என் மலர்
ஆவணப்படம் ஒன்றில் நடித்த நடிகை தன்ஷிகா, அதற்கான சம்பளத்தை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
‘மாவீரன் திலீபன்’ என்ற படத்தை இயக்கியவர் ஆனந்த மூர்த்தி. சர்வதேச அளவில் பல விருதுகளை வென்ற இந்த படம் தமிழ்நாட்டில் வெளிவரவில்லை. இவர் தற்போது ‘சினம்’ என்ற ஆவண படத்தை தயாரித்து இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இது மும்பையில் வசிக்கும் ஒரு பாலியல் தொழிலாளி பற்றிய கதை. இதில் பாலியல் தொழிலாளியாக தன்ஷிகா நடித்து இருக்கிறார்.
இந்தி நடிகை பட்டியாபக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படம் பற்றி கூறிய இயக்குனர்...

இந்த ஆவண படத்தில் நடிக்க தன்ஷிகா சம்பளம் வாங்கவில்லை. கொடுத்த போதும் வாங்க மறுத்துவிட்டார். இதை சினிமாவாக தயாரிக்கலாம். ஆனால் தணிக்கை குழுவை தாண்டி வருவது கஷ்டம். எனவே ஆவண படமாக எடுத்தோம். என்றாலும் சினிமாவுக்குரிய எல்லா அம்சமும் இருக்கும்’ என்றார்.

விஜய்யுடன் இணைந்து நடிக்க தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சில நிபந்தணைகளை விதித்துள்ளார். அது என்னென்ன நிபந்தனைகள் என்பதை கீழே பார்ப்போம்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு - ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடித்து வரும் படம் `ஸ்பைடர்'. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரம்ஜானை முன்னிட்டு வருகிற ஜுன் 23-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்ஜே.பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் மகேஷ் பாபுவுடனான சந்திப்பின் போது, விஜய்யுடன் நடிப்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அவர் மனம் திறந்துள்ளார். சென்னையில் பிறந்து, வளர்ந்த மகேஷ் பாபு இங்குள்ள பிரபல தனியார் கல்லூரியில் படித்தவர். படித்து முடித்த பிறகு மணிரத்னம் இயக்கத்தில் `பொன்னியின் செல்வன்' என்ற படத்தில் விஜய்யுடன் இணைந்து மகேஷ் பாபு நடிக்கவிருந்தார். ஆனால் இப்படத்திற்கான திரைக்கதை அமைக்க முடியாமல் போனது, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்படம் தொடங்காமலேயே ரத்து செய்யப்பட்டது.

எனவே, விஜய்யுடன் நடிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா என்று மகேஷ் பாபுவிடம் கேட்டதற்கு மகேஷ் அளித்த பதிலாவது,
விஜய்யுடன் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒரு சில நிபந்தணைகள் உண்டு என்று கூறியுள்ளார். அந்த நிபந்தணைகளாவது, எனக்கும், விஜய்க்கும் சமமான கதாபாத்திரம் அமைய வேண்டும். அந்த கதையை திரையுலகின் திறமையான இயக்குநர் இயக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு இருவருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படம் இயக்க ஏ.ஆர்.முருகதாஸால் முடியும் என்று தான் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறு ஒரு நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் விஜய்யுடன் இணைந்து நடிக்க தான் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ராகவா இயக்கத்தில் ஆர்யா - கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகியுள்ள கடம்பன் படம் எப்படி இருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கடம்பவனம் எனும் மலை கிராமத்தில் மலைவாழ் மக்களோடு மக்களாக வாழ்ந்து வருகிறார் ஆர்யா. இந்த கூட்டத்திலேயே ஆர்யா கைதேர்ந்த வேட்டைக்காரனாகவும், துணிச்சல்காரனாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், இதே கூட்டத்தை சேர்ந்த நாயகி கேத்தரின் தெரசா, ஆர்யா மீது காதல் வலை வீசுகிறார்.
ஆனால், ஆர்யாவோ, கேத்தரின் தெரசாவின் அண்ணன் ராஜசிம்மனுக்கும் தனக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவதால் கேத்தரின் தெரசாவை முதலில் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். பின்னர் ஒருகட்டத்தில் கேத்தரின் மீது ஆர்யாவும் காதல் வயப்படுகிறார்.

இந்நிலையில், இவர்கள் வசிக்கும் பகுதியில் சிமெண்ட் தயாரிப்பதற்கான தாதுப் பொருட்கள் பூமிக்கடியில் புதைந்து கிடப்பதாக அறியும் சிமெண்ட் கம்பெனி உரிமையாளர் தீப்ராஜ் ராணா, மலைவாழ் மக்களை அங்கிருந்து எப்படியாவது அப்புறப்படுத்த நினைக்கிறார். அடித்து விரட்டினால், அது அரசாங்கத்துக்கு தெரிந்து பெரிய விஷயமாகிவிடும் என்பதால், தந்திரமாக செயல்பட நினைக்கிறார்.
அதன்படி, சமூக சேவைகள் செய்துவரும் ஒய்.ஜி.மகேந்திரனையும், அவரது மகளையும் கடம்பவனம் மலைக்கிராமத்துக்கு அனுப்பி, அவர்களுக்கு நல்லது செய்வதுபோல் நடித்து, அங்கிருந்து மலைவாழ் மக்களை வெளியேற்ற நினைக்கிறார்கள். ஒருகட்டத்தில், இந்த திட்டம் ஆர்யா மற்றும் மலைவாழ் மக்களுக்கு தெரியவர, அவர்களை எதிர்த்து நிற்க துணிகிறார்கள்.
இதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

ஆர்யா இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது. படம் முழுக்க உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். அவரது உடல்வாகை பார்க்கும்போதே பிரமிக்க வைக்கிறது. அதேபோல், செருப்பே அணியாமல் மரம், செடி, கொடிகள் இடையே பாய்ந்து செல்லும் காட்சிகளில் எல்லாம் ஆச்சர்யப்பட வைக்கிறார்.
கேத்தரின் தெரசாவை மலைவாழ் பெண்ணாக பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது. மலைவாழ் மக்களின் வலியை தனது நடிப்பால் அழகாக பிரதிபலித்திருக்கிறார். அவரைது அண்ணாக வரும் ராஜசிம்மன் பார்வையாலேயே மிரட்டுகிறார். முதலில் ஆர்யாவுக்கு எதிரியாகவும், பிறகு அவருக்கு உதவி செய்வதுமாக மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆர்யாவின் அப்பாவாக வரும் சூப்பர் சுப்ராய், மூப்பன் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சிமெண்ட் கம்பெனி அதிபராக வரும் தீப்ராஜ் ராணா, கார்ப்பரேட் வில்லனாக வந்து ரசிக்க வைக்கிறார். ஒய்.ஜி.மகேந்திரன், முருகதாஸ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள்.
இருப்பிடத்தையும் வாழ்வாதாரத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளின் சதியில் இருந்து காப்பாற்றிக்கொள்ள துடிக்கும் மலைவாழ் மக்களின் போராட்டத்தை படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் ராகவா. ஆனால், அவர் சொல்ல வந்த கருத்து, மலைவாழ் மக்களின் வலி, படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதது வருத்தம். இப்படத்திற்காக நிறைய பேர் கஷ்டப்பட்டிருப்பது திரையில் தெரிகிறது. ஆனால், அந்த கஷ்டங்களுக்கெல்லாம் இந்தப் படம் தகுதியானதா? என்பது சந்தேகம்தான்.
யுவன் இசையில் பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். சதீஷ் குமாரின் கேமரா காட்டுக்குள் புகுந்து விளையாடியிருக்கிறது.
மொத்தத்தில் ‘கடம்பன்’ புதிய முயற்சி.

எனக்கு வெட்கம் என்றால் என்ன வென்றே தெரியாது. வெக்கப்படவும் வராது என்று `சிவலிங்கா' படத்தில் நடித்திருந்த ரித்திகா சிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
ராகவா லாரன்சுடன் ‘சிவலிங்கா’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி ரித்திகா சிங்கிடம் கேட்ட போது...
“ ‘சிவலிங்கா’ படத்தில் ராகவா லாரன்சுடன் ஜோடியாக நடித்திருக்கிறேன். என்னால் முடிந்த வரை சிறப்பாக நடித்துள்ளேன். பாடல் காட்சிகளில் கவர்ச்சி தேவைப்பட்டது. எனவே, அதற்கு ஏற்ப உடை அணிந்து ஆடினேன். இந்த படம் என்னை வித்தியாசமாக அடையாளம் காட்டும். எனக்கு நடனம் ஆட தெரியாது. என்றாலும், சமாளித்து ஆடினேன். புடவை அணிந்து ஆடியது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் புடவையில் ஆட வைத்துவிட்டார்கள்.

நான் சிறுவயதில் இருந்தே கராத்தே, பாக்சிங் பயின்றேன். நடனத்துக்கு இன்னும் அதிக பயிற்சி தேவை. ஒரு பாடலுக்கு ஆடும் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. ராகவா லாரன்ஸ் மாஸ்டருடன் நடனம் ஆடுவது எளிதான விஷயம் அல்ல. புடவை கட்டி பழக்கமே இல்லாத எனக்கு புடவை கட்டிவிட்டார்கள். இது இடுப்பில் நிற்காமல் நழுவிக்கொண்டே இருந்தது. எனக்கு வெட்கம் என்றால் என்ன வென்றே தெரியாது. வெக்கப்படவும் வராது. எனக்கு திருமணம் நடக்கும் போது மேடையில் கூட வெக்கப்பட மாட்டேன்.
காதலிக்க எனக்கு நேரம் இல்லை. யாராவது ‘ஐ லவ் யூ’என்று சொன்னால் கூட எனக்கு விருப்பம் இல்லை என்று திருப்பி அனுப்பிவிடுவேன்” என்றார்.

`தானா சேர்ந்த கூட்டம்' படக்குழு சூர்யா ரசிகர்களுக்கு விரைவில் சிறப்பு விருந்தளிக்க திட்டமிட்டுள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
`நானும் ரவுடி தான்' படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'. சூர்யா - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வரும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தமிழ் புத்தாண்டன்று வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், போஸ்டர் எதுவும் வெளியாகாததால், சூர்யா ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து போஸ்டர் வெளியாகாதது குறித்து படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், அவர் கூறியதாவது, `தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான வேலைகள் இன்னமும் முழுமையாக முடியாததால் போஸ்டரை தமிழ் புத்தாண்டன்று வெளியிட முடியவில்லை. எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள், போஸ்டரை விரைவில் வெளியிடுகிறேன் என்று விக்னேஷ் சிவன், சூர்யா ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார்.
மறுபுறத்தில், இசையமைப்பாளர் அனிருத் அவரது டுவிட்டர் பக்கத்தில், தானா சேர்ந்த கூட்டம் படத்தில் அவர் பாடும் ஒரு பாடலின் சில வரிகளை பாடிக் காண்பித்துள்ளார். தமிழ் புத்தாண்டில் சூர்யா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இதனை வெளியிடுவதாகக் கூறிய அனிருத், இப்படத்தின் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளித் திரையில் பிசியாக நடித்து வரும் நடிகர் கமல்ஹாசன் சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் உலக நாயகன் கமல் ஹாசன். அவர் தற்போது `சபாஷ் நாயுடு' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர, சிக்கலில் இருந்த `விஸ்வரூபம்' படத்தின் இரண்டாவது பாகத்தை வெளியிடவும் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கால்முறிவால் சிகிச்சை பெற்று வந்த கமல் படங்களில் நடிக்கவில்லை. மாறாக முதல்முறையாக ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தனது கால் சரியானதை அடுத்து மீண்டும் படத்தில் நடிக்க ஆரம்பித்த கமல் வீட்டில் கடந்த வாரம் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் இருந்து தப்பித்த கமல், தற்போது படங்களுக்கு ஒரு சிறிய இடைவேளை விட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில், இந்தியில் பிரபலமான "பிக் பாஸ்" என்ற நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பை தொகுத்து வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் `ஸ்கெட்ச்' படம் குறித்த அடுத்த அதிகாரப்பூர்வ தகவல் விக்ரம் பிறந்தநாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தனவலை கீழே பார்ப்போம்.
விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் `ஸ்கெட்ச்'. வடசென்னை பின்னணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் விக்ரம் ஜோடியாக முதல்முறையாக தமன்னா நடித்து வருகிறார். மேலும் மற்றொரு நாயகியாக நடிக்க ஸ்ரீபிரியங்கா ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் ஆர்.கே.சுரேஷ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
தமன் இசையமைத்து வரும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். இப்படம் நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த வாரம் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் அடுத்த அதிகாரப்பூர்வ தகவல், விக்ரம் பிறந்தநாளான வருகிற 17-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று இசையமைப்பாளர் தமன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விக்ரம் பிறந்தநாளன்று அவரது படம் குறித்த புதிய தகவல் வெளியானால், அது விக்ரம் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. சரி என்ன தகவல் வெளியாகும் என்று ரசிகர்கள் தீவிரமாக யோசித்து வரும் நிலையில், படத்தின் சிங்கிள் டிராக்கோ அல்லது டீசரோ வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க விக்ரம் பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்துடன் விரைவில் நடிப்பேன் என்று ரசிகர்கள் மத்தியில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளர். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
சேலத்தில் ஒரு நகைக்கடையில் அமைக்கப்பட்ட புதிய ஷோரூம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று சேலம் வந்தார். பின்னர், அவர் ஷோரூம் முன்பு திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் பேசியதாவது:-
சேலத்திற்கு முதல் முறையாக வந்துள்ளேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சேலம் ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கும், ஆதரவுக்கும் எனது மனமார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களது அன்பை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. என்னை பார்க்க, வாழ்த்த வந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ‘பைரவா’ படத்தில் இளைய தளபதி விஜய் உடன் இணைந்து நடித்தேன். அவருடன் நடித்த அனுபவம் குறித்து நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

உங்களுக்கே தெரியும். அஜித்துடன் விரைவில் நடிப்பேன். சூர்யாவுடன் நடித்த ‘’தானாக சேர்ந்த கூட்டம்‘’ என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது. அடுத்து விஷாலுடன் ‘’சண்டக்கோழி-2” படத்தில் நடிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து ரசிகர்கள் ஆரவாரத்திற்கு இடையே ‘’ரஜினிமுருகன்” படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு அவர் நடனமாடினார். பின்னர் அவர், அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். நடிகை கீர்த்தி சுரேஷ் வருகையையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நயன்தாரா படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருக்கிறார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
நயன்தாரா நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘மாயா’. இப்படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடைந்த பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அஸ்வின் சரவணனுக்கு பட வாய்ப்புகளும் அதிகமாக வந்தது.
அந்த வரிசையில் தன்னுடைய அடுத்த படத்தை எஸ்.ஜே.சூர்யாவை வைத்து இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘இறவாக்காலம்’ என்று பெயர் வைத்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ஷிவதா, வாமிகா காஃபி ஆகியோர் நடிக்கின்றனர். ரான் யத்தன் யோகான் என்பவர் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்து மேலும் புதிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீரில் அமைதியாக சென்ற பாதுகாப்பு படை வீரர்களை தாக்கிய இளைஞர்களை நடிகர் கமல்ஹாசன் கண்டித்து உள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
காஷ்மீரில் உள்ள பக்தாம் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை முடித்து விட்டு சாலை ஓரமாக அமைதியாக சென்று கொண்டிருந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சிலரை இளைஞர்கள் வழிமறித்து தாக்கினார்கள். பின்னால் ஓடிச்சென்று வீரர்களின் தலையிலும் தோள்களிலும் ஓங்கி அடித்தனர். சிலர் பாதுகாப்பு படை வீரர்களின் கால்களை இடறி விட்டு கீழே தள்ளிவிடவும் முயற்சித்தனர்.
தங்களை அடித்த இளைஞர்கள் மீது பாதுகாப்பு படை வீரர்கள் ஆத்திரப்படவில்லை. துப்பாக்கியை கையில் வைத்திருந்தும் அதை காட்டி மிரட்டவும் இல்லை. அடியை வாங்கிக்கொண்டு அவர்கள் அமைதியாக நடந்து சென்றார்கள். இந்த காட்சி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி பார்த்தவர்களை பதற வைத்தது. தனியார் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. இந்த சம்பவத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷேவாக், கம்பீர் ஆகியோர் ஏற்கனவே கண்டித்து உள்ளனர்.

இந்தநிலையில் நடிகர் கமல்ஹாசனும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-
“இந்தியாவுடன் ஒருங்கிணையுங்கள். என்னுடைய பாதுகாப்பு படை வீரர்களை இளைஞர்கள் தாக்கியது வெட்கக்கேடானது. உயர்வான வீரம் என்பது அகிம்சை. இளைஞர்கள் மீது பதிலுக்கு தாக்குதல் நடத்தாமல் இருந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறார்கள்.”
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இந்தி நடிகர் அனுபம்கேரும் இதனை கண்டித்து உள்ளார். “இளைஞர்கள் தாக்கியபோது பொறுமையாக இருந்த நமது பாதுகாப்பு படை வீரர்களின் நடவடிக்கையில் அமைதியை அவர் கள் எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது. எங்கள் வீரர்களுடன் மல்லுக்கட்ட வேண்டாம் என்று அந்த இளைஞர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று டுவிட்டரில் அவர் கூறியுள்ளார்.

பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையத்தை நடிகர் ரஜினி, கமல் துவக்கிவைத்தனர். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
திரைக்கலையின் தன்மையை மீண்டும் விரிவுப்படுத்தி அதன் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொடுக்க "பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்" எனும் புதிய திரைப்பட கல்வி நிலையத்தை துவங்கியுள்ளார். இந்த திரைப்பட பயிற்சி நிலையத்தின் திறப்பு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கமல், பாக்கியராஜ், சுந்தர்.சி, நாசர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பயிற்சி நிறுவனத்தை திறந்து வைத்த நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது, எவ்வுளவு சிறப்பாக நடித்தாலும் பாரதிராஜாவிடம் இருந்து வாழ்த்துக்களை பெற முடியாது. அவர் என்னை சிறந்த நடிகர் என்று ஒத்துக்கொள்ளவே மாட்டார். அவருக்கு என்னை பிடிக்கும், ஆனால் பிடிக்காது என்றும் கூறினார். அவரது திரைப்பட கல்வி நிலையத்தில் மாணவர்கள் பங்கேற்று கலைத்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும் இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

முன்னோட்ட திரையரங்கத்தை திறந்து வைத்த நடிகர் கமலஹாசன் பேசியதாவது, ஒருவன் எவ்வளவு மோசடாக நடித்தாலும், பாரதிராஜாவிடம் பயிற்சி பெற்றால் சிறந்த கலைஞனாக உருவாக முடியும். தனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பது தான் ஒரு சிறந்த ஆசிரியரின் கடமை. அந்த வகையில் பாரதிராஜா ஒரு முனிவராக காட்சியளிக்கிறார் என்று கமல் கூறினார்.
நடிகர் நாசர் பேசிய போது, தற்போதைய காலகட்டத்தில் சினிமாவில் தொழில்நுட்ப ஈடுபாடு அதிகமாகியிருப்பதால், கலை அதன் தன்மையை இழந்து வருகிறது. பாரதிராஜாவின் கல்வி நிலையம் மூலம் கலைத்தன்மை மீண்டும் மேன்மை அடையும் என்று தான் நம்புகிறேன் என்று பேசினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில், இயக்குனர் மணிரத்னம், கவிஞர் வைரமுத்து, நடிகை ராதிகா சரத்குமார், நடிகை சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அலெக்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் அர்வி தயாரிக்கும் ‘ராஜாவும் 5 கூஜாவும்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
அலெக்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் அர்வி தயாரிக்கும் படம் ‘ராஜாவும் 5 கூஜாவும்’.
இதில், அர்வி கதாநாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, பவர்ஸ்டார் சீனிவாசன், ‘நான்கடவுள்’ ராஜேந்திரன், பாலாஜி, ரவிமரியா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு-கார்த்திக்ராஜா, இசை- ரவி விஜய் ஆனந்த், படத்தொகுப்பு-சுரேஷ் அர்ஸ், கலை-சாய்மணி, நடனம்- அட்சய் ஆனந்த்.
தயாரிப்பு- அர்வி. கதை,திரைக்கதை, வசனம், இயக்கம்-பிரபு ஆதித்யன்.
வித்தி
யாசமான நகைச் சுவை படமாக ‘ராஜாவும் 5 கூஜாவும்’ தயாராகி வருகிறது.
இந்த படத்துக்காக 50 வருடங்களுக்கு முன்பு பிரபலமான ‘உன் அழகை கன்னியர்கள் கண்டதினாலே....’ என்ற பாடலை நவீன தொழில் நுட்ப உதவியுடன் இசை அமைப்பாளர் ரவி விஜய் ஆனந்த் ‘ரீமிக்ஸ்’ செய்துள்ளார். கானாபாலா பாடி இருக்கிறார்.
இந்த பாடலுக்கான நடன காட்சி ஜெய்ப்பூர்அரண்மனையில் படமாக்கப்பட்டது. இதில் நாயகன் அர்வி, இமான் அண்ணாச்சி, பவர்ஸ்டார் சீனிவாசன், பாலாஜி, ரவிமரியா ஆகியோர் ராஜாக்கள் உடையில் நடனம் ஆடினார்கள். இவர்களுடன் ரஷ்ய பாலே நடன அழகி, 40 நடன கலைஞர்கள் இணைந்து ஆடினார்கள். நடன இயக்குனர் அட்சய் ஆனந்த் அமைத்த இந்த நடனத்தை கார்த்திக் ராஜா படமாக்கினார். இது மிகவும் சிறப்பாக வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
இதில், அர்வி கதாநாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, பவர்ஸ்டார் சீனிவாசன், ‘நான்கடவுள்’ ராஜேந்திரன், பாலாஜி, ரவிமரியா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு-கார்த்திக்ராஜா, இசை- ரவி விஜய் ஆனந்த், படத்தொகுப்பு-சுரேஷ் அர்ஸ், கலை-சாய்மணி, நடனம்- அட்சய் ஆனந்த்.
தயாரிப்பு- அர்வி. கதை,திரைக்கதை, வசனம், இயக்கம்-பிரபு ஆதித்யன்.
வித்தி
யாசமான நகைச் சுவை படமாக ‘ராஜாவும் 5 கூஜாவும்’ தயாராகி வருகிறது.இந்த படத்துக்காக 50 வருடங்களுக்கு முன்பு பிரபலமான ‘உன் அழகை கன்னியர்கள் கண்டதினாலே....’ என்ற பாடலை நவீன தொழில் நுட்ப உதவியுடன் இசை அமைப்பாளர் ரவி விஜய் ஆனந்த் ‘ரீமிக்ஸ்’ செய்துள்ளார். கானாபாலா பாடி இருக்கிறார்.