என் மலர்
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த தீர்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட விலக்கில், மேலும் சில பிரிவு மாற்றுத்திறனாளிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, பெருமூளை வாதம், தசைநார் தேய்வு, 'Parkinsons' நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் இதில் இணைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும்போது, இனி இவர்கள் எழுந்து நிற்கத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. இப்படத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். ‘சென்னையில் ஒருநாள்’ படத்தைப் போன்று பரபரப்பான திரில்லர் படமாக உருவாகவிருக்கிறது. பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய திரில்லர் கதையை தழுவு இப்படம் எடுக்கப்படுகிறது. ராஜேஷ்குமாரின் கதையை மையமாக வைத்த எடுக்கப்பட்ட ‘குற்றம் 23’ படம் அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜெ.பி.ஆர். இயக்குகிறார். தீபக் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். ‘மாயா’ புகழ் ராண் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தில் முனீஸ்காந்த், அஞ்சனா பிரேம், ராஜசிம்ஹான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். குழந்தை நட்சத்திம் சாதன்யாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் சரத்குமார் புலன் விசாரணை அதிகாரியாக வருகிறாராம். இவர் விசாரணை செய்யும் காட்சிகள் எல்லாம் பரபரப்பாக இருக்குமாம். இப்படத்தின் பூஜை சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்தது. படப்பிடிப்பும் கோவையிலேயே தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து 30 நாட்கள் அங்கு படமாக்க இருக்கின்றனர்.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியே கிடையாதாம். இருந்தாலும், சிறப்பு தோற்றங்களில் சில நடிகைகளை நடிக்க வைக்கப்போவதாக அறிவித்துள்ளனர். அதன்படி, காயத்ரி, ரம்யா நம்பீசன், ஓவியா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கப்போவதாக கூறியுள்ளனர். மேலும், நயன்தாராவையும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இயக்குனர் மகேந்திரன், விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தெறி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1970 முதல் 7 ஆண்டுகள் மேஜர் சுந்தர்ராஜனுடன் நாடகங்களில் நடித்து வந்தார், சிவகுமார். "அப்பாவி'' என்ற நாடகம், ஆயிரம் தடவை மேடை ஏறியது. 1000-வது நாடகத்துக்கு சிவாஜி தலைமை தாங்கினார்.
நாடகத்தைப் பார்த்தபின் சிவகுமாரிடம், "கவுண்டா! இத்தனை நாள் எங்கேடா ஒளிச்சு வச்சிருந்தே இம்புட்டுத் திறமையை! கல்யாணம் பண்ணினதும் வீரம் வந்துடுச்சா?'' என்று தமாஷாகக் கூறினார்.
சிவகுமார் குணச்சித்திர வேடத்தில் நடித்த படம் "இனி ஒரு சுதந்திரம்.'' இது 1987-ல் வெளிவந்தது. சிவகுமாரின் 154-வது படம்.
இந்தப்படம் சிவாஜிக்குப் போட்டுக் காட்டப்பட்டது. படம் பார்த்து முடிந்து வெளியே வந்த சிவாஜி, "படத்தைப் பார்த்தேன். பிரமாதமா பண்ணி இருக்கே. `கப்பலோட்டிய தமிழன்'லே உயிரைக் கொடுத்து நடித்தேன். தமிழ்நாட்டு மக்கள் எனக்குப் பட்டை நாமத்தைப் போட்டுட்டாங்க. உனக்குக் குழச்சிக்கிட்டு இருக்காங்க'' என்று சிவகுமாரிடம் சொன்னார்.
"சிவாஜி சொன்னது மாதிரி எனக்கும் நாமம் போடப்பட்டது'' என்று கூறுகிறார், சிவகுமார்.
சிவாஜியுடன் பழகிய சில நாட்களை நினைவு கூர்ந்த சிவகுமார் நெஞ்சம் நெகிழ கூறியதாவது:-
"உறுதிமொழி படப்பிடிப்பு. நானும் பிரபுவும் தேக்கடியில் நடித்துக் கொண்டிருந்தோம். அங்கே ஒரு நாள் சிவாஜி குடும்பத்துடன் வந்திருந்தார். எங்கள் வீட்டிலிருந்து என் மனைவி, குழந்தைகள் எல்லாம் வந்திருந்தனர். சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டோம். அப்படியே என் தோள் மீது கைபோட்டபடி தனியே நடந்த சிவாஜி, "கவுண்டரே! சிவாஜிகணேசன் தேக்கடிக்கு கெஸ்ட்டா வந்திருக்கேண்டா'' என்று குரல் தழுதழுக்கச் சொன்னார்.
"அண்ணே, என்ன பேச்சு பேசுறீங்க! நீங்க சாப்பிட்டு மிச்சமான சோற்றைத்தான் நாங்க சாப்பிடுறோம். நீங்கள் மிதித்த புல்லுலதான் நாங்க விளையாடுகிறோம். எந்தக் கொம்பனும் இந்தத் தமிழ் மண்ணுல உங்க சாதனையை முறியடிச்சிட முடியாது'' என்றேன்.
"அப்படியா நினைக்கிறே?''
"இது என் தாய் மேல் சத்தியம்! தொழில் மேல் சத்தியம்'' என்றேன்.
"எல்லாரும் அப்படி நினைப்பாங்களா?'' சிவாஜியின் கேள்வி என்னைக் கலங்கச் செய்து விட்டது.
தேக்கடியில் ஓட்டல் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள், என் மகள் பிருந்தா. அப்போது அங்கே சிவாஜி வந்தார். "குட் மார்னிங் அங்கிள்'' என்று சொன்னாள்.
"நான் உனக்கு அங்கிள் இல்லம்மா. உங்கப்பன் என் தம்பி! நான் உன் பெரியப்பன்'' என்றார். அது முதல் சிவாஜியை பிருந்தா, "பெரியப்பா'' என்றுதான் அன்போடு அழைப்பாள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, சிங்கப்பூர் கலை நிகழ்ச்சியில் சிவாஜி மயங்கி விழுந்து விட்டார். "ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிர் ஊசலாடுகிறது'' என்றும், ஒரு கட்டத்தில் "சிவாஜி இறந்து விட்டார். உடல் விமானத்தில் வருகிறது'' என்றெல்லாம் செய்திகள். எனக்கு இதயமே ஒரு நொடி நின்று விட்டதுபோல் ஆகிவிட்டது. "பெரியப்பா சாகமாட்டாருப்பா! அவர் கம்பீரமாகத் திரும்பி வருவார் பாருங்க'' என்றாள், பிருந்தா.
"மகளே, உன் வாய் முகூர்த்தம் பலிச்சுட்டா, ஒரு பூச்செண்டு தர்றேன், அதை உன் கையாலேயே பெரியப்பாவுக்குக் கொடுத்துடு'' என்றேன்.
அதேபோல் புது ரத்தம், புதுப்பொலிவுடன் ஒரு மாத ஓய்வுக்குப் பின் திரும்பி வந்தார். குடும்பத்துடன் போய்ப் பார்த்தேன். அவர் அருகில் ஒரு நாற்காலி - உட்காரச் சொன்னார். நான் தரையில் அமர்ந்தேன். என் தலையைத் தடவிவிட்டபடி சிவாஜி சொன்னார்:
"நாமெல்லாம் `முன்னொருகால நடிகர்கள்'டா சிவா! எல்லாம் முடிஞ்சுப் போச்சு. நம்மை யாரு ஞாபகம் வச்சிருக்கா? சிங்கப்பூர்ல பாரு, அஞ்சாயிரம் பேர் கூடியிருக்காங்க. இருபது அடிக்கு முப்பது அடி திரையில் கட்டபொம்மன் காட்சியைப் போடுறான். அஞ்சாயிரம் பேரும் அடிக்கிறான் விசில்.
"தங்கப்பதுமை... `ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே' போட்டா... அவனவன் சாமி ஆடறான். `தங்கப்பதக்கம்' அரங்கமே குலுங்குது!
"சிவா! வாட் ஏ பைன் மூவ்மெண்ட்! உங்க அண்ணன் ஏன்டா அப்ப சாகல? எதுக்காகடா உயிரோட வந்தேன்?''
இப்படி சொல்லும்போது சிவாஜிக்கும் எனக்கும் கண்களில் நீர் முட்டித் தளும்பியது.
நூறு வயது வாழணும்னு ஆசை இருந்தா கூட, ஒரு கலைஞனுக்கு எப்படி முடிவு வரவேண்டும் என்று அவர் கற்பனை செய்து வைத்திருந்தார்.
1981-ல் முத்துராமன் ஊட்டியில் இறந்தபோது, அவரது உடலை நானும் திருப்பூர் மணி படக்குழுவும் சென்னைக்கு எடுத்து வந்தோம். அதிகாலை 4 மணி. முத்துராமன் வீட்டு வாசலில் சிவாஜியும் முன்னாள் டி.ஜி.பி. பரமகுருவும் காத்திருந்தார்கள். "கவுண்டரே, தேவனுக்கு (முத்துராமன்) நல்ல சாவுடா! கொஞ்ச நாளா படமில்லாம வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். ஷூட்டிங் போன இடத்துல உடற்பயிற்சிக்காக ஓடிக்கிட்டிருக்கும்போது உயிர் போறது வீர மரணம். உனக்குத் தெரியுமா? நம்ம நடிக ஜாதியில ஒருத்தர், விஸ்வநாததாஸ் - மேடையில முருகன் வேஷம் கட்டி மயில்மேல் வள்ளி தெய்வானைக்கு நடுவுல உட்கார்ந்திருக்கும்போது செத்துப் போயிட்டார். எவ்வளவு கொடுத்து வைத்த சாவு. சாவுன்னா, அப்படி வரணும்'' என்றார்.
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை!
மனிதர்கள் பிறக்கலாம், இறக்கலாம். ஆனால், தமிழ் உள்ளளவும் தமிழ் சினிமா உள்ளளவும் அந்த ஒரு உலக மகா கலைஞனின் சாதனையை யாரும் மறந்திட முடியாது!''
இவ்வாறு சிவகுமார் கூறினார்.
கலைஞர் மு.கருணாநிதியுடன் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி சிவகுமார் கூறியதாவது:-
"1980-களின் கடைசியில், "பாசப்பறவைகள்'', "பாடாத தேனீக்கள்'' என்று இரண்டு படங்களில் கலைஞர் அவர்களின் வசனங்களைப் பேசி நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்தக் காலக்கட்டங்களில், அடுக்கு மொழி வசனம், இரண்டு வரி வசனமாகச் சுருங்கிவிட்டது.
படத்தின் வெற்றி விழாக்களில், சிவாஜிக்கு அவர் எழுதிய நீண்ட வசனங்களை பேசிக்காட்டி மகிழ வைத்திருக்கிறேன்.
துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி ஆகியோருடன் கலைஞர் என் இல்லம் வந்து 90 நிமிடங்கள் என் ஓவியங்களை கண்டு களித்திருக்கிறார்.
என் புத்தகத்துக்கு வாழ்த்துரை எழுதிக் கொடுத்தார். நான் ஓட்ட என் காரில் அவர் சவாரி செய்திருக்கிறார்.
அவரது தமிழ்ப்பற்றும், நினைவாற்றலும் எப்போதும் என்னை பிரமிக்க வைக்கும்.''
இவ்வாறு சிவகுமார் குறிப்பிட்டார்.
ஆனால், இப்படத்தில் நடிப்பதாக கூறி முன்னதாக கால்ஷீட் கொடுத்த விஜய் சேதுபதி, படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில் இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அமலாபாலும் கால்ஷீட் பிரச்சினையால் இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அமலாபால் விட்ட இடத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வடசென்னை படத்தில் அமலாபால் நடிக்கவேண்டிய கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா ராஜேஷை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாப் போர்டு புரொடக்ஷன் சார்பில் சத்திய மூர்த்தி தயாரித்து நடித்து இருக்கும் படம் ‘தப்புதண்டா’. இயக்குனர் பாலுமகேந்திராவின் சீடர் ஸ்ரீகண்டன் இயக்கியுள்ள இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இதில் கலந்து கொண்ட வில்லன் நடிகர் அஜய்கோஷ் மேடையில் மண்டியிட்டு தமிழக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் பேசிய அவர், “தமிழ் ரசிகர்களும், தமிழ் ஊடகங்களும் எனக்கு தரமான ஒரு அங்கீகாரம் பெற்று தந்திருக்கிறார்கள். இந்த கவுரவம் எனக்கு மிகப்பெரிய சொத்து.
‘விசாரணை’, ‘தப்புத்தண்டா’ படங்களில் உள்ள எனது பாத்திரங்கள், உங்கள் அனைவரின் நல்லாசியுடன், தமிழ் திரைஉலகில் நானும் ஒரு முன்னணி வில்லனாக வருவேன் என்ற நம்பிக்கையை தருகிறது” என்றார்.

நாயகன் சத்யமூர்த்தி பேசும்போது, “திரை உலகில் முதலாவதாக அடியெடுத்து வைத்திருக்கிறேன். ‘தப்புதண்டா’ ரசிகர்களுக்கு கோடை விருந்தாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.
இயக்குனர் ஸ்ரீகண்டன், “இது எல்லோரும் ரசிக்கும் படமாக இருக்கும். அஜய்கோஷ் வில்லன் அடையாளம் இந்த படத்தில் வலு பெறும்”என்றார்.
விழாவில் பாலுமகேந்திரா மனைவி அகிலா, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தேனப்பன், இயக்குனர்கள் சக்தி சிதம்பரம், லோகேஷ், கனகராஜ், ஸ்ரீகணேஷ், நடிகர் உதய், பிரவீன்காந்த் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.
ஆனால், அவரும் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக அடிக்கடி செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. ஆனால், அவரோ தான் இப்படத்திலிருந்து விலகவில்லை என்பதை உறுதியாக கூறிவந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் அமலாபால் இப்படத்தில் விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கால்ஷீட் பிரச்சினையால் இப்படத்தில் இருந்து அமலாபால் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தி இதுவரை வெளியாகவிட்டாலும் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே, இப்படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதியும் விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்திற்கு சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை குழுவினருக்கு ‘பாகுபலி-2’ பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு-ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். ‘பாகுபலி’ முதல் பாகத்தில் தணிக்கை குழுவினர் ‘யு-ஏ’ சான்றிதழ் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 2 மணி 45 நிமிடங்கள் வரை படத்தின் நீளம் இருக்கும் என்றும் அறிவித்துள்ளனர். இப்படத்தை உலகம் முழுவதிலும் 7000-க்கும் அதிகமான காட்சிகள் திரையிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய பாகத்தைவிட இரண்டாம் பாகத்தில் விறுவிறுப்பான காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறப்படுவதால், கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
சிறிய இடைவெளிக்குப்பிறகு இப்போது, அருள்நிதி நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் நடிக்கிறார். இது குறித்து கூறிய ஓவியா, 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். இதுவரை நான் எதிர்பார்த்தபடி அழுத்தமான வேடங்கள் கிடைக்கவில்லை. இந்த படத்தில் நல்ல வேடம் அமையும் என்று நம்புகிறேன்.

நல்ல வேடங்கள் கிடைக்காததால் தான் சில தமிழ்படங்களை ஒத்துக்கொள்ளவில்லை. அழுத்தமான பாத்திரங்களுக்காக காத்து இருந்தேன். தமிழுக்கு இடைவெளி விட்டேன். இதற்கிடையே தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து இருக்கிறேன். ஒரு படம் மே மாதம் வெளியாகிறது.
இதுவரை 13 படங்கள் நடித்து இருக்கிறேன். என்றாலும், எனக்கு மன நிறைவு கொடுத்த படங்கள் இன்னும் அமையவில்லை. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை தொடர்ந்து மாறுபட்ட நல்ல வேடங்களில் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்க்கிறேன். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு படத்திலும் இனி கூடுதல் கவனம் செலுத்துவேன் என்றார்.
இதுகுறித்து கூறிய ‘மைனா’ நந்தினி, “காதலித்து திருமணம் செய்து கொண்டதுதான் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு. கணவருடன் வாழ்ந்த ஆரம்ப காலத்தில் சந்தோஷமாகத்தான் இருந்தேன். கடந்த 3 மாதமாக அவரது அன்பு குறைய ஆரம்பித்தது. ஒத்துப்போகவில்லை. அதனால் விலகி இருந்தேன்.

அவருடைய திடீர் மரணம் என் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது. அதைவிட கணவரின் பெற்றோர் என் மீது சுமத்தும் அவதூறுகளைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு பெண்ணாக நான் எல்லா அவமானங்களையும் சந்தித்து விட்டேன். நான் ஏமாந்து விட்டேன். ஏமாற்றப்பட்டு விட்டேன்.
கார்த்தி இறந்த உடனே, நானும் இறந்திருக்க வேண்டும். என்றாலும், அதனால் எந்த பிரச்சினையும் தீரப்போவது இல்லை. எனவே, என்னை நம்பி இருக்கும் பெற்றோருக்கு ஏதாவது செய்ய வேண்டும். அதற்காக வாழ்கிறேன். இப்போது வலிகளுடன் போராடிக் கொண்டிருக்கிறேன். என்னை நடிகையாக பார்க்காமல், ஒரு பெண்ணாக பார்த்து நிம்மதியாக இருக்க விடுங்கள்” என்று தெரிவித்து இருக்கிறார்.
சென்னை ஐகோர்ட்டில் ஏ.சி.இ. என்ற நிதி நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கில், ‘ஸ்ரீ கிரீன் புரொடக்சன் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன், ‘பாகுபலி-2’ திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட உரிமம் பெற்றுள்ளார். இவர், கடந்த 2016-ம் ஆண்டு ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் கடன் கேட்டார். இந்த தொகை பிரபுதேவா ஸ்டூடியோ நிறுவனத்தில் பெயரில் வழங்கப்பட்டது. இந்த கடன் தொகையுடன் ரூ.10 லட்சம் வட்டியுடன் சேர்த்து, ‘பாகுபலி-2’ படத்தை வெளியிடுவதற்கு முன்பாக தருவதாக சரவணன் கூறினார்.

இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தமும் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த கடன் தொகையை ‘பாகுபலி-2’ படம் வெளியான பின்னர் தருவதாக சரவணன் கூறுகிறார். இது கடன் ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். மேலும், அவருக்கு கடனை திருப்பித் தரவேண்டும் என்ற எண்ணமும் இல்லை. எனவே, கடன் தொகையை வட்டியுடன் திருப்பித்தராமல் ‘பாகுபலி-2’ படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பாகுபலி-2’ படத்தை வெளியிட தடை விதிக்க நீதிபதி மறுத்து விட்டார். மேலும், இந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி எதிர் மனுதாரருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
விசாரணையை 18-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர் இடையே கடன் தொடர்பான பிரச்சினையில் சுமூக முடிவு ஏற்பட்டதாக இருதரப்பு வக்கீல்களும் கூறினார்கள். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், சாருஹாசனும், ஜனகராஜும் இணைந்து புதிய படமொன்றில் இணையவிருக்கிறார்கள். இப்படத்திற்கு ‘தாதா 87’ என்ற பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் சாருஹாசன் தாதாவாக நடிக்கிறாராம். ஜனகராஜ் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக வருகிறாராம். இவர்தான் படத்தின் கதாநாயகியின் தந்தையாவும் நடிக்கிறாராம்.

இப்படத்தை விஜய் ஸ்ரீ என்பவர் இயக்குகிறார். லியான்டர் லீ மார்ட்டி என்பவர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் போஸ்டரை நேற்று நடிகை கேத்ரீன் தெரசா வெளியிட்டுள்ளார். இப்படத்திற்காக கமல்ஹாசன் ஒரு பாடல் பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கலை சினிமா நிறுவனம் மூலம் கலைசெல்வன் மருதை என்பவர் இப்படத்தை தயாரிக்கிறார்.








