என் மலர்
பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
பாரத ரத்னா விருதுக்கு பிறகு இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதில், பத்ம விபூஷன் விருதுக்கு பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் தேர்வாகியிருந்தார். கர்நாடக இசையுலகிலும், பின்னணி பாடலிலும் தன்னிகரற்ற பங்களிப்பை வழங்கியதற்காக யேசுதாஸ் இந்த விருதுக்கு தேர்வாகியிருந்தார்.
இந்நிலையில், இன்று ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவித்தார். இவருடன் ஆன்மீகவாதி ஜக்கி வாசுதேவ், இசைக்கலைஞர் டி.கே.மூர்த்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மக்களவை முன்னாள் சபாநாயகர் சங்மா, பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரும் பத்ம விபூஷன் விருதுகளை பெற்றனர்.

கே.ஜே.யேசுதாஸ் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இதுவரை 7 முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார். 1961-ல் இசை வாழ்வை ஆரம்பித்த யேசுதாஸுக்கு தற்போது வயது 77. ஏற்கெனவே 1975-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 2002-ல் பத்மபூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரமும் ஸ்ரீமனும் 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
விக்ரமின் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் ‘சேது’. பாலா இயக்கத்தில் 1999-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்திற்கு பிறகுதான் விக்ரமுக்கு முன்னால் சீயான் என்ற அடைமொழி ஒட்டிக் கொண்டது. இப்படத்தில் அவருக்கு நண்பனாக நடித்த ஸ்ரீமனுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படத்திற்கு பிறகு விக்ரமும் - ஸ்ரீமனும் இதுவரை எந்த படத்திலும் இணைந்து நடிக்கவில்லை. கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த கூட்டணி ‘ஸ்கெட்ச்’ படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஸ்ரீமனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

‘ஸ்கெட்ச்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை எழும்பூர் அருகே நடைபெற்று வருகிறது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

சமுதாய உணர்வை காயப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை ராக்கி சாவந்த் 3 வாரத்துக்குள் லூதியானா கோர்ட்டில் ஆஜராகுமாறு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தனியார் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில், இந்தி நடிகை ராக்கி சாவந்த் ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவர் குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இது வால்மீகி சமுதாயத்தினரின் உணர்வுகளை காயப்படுத்துவதாக கூறி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா கோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில், ராக்கி சாவந்தை ஆஜர் ஆகும் படி கோர்ட்டு பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜர் ஆகவில்லை. இதையடுத்து கடந்த 8-ம் தேதி லூதியானா கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.

இதையடுத்து பஞ்சாப் போலீசார் ராக்கி சாவந்தை கைது செய்ய மும்பை வந்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து பஞ்சாப் போலீசார் அவரை கைது செய்ய முடியாமல் திரும்பிச்சென்றனர்.
இந்தநிலையில் லூதியானா கோர்ட்டு பிறப்பித்த பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி ராக்கி சாவந்தின் வக்கீல் ஆதிப் சேக் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ராக்கி சாவந்த் 3 வாரத்திற்குள் லூதியானா கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. அதுவரை அவரை கைது செய்ய போலீசாருக்கு தடை விதித்தும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ரூ.2 கோடி மோசடி வழக்கில் நடிகர் ரித்தீஷ் முன்ஜாமீன் கோரி சென்னை 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்த செய்தியை பார்க்கலாம்.
அமெரிக்க இந்தியரான ஆதிநாராயணன் என்பவரிடம் ரூ.2 கோடியே 18 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக நடிகர் ரித்தீஷ், அவரது மனைவி ஜோதீஸ், நடிகர் வாலி என்ற பசீர் உள்பட 7 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ரித்தீஷ் முன்ஜாமீன் கேட்டு சென்னை 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான நகர குற்றவியல் அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன், ரித்தீசுக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார்.
இதன்பின்பு, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு விசாரணையை 18-ந் தேதிக்கு தள்ளிவைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.

தொலைக்காட்சிகளில் வரும் கார்ட்டூன் தொடர்களில் சதி இருக்கிறது என திரைப்பட நடிகர் ராஜேஷ் பேசினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சோவியத் ரஷ்ய புரட்சி 100-வது ஆண்டு விழா மற்றும் என்.வரதராஜன் நினைவு கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில் திரைப்பட நடிகர் ராஜேஷ் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அவர் பேசியதாவது:-
நாட்டை முதலாளித்துவம் அடிமைப்படுத்துகிறது என்று சொல்கிறோம். ஆனால், அதை விட நுகர்வோர் கலாசாரத்துக்கு மக்கள் அடிமையாகிவிட்டார்கள். நவீன உலகில் கொள்முதலுக்கே மக்கள் அதிகப்படியான நேரத்தை செலவிடுகிறார்கள். இதுதான் சமுதாயத்தை மிகவும் பாதிக்கிறது.
இளைய சமுதாயம் மதுவுக்கும், ஆபாசபடங்களுக்கும் அடிமைபட்டுபோய் கிடக்கிறது. இது மூளையை தவறு செய்ய தூண்டும். இதே போல ‘வாட்ஸ்அப்’ என்பது ஒரு வியாதி என பலரும் உணராமல் இருக்கிறார்கள். அவர்கள் குழந்தைகளை கவனிக்காமல், ‘வாட்ஸ்அப்’பில் மூழ்கிவிடுகிறார்கள்.
குழந்தைகள் தொலைக்காட்சிகளில் வரும் கார்ட்டூன் தொடர்களை விரும்பி பார்க்கிறார்கள். இதில் ஒரு சதி இருக்கிறது. அதாவது, பசு மற்றும் பன்றிகள் மூலம் ஒரு புதுவிதமான விலங்கை உருவாக்கியது போன்று அவர்கள் காண்பிக்கிறார்கள். தற்போது இது வேடிக்கையாக தெரியலாம். ஆனால் எதிர்காலத்தில் அது நிஜத்தில் அரங்கேறும்.

அதற்கான மூளைச்சலவையை செய்யும் பணியில்தான் சிலர் களம் இறங்கி இருக்கிறார்கள். தற்போது இதை ரசிக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்வார்கள். எனவே, இதுபோன்ற சதிகளை முறியடிக்க கார்ட்டூன் தொடர்களுக்கு எதிராக அரசியல்வாதிகள் போராட வேண்டும்.
டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆண்டவனும் (கடவுள்), ஆண்டு கொண்டு இருப்பவனும் (அரசு) கண்டுகொள்ளவில்லை. அவர்கள் நிர்வாணமாக போராட வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். மக்களிடம் நாட்டுப்பற்று, மொழிப்பற்று இல்லை. முன்பு இருந்த தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்தனர். அவர்கள் நாட்டை சொந்தம் கொண்டாடினர். ஆனால் தற்போதைய தலைவர்கள் சொத்துக்களை குவித்து நாட்டையே சொந்தமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அனைவரும் மார்க்சிய கொள்கைகளை கடைபிடித்து உரிமைகளுக்காக போராட வேண்டும்.
இவ்வாறுஅவர் பேசினார்.
இந்த கருத்தரங்கில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தங்கவேல், பாலபாரதி, மாவட்ட செயலாளர் பாண்டி, நகர செயலாளர் ஆசாத் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து ஒரு படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
இசைஞானி இளையராஜாவின் இளையமகன் யுவன் சங்கர் ராஜா. இளையராஜாவின் இசையில் யுவன் சங்கர் ராஜாவும், யுவனின் இசையில் இளையராஜாவும் நிறைய பாடல்கள் பாடியுள்ளனர். ஆனால், இருவரும் இணைந்து ஒரு படத்திற்குகூட இசையமைத்ததில்லை.
ஆனால், அது தற்போது கைகூடி வந்துள்ளது. ‘தர்மதுரை‘ படத்திற்கு பிறகு சீனுராமசாமி அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார். இப்படத்தை யுவன் சங்கர் ராஜாவின் YSR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், யுவனும் தன்னுடைய அப்பாவுடன் இணைந்து இசையமைக்கவுள்ளதாகவும் பேசப்படுகிறது.

இவர்கள் இருவரும் இணைவது இதுதான் முதல்முறை என்றாலும், இளையராஜா ஏற்கெனவே ஒரு படத்தில் மற்றொரு இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். கடந்த 2004-ஆம் ஆண்டு வெளிவந்த ‘விஸ்வதுளசி’ என்ற படத்திற்காக இளையராஜாவும், எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
சீனுராமசாமி இயக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படப்பிடிப்பு குழுவினர் சுற்றி நிற்கும்போது குட்டைப்பாவாடை அணிந்து காதல் காட்சிகளிலும் முத்த காட்சிகளிலும் நடிப்பதற்கு வெட்கமாக இருப்பதாக நடிகை காஜல் அகர்வால் பேட்டி அளித்துள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-
“சினிமாவில் முத்த காட்சிகளில் நடிப்பதையும் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதையும் ஒரு காலத்தில் பரபரப்பாக பேசினார்கள். அந்த காட்சிகளில் நடிப்பதற்கு நடிகைகள் தயங்கிய காலமும் இருந்தது. ஆனால் இப்போது அவை சகஜமாகி விட்டன. முத்த காட்சிகளும் காதல் காட்சிகளும் படங்களில் சர்வசாதாரணமாக இடம் பெறுவதை பார்க்க முடிகிறது. நடிகைகளும் இந்த காட்சிகளில் நடிப்பதற்கு ஆட்சேபிப்பது இல்லை.
காதல் மற்றும் முத்த காட்சிகளை ரசிகர்கள் திரையங்குகளில் சாதாரணமாக பார்த்து விட்டு போய் விடுகிறார்கள். ஆனால் அந்த காட்சிகளில் நடிப்பதற்கு நடிகைகள் படும் கஷ்டங்கள் ஏராளம். படப்பிடிப்பு நடக்கும் இடத்தை சுற்றிலும் லைட்மேன் முதற்கொண்டு தொழில் நுட்ப கலைஞர்கள் பலர் நின்று கொண்டிருப்பார்கள். டைரக்டரும் கேமராமேனும் கதாநாயகன், கதாநாயகி எப்படி நடிக்கிறார்கள் என்பதை உற்று நோக்கி கொண்டு இருப்பார்கள்.

அந்த கூட்டத்தினர் மத்தியில் குட்டைப்பாவாடை அணிந்து கவர்ச்சியாக வந்து கதாநாயகனை கட்டிப்பிடிக்க வேண்டும். அவருடன் முத்தமிட வேண்டும். இந்த காட்சிகளில் நடிப்பதற்கு எனக்கு வெட்கமாக இருக்கும். சில நேரம் படப்பிடிப்பை காண ரசிகர்கள் கூட்டமும் திரண்டு விடும். ஆயிரம் பேர் மத்தியில் அந்த காட்சிகளில் நடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒவ்வொரு முறையும் இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதற்கு நான் மிகவும் கஷ்டப்படுகிறேன்.
சினிமாவில் நான் அறிமுகமாகி 10 வருடங்கள் தாண்டி விட்டன. அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்து விட்டேன். தற்போது அஜித்குமார் ஜோடியாக ‘விவேகம்’ படத்திலும் ராணா ஜோடியாக ‘நீனே ராஜா நானே மந்திரி’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறேன். விஜய்யுடனும் நடிக்கிறேன். இனிமேல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க முடிவு செய்து உள்ளேன்.”
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

வின் டீசல், ராக், ஜேசன் ஸ்டாதம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள `தி ஃபேட் ஆஃப் த ப்யூரியஸ்' எனப்படும் `பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தின் 8'-வது பாகத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
பாஸ் அண்ட் ப்யூரியஸ் 8-வது பாகத்தில் நாயகன் வின் டீசல் மற்றும் மிச்சல் ரோட்ரிகஸ் சந்தோசமாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஒரு நாள் வின்டீசலை பார்க்க வரும் சார்லிஸ் தெரோன் என்னும் பெண், அவருக்கு ஒரு வேலை கொடுக்கிறார். அதனை செய்ய மறுக்கும் வின் டீசலிடம், தெரோன் ஒரு வீடியோவை காட்ட, அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடையும் வின் டீசல், தெரோன் சொல்லும் வேலையை செய்ய சம்மதிக்கிறார்.
அதேநேரத்தில் மற்றொரு நாயகனான ராக்குக்கு அவரது மேலதிகாரியிடம் இருந்து ஒரு வேலை வருகிறது. அந்த வேலையை வெற்றிகரமாக முடிக்க திட்டமிடும் ராக், வின் டீசல் மற்றும் அவரது குழுவின் உதவியை நாடுகிறார். ராக்கின் அழைப்பை ஏற்று தனது குழுவுடன் செல்லும் வின்டீசல், ராக்குக்கு தேவையான பொருள் ஒன்றை கைப்பற்ற உதவி செய்கிறார். இவ்வாறு அனைத்தும் சரியாக சென்று கொண்டிருக்கையில், ராக்கை தாக்கிவிட்டு, அந்த பொருளை எடுத்துச் செல்லும் வின்டீசல், ராக்கை போலீசில் சிக்க வைக்கிறார்.

பின்னர் சிறையில் அடைக்கப்படும் ராக், அங்கு தனது விரோதியான ஜேசன் ஸ்டாதமை சந்திக்கிறார். ஒரு கட்டத்தில் ராக்கை சிறையில் இருந்து வெளியே கொண்டுவரும் அவரது மேலதிகாரி, வின் டீசலை கண்டுபிடிக்க ஜேசன் ஸ்டாதமுடன், ராக்கை இணைந்து பணியாற்ற சொல்கிறார். மேலும் வின்டீசலின் கூட்டாளிகளான ஸ்காட் ஈஸ்ட்வுட், டைரஸ் கிப்சன், லூடாகிரிஸ் உள்ளிட்டோரும் ராக்குக்கு உதவி செய்ய வருகின்றனர்.
இவ்வாறு வின்டீசலை கண்டுபிடிக்க திட்டம் தீட்டும் வேளையில், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் வின் டீசல் அவர்களிடம் இருந்து `காட்ஸ் ஐ' எனப்படும் பொருளையும் திருடிச் செல்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் ராக், ஜேசன் ஸ்டாதன், ஸ்காட் ஈஸ்ட்வுட், டைரஸ் கிப்சன் உள்ளிட்டோர் வின் டீசல் ஏன் இவ்வாறு செய்கிறார் என்று குழப்பமடைகின்றனர். பின்னர் வின் டீசலை கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் பாகங்களை பொறுத்தவரையில், ஒரு குழுவில் இருக்கும் ஒருவர், தனது குழுவை விட்டுப்போகவோ, அல்லது காட்டிக்கொடுக்கவோ கூடாது. ஆனால் இந்த பாகத்தில் வின் டீசல், தனது குழுவை விட்டுவிட்டு, தொழில்நுட்ப தீவிரவாதியான சார்லிஸ் தெரோனுடன் கூட்டு வைக்கிறார். எதற்காக கூட்டு வைக்கிறார்? எந்த காரணத்தால் அவர்களால் மிரட்டப்படுகிறார்? அந்த சதியில் வின் டீசலை மீட்க ராக், ஜேசன் ஸ்டாதம் என்ன முயற்சி செய்கின்றனர்? என்பது படத்தின் ஸ்வாரஸ்யமான மீதிக்கதை.
மற்ற பாகங்களில் ஒரு ஹீரோவாக வரும் வின் டீசல், இந்த பாகத்தில் ஒரு வில்லன் போன்று நடித்து மிரட்டியிருக்கிறார். குறிப்பாக மற்ற பாகங்களை போன்றே, இந்த பாகத்திலும் ஸ்டண்ட் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். குழுவின் ஒரு உறுப்பினராக இருக்க முடியாமலும், தொழில்நுட்ப தீவிரவாதியிடம் சிக்கிக் கொண்டும், அதிலிருந்து மீண்டு வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. மேலும் பாசத்தை வெளிப்படுத்தம் காட்சியிலும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

ராக் தனக்கே உரித்தான ஸ்டைலில், சிறந்த உடற்கட்டுடன் வந்து ரசிக்க வைக்கிறார். குறிப்பாக இந்த பாகத்தில் அவரது ஸ்டன்ட் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. அவர் செய்யும் ஒவ்வொரு ஸ்டன்ட்டும் நம்புப்படியாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர் சிறப்பான உடற்கட்டுடன் இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. ஜேசன் ஸ்டாதம், எப்போதும் போல இந்த பாகத்திலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக விமானத்தில் நடக்கும் சண்டைக்காட்சியில் அனைவரையும் அடித்து நொறுக்கி துவம்சம் செய்வது ரசிக்கும்படி இருந்தது. அந்த சண்டைக்காட்சியிலும், அவரது நகைச்சுவை ரசிக்கும்படி இருந்தது.
மற்றபடி மிச்செல் ரோட்ரிகஸ், ஸ்காட் ஈஸ்ட்வுட், டைரிஸ் கிப்சன், லூடாகிரிஸ், கர்ட் ரசல், லுகாஸ் பிளாக், சார்லிஸ் தெரோன் உள்ளிட்டோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர். குறிப்பாக டைரிஸ் கிப்சன் தனக்குரிய ஸ்டைலில், ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைக்கிறார். அவரது நகைச்சுவைக்கு அரங்கமே அதிர்கிறது. அதுவும் தமிழுக்கு ஏற்றார் போல் அவரது நகைச்சுவை ஒன்றி அமைத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்திருக்கிறது.

பாஸ் அண்ட் பியூரியஸ் தொடரை முதல்முறையாக இயக்கியுள்ள இயக்குநர் எப்.கேரி கிரேவின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த தொடரின் 7 பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில், 8-வதாக வெளியாகியுள்ள இந்த பாகத்தை இயக்குநர் எப்.கேரி கிரே சிறப்பாக இயக்கியிருக்கிறார். மற்ற பாகங்களில் வரும் முக்கிய கதாபாத்திரங்களை ஒருசில காட்சிகளுக்கு வரவைத்து நியாபகப்படுத்துவது ரசிக்கும்படி இருந்தது. ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், டப்பா கார்களை கொண்டும் சிறப்பான சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. விமானத்தில் எடுக்கப்பட்டிருக்கும் சண்டைக்காட்சி, சார்லிஸ் தெரோன் ரிமோட் கண்ட்ரோல் மூலமாக கார்களை தன்வசப்படுத்துவது போன்ற காட்சிகள் பிரம்மிக்க வைக்கிறது.

மேலும் உறைந்திருக்கும் பனிக்கட்டிக்கு அடியில் இருந்து வரும் நீர்மூழ்கி கப்பலை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் காட்சி என படம் முழுக்க பிரம்மாண்டமாக காட்டியிருப்பது சிறப்பு. 7-வது பாகத்தை போல இந்த பாகத்திலும் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்திற்கு ப்ளஸ். பல வகையான கார்களின் அணிவகுப்பு, புதுமையான கார்கள் என இந்த பாகத்திலும் பல வித்தியாசமான கார்களை பார்க்க முடிகிறது. மேலும் 7-வது பாகத்தோடு இந்த உலகத்தை விட்டு சென்ற, பால் வாக்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த பாகத்தின் இறுதியில் வைக்கப்பட்டிருக்கும் காட்சி, ரசிகர்களின் மனதில் நிற்கும்படியாக உள்ளது.
இவ்வாறு ரசிக்கும்படியான திரைக்கதையையும், மற்ற பாகங்களை போல அல்லாமல் இந்த பாகத்தில் வின் டீசலை வில்லனாக காட்டும் காட்சிகள் என திரைக்கதையை சிறப்பாக அமைத்திருக்கிறார் கிறிஸ் மோர்கன்.
படத்தின் பின்னணி இசையில் ப்ரெயின் டெய்லர் மிரட்டியிருக்கிறார். சண்டைக்காட்சிகளுக்கு ஏற்ப அவரது பின்னணி இசை ரசிக்கும் படியாக இருக்கிறது. ஸ்டீபன் எஃப்.விண்டனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளை எடுக்க ஸ்டீபன் கடுமையாக உழைத்திருப்பது படத்தை பார்க்கும் போது தெரிகிறது.
மொத்தத்தில் `தி பேஃட் ஆப் த ப்யூரியஸ்' வேகம்.

நடிகர் ஒருவர் தனக்கு வந்த பதவிகளால் பயந்துபோய் உள்ளாராம். அவர் யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
விசாலமான நடிகர் தற்போது சினிமாத்துறையில் உள்ள முக்கிய சங்கங்களில் முக்கிய பொறுப்புகளுக்கு வந்திருக்கிறார். இளம் வயதிலேயே முக்கிய பொறுப்புகளுக்கு வந்திருக்கும் நடிகருக்கு ஒருபக்கம் சந்தோஷம் இருந்தாலும் மறுபக்கம் சிறு பயமும் இருக்கிறதாம்.
சங்கத்தின் முக்கிய பொறுப்புக்கு வந்திருக்கும் இந்த நடிகர் சினிமா துறையினருக்கு ஏதாவது நல்லது செய்வார் என்பதுதான் திரையுலகினரின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு என்ன செய்யவேண்டும் என்ற கேள்விதான் அவருக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறதாம்.

இதனால், முக்கிய பொறுப்புகளுக்கு வரும்வரை எந்தவித டென்ஷனும் இல்லாமல் இருந்த நடிகருக்கு, இப்போது பயங்கர டென்ஷனோடு இருக்கிறாராம். இதனால், பொதுமேடையில் பேசும்போதுகூட, என்ன பேசுகிறோம்? ஏது பேசுகிறோம்? நாம் பேசுவது சரிதானா? சாத்தியம்தானா? என்பது தெரியாமலேயே உளறி கொட்டுகிறாராம்.
இதனால், திரைத்துறையினர்கள் மத்தியில் இந்த நடிகரின் மீது மிகப்பெரிய அதிருப்தி வந்துள்ளதாம். பதவிகளை பிடிப்பதற்காக இவர் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றுவரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளதாம்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துவரும் புதிய படத்தின் தலைப்பு ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
‘கத்தி’ படத்திற்கு பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ் பாபுவை வைத்து பெயரிடப்படாத ஒரு படத்தை இயக்கி வந்தார். இப்படத்தின் கதாநாயகியாக ராகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார். கடந்த வருடம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கு தலைப்பு அறிவிக்கப்படாமலேயே இருந்தது மகேஷ் பாபுவின் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை கொடுத்தது. இதனால் இயக்குனர் முருகதாஸ் மீது அவர்கள் மிகவும் அதிருப்தியில் இருந்து வந்தனர். விரைவில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை அறிவிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும்விதமாக இன்று மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் தலைப்பையும் வெளியிடப்போவதாக முருகதாஸ் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தலைப்புடன் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் தலைப்பாக ‘ஸ்பைடர்’ (SPYder) என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் புலனாய்வுத்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதன்படியே, படத்தின் தலைப்பையும் அதற்கேற்றபடி கொடுத்திருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகிவருகிறது. இரண்டு மொழிகளிலும் ஒரே தலைப்பைத்தான் பயன்படுத்தப்போவதாக சமீபத்தில் படக்குழு தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்தது. அதன்படி, இந்த தலைப்பு ஆங்கிலத்தில் இருப்பதால் தமிழக அரசு அளிக்கும் வரிச்சலுகை இந்த படத்திற்கு கிடைக்காது. எனவே, தமிழில் இப்படத்தின் தலைப்பு மாறினாலும் மாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி மீண்டும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனருடன் மீண்டும் இணையப்போவதாக தெரிவித்துள்ளனர்.
விஜய் சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன். இப்படத்தை தொடர்ந்து பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவான ‘ஒரு பக்க கதை’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்திருக்கிறார்.
இப்படத்தை தொடர்ந்து பாலாஜி தரணீதரன் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ‘சீதக்காதி’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் கூறப்படும். பல நூற்றாண்டு முன்பு வாழ்ந்த கவிஞரும் வள்ளலுமான சீதக்காதியின் பெயரை வைத்து உருவாகும் இப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி பட வரிசையில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம் முக்கியமான படமாகும். இப்படம் அவருக்கு சினிமா மார்க்கெட்டில் நிலையான ஒரு இடத்தை பெற்றுக் கொடுத்தது எனலாம். அந்த வகையில், பாலாஜி தரணீதரன் - விஜய் சேதுபதி மீண்டும் இணைவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சச்சினின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய உருவாகியுள்ள படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவித்துள்ளனர். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
இந்திய கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய நட்சத்திரமாக போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். அவருடைய வாழ்க்கை வரலாறு ‘சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவர உள்ளது. ஏற்கெனவே, தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவந்து பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல், இந்த படமும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை (ஏப்ரல் 13) இரவு 7 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற இந்தியர்களான சச்சின் மற்றும் ரகுமான் இணைந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை இப்படத்தின் டிரைலர் ஓரளவுக்கு திருப்திபடுத்தும் என நம்பப்படுகிறது. இப்படத்தை 200 நாட் அவுட் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.