என் மலர்
மணிரத்னம் தன்னை எப்போதும் கட்டாயப்படுத்த மாட்டார் என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 வருடங்களாக இயக்குனர் மணிரத்னமும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இணை பிரியாமல் ஒன்றாக பயணித்து வருகிறார்கள். இவர்கள் கூட்டணியில் தற்போது உருவாகியிருக்கும் ‘காற்று வெளியிடை’ படம் வருகிற ஏப்ரல் 7-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், மணிரத்னம்-ஏ.ஆர்.ரகுமானின் 25 வருட பயண அனுபவம் குறித்து ஏ.ஆர்.ரகுமான் மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, அந்த காலக்கட்டத்தில் இயக்குநர் மணியின் படங்களை அதிகமாக பார்ப்பேன். முதன்முதலில் அவருக்காக இசையமைக்கும்போது என்னை நானே பல கேள்வி கேட்டுகொண்டேன். எந்த லெவலுக்கு வேலை செய்யவேண்டும். ஒரு ரசிகனாக அவரின் படத்திற்கு எவ்வாறு இசையமைக்கலாம் என எண்ணினேன். அவரும் அவரின் விருப்பதை தெரிவிப்பார்.

எங்களுடைய கூட்டணியில் நிறைய லவ் ஸ்டோரி படங்கள்தான் அமைந்துள்ளது. அதற்கு மூன்று விஷயம் முக்கியம். நேரம், பணம், தரம். இது அனைத்தும் எங்களுக்கு கிடைத்தது. இதுவே நான் காரணம் என நினைக்கிறன். மேலும் ஒரு கட்டாயம் இருக்காது. 5 நாட்களில் பாடல் வேண்டும் என்று கூறமாட்டார். இலக்கை எவ்வாறு அடையலாம் என்ற எண்ணம் மட்டும்தான் இருக்கும். மணி அவர்கள் என்னிடம் ‘ரோஜா’ படத்திற்கு முன்பு சந்திக்கும்போது நீங்கள் ராஜாவுடன் இசையமைத்தீர்கள். உங்களிடம் தரமான இசை உள்ளது என கூறினார். அப்போது நான் எப்படி இசைபோடலாம் என தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். பிறகு 5 வருடம் கழித்து வாழ்கையில் மாற்றம் ஏற்படுவதை உணரமுடிந்தது.
காற்று வெளியிடை படம் மூலம் நாங்கள் மீண்டும் எங்களது பெஸ்டை கொடுத்துள்ளோம். இனி மக்கள் தான் படத்தை பற்றிய கருத்தை முடிவு செய்ய வேண்டும். எங்களுக்குள் தனிபட்ட விதத்தில் எந்த போட்டியும் பொறாமையும் கிடையாது. இசை என்பது ஒரு கலை. ஒரு சில படங்களில் பாடல் தான் படத்தை முடிவு செய்யும். அதனால்தான் நாங்கள் அதற்கான முயற்சி செய்கிறோம் என்றார்.
பல இசையமைப்பாளர்கள் தற்போது நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். உங்களுக்கு அந்த எண்ணம் இருக்கிறதா? என்று கேட்டதற்கு மெல்லிய குரலில் வயசாகிறது என்று சிரித்துக்கொண்டே விடைபெற்றார்.

விஷால்-கார்த்தியும் இணைந்து நடிகர் சங்கத்திற்காக ஒரு படம் பண்ணப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது உண்மைதானா? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால்-கார்த்தி ஒரே அணியில் நின்று வெற்றி பெற்றனர். நடிகர் சங்கத்துக்காக புதிய கட்டிடம் கட்டும் பணிக்காக இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்துக் கொடுத்து, அதில் வரும் பணத்தை நடிகர் சங்கத்தின் கட்டிடத்துக்காக கொடுக்கப்போவதாகவும் கூறினர்.
அதற்கான நேரம் தற்போது கைகூடி வந்துள்ளது. அதாவது, விஷாலும் கார்த்தியும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கு ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்று தலைப்பு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வரும் ஜுன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் கதாநாயகியாக சாயிஷா ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இவர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிவரும் ‘வனமகன்’ படத்தின் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால் - கார்த்தி இருவரும் இணைவது உறுதியாகிவிட்டாலும், இவர்கள் இணைவது நடிகர் சங்கத்திற்குதானா? என்பது மட்டும் இன்னும் உறுதியாகவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல் இனி எப்படி சம்பாதிக்கப் போகிறார் என்று கவலையுடன் ரஜினி பேசியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
நடிகர் கமலின் சகோதரர் சந்திரஹாசன் சமீபத்தில் லண்டனில் காலமானார். அவருக்கு இரங்கல் கூட்டம் இன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில், கமல், ரஜினி, சாருஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது ரஜினி பேசும்போது,
கமலை பெற்ற சீனிவாசன், அவரை வளர்த்த சாருஹாசன், அவரை ஆளாக்கிய சந்திஹாசன் என கமலுக்கு மூன்று தந்தைகள். நான் சந்திரஹாசனை இரண்டொரு முறைதான் சந்தித்திருக்கிறேன். ஆனாலும், அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன்.

கமல் பொருளாதார ரீதியாக எதுவும் சேர்த்து வைக்கவில்லை. அப்படியிருந்தும் அவர் சேர்த்து வைத்திருக்கிறார் என்றால் அது சந்திராஹாசனால்தான். அவர் இல்லாமல் இனி எப்படி கமல் தான் சேர்த்து வைத்திருக்கும் சொத்தை காப்பாற்ற போகிறார், எப்படி சம்பாதிக்கப் போகிறார் என்பதுதான் என்னுடைய கவலை.

கமல் மிகப்பெரிய கோபக்காரர். அவருடைய 10 சதவீத கோபத்தைத்தான் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். நான் அவருடைய 100 சதவீத கோபத்தை பார்த்திருக்கிறேன். அதனால்தான், அவரிடம் நாம் எப்போதும் எச்சரிக்கையாக இருப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக நந்தினியின் கணவர் 3 பேருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
டி.வி. தொடர்களில் நடித்து பிரபலமானவர் நந்தினி. ‘வம்சம்’ படத்தில் அறிமுகமான இவர் பல படங்களில் நடித்தார். தொடர்ந்து டி.வி. தொடர் களில் நடித்து வருகிறார்.
வளசரவாக்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (30). தியாகராயநகரில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தார். இங்கு உடற்பயிற்சி செய்வதற்கு வந்த நந்தினி, கார்த்திகேயன் இருவரிடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். கார்த்திகேயன் ஏற்கனவே திருமணம் ஆனவர். முதல் மனைவி இறந்துவிட்டார்.
ஆரம்பத்தில் நந்தினி, கார்த்திகேயன் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக தான் சென்றது. பின்னர் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்த நந்தினி அவருடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனால் மனம் உடைந்த கார்த்திகேயன் உடற்பயிற்சி கூடத்தை விற்றுவிட்டார். விருகம்பாக்கத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இறக்கும் போது கார்த்திகேயன் எழுதி வைத்துள்ள கடிதத்தில் தனது தற்கொலைக்கு காரணம் நந்தினியின் தந்தை தான் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் தனது சகோதரி ரம்யாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘அம்மாவை நீ பார்த்துக்கொள். இத்தனை நாள் பிணமாக வாழ்ந்தேன். இனிமேல் வாழ பிடிக்கவில்லை . என் கவுரவம், மரியாதை போய்விட்டது. என் இறுதி ஆசை, முதல் மனைவி வெண்ணிலாவை புதைத்த இடத்தின் அருகே என்னை புதைத்துவிடு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

போலீசுக்கு கார்த்தி கேயன் எழுதி இருக்கும் கடிதத்தில் ‘என் மரணத்துக்கு காரணம் என் மாமனார் ராஜேந்திரன் தான். அவர் பணத்துக்காக என்னையும் என் மனைவியையும் பிரித்து விட்டார். நான் மனைவியுடன் பேச முயற்சி செய்தேன். ஆனால் என்னை அவர் தடுத்து விட்டார். இதனால் நான் மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கிறேன்.
என் மாமனாரிடம் எவ்வளவோ பேசியும் அவர் என் பேச்சை கேட்கவில்லை. எங்கள் இருவரிடமும் கருத்து வேறுபாடு ஏற்பட வைத்து என்னை பயங்கர மன உளைச்சல் அடைய செய்துவிட்டார்.நான் சாக முழுகாரணம் என் மாமனார் ராஜேந்திரன் தான்’ என்று கார்த்திக் கூறியுள்ளார். மனைவி நந்தினிக்கும் கார்த்திகேயன் ஒரு கடிதம் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.
கணவர் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டது குறித்து நந்தினி கூறியதாவது:-

நானும் கார்த்தி கேயனும் ஒருவருடம் காதலித்து திருமணம் செய்து கொண் டோம். அவர் என்னைவிட, என் பணத்தை தான் அதிகம் விரும்பினார். திருமணத்துக்கு பிறகு தான் அது எனக்கு தெரிந்தது. என்னுடைய நகைகளை அவருடைய வீட்டார் வாங்கி வைத்துக்கொண்டனர்.
அவருக்கு இன்னொரு பெண்ணுடனும் தொடர்பு இருந்திருக்கிறது. அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். அந்த வழக்கில் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். இந்த விஷயத்தை எனது குடும்பத்தினரிடம் கூட சொல்லவில்லை. இது மட்டுமல்ல அவர், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.80 லட்சம் வரை மோசடி செய்து இருப்பதும் எனக்கு தெரிய வந்தது.
இது தொடர்பாக அவருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பணம் கொடுத்தவர்கள் அந்த பணத்தை திரும்ப தரும்படி வற்புறுத்தினார்கள். இதனால் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து எனது பெற்றோர் என்னை அவர்களுடைய வீட்டுக்கே அழைத்து சென்று விட்டனர்.

என்றாலும், கார்த்தி கேயனை மனதில் காதலித்துக் கொண்டுதான் இருந்தேன். அவரை விட்டுப்பிரிய மனம் இல்லை. இந்த பணப் பிரச்சினையை தீர்த்துவிட்டு வந்தால் நாம் சேர்ந்து வாழ லாம் என்று சொன்னேன். அம்மா வீட்டில் இருந்தாலும் அடிக்கடி அவரை சந்தித்து வந்தேன்.
பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி தருவதாகவும், தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருப்பதாகவும், மனம் நொந்த நிலையில் என்னிடம் கூறினார். அவருக்கு ஆறுதல் கூறினேன்.
அவ்வப்போது செலவுக்கு பணம் கொடுத்து வந்தேன். இந்த நிலையில்தான் திடீரென்று அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை. இவ்வாறு நந்தினி கூறினார்.
கார்த்திகேயன் தற்கொலை குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சகோதரர் எப்படி இருக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்தவர் சந்திரஹாசன் என்று இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் கமல் உருக்கமான பேசினார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், வக்கீலுமான சந்திரஹாசன் கடந்த மாதம் மார்ச் 19-ந் தேதி லண்டனில் உள்ள தனது மகள் அனுஹாசன் வீட்டில் காலமானார். இந்நிலையில், சந்திரஹாசனின் மறைவுக்கு இன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
இதில், கமல், ரஜினிகாந்த், சாருஹாசன், அனுஹாசன், அக்ஷராஹாசன், சுஹாசினி, ராம்குமார், கே.எஸ்.ரவிக்குமார், கிரேஸி மோகன், மௌலி, பிரமிட் நடராஜன், லிசி, அம்பிகா, ரோகிணி, புஷ்பா கந்தசாமி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.

அப்போது கமல் பேசும்போது, என்னுடைய நினைவுக்கு தெரிந்து சந்திரஹாசனின் அறிவுரை இல்லாமல் நான் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும். இதை நான் இரங்கல் கூட்டமாக நினைக்கவில்லை, ஒரு விழாவாகத்தான் நினைக்கிறேன். மூன்றரை வயதில் நான் சினிமாவுக்கு வந்தேன். எனது அண்ணன்தான் எனக்கு பலம். சகோதரர் எப்படி இருக்கவேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்தவர் சந்திரஹாசன். ஒரு சகோதரனாக இருப்பதுகூட பெரிய பொறுப்புதான்.
சந்திரஹாசன் யாரையும் சத்தமாக அழைக்கமாட்டார். சுருக்கமாகவும், அதை நேரத்தில் மரியாதையாகவும் பேசுவார். பிச்சைக்காரர்களைக்கூட ஒருமையில் பேசியது கிடையாது. அந்தளவுக்கு மரியாதையானவர். அவரிடமிருந்துதான் நானும் மரியாதையை கற்றுக்கொண்டேன்.

ஸ்டார் ஹோட்டலில் தங்கமாட்டார், அவருடைய துணியை அவரேதான் துவைத்துக் கொள்வார். அந்தளவுக்கு எளிமையானவர். அவரிடம் நான் கற்றுக் கொண்டது ஏராளம். என்னுடைய சோம்பேறித்தனத்தால் நிறைய கற்றுக்கொள்ளாமல் இருந்துவிட்டேன். இனி அதை பின்பற்ற முயற்சி செய்கிறேன்.
அண்ணன் இல்லாத வாழ்க்கை எனக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், அதை தாங்குவதற்கான பயிற்சியை எனக்கு கொடுத்துவிட்டு சென்றுள்ளார். பிறப்பு, இறப்பு என்பது அனைவருக்கும் உண்டு. ஆனால், எப்படி இருந்தோம், மற்றவர்கள் சொல்லும்படி எப்படி வாழ்ந்து காட்டினோம் என்பதுதான் பெரிய விஷயம். என்னால் அதையெல்லாம் செய்யமுடிகிறதா? என்று பார்ப்போம்.
சந்திரஹாசன் என்றும் எனது நிழலாக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால், இயற்கை அவரை எடுத்துக்கொண்டது. இருந்தாலும், என்னுள் ஒரு பாகமாக அவர் கலந்துவிட்டார். சந்திரஹாசனின் குரல் எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும். அதுதான் என்னை வழிநடத்தும்.

இந்தி பட உலகின் முன்னணி ஹீரோயின் தீபிகா படுகோனே, நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியை கீழே பார்ப்போம்.
இந்தி பட உலகின் முன்னணி ஹீரோயின் தீபிகா படு கோனேவிடம் அவர் மனம் திறந்து அளித்த பேட்டி....
“நான் சிவப்பாக மாற சிகிச்சை செய்து கொண்டதாக யாரோ சொல்கிறார்கள். எனக்கே தெரியாமல் அது என்ன சிகிச்சை என்பது அதிசயமாக இருக்கிறது.
நான் மாடலிங் செய்து வாங்கிய முதல் சம்பளம் ரூ3 ஆயிரத்து 500. பெங்களூரில் நடந்த ‘பேஷன் ஷோ’ ஒன்றில் ஒய்யாரமாக நடந்து வந்தேன். அதற்கு வெகுமதியாக அது கிடைத்தது.

நான் பார்த்தவர்களில் மிகவும் பிரபலமானவர் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். நான் சமீபத்தில் பார்த்து என்னை அழ வைத்த படங்கள், ‘லாலா லேண்ட்’, ‘மான்செஸ்டர் பைத சீ’, ஆகியவை” என்றார்.
இறப்பதற்கு முன்பு நீங்கள் செய்ய விரும்பும் முக்கியமான காரியம் என்ன என்று தீபிகா படுகோனேவிடம் கேட்ட போது, “நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளவேண்டும். அதைத்தான் நான் விரும்புகிறேன்” என்று கூறி அதிசயப்பட வைத்திருக்கிறார்.

அமெரிக்காவில் காணாமல் போன தனது பாஸ்போர்ட்டுக்கு பதிலாக 24 மணி நேரத்துக்குள் மாற்று பாஸ்போர்ட் பெற்று தந்த இந்திய தூதரகத்துக்கு பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நன்றி தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு அவரது கைப்பை திருட்டு போனதாக செய்திகள் வெளியானது.
பாஸ்போர்ட் களவுப் போனது குறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடனடியாக இந்திய தூதரகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, தூதரக அதிகாரிகளின் துரித முயற்சி மற்றும் நடவடிக்கைகளால் அவருக்கு உடனடியாக மாற்று பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.
இதற்காக இந்திய தூதரகத்துக்கு தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நன்றி தெரிவித்துள்ளார்.
‘எஸ்.பி.பி.-50’ என்ற பெயரில் அமெரிக்கா முழுவதும் எனது இசைப் பயணத்துக்கு வடிவம் தந்து, ஏற்பாடு செய்த எனது மகன் எஸ்.பி.பி. சரண், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், விளம்பரதாரருமான ராஜேஷ், உள்ளூர் ஸ்பான்சர்கள், எனது அன்புக்குரிய இசைக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் துணைப் பாடகியர்கள் சித்ரா, ஷைலஜா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

என்னுடைய பாஸ்போர்ட், கிரெடிட் கார்டுகள், ரொக்கப் பணம், ஐபேடுகள் மற்றும் பாடல்களுக்கான குறிப்புகள் வைக்கப்பட்டிருந்த எனது கைப்பை காணாமல் போனது. இதையடுத்து, 24 மணி நேரத்துக்குள் எனக்கு மாற்று (டூப்ளிகேட்) பாஸ்போர்ட் பெற்றுத்தந்த அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் பார்வதி, விஜயலட்சுமி ஆகியோருக்கு எனது நன்றி!.
இந்தியாவின் பெருமைக்குரிய இந்துஸ்தானி இசைப் பாடகி கிஷோரி அமோன்கர் காலமான செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கு நல்ல இளைப்பாறுதலை தருமாறு சரஸ்வதி தேவியை பிரார்த்திக்கிறேன்.
ஆந்திர அரசின் பெருமைக்குரிய என்.டி.ராமாராவ் பெயரிலான விருதுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக ஆந்திர மாநில அரசுக்கும், இவ்விருதுக்கான நடுவர்கள் குழுவுக்கும், குறிப்பாக நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
திரை இசை உலகில் எனது வழிகாட்டியான திருமதி. எஸ். ஜானகி அவர்கள் தனது இசைப் பயணத்தில் 60 ஆண்டுகளை இன்றுடன் (நேற்று) நிறைவு செய்துள்ளார். அவர் மேலும் மேலும் பாடுவதற்கான உடல் நலத்தை அருளுமாறு எல்லாம் வல்ல தெய்வத்தை வணங்குகிறேன்’ என தனது பதிவில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

தனது அண்ணனான கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள படத்தின் பாடல் உரிமையை யுவன் ஷங்கர் ராஜா கைப்பற்றி உள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
தேனி மாவட்டத்தில் உயிர்ப்போடு வாழும் ஒரு கிராமமும், அதன் மண்சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையுமாக உருவாகி வரும் படம் `படைவீரன்'. பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அம்ரிதா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கின்றார்.
இப்படத்தை இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்த தனா என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இயக்குனர் இமயம் பாரதிராஜா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் `கல்லூரி' அகில், கலையரசன், இயக்குநர் விஜய்பாலாஜி, இயக்குநர் மனோஜ் குமார், நித்தீஷ், இயக்குநர் கவிதா பாரதி, கன்யா பாரதி, `தெய்வம் தந்த வீடு' நிஷா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ராஜவேல் மோகன் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

கார்த்திக் ராஜா இசைமைத்துள்ள இப்படத்தின் இசை உரிமையை யுவன் ஷங்கர் ராஜா தனது `யு 1 ரெக்கார்ட்ஸ்' மூலம் கைப்பற்றி உள்ளார். முன்னதாக `8 தோட்டாக்கள்', `குரங்கு பொம்மை' உள்ளிட்ட பங்களின் இசை உரிமையை யுவன் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் `படைவீரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இவோக் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மதிவாணன் இப்படத்தை தயாரிக்கிறார்.

முன்னாள் கணவரான டெலிவிஷன் நடிகர் கிஷோர் சத்யா என் வாழ்க்கையை நாசமாக்கி விட்டார் என்று நடிகை சார்மிளா புகார் கூறினார். இதனை மறுத்த கிஷோர் தன்மீது குற்றம் சாட்டும் சார்மிளா போதைக்கு அடிமையானவர் என்று கூறியுள்ளார்.
ஒயிலாட்டம், கிழக்கே போகும்பாட்டு, முஸ்தபா, நான், இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளவர் சார்மிளா. மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். முன்னாள் கணவர் தனது வாழ்க்கையை நாசமாக்கி விட்டதாக அவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து சார்மிளா அளித்துள்ள பேட்டி வருமாறு:-
“நான், ‘கடல்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருந்தபோது நடிகர் பாபு ஆண்டனியுடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் காதல்வயப்பட்டோம். பின்னர் திருமணம் செய்துகொள்ளாமலே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தோம். ஒரு கட்டத்தில் அவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் மன அழுத்தத்துக்கு உள்ளானேன். அதன் பிறகு டெலிவிஷன் தொடர்களில் நடித்த கிஷோர் சத்யாவுக்கும் எனக்கும் நெருக்கம் ஏற்பட்டது.

இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டோம். சில நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்று தடைபோட்டார். இதனால் சினிமாவை விட்டு ஒதுங்கும் நிலைமை ஏற்பட்டது. அப்போது விக்ரமுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. அதிலும் நடிக்க முடியவில்லை.
அதன்பிறகு என்னை பிரிந்து அவர் ஷார்ஜா சென்று விட்டார். சில வருடங்கள் கழித்து நானும் ஷார்ஜாவுக்கு சென்றேன். அங்கு அவருடன் சேர்ந்து வாழ்ந்தேன். அப்போது அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. பிரபலமாவதற்காகவே என்னை அவர் மணந்தார் என்று புரிந்துகொண்டேன். அவரால் எனது வாழ்க்கையே நாசமாகி விட்டது.”
இவ்வாறு சார்மிளா கூறினார்.
இதற்கு நடிகர் கிஷோர் சத்யா பதில் அளித்துள்ளார் அவர் கூறியதாவது:-

“சார்மிளா ஒருபோதும் எனக்கு மனைவியாக வாழ்ந்தது இல்லை. மனம் ஒத்துப்போனால்தான் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆனால் எங்களுக்குள் அது இருந்ததே இல்லை. அடிவாரம் படப்பிடிப்பில் சார்மிளா மன அழுத்தத்தில் இருந்தார். அவரை சகஜ நிலைக்கு கொண்டுவர நானும், படக்குழுவினரும் உதவினோம். படப்பிடிப்பின்போது சார்மிளாவுக்கு என்மீது காதல் ஏற்பட்டது. திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினார்.
நான் திருமணத்துக்கு மறுத்தேன். உடனே தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினார். இதனால் வேறு வழியில்லாமல் சம்மதித்தேன். அப்போது எனக்கு 22 வயது. பின்னர் ஷார்ஜாவில் வேலை கிடைத்து அங்கு சென்று விட்டேன். சார்மிளாவும் அங்கே வந்து விட்டார். அதன்பிறகுதான் அவருக்கு குடிப்பழக்கமும் போதை பழக்கமும் இருந்தது எனக்கு தெரியவந்தது. அவர் போதைக்கு அடிமையாகி இருப்பதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.
இதனால் அவரை விவாகரத்து செய்யும்படி எனது பெற்றோர்கள் வற்புறுத்தினார்கள். அதன்பிறகு கேரளாவுக்கு திரும்பி வேறு பெண்ணை மணந்தேன்”.
இவ்வாறு கிஷோர் சத்யா கூறியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் `ரங்கூன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதியை கீழே பார்ப்போம்.
‘கத்தி’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்த வருகிறார். மேலும் வில்லனாக இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாயும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பரத்தும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு `ஸ்பைடர்' என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் இறுதிகட்ட பணிகளில் பிசியாக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் மற்றொரு படத்தை தயாரித்தும் வருகிறார். ஏ.ஆர்முருகதாஸ்-ன் உதவி இயக்குநரான ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் அந்த படத்திற்கு `ரங்கூன்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கவுதம் கார்த்திக் - சனா மக்புல் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு விக்ரம்.ஆர்.எச். மற்றும் அஸ்வின் ரெஞ்சு இசையமைத்து வருகின்றனர்.

பாஃக்ஸ் ஸ்டார் இந்தியா மற்றும் ஏ.ஆர்முருகதாஸ் புரொடக்ஷன் ஹவுஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தை வருகிற ஜுன் 9-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அதே மாதம் 23-ம் தேதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் மகேஸ்பாபுவின் படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தி நடிகர் வினோத் கன்னா திடீர் உடல்நலக்குறைபாடு காரணமாக மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்த செய்தியை பார்க்கலாம்.
இந்தி நடிகர் வினோத் கன்னா திடீர் உடல்நலக்குறைபாடு காரணமாக மும்பை கிர்காவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் வினோத் கன்னாவின் மகன் ராகுல் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அப்போது அவர் கூறினார்.

மதுரை ரசிகர்களிடம் தனிமரியாதை வைத்துள்ளேன் என்று நடிகர் கார்த்தி கூறினார். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை‘ சினிமா திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி அதிதீராவ் ஆகியோர் நேற்று மதுரை வந்தனர்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ‘காற்று வெளியிடை‘ சினிமாவுக்கு ஆதரவு கேட்டு ரசிகர்களிடையே இருவரும் பேசினர்.
கார்த்திக் பேசியதாவது:-
“இந்த கல்லூரிக்கு முதல் முறையாக வருகிறேன். மாணவர்களின் ஆதரவு என்னை மிகவும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த நாள் நிச்சயம் மறக்கமுடியாத நாளாக இருக்கும் என நினைக்கிறேன். ‘காற்று வெளியிடை”படம் சூப்பர்ஹிட் ஆகும் என நம்புகிறேன்.

நடிகர் கார்த்தி, நடிகை அதிதீராவ் ஆகியோருடன் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
மதுரை ரசிகர்களிடம் தனி மரியாதை வைத்துள்ளேன். இந்த படத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராணுவ வீரர்களுடன் நடித்துள்ளேன். ராணுவ வீரர்களை நீங்கள் எந்த இடத்தில் பார்த்தாலும் அவர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து சொல்லுங்கள்.”
இவ்வாறு கார்த்தி பேசினார்.
நடிகை அதிதீராவ், “அனைவருக்கும் காதல் கதை பிடிக்கும். இந்த படமும் காதல் கதைதான். எனவே வெற்றிப்படமாக ஆக்கித்தர வேண்டும்“ என்றார்.
விழாவில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள், கார்த்தியையும், அதிதீராவையும் செல்போனில் ஆர்வத்துடன் படம் எடுத்தனர்.
சிலர் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.