என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    பிரபல பின்னணி பாடகர் சோனு நிகம் குறிப்பிட்ட மதத்தினர் ஒலிப்பெருக்கி பயன்படுத்துவது குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு கண்டனத்தை தொடர்ந்து அவர் திடீரென தலையை மொட்டை அடித்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    குறிப்பிட்ட மதத்தினர் ஒலிப்பெருக்கி பயன்படுத்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்து, பிரபல இந்தி பின்னணி பாடகர் சோனு நிகம் டுவிட்டரில் சமீபத்தில் கருத்து தெரிவித்தார். காலையில் எழுந்தவுடன் அவர்களது மதவழிபாட்டை நான் ஒலிப்பெருக்கியில் கேட்க வேண்டிய அவசியம் என்ன? என்று அவர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கு கொல்கத்தாவை சேர்ந்த மத தலைவர் ஒருவர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சோனு நிகமின் தலையை மொட்டை அடித்து, அவருக்கு செருப்பு மாலை அணிவிப்பவருக்கு ரூ.10 லட்சம் ரொக்க பரிசு தருவதாக அறிவித்தார். இதனால், இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில், சோனு நிகம் நேற்று மும்பையில் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, தன்னுடைய கருத்து குறித்து அவர் விளக்கம் அளித்து கூறியதாவது:-

    ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் நான் பேசினேன். எனது கருத்தை தெரிவிக்க எனக்கு உரிமை இருக்கிறது. இதனை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். ஒலிப்பெருக்கி ஒன்றும் அத்தியாவசியம் அல்ல. ஒலிப்பெருக்கிகள் எந்த மதத்துக்கும் சொந்தமானதும் அல்ல. நான் ஏதாவது தவறாக பேசியிருந்தால், தயவுசெய்து மன்னிக்கவும். சமூகம் சார்ந்த விஷயத்தை தான் பேச எண்ணினேனே தவிர, மத விஷயத்தை அல்ல.

    பாடகர் சோனு நிகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போதும், பின்னர் மொட்டை போட்டு வந்ததையும் படத்தில் காணலாம்.

    நான் ஒரு மதச்சார்பற்ற நபர். நடுநிலை வகிப்பவன். என்னை போன்ற நடுநிலையாளர்களை காண்பது மிகவும் அரிது. ஆகையால், நானும் இங்கு சிறுபான்மை பிரிவை சார்ந்தவன் தான். இன்றைக்கு ஆலிம் ஹக்கீம் என்ற சிகை அலங்கார நிபுணர் இங்கு வந்து, எனது தலையை மொட்டை அடிப்பார். சொன்னபடி, ரூ.10 லட்சத்தை தயாராக வைத்திருங்கள்.

    இவ்வாறு சோனு நிகம் தெரிவித்தார்.

    அத்துடன், சிகை அலங்கார நிபுணர் அங்கு வந்தார். உடனடியாக சோனு நிகம் ஒரு அறைக்குள் அவரை அழைத்து சென்று தன்னுடைய தலையை மொட்டை அடித்து கொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

    எனினும், சோனு நிகமின் செய்கையால் சமாதானம் அடையாத குறிப்பிட்ட மத தலைவர், “மொட்டை மட்டும் தான் சோனு நிகம் அடித்திருக்கிறார். செருப்பு மாலை பற்றியும் நான் பேசியிருந்தேன்” என்றார்.

    அத்துடன், சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாடகர் சோனு நிகம் மீது அவுரங்காபாத் ஜின்சி போலீஸ் நிலையத்தில் ஒருவர் புகார் செய்துள்ளார்.

    43 வயதான பின்னணி பாடகர் சோனு நிகம், தமிழ் திரைப்படங்களிலும் பாடல்களை பாடியிருக்கிறார். ஆர்யா நடித்த ‘மதராசப்பட்டிணம்’ படத்தில் இவர் பாடிய ‘ஆருயிரே’ என்ற பாடல் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.
    நடிகை சமந்தா சிலம்பாட்டத்தில் கைதேர்ந்தவராக உருவாகியிருக்கிறார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    சமந்தாவுக்கும் - தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் இந்த வருடத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதனால், அதிகமான படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல், இதுவரை ஒத்துக்கொண்ட படங்களில் நடித்துக் கொடுத்துவிடுவது என்று முடிவு செய்து, அந்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

    அந்த வரிசையில், விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படம், பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம், சாவித்ரி வாழ்க்கை வரலாற்று படம், விஷாலுடன் இரும்பு திரை, விஜய் சேதுபதியுடன் அநீதி கதைகள், இதுதவிர இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

    இடைவிடாது படப்பிடிப்புக்கு இடையிலும், தற்போது சிலம்பமும் அவர் கற்றுத் தேர்ந்துள்ளார். இவர் சிலம்பம் சுற்றுவதுபோல் ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர் தற்காப்புக்காக சிலம்பம் கற்றுக்கொண்டாரா? அல்லது ஏதாவது படத்திற்காக சிலம்பம் கற்றுக் கொண்டாரா? என்பது குறித்து தகவல் ஏதும் வெளிவரவில்லை.

    பாகுபலி-2 படத்தை திரையிடும் உரிமையை முடக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு, அந்த படத்தின் வெளியீட்டாளர் பதிலளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
    சென்னை ஐகோர்ட்டில், அண்ணாநகரை சேர்ந்த எஸ்.கார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ‘கே புரொடக்‌ஷன்ஸ்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.என்.ராஜராஜன். இவர், ‘சவாலே சமாளி’ என்ற திரைப்படத்தை தயாரிக்க 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பல தவணைகளில் என்னிடம் ரூ.1 கோடியே 11 லட்சத்தை கடனாக பெற்றார். அந்த திரைப்படம் தோல்வியடைந்ததால், இந்த கடனை அவரால் தர முடியவில்லை. நானும் அந்த கடனை திருப்பி கேட்கவில்லை.

    இந்த சூழ்நிலையில், நடிகர் சத்யராஜ், பிரபாஸ், தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பாகுபலி-2’ என்ற திரைப்படத்தின் (இந்தி மொழி தவிர) தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளின் வெளியிடும் உரிமை, வெளிநாடுகளில் திரையிடும் உரிமை, ‘சேட்டிலைட்’ உரிமை உள்ளிட்ட உரிமைகளை ராஜராஜன் பெற்றுள்ளார்.

    இதையடுத்து நான் கொடுத்த கடன் தொகையை வட்டியுடன் ரூ.1.48 கோடி கேட்டபோது, அவர் காசோலை வழங்கினார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது, அவரது வங்கி கணக்கு முடிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து அவருக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினேன். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. எனவே, எனக்கு தரவேண்டிய ரூ.1.48 கோடிக்கு, சொத்து உத்தரவாதத்தை வழங்க ராஜராஜனுக்கு உத்தரவிடவேண்டும். இந்த உத்தரவாதத்தை தர அவர் தவறினால், ‘பாகுபலி-2’ படத்தின் அனைத்து உரிமைகளையும், முடக்கம் செய்து உத்தரவிடவேண்டும்.

    அதேபோல, அவர் தயாரித்து விரைவில் வெளியில் வர உள்ள ‘மடை திறந்து’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘ஸ்நோ டைம்’ உள்ளிட்ட படங்களையும் வெளியிட தடைவிதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் பி.ராஜா ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி ‘கே புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் ராஜராஜனுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
    “நான் எதற்கும் பயப்பட மாட்டேன்” என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
    சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:-

    “முடியாது, நடக்காது என்ற சொல்லே எனது அகராதியில் கிடையாது. சிறுவயதில் இருந்தே உன்னால் இதை செய்ய முடியாது என்று யாராவது சொன்னால் அதை வைராக்கியத்தோடு செய்து முடிக்கும் மனோபாவம் எனக்குள் இருக்கிறது. அந்த வேலையை செய்து முடிப்பதுவரை தூங்கவும் மாட்டேன். வளர்ந்த பிறகும் அந்த பழக்கம் என்னை விட்டுப்போகவில்லை.

    எதற்கும் பயப்பட மாட்டேன். சாதிக்க வேண்டும் என்ற உணர்வு எப்போதும் எனக்குள் உண்டு. ஏதேனும் கஷ்டமான கதாபாத்திரம் வந்தால் இதை நம்மால் செய்ய முடியுமா? என்று தயங்குவது இல்லை. கண்டிப்பாக என்னால் நடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கைதான் ஏற்படும். கதாநாயகியாக வெற்றி பெற்று விட்டதால் இதை சொல்வதாக நினைக்க கூடாது. சினிமா துறையில் அடியெடுத்து வைத்த நாளில் இருந்து இப்படித்தான் இருக்கிறேன்.

    சினிமாவில் அறிமுகமான புதிதில் எதற்காகவும் நான் பயந்தது இல்லை. பள்ளியில் படித்தபோது இசை, பொழுதுபோக்கு விஷயங்களில்தான் எனக்கு ஆர்வம் இருந்தது. இதனால் வகுப்புகள் தொடங்கிய ஆரம்ப நாட்களில் சரியாக படிக்காமல் அலட்சியமாக இருப்பேன். ஆனால் பரீட்சை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னால் இரவு பகல் பாராமல் கடுமையாக படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கி விடுவேன்.

    மற்ற மாணவர்களாக இருந்தால் ஆரம்பத்தில் நன்றாக படிக்கவில்லை. இனிமேல் படித்து என்ன மதிப்பெண் எடுக்கப்போகிறோம் என்று நம்பிக்கை இல்லாமல்தான் பேசுவார்கள். நான் அப்படி இல்லை. கடுமையாக உழைக்கலாம். கஷ்டப்படலாம். பலன் தானாக வந்து சேரும். சினிமாவுக்கும் அந்த தைரியத்தில்தான் வந்தேன். எனக்கு இந்த சினிமா உலகம் நிறைய நல்லது செய்து இருக்கிறது”.

    இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.
    சிவகுமார் நடித்த "மறுபக்கம்'' என்ற படத்துக்கு தேசிய விருது (தங்கத்தாமரை) கிடைத்தது.
    சிவகுமார் நடித்த "மறுபக்கம்'' என்ற படத்துக்கு தேசிய விருது (தங்கத்தாமரை) கிடைத்தது.

    எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய குறுநாவல் "உச்சி வெயில்.'' அதை, "மறுபக்கம்'' என்ற பெயரில் டைரக்டர் கே.எஸ்.சேதுமாதவன் படமாகத் தயாரித்தார்.

    இந்தப் படத்துக்கு, "தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம்'' நிதி உதவி செய்தது. மொத்தம் ரூ.14 லட்சம் செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டது.

    வேம்பு அய்யர் என்ற வேடத்தில் சிவகுமார் நடித்திருந்தார். அவருடன் ராதா நடித்தார். 1991-ல் வெளிவந்த இப்படத்துக்கு, அகில இந்திய ரீதியில், சிறந்த படம் என்பதற்கான தேசிய விருது (தங்கத்தாமரை) கிடைத்தது.

    பிரபலமான மூத்த கலஞர்களுடன் சேர்ந்து நடிப்பதை 1974 முதல் சிவகுமார் தவிர்த்து வந்தார். கதாநாயகனாக நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார்.

    சிவாஜிகணேசன் நடிக்க, பாரதிராஜா இயக்கிய "பசும்பொன்'' படத்தில் நடிக்க, 1995-ல் அழைப்பு வந்தது. பாரதிராஜாவின் டைரக்ஷனில் நடிக்க வேண்டும் என்ற ஆவல், சிவகுமாருக்கு நீண்ட காலமாக இருந்தது.

    எனவே, தனது "விரத''த்தை முடித்துக்கொண்டு, 21 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சிவாஜியுடன் இணைந்து நடித்தார், சிவகுமார்.

    "பசும்பொன்'' படத்தைப் பற்றி சிவகுமாரின் கருத்து:

    "பாரதிராஜாவுடன் நான் பணியாற்றிய ஒரே படம் இது. செதுக்கிச் செதுக்கி, இழைத்து இழைத்து காட்சிகளைப் படமாக்கினார்.

    எங்கோ ஓரிடத்தில் நடந்த தவறினால், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற படம் தவறிவிட்டது. எனினும், பாரதிராஜாவின் மிகச்சிறந்த படைப்புகளில் பசும்பொன்னும் ஒன்று.

    ராதிகாவின் கதாபாத்திரம் `மாஸ்டர் பீஸ்.' வயதுக்கு மீறிய கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டினார் அவர்.

    திரைக்கதையை உருவாக்க சுமார் 6 முதல் 8 மாதங்கள் வரை உழைத்து, அதன்பின் அதை நண்பர்களிடம் படித்துக்காட்டி, அதை மேம்படுத்தி, அதற்குப் பிறகுதான் படப்பிடிப்புக்கு செல்வார், கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளரான நண்பர் எம்.பாஸ்கர்.

    தீர்ப்புகள் திருத்தப்படலாம், பவுர்ணமி அலைகள், தண்டிக்கப்பட்ட நியாயங்கள் ஆகிய படங்கள் இவர் இயக்கத்தில் நான் நடித்தவை.''

    இவ்வாறு சிவகுமார் கூறினார்.

    சினிமாவில் தந்தையும், மகனும் ஒரே படத்தில் நடிப்பது விசேஷமானது.

    இந்தி நடிகர் ராஜ்கபூரின் குடும்பத்தில் இப்படி நடந்துள்ளது. தமிழ்நாட்டில் சிவாஜிகணேசனும், அவர் மகன் பிரபுவும் சேர்ந்து நடித்துள்ளனர்.

    22-9-2000-ல் வெளிவந்த "உயிரிலே கலந்தது'' என்ற படத்தில் சிவகுமாரும், சூர்யாவும் சேர்ந்து நடித்தனர். இதில் சூர்யாவுக்கு ஜோடி ஜோதிகா.

    1997-ல் வெளிவந்த "காதலுக்கு மரியாதை'' படத்தில் இளம் நடிகர் விஜய்க்கு தந்தையாக நடித்தார், சிவகுமார்.

    இந்தப்படத்தில், இந்து மதத்தைச்சேர்ந்த விஜய்யும், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஷாலினியும் காதலிப்பார்கள். காதலுக்கு மதம் தடையாக இருந்தாலும், இருவரும் பெற்றோர் மீது கொண்ட பாசத்தின் காரணமாக, காதல் வெற்றி பெறும்.

    இந்தப் படத்தில் நடித்தது பற்றி சிவகுமார் கூறியதாவது:-

    "காதல் இயற்கையானது. தவிர்க்க முடியாதது. மனித இனம் தோன்றிய காலம் தொட்டு நிகழ்வது.

    ஆனால், 25 வயது வரை பெற்று வளர்த்து ஆளாக்கி, வாழ்க்கையைக் கொடுத்த பெற்றோரை உதாசீனப்படுத்தி விட்டு புது உறவுடன் ஓடிப்போகலாமா? அது தவறு. போராடி, பெற்றோர் சம்மதத்தைப் பெற்று வாழ்க்கையில் ஒன்று சேருங்கள் என்ற உயர்ந்த படிப்பினையைச் சொன்ன படம் "காதலுக்கு மரியாதை.''

    நானும், ஸ்ரீவித்யாவும் விஜய்க்கு பெற்றோர்களாக நடித்தோம்.

    பாசில் உருவாக்கிய மிகச்சிறந்த படங்களில் இந்தப்படமும் ஒன்று.''

    இவ்வாறு கூறினார், சிவகுமார்.

    திரை உலக அனுபவங்கள் பற்றி அவர் மேலும் கூறியதாவது:-

    "நான் நடித்த மொத்த படங்கள் 193.

    152 தயாரிப்பாளர்களுடனும், 98 டைரக்டர்களுடனும் பணியாற்றியுள்ளேன். என்னுடன் நடித்த கதாநாயகிகள் 87 பேர்.

    எனக்குப் பிறகு திரைப்படங்களில் அறிமுகமாகி, எனக்கு ஜோடியாக அதிகப்படங்களில் நடித்தவர்கள் லட்சுமி, ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா, சுஜாதா, சரிதா, அம்பிகா, ராதிகா ஆகியோர்.

    மூன்று நான்கு படங்களில் இணையாக நடித்தவர்கள் ஸ்ரீவித்யா, ஜெயசுதா, ஸ்ரீதேவி, ராதா, சுஹாசினி ஆகியோர்.

    கதாநாயகியாக வளர்ந்து கொண்டிருந்த கட்டத்தில் "கவிக்குயில்'', "சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு'', "மச்சானைப் பாத்தீங்களா'' என்ற மூன்று படங்களில் ஸ்ரீதேவி என்னுடன் இணைந்து நடித்தார். துரதிர்ஷ்டவசமாக மூன்றுமே வெற்றிபெறத் தவறிவிட்டன.

    என்னுடன் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லட்சுமி. மிகுந்த தைரியசாலி. சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தாலும், அவற்றால் துவண்டு விடாமல், தன் நடிப்பாற்றலைக் கொண்டு, வெற்றிகரமாக வாழ்ந்து காட்டுபவர். புத்தகம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்.

    "சில நேரங்களில் சில மனிதர்கள்'' படத்தில் அவர் ஏற்ற வேடம், அவரது அன்றைய வயதுக்கும், அனுபவத்துக்கும் மீறிய ஒன்று. ரொம்பவும் `மெச்சூர்டாக' அந்தப் பாத்திரத்தில் நடித்து, "ஊர்வசி'' விருது வாங்கினார்.

    தமிழ்த்திரை உலகுக்கு அறிமுகம் ஆகும்போதே சுஜாதாவின் தோற்றத்தில் `மெச்சூரிட்டி' இருந்தது. அதனால், குடும்பத் தலைவி, வக்கீல், டாக்டர், பழி வாங்கத் துடிக்கும் நடுத்தர வர்க்கத்துப்பெண்... என்று குணச்சித்திர வேடங்கள் அவருக்கு ரொம்பவும் கை கொடுத்தன. உணர்ச்சிகரமான கட்டங்களில், நீண்ட தமிழ் வசனங்களை சுத்தமான உச்சரிப்புடன் பொரிந்து தள்ளுவதில் வல்லவர்.

    சரிதா ரொம்பவும் திறமை சாலியான நடிகை. அவருடைய கண்களே ஆயிரம் கதைகள் பேசும்.''

    கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதிலுக்கு சச்சினும் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது எதற்காக? என்பதை கீழே பார்ப்போம்.
    இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் என்பவர் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற மே 26-ந் தேதி வெளிவரவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது.

    இந்நிலையில், இந்த டிரைலரை பார்த்த ரஜினிகாந்த், சச்சினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘அன்பிற்குரிய சச்சின் அவர்களுக்கு ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு பதிலளிக்கும்விதமாக சச்சினும் ‘நன்றி தலைவா. படத்தை தமிழில் பார்த்து மகிழுங்கள்’ என்று சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் படத்தின் தமிழ் பதிப்பின் டிரைலரை இணைத்து அனுப்பியுள்ளார். கிரிக்கெட் உலகின் ஜாம்பவனாக திகழ்ந்த சச்சினும், இந்திய திரையுலகில் ஜாம்பவானாக வலம் வரும் ரஜினியும் இவ்வளவு சகஜமாக உரையாடியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    தனது அபிமான நடிகரின் படத்திலிருந்து பால் நடிகை விலக காரணம் என்று ஒரு விஷயம் வெளிவந்துள்ளது. அது உண்மைதானா? என்பதை பார்ப்போம்.
    பால் நடிகையின் அபிமான நடிகரான கொலவெறி நடிகர் சென்னையின் முக்கிய பகுதியை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பால் நடிகையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், திடீரென இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு, இதற்கு கால்ஷீட்தான் பிரச்சினை என்று மழுப்பலாக ஒரு பதிலையும் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

    ஆனால், உண்மையில் கால்ஷீட் பிரச்சினையில்தான் அவர் வெளியே போனாரா? என்று கோலிவுட் வட்டாரத்தில் பெரிய கேள்வியாக எழுந்து வந்தது. ஆனால், உண்மையில் அவர் கால்ஷீட் பிரச்சினைக்காக வெளியே செல்லவில்லை. அவரை படக்குழுவினரே படத்தில் இருந்து தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது.

    ஏனென்றால், கொலவெறி நடிகர் தனது படங்களில் தொடர்ந்து பால் நடிகை நடிக்கவைப்பதால் இரண்டு பேரையும் இணைத்து நிறைய வதந்திகள் பரவத் தொடங்கியது. இது கொலவெறி நடிகரின் வீட்டில் உள்ளவர்களுக்கும் பெரிய தலைவலியை கொடுத்ததாம். இதனால், இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட கொலவெறி நடிகர்தான் பால் நடிகையை அந்த படத்தில் இருந்து நீக்கச் சொன்னதாக கூறப்படுகிறது.

    ஆனால், பால் நடிகை நீக்கப்பட்டார் என்று சொன்னால் அது பெரிய விஷயமாக பேசப்படும் என்று நினைத்த படக்குழு, அவர் விலகிவிட்டதாக அறிவித்ததாம்.
    சிம்பு நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் ‘பாகுபலி’ பாணியில் வெளிவரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
    சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, சானா கான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நான்காவதாகவும் ஒரு வேடத்தில் நடித்து வருவதாக சிம்பு ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதனால், நாளுக்கு நாள் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது படக்குழுவினர் மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

    அதாவது, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’  இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கிறதாம். ‘பாகுபலி’ பாணியில் ஒரு பாகத்தின் தொடர்ச்சி அடுத்த பாகத்திலும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல்பாகத்தை ரம்ஜான் தினத்தையொட்டி ஜுன் 23-ந் தேதி வெளியிடவுள்ளார்களாம்.

    சிம்பு ரசிகர்களுக்கு உண்மையிலேயே இந்த செய்தி இரட்டை விருந்தாகத்தான் இருக்கும். ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் டீசர்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. யுவன் இசையமைப்பில் உருவாகியிருக்கும் பாடல்களை விரைவில் வெளியிடவுள்ளனர். 
    கலையரசனுக்கு எய்தவன் படம் பேசக்கூடிய படமாக இருக்கும் என்று அந்த படத்தின் இயக்குனர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
    கலையரசன் - சாத்னா டைட்டஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘எய்தவன்’. இப்படத்தை சக்தி ராஜசேகரன் இயக்கியுள்ளார். ஆடுகளம் நரேன், வேலா ராமமூர்த்தி, கிருஷ்ணா, ராஜ்குமார், வளவன், சான்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பார்தவ் பார்கோ இசையமைத்துள்ளார். பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இப்படம் குறித்து இயக்குனர் சக்தி ராஜசேகரன் கூறும்போது, இன்றைய சூழ்நிலையில் வசதியானவர்களுக்கும், ஏழைகளுக்கும் கல்வி என்பது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அந்த கல்வியால் பாதிக்கப்படுவர்களை மையப்படுத்திய உருவாகியுள்ள படம்தான் ‘எய்தவன்’.

    இப்படத்தில் கலையரசன், சாத்னா டைட்டஸ் உள்ளிட்ட மொத்தம் 16 கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறன. இந்த 16 கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும்படி கதையை அமைத்துள்ளோம்.

    கலையரசன் இதுவரை சினிமாவில் நிறைய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இருப்பினும், ஹீரோவாக இந்த படம் அவருக்கு பேசக்கூடியதாக அமையும். அந்தளவுக்கு அவரது கதாபாத்திரம் சிறப்பானதாக அமைந்துள்ளது. காமெடியாக உருவாகியுள்ள இப்படத்தில் மொத்தம் 4 பாடல்கள் இடம்பெறுகின்றன. விரைவில் திரைக்கு வரவிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இளைஞர்களுடைய கனவுக் கன்னியாக மாறுவதே தன்னுடைய லட்சியம் என்று ஆலியா மானஷா கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ். அவரைப்போலவே, அதே நிகழ்ச்சி மூலம் சினிமாவுக்கு வந்திருப்பவர் ஆலியா மானசா. சமீபத்தில் திரைக்கு வந்த ‘ஜூலியும் 4 பேரும்’ படத்தில் நாயகியாக நடித்த இவர், தற்போது வர்மாவுக்கு ஜோடியாக ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

    திரை உலக லட்சியம் பற்றி ஆலியா மானசா கூறும்போது, ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் நான் ஆடிய நடனம் தான் என்னை சினிமாவுக்கு கொண்டு வந்தது. நான் நடித்த ‘ஜூலியும் 4 பேரும்’ படத்தில் நடனம் ஆட அதிக வாய்ப்பு இல்லை. சிறிய வாய்ப்புதான் கிடைத்தது.

    தமிழ் சினிமாவில் எல்லா நாயகர்களும் பிடித்தவர்கள் என்றாலும் சிம்பு, சித்தார்த், கவுதம் கார்த்திக் ஆகியோர் எனக்கு அதிகம் பிடித்தவர்கள். இதுபோன்ற இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறேன். தமன்னா போல கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். ஆபாசமாக இல்லாமல் அழகாக ‘கிளாமரை’ வெளிப்படுத்துவேன். இளைஞர்களின் கனவு கன்னியாக மாற வேண்டும் என்பதே எனது லட்சியம். அதை மனதில் வைத்து அதற்கு ஏற்ற கதையை தேர்வு செய்து நடிப்பேன் என்றார்.
    இந்தியில் அமோக வரவேற்பை பெற்ற ‘குயின்’ படத்தின் கன்னட ரீமேக்கை ரமேஷ் அரவிந்த் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    இந்தியில் கடந்த 2014-ஆம் ஆண்டு விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்து வெளியான படம் 'குயின்'. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, இப்படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார்.

    'குயின்' தமிழ் ரீமேக் படத்துக்கு சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுத, ரேவதி இயக்க ஒப்பந்தமானார். இதில் கங்கனா ரனாவத் கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்கவிருப்பது உறுதியானது. இந்த நிலையில், இப்படம் எந்தவித காரணமும் இன்றி ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது ‘குயின்’ படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கன்னட ரீமேக்கை ரமேஷ் அரவிந்த் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே தமிழில் கமல் நடிப்பில் வெளிவந்த ‘உத்தம வில்லன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும், கங்கனா ரணாவத் வேடத்தில் நடிக்க பிரபல கன்னட நடிகை பரூல் யாதவ் நடிக்கவுள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது. விரைவில் படத்தின் பூஜை நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
    மலையாளத்தில் தேசிய விருது பெற்ற நடிகை ஒருவர் தன்னிடம் அரை நிர்வாண புகைப்படத்தை காட்டிய இயக்குனருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
    மலையாளத்தில் ‘மின்னா மினுக்கு’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பவர் நடிகை சுரபி லட்சுமி. இவர் தன்னுடைய சினிமா அனுபவம் பற்றி சமீபத்தில் மனம் திறந்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது,

    படவாய்ப்புக்காக நடிகைகளை இயக்குனர்கள், நடிகர்கள் படுக்கைக்கு அழைப்பதாக கூறுகிறார்கள். ஆனால் நான் நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளில் எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒருமுறை டைரக்டர் ஒருவர் மற்றொரு நடிகையின் அரை நிர்வாண படத்தை காட்டி, நீங்கள் இது மாதிரி உடை அணிந்து எப்போது நடிக்கப்போகிறீர்கள் என்று கேட்டார்.

    அதற்கு நான் ‘உங்கள் மகளுக்கு 18 வயது தான் ஆகிறது. இதுபோன்ற உடையை உங்கள் மகள் அணிந்தால் என்னைவிட நன்றாக இருக்கும்’ என்று அவரிடம் கூறினேன். இதை எதிர்பார்க்காத அந்த டைரக்டர் அப்படியே அதிர்ந்து போய் விட்டார்” என்றார்.
    ×