என் மலர்
தனுஷ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘ப.பாண்டி’ படத்தில் மோகன்பாபு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
இதுவரை தமிழ் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் எடுத்த தனுஷ், இயக்குனராகவும் அவதாரம் எடுத்த படம் ‘ப.பாண்டி’. இப்படம் கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் குறித்த விமர்சனங்களும் படக்குழுவினரை திருப்திபடுத்தும் விதமாக அமைந்துள்ளதால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை பார்த்த ரஜினியும், தனுஷை கட்டிபிடித்து பாராட்டியுள்ளார். அதுமட்டுமில்லாது தனது நெருங்கிய நண்பரான மோகன்பாபுவை ரஜினி சென்னைக்கு வரவழைத்து இந்த படத்தை அவருக்காக பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளார்.

படத்தை பார்த்து பிரமித்துப்போன மோகன்பாபு, இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ராஜ்கிரண் வேடத்தில் மோகன்பாபுவே நடிக்க முடிவு செய்துள்ளாராம். சுப்பிரமணிய சிவா இப்படத்தை இயக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் தங்கள் படங்களுக்கு பதிலாக நடிகர்-நடிகைகளை முகப்பு படங்களாக வைத்து அவதூறு பரப்பும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று நடிகை சுருதிஹாசன் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:-
“நடிகர்-நடிகைகளின் பின்புலங்கள், அவர்கள் நடித்துள்ள படங்கள், அவர்களின் திறமைகள் போன்ற எதுவும் தெரியாமலேயே சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். அவதூறுகளும் பரப்புகிறார்கள். இதற்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது என்பது எனது கருத்து. நம்மை பற்றி தெரிந்தவர்கள் விமர்சனம் செய்தால் மட்டுமே அதனை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்.
நான் சமூக வலைதளமான ‘டுவிட்டர்’ மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். நான் நடித்து வரும் படங்கள் பற்றிய விவரங்களையும் இனிமேல் நடிக்கப்போகும் படங்கள் சம்பந்தமான தகவல்களையும் டுவிட்டரில் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறேன். சினிமா அல்லாத பொதுவிஷயங்கள் குறித்தும் எனது கருத்துக்களை அவ்வப்போது அதில் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆனால் எந்த டுவிட்டர், ரசிகர்களுடன் என்னை தொடர்பில் வைத்து இருக்கிறதோ அதன்மூலம் சில கஷ்டங்களையும் சந்திக்க நேர்கிறது. சமூக ஊடகங்கள் நல்ல விஷயம்தான். அதன்மூலம் அனைத்து தரப்பு மக்களுடனும் தொடர்பு கொள்ள முடிகிறது. நிறைய விமர்சனங்களும் அதில் பரவுகிறது. தனிப்பட்ட முறையில் ஒருவரின் சொந்த வாழ்க்கை பற்றியும் அதில் அவதூறுகள் பரப்பப்படுவதுதான் வேதனை அளிக்கிறது.
சிலருக்கு அவர்களின் சொந்த வாழ்க்கையில் அதிருப்தி இருக்கும். அப்படிப்பட்டவர்கள் பக்கத்தில் இருப்பவர்களை குறை சொல்லி ஆனந்தப்படுவார்கள். டுவிட்டரிலும் அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள். இவர்கள் டுவிட்டர் முகப்பில் கூட தங்கள் படங்களை வைத்துக்கொள்ளாமல் நடிகர்-நடிகைகளின் படங்களை வைத்துக்கொள்கிறார்கள்.
மற்றவர்கள் மீது அவதூறு பரப்புவதற்கும் விமர்சிப்பதற்கும் கூட அவர்களுக்கு நடிகர்-நடிகைகளின் முகப்பு படங்கள்தான் தேவைப்படுகிறது. தங்களுடையை சொந்த படங்களை டுவிட்டர் முகப்பில் வைத்துக்கொள்ள பயப்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் வெட்டித்தனமான விமர்சனங்களுக்கும் அவதூறுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து நேரத்தை யாரும் விரயம் செய்யக்கூடாது. விமர்சனங்களுக்கு பயந்து சமூக வலைதளத்தில் இருந்து நான் ஒருபோதும் விலக மாட்டேன்.
இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

வறுமையில் வாடும் பழம்பெரும் சினிமா நடிகை ஜமுனாவிற்கு நடிகர் விஷால் மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் உதவி தொகை வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
பழம்பெரும் சினிமா நடிகை ஜமுனா. இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், சிவகுமார் ஆகியோருடன் நடித்து இருக்கிறார். பின்னணி நடன கலைஞராகவும் ஏராளமான தமிழ் படங்களில் நடனம் ஆடி இருக்கிறார். நடிகைகள் சரோஜா தேவி, பானுமதி ஆகியோருடனும் நடனம் ஆடி உள்ளார். சில தினங்களுக்கு முன்பு ஜமுனா வடபழனியில் உள்ள சாலையில் கையேந்தி பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தார்.
இது வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவியது. அதில் நான் சினிமாவில் பல உயரங்களை அடைந்தேன். பிரபல நடிகர்களுடன் நடித்து இருக்கிறேன். ஆனால் இன்று வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். அதனால் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்துவிட்டேன் என்று பேசி இருந்தார். இதை பார்த்த நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் உடனடியாக தனது உதவியாளர்களை அனுப்பி ஜமுனாவுக்கு உதவிகள் செய்தார்.
ஜமுனாவை முதியோர் இல்லத்தில் சேர்க்க முயற்சி செய்தார். ஆனால் அவர் முதியோர் இல்லத்துக்கு செல்ல விரும்பவில்லை என்றும், தனக்கு உதவி தொகை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து ஜமுனாவுக்கு மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் உதவி தொகை வழங்குவதாக விஷால் வாக்குறுதி அளித்தார்.

நடிகர் சரத்குமார் நடிக்கும் அடுத்த புதிய படத்திற்கு ‘ரெண்டாவது ஆட்டம்’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படம் குறித்த முழு தகவல்களை கீழே பார்ப்போம்.
சமீபகாலமாக புதுமுக இளம் இயக்குனர்கள் இயக்கும் படங்கள் தமிழ் சினிமாவில் பெரிய ஹிட்டாகி வருகின்றன. ‘துருவங்கள் பதினாறு’, ‘8 தோட்டாக்கள்’ என்ற கிரைம் திரில்லர் பின்னணியில் உருவான படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டன. அதே கிரைம் திரில்லர் பாணியில் இளம் இயக்குனர் ஒருவர் சரத்குமாரை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
பிரித்வி ஆதித்யா என்ற இளம் இயக்குனர்தான் அவர். இவர் இயக்கும் அந்த படத்திற்கு ‘ரெண்டாவது ஆட்டம்’ என்று பெயர் வைத்துள்ளனர். படம் குறித்து இயக்குனர் பிரித்வி கூறும்போது, “என்னுடைய கதையில் இந்த கதாபாத்திரத்திற்கு மிக சரியானவர் சரத்குமார்தான் என்று என் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருமே கூறினர். அவருடைய முகமும், உடலமைப்பும் இந்த கதாபாத்திரத்துக்கு கனகச்சிதமாக பொருந்தி உள்ளது.

இந்த படத்தில் அவர் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்கின்றார். சமீபமாக ரசிகர்கள் பெரும்பாலானோர் நடுத்தர வயது நிரம்பிய கதாநாயகர்களின் படங்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், அவர்களின் எதிர்பார்ப்பை எங்களின் 'ரெண்டாவது ஆட்டம்' முழுவதுமாக பூர்த்தி செய்யும்.
அதோடு சரத்குமாரின் இந்த மாறுபட்ட தோற்றம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாய் அமையும். தற்போது எங்கள் படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது" என்று உற்சாகத்துடன் கூறினார்.
இப்படத்தை பிக் பிரிண்டர்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ஜுன் மாதம் முதல் தொடங்கவுள்ளனர்.

தேசிய விருதுகள் வழங்கப்பட்டதில் பாரபட்சம் காட்டப்படுகிறதா? என்பதற்கு பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் பதில் அளித்தார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
கோவை சித்தாபுதூர் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் நடந்த அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைக்க பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் நேற்று காலை கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எனக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் அருளால் எனக்கு இது கிடைத்து உள்ளது. இதற்காக நான் அதிகம் சந்தோஷம் அடைவதில்லை. மற்ற விருதுகளை பெற்றால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவேனோ அதைப்போலவே இந்த விருதையும் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடவுள் அருளால் அனைத்தும், அனைவருக்கும் கிடைக்கும்.
நாம் மற்றவர்களுக்கு உதவி செய்வதை குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- 2016-ம் ஆண்டு திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், வேண்டியவர்களுக்கு மட்டும் விருதுகள் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?
பதில்:- இந்த கேள்வியை குற்றச்சாட்டை எழுப்பியவர்களையும், தேசிய விருதுகள் வழங்கியவர்களையும் போய் கேளுங்கள்.
கேள்வி:- இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை மேடைகளில் பாடக்கூடாது என்று எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பியுள்ளாரே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?.
பதில்:- நான் யாருக்கும் வக்கீல் நோட்டீசு அனுப்பவில்லை. வக்கீல் நோட்டீசு அனுப்பியவரை போய் கேளுங்கள்.
இவ்வாறு கூறி விட்டு கே.ஜே.ஜேசுதாஸ் வேகமாக எழுந்து சென்று விட்டார்.

பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக இயக்கும் படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
தமிழில் நிவின் பாலி - நஸ்ரியா நஷீம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த ‘நேரம்’ படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த அல்போன்ஸ் புத்திரன், அடுத்ததாக மலையாளத்தில் இயக்கிய ‘பிரேமம்’ படத்தின் மூலம் அனைவர் மத்தியிலும் பேசப்படும் ஒரு இயக்குனரானார்.
‘பிரேமம்’ படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்நிலையில், அடுத்ததாக அவர் இயக்கும் படம் என்னவாக இருக்கும்? என்பது பலரது கேள்வியாக இருந்தது. அதற்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனே விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறும்போது, என்னுடைய அடுத்த தமிழ் படத்தில் புதிதாக எந்தவொரு விஷயத்தையும் செய்யப்போவதில்லை. அடுத்து நான் இயக்கும் படத்திற்கு முன்னணி நடிகையும், அதேநேரத்தில் அவர் நல்ல பாடும் திறமையும் கொண்டவராக இருக்க வேண்டும் என்பதுபோல் தேடிக்கொண்டிருக்கிறேன். அதுபோல் கிடைத்துவிட்டால் இந்த படம் குறித்த அறிவிப்பை விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘பிரேமம்’ படம் தெலுங்கில் வெளியாகி பெரிய தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், இப்படத்தை தமிழிலும் ரீமேக் செய்ய வேலைகள் நடைபெற்று வந்தது. அல்போன்ஸ் புத்திரனே தமிழிலும் ரீமேக் செய்யவிருப்பதாகவும், சிம்பு கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.
அல்போன்ஸ் புத்திரன் தன்னுடைய அடுத்த படத்தில் புதிதாக எதுவும் செய்யப்போவதில்லை என்று சொல்வதில் இருந்து பார்த்தால் அனேகமாக ‘பிரேமம்’ படத்தைத்தான் ரீமேக் செய்வாரோ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருந்தாலும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை அனைவரும் காத்திருக்கலாம்.

சக நடிகைகளை பார்த்து பொறாமைப்பட மாட்டேன். எனது வாய்ப்புகளை யாரும் பறிக்க முடியாது என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். இது குறித்த அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
நடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-
“சினிமாவில் அறிமுகமானபோது எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க என்னை தயார்படுத்திக் கொண்டேன். பிடித்த கதாபாத்திரம் பிடிக்காத கதாபாத்திரம் என்றெல்லாம் வேறுபடுத்தியது இல்லை. ஒரு நடிகருக்கோ நடிகைக்கோ எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க திறமை இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் சினிமாவில் நிலைக்க முடியும்.
எனக்கு பிடித்த கதை, கதாபாத்திரங்கள் அமையவில்லை என்று சில நடிகைகள் குறை சொல்லிக்கொண்டு இருப்பது அறியாமை என்றுதான் நான் கூறுவேன். கிடைத்ததை தனக்கு பிடித்த மாதிரி மாற்றிக் கொள்ள வேண்டும். நான் டைரக்டர் கதை சொல்லும்போது அதில் ஒன்றிப்போய் விடுகிறேன். பிறகு அதில் முழு உழைப்பையும் கொடுக்கிறேன்.

சினிமாவில் நாம் திட்டமிடுவது எதுவும் நடக்காது. படத்துக்கு படம் மார்க்கெட் நிலவரம் மாறுபடுகிறது. கீழே இருப்பவர் மேலே செல்வதும் உயரத்தில் இருப்பவர் கீழே விழுவதும் சகஜமாக நடக்கிறது. எனவே எது கிடைக்கிறதோ அதை வைத்து வாழ்க்கையை நகர்த்த பழகிக் கொள்ள வேண்டும். சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போனாலும் கவலைப்படக்கூடாது.
எனக்கு அதிர்ஷ்டவசமாக நல்ல கதாபாத்திரங்கள் அமைகின்றன. சிறந்த நடிகை என்று பெயரும் வாங்கி விட்டேன். நிறைய டைரக்டர்கள், அவர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு தந்து கொண்டு இருக்கிறார்கள். இயக்குனர்கள் சொல்லி தருவதை விட இன்னும் திறமையாக நடிக்க வேண்டும் என்ற உத்வேகம் எனக்கு இருப்பதால் அவர்களுக்கு பிடித்துப்போய் தொடர்ந்து வாய்ப்புகள் தருகிறார்கள்.
மற்ற நடிகைகளை பார்த்து நான் பொறாமைப்படுவது இல்லை. அந்த நடிகையின் கதாபாத்திரம் எனக்கு கிடைக்காமல் போய்விட்டதே என்று கவலைப்படுவதும் இல்லை. எனக்கு வரும் வாய்ப்புகள் வந்தே தீரும் அதை யாரும் பறித்து விட முடியாது. கஷ்டப்பட்டு நடித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.”
இவ்வாறு தமன்னா கூறினார்

10 ஆயிரம் பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, 16 படங்களுக்கு வசனம் எழுதினார்.

அந்த படங்களின் விவரம் வருமாறு:-
1. கலியுகக் கண்ணன்
2. ஒரு கொடியில் இரு மலர்கள்
3. முத்தான முத்தல்லவோ
4. சிட்டுக்குருவி
5. பெண்ணை சொல்லிக் குற்றமில்லை
6. கடவுள் அமைத்த மேடை
7. சாட்டையில்லாத பம்பரங்கள்
8. வடை மாலை
9. ஒரே ஒரு கிராமத்திலே
10. மகுடி
11. பெண்கள் வீட்டின் கண்கள்
12. அவள் ஒரு அதிசயம்
13. அதிர்ஷ்டம் அழைக்கிறது
14. பெண்ணின் வாழ்க்கை
15. என் தமிழ் என் மக்கள்
16. புரட்சி வீரன் புலித்தேவன்.
இவற்றில் "வடைமாலை'', வாலியும், ஒளிப்பதிவாளர் மாருதிராவும் இணைந்து டைரக்ட் செய்த படமாகும். ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்த இப்படம், 1982 மார்ச் மாதம் 12-ந்தேதி வெளிவந்தது.
வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், "சிறந்த படம்'' என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. தமிழக அரசின் 1 லட்ச ரூபாய் விருதையும் பெற்றது.
"என் தமிழ், என் மக்கள்'' என்ற படம், சிவாஜிகணேசன் நடித்து, சிவாஜி பிலிம்ஸ் தயாரித்ததாகும்.
"புதுக்கவிஞர்கள் வருகை பற்றி உங்கள் கருத்து என்ன?'' என்று கேட்டதற்கு, வாலி கூறியதாவது:-
"என்னுடைய சினிமாத் துறையில், பிற கவிஞர்களின் வருகை பற்றியோ அல்லது அவர்களின் ஆற்றல் பற்றியோ எந்த நாளும் நான் விமர்சித்ததில்லை. உண்மையைச் சொல்லப்போனால், அன்றைய கண்ணதாசனிலிருந்து இன்றைய காளிதாசன் வரை என்னிடம் அன்பு பாராட்டாத கவிஞரே கிடையாது.
காரணம், இன்னொரு கவிஞன் வந்து என் இடத்தைப் பிடித்துக்கொண்டு விடுவான் என்கின்ற அற்ப சிந்தனையெல்லாம் என் மனதில் அரும்பியதில்லை. எவருடைய வளர்ச்சியைக் கண்டும் எனக்கு எள்ளளவும் காழ்ப்புணர்ச்சி இல்லை. எல்லோருக்கும் இறைவன் தன் திருவுள்ளப்படி படியளக்கிறான். நான் யார் குறுக்கே புகுந்து கூடாதென்று சொல்ல? அப்படிப்பட்ட கோமாளி அல்ல நான்.
அதனால், தன்னுடைய ஆரம்ப காலத்திலேயே என்னுடைய அன்புத்தம்பி வைரமுத்து, ஒரு பேட்டியில் கீழ்க்கண்டவாறு சொன்னார்: "கண்ணதாசனுக்கும் நான் பாட்டெழுதுவது பற்றி கவலையில்லை; வாலிக்கும் என் வருகையில் வருத்தமில்லை'' என்று.
இன்னும் சொல்லப்போனால், நான் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்ட பொழுது, "இது தமிழுக்குக் கிடைத்த பெருமை'' என்று என்னை வாழ்த்திக் கடிதம் எழுதிய முதல் நபரே, தம்பி வைரமுத்துதான்.
ஏவி.எம்.சரவணனோடு சேர்ந்து எனக்காக ஒரு பாராட்டு விழா நடத்தியதும் அவரே.
இப்படியெல்லாம் அனைவரது அன்பையும் ஒரு சேரப் பெற்றிருக்கும் நான், இன்றைய சினிமாப் பாடல்களைப் பற்றி அன்றைய சினிமாப் பாடல்களோடு ஒப்பிட்டு, ஏதேனும் கருத்துச் சொல்லப்போனால், என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும் உள்ளங்கள் வருத்தப்படுமோ என்று அஞ்சி மவுனம் காத்து வந்திருக்கின்றேன்.
இவ்வாறு வாலி கூறினார்.
"பாட்டு எழுதி அதற்கு மெட்டமைப்பது நல்லதா? அல்லது மெட்டு போட்டு விட்டு, அதற்கு பாட்டு எழுதுவது நல்லதா?'' என்ற கேள்விக்கு பதில் அளித்து வாலி கூறியதாவது:-
"என்னைப் பொறுத்தவரையில், இரண்டுமே சரியான வழிகள்தாம். போர்த்திக்கொண்டு படுத்தால் என்ன? படுத்துக்கொண்டு போர்த்தினால் என்ன?
மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையிலும் சரி, இசைஞானி இளையராஜா இசையிலும் சரி, நான் எத்துணையோ பொருட்செறிவு மிகுந்த பாடல்களை அவர்கள் கொடுத்த மெட்டுக்கு எழுதியிருக்கிறேன்.
உதாரணமாக இரண்டைச் சொல்கிறேன்:
விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் மெட்டுக்கு நான் எழுதிய பாட்டுதான் "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் வரும் "உலகம் ஒரு பெண்ணாகி'' என்ற பாடல்.
இளையராஜாவின் மெட்டுக்கு நான் எழுதிய பாட்டுதான் "தாய் மூகாம்பிகை'' படத்தில் வரும் "ஜனனீ... ஜனனீ...'' என்ற பாட்டு.
இந்த இரண்டு பாட்டுகளும் தரமாக இல்லையா என்ன? தமிழ் சிதிலப்பட்டிருக்கிறதா, என்ன?
ஒரு மெட்டுக்கான சிறந்த பாட்டை எழுதுவது எப்பொழுதும் சாத்தியமான காரியம்தான். ஆனால் அதற்குரிய கால அவகாசம், இன்றைய அவசர சினிமாவில் கிடைப்பதில்லை. இதுதான் உண்மையான நிலை.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் இசையமைப்பாளர் என் வீட்டிற்கு வந்தார். அவர் இசையமைக்க இருக்கும் ஒரு படத்திற்கு பாட்டெழுத நான் ஒப்பந்தமாகியிருந்தேன். ஒரு மரியாதை நிமித்தம், என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வந்தார் அந்த இசையமைப்பாளர்.
அவர் தந்தையை நான் பல்லாண்டுகளுக்கு முன்பே நன்கறிந்து பழகியவன். அதையும் எனக்கு நினைவுபடுத்தி, தன்னை அவருடைய மகன் என்று தெரிவித்துக் கொண்டார், அந்த இளம் வயது இசையமைப்பாளர்.
"என்ன தம்பி! டிïன் கொண்டு வந்திருக்கியா?'' என்று நான் அன்போடு வினவினேன்.
"இல்லை சார்! எனக்கு டிïன் போட்டு உங்ககிட்டக் கொடுக்க ரொம்ப நாழி ஆகாது. இருந்தாலும், எனக்கு என் டிïனைவிட, உங்க வார்த்தைகள்தான் முக்கியம். நீங்க எழுதிக் கொடுங்க... நான் நாலஞ்சு விதமா டிïன் போட்டு, உங்ககிட்ட காட்டுகிறேன்...'' என்றார் அந்த இளைஞர்.
உடனே நான் சொன்னேன்: "தம்பி! இது ஒரு சிச்சுவேஷன் சாங் இல்லை. பசங்க ஜாலியாப் பாடுற பாட்டு. இதுக்கு ரிதம்தான் முக்கியம். அதனாலே நீ டிïன் போட்டு, அதற்கு நான் பாடல் எழுதினால்தான் நல்லாயிருக்கும். டிïனைப் போட்டு நாளைக்கு அனுப்பு. நான் பாட்டு எழுதி வைக்கிறேன். இருந்தாலும், `பாட்டெழுதி அதுக்கு டிïன் போடணும். வார்த்தைதான் முக்கியம்' அப்படின்னு நீ சொன்னதுக்கு என்னுடைய பாராட்டுகள்'' என்று சொல்லி, அந்த இசையமைப்பாளரை வாழ்த்தி அனுப்பினேன்.
பிறகு, அந்த இளம் வயது இசையமைப்பாளரிடமிருந்து மறுநாள் டிïன் வந்தது... நான் பாட்டெழுதிக் கொடுத்து அனுப்பினேன்.
பாட்டு பயங்கரமாக பாப்புலர் ஆனது.
அந்த இளம் வயது இசையமைப்பாளர்தான், என் நண்பர் சேகரின் மைந்தன், ஏ.ஆர்.ரகுமான்.
அப்போது நான் எழுதிக் கொடுத்ததுதான் "ஜென்டில்மேன்'' படத்தில் வருகிற "சிக்குபுக்கு ரயிலு'' பாடல்.''
இவ்வாறு வாலி கூறினார்.
ஒரே காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிகணேசனுக்கும் வாலி பாடல்கள் எழுதினார். அவர் பாடல் எழுதிய எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களின் விவரம் வருமாறு:-
1. நல்லவன் வாழ்வான் 2. தாயின் மடியில் 3. தெய்வத்தாய் 4. படகோட்டி 5. ஆசை முகம் 6. ஆயிரத்தில் ஒருவன் 7. எங்க வீட்டுப்பிள்ளை 8. கலங்கரை விளக்கம் 9. தாழம்பூ 10. பணம் படைத்தவன் 11. அன்பே வா 12. சந்திரோதயம் 13. தாலி பாக்கியம் 14. நாடோடி 15. நான் ஆணையிட்டால் 16. பெற்றால்தான் பிள்ளையா 17. அரச கட்டளை 18. காவல்காரன் 19. ஒளிவிளக்கு 20. கணவன். 21. கண்ணன் என் காதலன் 22. குடியிருந்த கோயில் 23. ரகசிய போலீஸ் 24. அடிமைப்பெண் 25. நம் நாடு 26. என் அண்ணன் 27. எங்கள் தங்கம் 28. மாட்டுக்கார வேலன் 29. தலைவன் 30. தேடிவந்த மாப்பிள்ளை 31. ஒரு தாய் மக்கள் 32. குமரிக்கோட்டம் 33. நீரும் நெருப்பும் 34. ரிக்ஷாக்காரன் 35. இதயவீணை 36. அன்னமிட்டகை 37. நான் ஏன் பிறந்தேன் 38. ராமன் தேடிய சீதை 39. உலகம் சுற்றும் வாலின் 40. நேற்று இன்று நாளை. 41. சிரித்து வாழவேண்டும் 42. உரிமைக்குரல் 43.இதயக்கனி 44. நினைத்ததை முடிப்பவன் 45. நாளை நமதே 46. ஊருக்கு உழைப்பவன் 47. உழைக்கும் கரங்கள் 48. நீதிக்கு தலைவணங்கு 49. இன்றுபோல் என்றும் வாழ்க! 50. நவரத்தினம் 51. மீனவநண்பன் 52. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.
1. அன்புக்கரங்கள் 2. மோட்டார் சுந்தரம் பிள்ளை 3. செல்வம் 4. பேசும் தெய்வம் 5. இரு மலர்கள் 6. நெஞ்சிருக்கும் வரை 7. உயர்ந்த மனிதன் 8. கலாட்டா கல்யாணம் 9. அஞ்சல் பெட்டி 520 10. எங்க மாமா 11. எதிரொலி 12. சுமதி என் சுந்தரி 13. தேனும் பாலும் 14. பாபு 15. தவப்புதல்வன் 16. பாரத விலாஸ் 17. மனிதரில் மாணிக்கம் 18. சிவகாமியின் செல்வன் 19. அன்பே ஆருயிரே 20. டாக்டர் சிவா. 21. மன்னவன் வந்தானடி 22. என்னைப்போல் ஒருவன் 23. பைலட் பிரேம்நாத் 24. ஜஸ்டிஸ் கோபிநாத் 25. நான் வாழவைப்பேன் 26. விசுவரூபம் 27. அமரகாவியம் 28. சத்தியம் சுந்தரம் 29. மாடி வீட்டு ஏழை 30. மோகனப்புன்னகை 31. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு 32. ஊரும் உறவும் 33. தியாகி 34. துணை 35. பரீட்சைக்கு நேரமாச்சு 36. வா கண்ணா வா 37. ஹிட்லர் உமாநாத் 38. இமைகள் 39. சந்திப்பு 40. சுமங்கலி 41. நீதிபதி 42. மிருதங்க சக்ரவர்த்தி 43. வெள்ளை ரோஜா 44. இரு மேதைகள் 45. சரித்திர நாயகன் 46. சிம்ம சொப்பனம் 47. தாவணிக்கனவுகள் 48. வம்ச விளக்கு 49. நாம் இருவர் 50. நீதியின் நிழல் 51. படிக்காத பண்ணையார் 52. பந்தம் 53. படிக்காதவன் 54. ராஜரிஷி 55. ஆனந்தக் கண்ணீர் 56. சாதனை 57. தாய்க்கு ஒரு தாலாட்டு 58. விடுதலை 59. தாம்பத்தியம் 60. வீரபாண்டியன். 61. என் தமிழ் என் மக்கள் 62. ஞானப்பறவை 63. சின்ன மருமகள் 64. தேவர் மகன் 65. நாங்கள் 66. மன்னவரு சின்னவரு.

விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராக தவறிய நடிகர் சஞ்சய் தத்துக்கு கோர்ட் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.
மும்பை:
இந்தி நடிகர் சஞ்சய் தத் மீது திரைப்பட தயாரிப்பாளர் சகீல் நூரானி மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், கூறி இருப்பதாவது:-
நான் கடந்த 2002-ம் ஆண்டில் ‘ஜன் கீ பஸ்ஸி’ என்ற பெயரில் ஒரு படம் தயாரித்தேன். இதில், நடிக்க நடிகர் சஞ்சய் தத் ஒப்புக்கொண்டார். இதற்காக அவர் பேசிய தொகையை அவரிடம் கொடுத்தேன். பின்னர், அவர் திடீரென விலகி கொண்டார். எனினும், பணத்தை திருப்பி தரவில்லை.
இதுபற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டபோது, உடனடியாக பணத்தை திருப்பி செலுத்துமாறு சஞ்சய் தத்துக்கு அறிவுறுத்தினர். இருப்பினும், அவர் பணத்தை திருப்பி செலுத்தாமல் இழுத்தடிக்கிறார். இதில், கோர்ட்டு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த மாஜிஸ்திரேட்டு, விசாரணையின்போது சஞ்சய் தத் ஆஜராக உத்தரவிட்டார். ஆனாலும், அவர் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து நேற்று நடந்த விசாரணையின் போது, நடிகர் சஞ்சய் தத்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்டு 29-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, கமலஹாசன் தயாரித்த "ஹேராம்'' உள்பட 4 படங்களில் நடித்தார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோர் நடித்த படங்களுக்கும், அந்தக் காலகட்டத்தில் உருவான மற்ற படங்களுக்கும் இரவு - பகலாக பாடல்கள் எழுதிக்கொண்டிருந்தபோது, படங்களில் நடிப்பதற்கு வந்த அழைப்புகளை வாலி ஏற்கவில்லை.
பிற்காலத்தில், நண்பர்களின் அழைப்பின் பேரில், சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
கே.பாலசந்தர் இயக்கிய "பொய்க்கால் குதிரை'', கமலஹாசனின் "ஹேராம்'', "சத்யா'', "பார்த்தாலே பரவசம்'' ஆகிய 4 படங்களில் நடித்ததுடன், "கையளவு மனசு'', "அண்ணி'' ஆகிய டெலிவிஷன் தொடர்களிலும் நடித்தார்.
ஏராளமான கவிதை நூல்கள் எழுதியிருப்பதுடன், "அவதாரபுருஷன்'' (ராமாயணம்), "பாண்டவர் பூமி'' (மகாபாரதம்), ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம் ஆகிய காவியங்களையும் படைத்துள்ளார்.
"நானும் இந்த நூற்றாண்டும்'' என்ற தலைப்பில் தன் சுய சரிதையை எழுதியுள்ளார்.
1984 அக்டோபரில், எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அவர் குணம் அடைய தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடந்தன.
அப்போது "ஒளிவிளக்கு'' படத்தில் வாலி எழுதியிருந்த "இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ திருவிளக்கு! தலைவா, உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு'' என்ற பாடல்தான் பிரார்த்தனை கீதமாக ஒலிபரப்பப்பட்டது.
இதுகுறித்து வாலி எழுதியிருப்பதாவது:-
"எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது, மிகுந்த மனச்சுமையோடு அவரைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குச் சென்றேன்.
அண்ணியார் ஜானகி அம்மாளும், சத்தியவாணிமுத்து அம்மையாரும் கண் கலங்க நின்று கொண்டிருக்க, நான் அண்ணியாருக்கு ஆறுதல் சொன்னேன்.
"உங்கள் ஒளிவிளக்கு படத்து பாடலைத்தான், நாடே பாடி உங்கள் அண்ணனுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறது. அந்த பிரார்த்தனையின் பலனாகத்தான், அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். இனிமேல் அவருக்கு ஆபத்து இலலை'' என்று திருமதி ஜானகி அம்மையார் கண்கள் பனிக்க என்னிடம் சொன்னார்கள்.
என் பாட்டுடைத் தலைவனுக்கு என் பாட்டே பிரார்த்தனை கீதமாக ஆனது குறித்து, நான் அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன். இருந்தாலும் அண்ணியாரிடம், "அம்மா! இது வாலி பாக்கியம் அல்ல; உங்கள் தாலி பாக்கியம்'' என்று சொன்னேன்.''
இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படங்களுக்கு கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் 10 ஆயிரத்துக்கு மேல். அவற்றில் எம்.எஸ்.விஸ்வநாதன் ஏறத்தாழ 3 ஆயிரம் பாடல்களுக்கும், இளையராஜா சுமார் 3 ஆயிரம் பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளனர்.
வாலியின் பாடல்களில் பி.சுசீலா பாடியவை சுமார் 1,500. டி.எம்.சவுந்தரராஜன் பாடியவை ஏறத்தாழ 700.
"திரை உலகில் நீண்ட காலம் இருந்திருக்கிறீர்கள். இதுவரை வெளிவந்துள்ள படங்களில் உங்களுக்குப் பிடித்த 20 படங்களைக் கூறுங்கள்'' என்று கேட்டதற்கு, வாலி கூறியதாவது:-
"அந்தக் காலத்துப் படங்களில், பாகவதர் நடித்த படங்களில் எனக்குப் பிடித்தது "சிவகவி.'' இதைவிட நீண்ட காலம் ஓடிய படம் "ஹரிதாஸ்'' என்றாலும், சகல அம்சங்களிலும் சிறப்பான படம் "சிவகவி.''
பி.யு.சின்னப்பா நடித்த படங்களில் என்னைக் கவர்ந்தது "குபேர குசேலா.''
சில ஆண்டுகளுக்கு முன் கமலஹாசன் நடித்த "கல்யாணராமன்'' படத்தை இன்றைய தலைமுறையினர் பலர் பார்த்திருப்பார்கள். இதே கதை, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் "இது நிஜமா'' என்ற பெயரில் வெளிவந்தது. எஸ்.பாலசந்தர் இரட்டை வேடங்களில் அற்புதமாக நடித்திருந்தார். நான் மிகவும் ரசித்த படம் அது.
1947-ல் வெளிவந்த "ஏவி.எம்'' தயாரித்த "நாம் இருவர்'', கே.சுப்பிரமணியம் தயாரித்த "தியாகபூமி'', ஜெமினியின் "நந்தனார்'', "அவ்வையார்'' ஆகிய படங்களும் என்னைக் கவர்ந்தவை.
என் மனதில் இடம் பெற்ற சிறந்த படங்களின் பட்டியலில் உள்ள மற்ற படங்கள்:-
மந்திரிகுமாரி, மனோகரா, நாடோடி மன்னன், பெற்றால்தான் பிள்ளையா, உலகம் சுற்றும் வாலிபன், தில்லானா மோகனாம்பாள், வியட்னாம் வீடு, அபூர்வ சகோதரர்கள் (கமல்), நாயகன், இருகோடுகள், புவனா ஒரு கேள்விக்குறி, அந்த 7 நாட்கள், சில நேரங்களில் சில மனிதர்கள்.''
இவ்வாறு வாலி கூறினார்.
சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதுகளை 4 முறை பெற்றவர் வாலி.
1972-ல் "கலைமாமணி'' விருது பெற்றார்.
"கலை வித்தகர்'' என்பதற்கான தமிழக அரசின் பாரதிதாசன் விருது, தமிழக அரசின் பாரதி விருது (ரூ.1 லட்சம்) முரசொலி அறக்கட்டளை விருது (ரூ.1 லட்சம்), ஆழ்வார் மையத்தின் தமிழ்த்தாத்தா உ.வே.சா. விருது (ரூ.25,000) முதலான விருதுகள் கிடைத்துள்ளன.
இவர் கதை - வசனம் எழுதிய "ஒரே ஒரு கிராமத்திலே'' படம், மத்திய அரசின் விருது பெற்றது.
வாலி -திலகம் தம்பதிகளுக்கு ஒரே மகன் வி.பாலாஜி. "எம்.ஏ'' பொருளாதாரம் படித்தவர். சொந்த தொழில் செய்கிறார்.
தமிழில் பேசும் படங்கள் வரத்தொடங்கி 75 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை திரையில் ஒலித்த பல்லாயிரக்கணக்கான பாடல்களில், தனக்குப் பிடித்த 20 பாடல்களை வாலி கூறுகிறார். (தான் எழுதிய பாடல்களை அவர் தவிர்த்துள்ளார்.)
1. வள்ளலைப் பாடும் வாயால்...
(படம்: `சிவகவி' பாடியவர்: பாகவதர் பாடலாசிரியர்: பாபநாசம் சிவன் இசை: ஜி.ராமநாதன்)
2. மானமெல்லாம் போனபின்னே...
(`கண்ணகி' பி.யு.சின்னப்பா உடுமலை நாராயணகவி எஸ்.வி.வெங்கட்ராமன்)
3. காற்றினிலே வரும் கீதம்...
(`மீரா' எம்.எஸ்.சுப்புலட்சுமி கல்கி எஸ்.வி.வெங்கட்ராமன்)
4. வெண்ணிலாவே...
(`அவ்வையார்' கே.பி.சுந்தராம்பாள் கொத்தமங்கலம் சுப்பு எம்.டி.பார்த்தசாரதி, ராஜேஸ்வரராவ்)
5. சிந்தையறிந்து வாடி...
(`ஸ்ரீவள்ளி' பி.ஏ.பெரியநாயகி பாபநாசம் சிவன் சுதர்சனம்)
6. இந்த உலகில் இருக்கும் மாந்தரில்...
(`கஞ்சன்' எம்.எம்.மாரியப்பா அய்யா முத்து எஸ்.எம்.சுப்பையா நாயுடு)
7. வாழ்க்கை என்னும் ஓடம்...
(`பூம்புகார்' கே.பி.சுந்தராம்பாள் கலைஞர் மு.கருணாநிதி சுதர்சனம்)
8. அருள் தரும் தேவமாதாவே...
(`ஞானசவுந்தரி' பி.ஏ.பெரியநாயகி கம்பதாசன் எஸ்.வி.வெங்கட்ராமன்)
9. ஆடல் காணீரோ!...
(`மதுரை வீரன்' எம்.எல்.வசந்தகுமாரி உடுமலை நாராயணகவி ஜி.ராமநாதன்)
10. மணப்பாறை மாடு கட்டி...
(`மக்களைப் பெற்ற மகராசி' டி.எம்.சவுந்தரராஜன் மருதகாசி கே.வி.மகாதேவன்)
11. துணிந்தபின் மனமே...
(`தேவதாஸ்' கண்டசாலா கே.டி.சந்தானம் சி.ஆர்.சுப்பராமன், எம்.எஸ்.விஸ்வநாதன்)
12. வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்...
(`நான் பெற்ற செல்வம்' டி.எம்.சவுந்தரராஜன் கா.மு.ஷெரீப் ஜி.ராமநாதன்)
13. மயக்கமா, கலக்கமா?...
(`சுமைதாங்கி' பி.பி.சீனிவாஸ் கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதன்)
14. சோதனை மேல் சோதனை...
(`தங்கப்பதக்கம்' டி.எம்.சவுந்தரராஜன் கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதன்)
15. நான் ஒரு சிந்து...
(`சிந்துபைரவி' சித்ராறீ வைரமுத்து இளையராஜா)
16. வசந்த கால கோலங்கள்...
(`தீபம்' எஸ்.ஜானகி கண்ணதாசன் இளையராஜா)
17. சின்னச்சின்ன ஆசை...
(`ரோஜா' மின்மினி வைரமுத்து ஏ.ஆர்.ரகுமான்)
18. ஆயிரம் நிலவே வா...
(`அடிமைப்பெண்' எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சுசீலா புலமைப்பித்தன் கே.வி.மகாதேவன்)
19. திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்...
(`கந்தன் கருணை' சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி பூவை செங்குட்டுவன் குன்னக்குடி வைத்தியநாதன்)
20. அன்புக்கு நான் அடிமை...
(`இன்றுபோல் என்றும் வாழ்க' ஜேசுதாஸ் முத்துலிங்கம் எம்.எஸ்.விஸ்வநாதன்)
சினிமாவில் நடிக்கும் எண்ணம் ஏதும் இல்லை என சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் தோன்றிய அந்நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் சினிமாவில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க இருப்பதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகின. இந்த செய்தி வைரலாக பரவிய நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்திடம் இதுபற்றி விசாரித்த போது, இணையதளங்களில் வெளியான தகவலை அவர்கள் மறுத்துள்ளனர்.
மேலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்றும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு மலையாள முன்னணி நடிகை மஞ்சுவாரியார் வீடு வழங்கினார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியார். இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்ற இவரது நல்ல குணம் இப்போது தெரியவந்துள்ளது.
கேரளமாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிபேடு என்ற பகுதி உள்ளது. இங்கு உள்ள பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கும் அர்ச்சனா, ஆதிரா என்ற குழந்தைகள் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள், ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய ரெயில் பெட்டிகளில் பெற்றோருடன் தங்கி இருந்தனர்.

இந்த விவரம் மஞ்சு வாரியாருக்கு தெரிய வந்தது. வீடு இல்லாவிட்டாலும் வறுமையில் வாடினாலும் பள்ளி சென்று படிக்கும் அந்த சிறுமிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று மஞ்சு வாரியார் நினைத்தார்.
இதற்காக தனது சொந்த செலவில் 5 சென்ட் நிலம் வாங்கி அதில் வீடு கட்டி அந்த சிறுமிகளுக்கு மஞ்சுவாரியார் வழங்கினார். இதற்காக தனது நிகழ்ச்சிகளை தள்ளி வைத்து விட்டு சிறுமிகளுக்கு வழங்கிய வீட்டின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்டு அந்த குடும்பத்தினரை குதூகலிக்க வைத்தார். மஞ்சுவாரியாரின் இந்த மனது அவருக்கு பெருமை சேர்த்துள்ளது.