பில் கவர்கிறார். கொடுமைக்கார தாயாக இவர் நடிக்கும் காட்சிகளில் நமக்கே அவருக்கு மேல் கோபம் வருகிறது. அந்தளவுக்கு எதார்த்தமாக தனது நடிப்பை பதிவு செய்திருக்கிறார். வில்லனாக வரும் ராஜசிம்மா பார்வையால் மிரட்டியிருக்கிறார்.
இயக்குனர் குமார் மாறன் யாரை திருப்திபடுத்துவதற்காக இந்த படம் எடுத்தார் என்றே தெரியவில்லை. இந்த படத்தில் நடித்தவர்களை குறைகூறுவதைவிட, இந்த படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கிய இவரைத்தான் நிறைய குறை கூறவேண்டியிருக்கிறது. இந்த படத்தில் நடித்தவர்கள் எல்லாம் இவர் சொன்னதை செய்துவிட்டு போயிருக்கிறார்கள். ஆனால், இவர் கதையில் என்ன சொல்ல வருகிறார் என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை. படத்தின் இறுதிவரைக்கும் படத்தின் கதை என்னவென்பதை நாம் தேட வேண்டியிருக்கிறது.

எஸ்.சந்திரசேகரின் ஒளிப்பதிவு பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல் இருக்கிறது. வேலன் சகாதேவனின் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையும் பெரிய அளவில் எடுபடவில்லை. ஒட்டுமொத்தத்தில் இந்த படத்திற்காக கஷ்டப்பட்ட அனைவரின் உழைப்பையும் இயக்குனர் வீணடித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
மொத்தத்தில் ‘அரசகுலம்’ நாசம்.