என் மலர்
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே திடீரென நிறுத்தப்பட்டது. இதையடுத்து தனுஷும் ‘ப.பாண்டி’, ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களில் செயல்பட ஆரம்பித்தார். இதனால் ‘வடசென்னை’ படம் டிராப் ஆனதா? என்று பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுந்தன. மேலும் இதற்கான காரணமும் என்னவென்பது தெரியாமல் இருந்துவந்தது.

இந்நிலையில், இந்த படம் எதற்காக நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறித்து வெற்றிமாறன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘வடசென்னை’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது ‘விசாரணை’ ஆஸ்கர் பரிந்துரைக்காக தயாராக வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதற்காக நேரம் வேண்டும் என்று தனுஷிடம் கேட்டேன். வேறெந்த தயாரிப்பாளராக இருந்தாலும் இதற்கு அனுமதித்திருக்க மாட்டார். ஆனால், தனுஷ் பெருந்தன்மையாக இதற்கு ஒத்துக்கொண்டார் என்றார். ஆகையால், இதனால்தான் ‘வடசென்னை’ படம் மீண்டும் தொடங்குவதற்கு காலதாமதம் ஆகியுள்ளதாக வெற்றிமாறன் கூறியுள்ளார்.
‘வடசென்னை’ படம் தனுஷ் நடிப்பிலேயே அதிக பொருட்செலவில் உருவாகவிருக்கும் படமாம். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புக்கான செலவு மட்டும், ‘விசாரணை’ படத்திற்கு ஆன முழு செலவையும் தாண்டிவிட்டதாகவும் கூறுகின்றனர். விரைவில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் படக்குழு தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வரலட்சுமி கடத்தப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் இன்று ஒரு புகைப்படம் வைரலாக பரவத் தொடங்கியது. மேலும் #VaralaxmiGotKidnapped என்ற ஹாஸ் டேக்கும் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது. இதனால் சினிமா உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒருவேளை படத்தின் புரோமோஷனுக்காக இதுபோல் படத்தை வெளியிட்டுள்ளார்களா? அல்லது வரலட்சுமி நடத்தி வரும் ‘சேவ் சக்தி’ அமைப்புக்காக இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்களா? என்று பலரது தரப்பிலும் பெரிய கேள்வியாக எழுந்து வந்தது.
எனவே, இதுகுறித்து வரலட்சுமி தரப்பில் விசாரிக்கும்போது, இது வரலட்சுமி நடிக்கும் புதிய படத்திற்கான புரோமோஷன் என்று கூறப்பட்டுள்ளது. அந்த படம் குறித்த அறிவிப்பை இன்று மாலை அறிவிக்கப்போகிறார்களாம். அதற்கு முன்னதாக பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே இதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் சென்னையில் போடப்பட்டது. இப்படத்தில் கதநாயகி இருந்தாலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியில்லை என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில், இப்படத்தில் கவுரவ தோற்றத்தில் சில முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி நடிக்கும் நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க நயன்தாராவிடம் விஜய் சேதுபதியே பேசியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தைப் போலவே இப்படத்திலும் காமெடியான திரைக்கதை இருக்குமாம். வருகிற ஏப்ரல் 24-ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.
இப்படம் மேடைக் கலைஞரை மையப்படுத்திய கதையாம். விஜய் சேதுபதி ஒரு மேடை கலைஞராக நடிக்கவிருக்கிறாராம். இது விஜய் சேதுபதி நடிக்கும் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை வடசென்னையை பற்றி சொன்ன படங்களில் எல்லாமே அவர்கள் படிப்பறிவு இல்லாத பாமரர்கள், ஏழைகள் என்றுதான் கூறியிருக்கின்றன. ஆனால், இந்த படத்தில் வடசென்னையில் படித்த டாக்டர்கள், வக்கீல்கள் என்று உயர்மட்ட மக்களுக்கும் இருக்கிறார்கள் என்ற ஸ்டைலிஷ் ஆன படமாக உருவாக்கி வருகிறார்கள். இந்த படம் புதுமாதிரியான உணர்வை ஏற்படுத்தும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து முப்பது நாட்களுக்கும் மேலாக படமாக்கியுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் விக்ரம் ஒரு பாடலை பாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமன் இசையில் ‘கனவே கனவே புது கனவே, விழிக்கும்போது வரும் கனவே’ என்று தொடங்கும் இந்த பாடலை விஜய் சந்தரே எழுதியுள்ளார். இந்த பாடல் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. பாடல் மிகவும் நன்றாக வந்துள்ளதாக படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இப்படத்தை வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு வழங்க, மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அவர் சினிமாவில் அறிமுகமான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறும்போது, நான் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இஞ்சினியரிங் படித்து முடித்து நடிப்பதற்காக முயற்சி செய்தேன்.

இயக்குனர் மித்திரன் ஜவஹரை சந்தித்தேன். ஆடிசனில் தேர்வாகி ‘மீண்டும் ஒரு காதல் கதை’ படத்தில் இஷா தல்வார் காதலனாக அறிமுகப்படுத்தினார். அவர் அறிமுகப்படுத்திய நேரம் நல்ல நேரம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த படம் வெளிவருவதற்கு முன்பே ‘தங்கமகன்’ படத்தில் எமி ஜாக்சனின் பாய்பிரண்ட் வேடத்தில் நடித்த படம் வெளிவந்து என்னை பிரபலமாக்கியது. அடுத்து ‘கோ– 2’ படத்தில் வில்லன் வேடம்.
தற்போது நயன்தாராவுடன் ‘டோரா’ படத்தில் முக்கிய வில்லனாக நடித்தேன். பெரிய ஹீரோயினான நயன்தாராவை பார்ப்பதற்கே பல லட்சம் பேர் தவம் கிடக்கும்போது அவருக்கே நான் வில்லனாக நடித்தது எனக்கு மிகப்பெரிய அந்தஸ்தை ஏற்படுத்தி விட்டது. இந்த படத்தை பார்த்த பிறகு புதிய இயக்குனர் சஜோ சுந்தர் இயக்கும் புதிய படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக பெரிய ரோலில் நடிக்கிறேன். தமிழ் ஹிந்தி என இரண்டு மொழிகளில் படம் தயாராகிறது. இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
வில்லன் வேடம் தான் எனக்கு பிடிக்கும். அதற்குத்தான் எல்லா மொழி மக்களிடமும் வரவேற்பு இருக்கும். கடைசி வரை வில்லனாக நடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது என் ஆசை என்கிறார் ஷான்.
இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் என்கிற பட நிறுவனத்தின் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், மற்றும் அருண் வைத்தியநாதன் தயாரிக்கின்றனர். இதுகுறித்து இயக்குநர் பாலாஜி தரணிதரம் பேசியதாவது,

`சீதக்காதி' படத்தின் கதைக்கு விஜய் சேதுபதி மிக மிக பொருத்தமானவர். நாங்கள் இணையும் இரண்டாவது படம் இது என்பதையும் தாண்டி, இந்த கதாப்பாத்திரத்துக்கு விஜய் சேதுபதி உயிர் வடிவம் கொடுக்க போகிறார் என்பதே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. நாங்கள் மீண்டும் இணைய இருக்கும் `சீதக்காதி' பெரும் எதிர்ப்பார்ப்பை கூட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இந்த படம் இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று இயக்குனர் பாலாஜி தரணிதரன் கூறினார்.
மும்பையை சேர்ந்த பட அதிபர் சகீல் நூரானி. இவர், இந்தி நடிகர் சஞ்சய் தத் ரூ.50 லட்சம் வாங்கிக்கொண்டு ஒப்பந்தம் செய்த படத்தில் நடிக்க மறுத்து விட்டார் என சில ஆண்டுகளுக்கு முன்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அவர், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை வைத்து தன்னை மிரட்டுவதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை அந்தேரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்த நடிகர் சஞ்சய் தத்திற்கு, பிடிவாரண்டு பிறப்பித்து கடந்த 15-ந் தேதி கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து நடிகர் சஞ்சய்தத் நேற்று அந்தேரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.

அப்போது சஞ்சய் தத்தின் வக்கீல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக சஞ்சய் தத் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்றும், இனி சரியாக நடந்து கொள்வார் என்றும் உறுதி அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவரது பிடிவாரண்டை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு, நடிகர் சஞ்சய் தத்திற்கு எதிராக பிறப்பித்த பிடிவாரண்டை ரத்து செய்து உத்தரவிட்டார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோர் நடித்த படங்களுக்கும், அந்தக் காலகட்டத்தில் உருவான மற்ற படங்களுக்கும் இரவு - பகலாக பாடல்கள் எழுதிக்கொண்டிருந்தபோது, படங்களில் நடிப்பதற்கு வந்த அழைப்புகளை வாலி ஏற்கவில்லை.
பிற்காலத்தில், நண்பர்களின் அழைப்பின் பேரில், சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
கே.பாலசந்தர் இயக்கிய "பொய்க்கால் குதிரை'', கமலஹாசனின் "ஹேராம்'', "சத்யா'', "பார்த்தாலே பரவசம்'' ஆகிய 4 படங்களில் நடித்ததுடன், "கையளவு மனசு'', "அண்ணி'' ஆகிய டெலிவிஷன் தொடர்களிலும் நடித்தார்.
ஏராளமான கவிதை நூல்கள் எழுதியிருப்பதுடன், "அவதாரபுருஷன்'' (ராமாயணம்), "பாண்டவர் பூமி'' (மகாபாரதம்), ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம் ஆகிய காவியங்களையும் படைத்துள்ளார்.
"நானும் இந்த நூற்றாண்டும்'' என்ற தலைப்பில் தன் சுய சரிதையை எழுதியுள்ளார்.
1984 அக்டோபரில், எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அவர் குணம் அடைய தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடந்தன.
அப்போது "ஒளிவிளக்கு'' படத்தில் வாலி எழுதியிருந்த "இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ திருவிளக்கு! தலைவா, உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு'' என்ற பாடல்தான் பிரார்த்தனை கீதமாக ஒலிபரப்பப்பட்டது.
இதுகுறித்து வாலி எழுதியிருப்பதாவது:-
"எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது, மிகுந்த மனச்சுமையோடு அவரைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குச் சென்றேன்.
அண்ணியார் ஜானகி அம்மாளும், சத்தியவாணிமுத்து அம்மையாரும் கண் கலங்க நின்று கொண்டிருக்க, நான் அண்ணியாருக்கு ஆறுதல் சொன்னேன்.
"உங்கள் ஒளிவிளக்கு படத்து பாடலைத்தான், நாடே பாடி உங்கள் அண்ணனுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறது. அந்த பிரார்த்தனையின் பலனாகத்தான், அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். இனிமேல் அவருக்கு ஆபத்து இலலை'' என்று திருமதி ஜானகி அம்மையார் கண்கள் பனிக்க என்னிடம் சொன்னார்கள்.
என் பாட்டுடைத் தலைவனுக்கு என் பாட்டே பிரார்த்தனை கீதமாக ஆனது குறித்து, நான் அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன். இருந்தாலும் அண்ணியாரிடம், "அம்மா! இது வாலி பாக்கியம் அல்ல; உங்கள் தாலி பாக்கியம்'' என்று சொன்னேன்.''
இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படங்களுக்கு கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் 10 ஆயிரத்துக்கு மேல். அவற்றில் எம்.எஸ்.விஸ்வநாதன் ஏறத்தாழ 3 ஆயிரம் பாடல்களுக்கும், இளையராஜா சுமார் 3 ஆயிரம் பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளனர்.
வாலியின் பாடல்களில் பி.சுசீலா பாடியவை சுமார் 1,500. டி.எம்.சவுந்தரராஜன் பாடியவை ஏறத்தாழ 700.
"திரை உலகில் நீண்ட காலம் இருந்திருக்கிறீர்கள். இதுவரை வெளிவந்துள்ள படங்களில் உங்களுக்குப் பிடித்த 20 படங்களைக் கூறுங்கள்'' என்று கேட்டதற்கு, வாலி கூறியதாவது:-
"அந்தக் காலத்துப் படங்களில், பாகவதர் நடித்த படங்களில் எனக்குப் பிடித்தது "சிவகவி.'' இதைவிட நீண்ட காலம் ஓடிய படம் "ஹரிதாஸ்'' என்றாலும், சகல அம்சங்களிலும் சிறப்பான படம் "சிவகவி.''
பி.யு.சின்னப்பா நடித்த படங்களில் என்னைக் கவர்ந்தது "குபேர குசேலா.''
சில ஆண்டுகளுக்கு முன் கமலஹாசன் நடித்த "கல்யாணராமன்'' படத்தை இன்றைய தலைமுறையினர் பலர் பார்த்திருப்பார்கள். இதே கதை, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் "இது நிஜமா'' என்ற பெயரில் வெளிவந்தது. எஸ்.பாலசந்தர் இரட்டை வேடங்களில் அற்புதமாக நடித்திருந்தார். நான் மிகவும் ரசித்த படம் அது.
1947-ல் வெளிவந்த "ஏவி.எம்'' தயாரித்த "நாம் இருவர்'', கே.சுப்பிரமணியம் தயாரித்த "தியாகபூமி'', ஜெமினியின் "நந்தனார்'', "அவ்வையார்'' ஆகிய படங்களும் என்னைக் கவர்ந்தவை.
என் மனதில் இடம் பெற்ற சிறந்த படங்களின் பட்டியலில் உள்ள மற்ற படங்கள்:-
மந்திரிகுமாரி, மனோகரா, நாடோடி மன்னன், பெற்றால்தான் பிள்ளையா, உலகம் சுற்றும் வாலிபன், தில்லானா மோகனாம்பாள், வியட்னாம் வீடு, அபூர்வ சகோதரர்கள் (கமல்), நாயகன், இருகோடுகள், புவனா ஒரு கேள்விக்குறி, அந்த 7 நாட்கள், சில நேரங்களில் சில மனிதர்கள்.''
இவ்வாறு வாலி கூறினார்.
சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதுகளை 4 முறை பெற்றவர் வாலி.
1972-ல் "கலைமாமணி'' விருது பெற்றார்.
"கலை வித்தகர்'' என்பதற்கான தமிழக அரசின் பாரதிதாசன் விருது, தமிழக அரசின் பாரதி விருது (ரூ.1 லட்சம்) முரசொலி அறக்கட்டளை விருது (ரூ.1 லட்சம்), ஆழ்வார் மையத்தின் தமிழ்த்தாத்தா உ.வே.சா. விருது (ரூ.25,000) முதலான விருதுகள் கிடைத்துள்ளன.
இவர் கதை - வசனம் எழுதிய "ஒரே ஒரு கிராமத்திலே'' படம், மத்திய அரசின் விருது பெற்றது.
வாலி -திலகம் தம்பதிகளுக்கு ஒரே மகன் வி.பாலாஜி. "எம்.ஏ'' பொருளாதாரம் படித்தவர். சொந்த தொழில் செய்கிறார்.
தமிழில் பேசும் படங்கள் வரத்தொடங்கி 75 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை திரையில் ஒலித்த பல்லாயிரக்கணக்கான பாடல்களில், தனக்குப் பிடித்த 20 பாடல்களை வாலி கூறுகிறார். (தான் எழுதிய பாடல்களை அவர் தவிர்த்துள்ளார்.)
1. வள்ளலைப் பாடும் வாயால்...
(படம்: `சிவகவி' பாடியவர்: பாகவதர் பாடலாசிரியர்: பாபநாசம் சிவன் இசை: ஜி.ராமநாதன்)
2. மானமெல்லாம் போனபின்னே...
(`கண்ணகி' பி.யு.சின்னப்பா உடுமலை நாராயணகவி எஸ்.வி.வெங்கட்ராமன்)
3. காற்றினிலே வரும் கீதம்...
(`மீரா' எம்.எஸ்.சுப்புலட்சுமி கல்கி எஸ்.வி.வெங்கட்ராமன்)
4. வெண்ணிலாவே...
(`அவ்வையார்' கே.பி.சுந்தராம்பாள் கொத்தமங்கலம் சுப்பு எம்.டி.பார்த்தசாரதி, ராஜேஸ்வரராவ்)
5. சிந்தையறிந்து வாடி...
(`ஸ்ரீவள்ளி' பி.ஏ.பெரியநாயகி பாபநாசம் சிவன் சுதர்சனம்)
6. இந்த உலகில் இருக்கும் மாந்தரில்...
(`கஞ்சன்' எம்.எம்.மாரியப்பா அய்யா முத்து எஸ்.எம்.சுப்பையா நாயுடு)
7. வாழ்க்கை என்னும் ஓடம்...
(`பூம்புகார்' கே.பி.சுந்தராம்பாள் கலைஞர் மு.கருணாநிதி சுதர்சனம்)
8. அருள் தரும் தேவமாதாவே...
(`ஞானசவுந்தரி' பி.ஏ.பெரியநாயகி கம்பதாசன் எஸ்.வி.வெங்கட்ராமன்)
9. ஆடல் காணீரோ!...
(`மதுரை வீரன்' எம்.எல்.வசந்தகுமாரி உடுமலை நாராயணகவி ஜி.ராமநாதன்)
10. மணப்பாறை மாடு கட்டி...
(`மக்களைப் பெற்ற மகராசி' டி.எம்.சவுந்தரராஜன் மருதகாசி கே.வி.மகாதேவன்)
11. துணிந்தபின் மனமே...
(`தேவதாஸ்' கண்டசாலா கே.டி.சந்தானம் சி.ஆர்.சுப்பராமன், எம்.எஸ்.விஸ்வநாதன்)
12. வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்...
(`நான் பெற்ற செல்வம்' டி.எம்.சவுந்தரராஜன் கா.மு.ஷெரீப் ஜி.ராமநாதன்)
13. மயக்கமா, கலக்கமா?...
(`சுமைதாங்கி' பி.பி.சீனிவாஸ் கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதன்)
14. சோதனை மேல் சோதனை...
(`தங்கப்பதக்கம்' டி.எம்.சவுந்தரராஜன் கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதன்)
15. நான் ஒரு சிந்து...
(`சிந்துபைரவி' சித்ராறீ வைரமுத்து இளையராஜா)
16. வசந்த கால கோலங்கள்...
(`தீபம்' எஸ்.ஜானகி கண்ணதாசன் இளையராஜா)
17. சின்னச்சின்ன ஆசை...
(`ரோஜா' மின்மினி வைரமுத்து ஏ.ஆர்.ரகுமான்)
18. ஆயிரம் நிலவே வா...
(`அடிமைப்பெண்' எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சுசீலா புலமைப்பித்தன் கே.வி.மகாதேவன்)
19. திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்...
(`கந்தன் கருணை' சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி பூவை செங்குட்டுவன் குன்னக்குடி வைத்தியநாதன்)
20. அன்புக்கு நான் அடிமை...
(`இன்றுபோல் என்றும் வாழ்க' ஜேசுதாஸ் முத்துலிங்கம் எம்.எஸ்.விஸ்வநாதன்)
இந்நிலையில், மலையாளத்தின் மூத்த எழுத்தாளரும், கதாசிரியருமான எம்.டி.வாசுதேவநாயரின் ‘இரண்டாம் ஊழம்’ என்ற நாவலை மையப்படுத்தி ரூ.600 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த படத்தில் மோகன்லால் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தது. தற்போது அந்த செய்தியை உறுதிப்படுத்தும்விதமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

பி.ஆர்.ஷெட்டி என்ற தயாரிப்பாளர் இந்த நாவலை படமாக தயாரிக்க முன்வந்துள்ளார். ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகப்போவதாக கூறப்பட்ட இந்த படத்தை ரூ.1000 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளார்களாம். இப்படத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளார். மேலும், இப்படத்திற்கு ‘மகாபாரதா-ரெண்டாம் ஊழம்’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ செய்திகள் வெளிவந்துள்ளது. மகாபாரத்தில் பஞ்ச பாண்டவர்களில் இரண்டாவதாக வரும் பீமனின் பார்வையில் வைத்து இந்த கதையை எழுதியுள்ளாராம்.
ஸ்ரீகுமார் மேனன் இப்படத்தை இயக்கவுள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படமாக்கவுள்ளனர். இதுதவிர, பிற இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் இப்படத்தை டப் செய்து வெளியிடவுள்ளனர். இந்திய சினிமா மற்றும் ஹாலிவுட் சினிமாவில் உள்ள கலைஞர்கள் இப்படத்தில் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பை 2018 செப்டம்பர் மாதத்தில் தொடங்கி, 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை இரண்டு பாகமாக எடுக்கவுள்ளதாகவும், முதல் பாகம் வெளிவந்த அடுத்த 3 மாதங்களுக்குள் இரண்டாம் பாகத்தை வெளியிடவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மோகன்லால் நடிக்கவுள்ள இப்படத்தில் ஏற்கெனவே பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரும் இணையப்போவதாக செய்திகள் வெளிவந்தது. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. கூடிய விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என நம்பலாம்.
இதைத் தொடர்ந்து அவருக்கும் படவாய்ப்புகள் குவிந்துவருகிறது. இந்நிலையில், இந்த நடிகையின் இன்னொரு முகம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, இவர் மிகப்பெரிய குத்துச்சண்டை வீராங்கனையாம். ஆனால், இவர் சினிமாவில் நடிக்கவேண்டும் என்று குத்துச்சண்டை கற்றுக் கொள்ளவில்லையாம். தற்காப்புக்காகவே இவர் குத்துச்சண்டை கற்றுக் கொண்டாராம்.

இதுவரைக்கும் எந்த போட்டியிலும், சினிமாவிலும் தான் குத்துச்சண்டை வீராங்கனை என்பதை காட்டிக்கொள்ளாத மச்சான் நடிகை, இனிமேல் குத்துச்சண்டை வீராங்கனையாக சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். இவருடைய இந்த முடிவுக்கு சமீபத்தில் சினிமாவுக்கு வந்த குத்துச்சண்டை நாயகிதான் காரணமாம். அவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து மிரண்டுபோய்தான் மறைத்து வைக்கப்பட்டிருந்த திறமையை தற்போது வெளிக்கொண்டு வர முடிவுசெய்துள்ளாராம் மச்சான் நடிகை.
இதுபற்றி கூறிய நிவேதா பெத்துராஜ், “எனக்கு ஜெயம் ரவியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்த உடன் சந்தோஷத்தில் மிதந்தேன். பெரிய நடிகருடன் சேர்ந்து எப்படி நடிக்கப் போகிறோம் என்ற பயம் என்னை தொற்றிக் கொண்டது. இதனால் படப்பிடிப்புக்கு பயந்து கொண்டே சென்றேன்.

நான் நடித்த போது பல டேக் எடுக்கும் நிலை ஏற்பட்டது. அதை ஜெயம் ரவி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எந்த மாதிரி நடிக்க வேண்டும் என்பதை சொல்லிக்கொடுத்தார். நான் நடிக்கும் போது என்ன தவறு செய்தாலும் அதை பொறுத்துக்கொண்டு, அவர் பொறுமையாக நடித்தார். ஜெயம் ரவி துளிகூட பந்தா இல்லாதவர். மிகவும் எளிமையான இயல்பான நடிகர். அவருடைய இந்த நல்ல குணம், எனக்கு அவர் மீது இருந்த மரியாதையை பல மடங்கு உயர்த்தி விட்டது” என்றார்.
தமிழ் சினிமாவில் தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களில் பிசியாக நடித்து வருபவர் சாந்தினி தமிழரசன். எந்தவித வேடங்களிலும் நடிக்கும் இவர் பல படங்களில் கவுரவ வேடங்களிலும் நடிக்கிறார். ‘கடுகு’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார்.
இப்போது, தரணிதரன் தனது பர்மா பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கும் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் சாந்தினி எழுத்தாளராக நடிக்கிறார். இதுபற்றி கூறிய அவர்...
‘ரங்குஸ்கி’ என்பது பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் புனை பெயர். இந்த படத்தில் நான் ஒரு தைரியமான எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது நகர்புறத்து பெண் வேடம். இதுவரை நான் நடித்த பாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இதில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த படத்தில் ராஜா கதாபாத்திரத்தில் நடிக்கும் நாயகன் ஷிரிஷ். இவர் படப்பிடிப்பு தளத்தில் எனக்கு பக்கபலமாக இருக்கிறார். இதுதவிர பலவிதங்களிலும் உறுதுணையாக இருந்து வருகிறார். ‘ராஜா ரங்குஸ்கி’ அனைவரும் விரும்பும் படமாக இருக்கும் என்றார்.








