என் மலர்
விவசாயத்தை தற்போது அழித்துவரும் கார்ப்பரேட் நிறுவனங்களை குறிவைத்து ‘தெருநாய்கள்’ என்ற படம் உருவாகி வருகிறது.
தற்போது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிற மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றை மையமாக வைத்து ‘தெருநாய்கள்’ என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தை பல கலை இயக்குனர்களுடன் உதவியாளராக இருந்த ஹரி உத்ரா என்பவர் இயக்குகிறார்.
அப்புக்குட்டி, பிரதிக், தீனா, மைம் கோபி, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். அக்ஷ்தா என்ற புதுமுகம் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். ஹரிஷ், சதீஷ் ஆகியோர் இணைந்து இசையமைக்க, தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீபுவால் மூவி புரொடக்ஷன் என்ற நிறுவனம் சார்பில் சுசில்குமார், உஷா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

இப்படம் பற்றி இயக்குனர் ஹரி உத்ரா கூறும்போது, தற்போது நம்முடைய நாட்டில் அரசாங்கமும், கார்ப்ரேட் நிறுவனங்களும் சேர்ந்து விவசாய நிலங்களை தரிசு நிலங்களாக மாற்றி வருகிறது. இதை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். இப்படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்று யாரும் கிடையாது. எல்லோருமே கதையின் நாயகர்கள்தான்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை குறிவைத்து தாக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான படமாக இது இருக்கும். ஆனால், இப்படத்தில் எந்த தனிப்பட்ட கம்பெனியையும், தனிப்பட்ட நபரையும் குறிவைத்து படமாக்கவில்லை. இப்படம் விவசாயிகளின் குரலாக ஒலிக்கும் என்றார். இப்படத்தின் படப்பிடிப்பு மன்னார் குடியை சுற்றியும் நடந்துள்ளது.

நிகிஷா பட்டேல் தற்போது அழகு, இளமை, அதிரடி, கிளாமர் என அனைத்திலும் கலக்கி வருகிறார். அவர் குறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பிரிட்டிஷ் இந்திய அழகியான நிகிஷா படேல், இப்போது இந்திய சினிமாவில் தன் அழகாலும் திறமையாலும் அசத்திக் கொண்டிருக்கிறார். பல பி.பி.சி. ஷோக்களில் தன் திறமையால் அசத்திய நிகிஷா படேல், ‘புலி’ என்கிற தெலுங்கு படத்தின் மூலமாக இந்திய சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து கன்னடத்திலும் நடித்தார்.
‘தலைவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இந்த இங்கிலாந்து அழகி, அடுத்தடுத்து வந்த படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் தன்னால் நடிக்க முடியும் என நிரூபித்தார். ‘என்னமோ ஏதோ’ படத்தில் இளமை கொஞ்சும் அழகியாக, ‘கரையோரம்’ படத்தில் பழிவாங்கும் கோபக்காரியாக நடித்தாலும் கவர்ந்திழுக்கும் ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

நகுல் உடன் ‘நாரதன்’ படத்தில் ஹோம்லியான அழகியாக நடித்து இளைஞர்களை இழுத்தார். இப்போது, இயக்குநர் பி.வாசுவின் மகனும், நடிகருமான சக்திவேல் வாசுவின் ‘7 நாட்கள்’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் ‘குண்டூர் டாக்கீஸ்-2’ படத்திலும், ‘100 டிகிரி செல்சியஸ்’ படத்திலும் நடித்து வருகிறார்.
அழகு, இளமை, அதிரடி, கிளாமர் என ஆல் ஏரியாவிலும் நின்னு விளையாடுகிறார், நிகிஷா படேல்.

என் ஆளோட செருப்பை காணோம் படத்தில் பாண்டிக்கு ஜோடியாக நடிப்பதற்கு அவருடைய நடிப்பை பார்த்துதான் கயல் ஆனந்தி கால்ஷீட் கொடுத்துள்ளார்.
‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ போன்ற எதார்த்த படங்களைக் கொடுத்தவர் ஜெகன்நாத். இவர் இயக்கும் புதிய படத்துக்கு ‘என் ஆளோட செருப்பை காணோம்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார். ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தன் சகோதரர் விஜயன் உடன் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
இப்படத்தில் ‘பசங்க’ படத்தில் நடித்த பாண்டி ‘தமிழ்’ என்கிற பெயர் மாற்றத்தோடு நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார். படத்தின் டைட்டிலைக் கேட்டவுடனே படத்தில் ஏதாவது சுவாரஸ்யம் இருக்கும் என்று அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கான காரணத்தை இயக்குனரே தெரிவித்துள்ளார்.
செருப்பை நாம ஒரு சாதாரண பொருளாகத்தான் பார்க்கிறோம். அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதில்ல. ஆனா அது நம்மோட வாழ்க்கையிட பல சம்பவங்களை நடத்திட்டுப் போயிடும். இப்படத்திற்கு நாயகனாக நடிக்க பாண்டியை என்னுடைய நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள். நானும் தயக்கத்துடனயே பாண்டியிடம் சென்று இப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை நடித்துக் காட்டச் சொன்னேன்.

அந்த காட்சியை நான் எதிர்பார்த்த மாதிரியே பாண்டி நடித்துக் காட்டினார். உடனேயே அவரை இப்படத்திற்கு புக் செய்துவிட்டேன். பாண்டிதான் ஹீரோ என்றதும் ஆனந்தி இதில் நடிக்க கொஞ்சம் தயங்கினார். அப்புறம், நானே அவருக்கு நேரடியாக சென்று பாண்டி நடித்துக்காட்டிய வீடியோவை காட்டியதும் ஆனந்தி ஒத்துக்கொண்டார். கால்ஷிட் சொதப்பல் இல்லாமலும் நடித்துக் கொடுத்துள்ளார்.
செருப்பும், மழையும் படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஆக்கிரமித்திருப்பதால் பெரும்பாலான காட்சிகளை கடலூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் நிஜ மழையில் எடுத்திருக்கிறார்கள். யோகி பாபு, சிங்கம் புலி, பால சரவணன் என தமிழில் இப்போதைக்கு இருக்கிற அத்தனை காமெடியன்களையும் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

தனுஷ் தங்கள் மகன் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்த மேலூர் தம்பதிகளின் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் மேல் முறையீடு செய்யவிருக்கிறார்களாம்.
நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என்று மேலூர் தம்பதி கதிரேசன்-மீனாட்சி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இன்று மதுரை ஐகோர்ட்டு கிளை அவர்களது மனுவை தள்ளுபடி செய்து தனுசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு குறித்து கதிரேசன்-மீனாட்சி கூறியதாவது:-
11 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய கலைச்செல்வன் தான் நடிகர் தனுஷ். அதற்கான அனைத்து ஆவணங்களும், சான்றிதழ்கள் எங்களிடம் உள்ளது. ஆனால் நடிகர் தனுஷ் தரப்பில் போலியான சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

எங்களுக்கு ஆதரவாக நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். கிடைக்கவில்லை. ஆனாலும் நடிகர் தனுஷ் தான் எங்கள் மகன். அதை நிரூபிப்பதற்கு டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயாராக இருந்தோம்.
ஆனால் அந்த வாய்ப்பை மதுரை ஐகோர்ட்டு கிளை எங்களுக்கு வழங்காதது துரதிருஷ்டவசமானது. இறுதி வரை போராடி தனுஷ் எங்கள் மகன் என்பதை நிருபிப்போம். அதற்காக விரைவில் மேல் முறையீடு செய்ய இருக்கிறோம். நிச்சயம் நீதி ஒருநாள் வெல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சமீபகாலமாக கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா இனிமேல் கவர்ச்சி வேடங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.
‘சேவல்’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘துரோகி’, ‘தம்பிக்கோட்டை’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பூனம் பாஜ்வா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பெரிய அளவில் வெற்றி பெறாததால், திறமை இருந்தும் இவரால் சினிமாவில் முன்னுக்கு வரமுடியாத சூழ்நிலை உருவானது.
இந்நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ‘ரோமியோ ஜுலியட்’, சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த ‘அரண்மணை 2’, சுந்தர் சி நடித்த ‘முத்தின கத்திரிக்கா’ ஆகிய படங்கள் பூனம் பாஜ்வாவை மீண்டும் திரும்பி பார்க்க வைத்தது. இப்படங்களில் பூனம் பாஜ்வா கவர்ச்சியிலும் தாராளம் காட்டியிருந்தார்.

தற்போது பூனம் பாஜ்வா ‘குப்பத்து ராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் இயக்கி வருகிறார். இப்படத்தில் பூனம் பாஜ்வாவுக்கு அழுத்தமான நாயகி வேடமாம். இப்படத்தில் புடவை கட்டி குடும்ப பெண்ணாகவும் நடிக்கிறாராம். இதன்மூலம் தனக்கு நல்ல நடிகை என்ற பெயர் வரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். இதனால், இனிமேல் கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி வருகிறாராம். தன்னை தேடிவந்த சில கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க மறுத்துவிட்டாராம்.

மகாபாரதத்தை அவமதித்தாக கமல் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில், அவர் நேரில் ஆஜராகும்படி வள்ளியூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளிக்கும்போது இந்துக்களின் புனித நூலான மகாபாரதத்தையும், இந்துக்களின் கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தி பேசியதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியது.
இதையடுத்து நடிகர் கமலஹாசனுக்கு எதிராக தமிழத்தில் பல்வேறு இடங்களில் முழுவதும் இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மீது நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த பழவூரை சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர் வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் மகாபாரதத்தை இழிவுப்படுத்தி அவதூறாக பேசியுள்ள நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கின் அடிப்படையில் வருகிற மே 5-ந் தேதி நடிகர் கமல்ஹாசன் நேரில் ஆஜராகவேண்டும் என்று வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒரு பெண் கல்விக்காக எந்தளவுக்கு கஷ்டத்தை அனுபவிக்கிறாள்? என்பதை விளக்கிச் சொல்லும் படமாக வெளிவந்துள்ள ’இலை’ படம் எப்படியிக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
பெண்களை படிக்க வைக்க விரும்பாத ஒரு கிராமத்தில் வாழ்ந்துவரும் நாயகி சுவாதி நாராயணன், நன்றாக படித்து சமூகத்தில் சாதிக்கவேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறாள். இதற்கு அவளது அப்பாவும் ஆதரவு கொடுத்து வருகிறார். ஆனால், அவளது அம்மாவுக்கோ இதில் துளியும் விருப்பமில்லை. அதேநேரத்தில் தனது தம்பியான நாயகிக்கு அவளை திருமணம் செய்து வைத்துவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.
சுவாதி படிக்கும் அதே பள்ளியில் படிக்கும் பணக்கார பெண்ணான இன்னொரு மாணவியின் அப்பா, தனது மகள் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுப்பதற்காக சுவாதியை தேர்வுக்கு வரவிடாமல் தடுக்க பல சதி வேலைகள் செய்கிறார். மறுபுறத்தில் சுவாதியின் தாய்மாமா, அவள் பெரிய படிப்பு படித்துவிட்டால் தனக்கு கிடைக்காமல் போய்விடுவாலோ என்ற எண்ணத்தில் அவளுடைய படிப்புக்கு தடை போடும் வகையில் பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்.

இதையெல்லாம் தாண்டி சுவாதி தேர்வு எழுதினாளா? அவளது படிப்பு என்ன நிலைமைக்கு சென்றது? என்பதே படத்தின் மீதிக்கதை.
இலை கதாபாத்திரத்தில் வரும் நாயகி சுவாதி நாராயணன் முழு படத்தையும் தனது தோளில் சுமந்து தாங்கி சென்றிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். படிப்புக்காக போராடும் மாணவியாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். படத்தில் இவரை ரொம்பவும் ஓட வைத்திருக்கிறார்கள். தனது படிப்புக்கு ஆதரவாக இருக்கும் அப்பா உயிருக்கு போராடும் நிலையில், மருத்துவமனையில் இருக்க, அவரது ஆசையை நிறைவேற்ற தேர்வு எழுத செல்லும் சுவாதிக்கு ஏற்படும் தடங்கல்களை எதிர்கொள்ளும் காட்சிகளில் எல்லாம் பரிதாபப்பட வைக்கிறார்.

நாயகியின் முறைமாமனாக வரும் ஜெனிஷ், கன்னட நடிகர் கிங் மோகன், மலையாள நடிகை ஸ்ரீதேவி, கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம், காவ்யா என படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சரியான தேர்வு. அவர்களும் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
இன்றைய காலசூழ்நிலையில் நகரத்தில் வாழும் மாணவர்களுக்கு படிப்பதற்கு நிறைய வசதிகள் இருந்தும் அவர்கள் கல்வியை பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், கிராமங்களில் கல்வி கற்பதற்கு வசதியில்லாமல் இருக்கும் குழந்தைகள் கல்விக்காக எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை இப்படத்தில் இயக்குனர் அழகாக எடுத்துக் கூறியிருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த படம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று கூறலாம்.

குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு சொல்ல வந்த கருத்தை இயக்குனர் பீனிஸ் ராஜ் அழகாக சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு தடையும் தாண்டி நாயகி தேர்வு எழுதுவாரா? என்று படம் முழுவதும் பரபரப்பு பயணிக்கிறது. இருப்பினும், நாயகியை படம் முழுக்க ஓடவிட்டு படமாக்கியிருக்கிறார். அதுவும் அந்த காட்சிகளின் நீளம் பார்ப்பவர்களுக்கு சற்று பொறுமையை சோதிக்கிறது. மற்றபடி, இயக்குனரின் இந்த புதிய முயற்சியை பாராட்டலாம்.
சந்தோஷ் அஞ்சலி ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது. படத்தில் விஷுவல் எபெக்ட்ஸ் அதிகம் இடம்பெற்றிருக்கிறது. இருப்பினும், அது தெரியாமல் ரொம்பவும் எதார்த்தமாக இருப்பதுபோல் தெரிகிறது. விஷ்ணு வி.திவாகரனின் இசை கதைக்கேற்ற உணர்வை கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘இலை’ பசுமை.

பாகுபலி-2 படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த பிரச்சினைக்கு காரணமான சத்யராஜ் இன்று வீடியோ வாயிலாக தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழ் திரைப்பட நடிகர் சத்யராஜ் கன்னடர்களையும், கன்னட அமைப்புகளின் தலைவர்களையும் தரக்குறைவாக பேசியதாக கூறி, அவர் நடித்துள்ள ‘பாகுபலி-2‘ திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிடக் கூடாது என்று கன்னட அமைப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். அவரது போஸ்டரை கன்னட அமைப்பினர் தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
‘பாகுபலி-2‘ திரைப்படம் வருகிற 28-ந்தேதி நாடு முழுவதும் திரையிடப்பட உள்ளது. அன்றைய தேதி நடிகர் சத்யராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தவும் கன்னட அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று ‘பாகுபலி’ படத்தின் இயக்குனர் ராஜமௌலி டுவிட்டரில் பாகுபலி படத்தை திரையிட அனுமதிக்குமாறு கன்னட மக்களுக்கு கோரிக்கை வைத்திருந்தார். தற்போது, இந்த பிரச்சினைக்கு நடிகர் சத்யராஜ் வீடியோ வாயிலாக வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசிய வீடியோவில் கூறியிருப்பதாவது,
ஒன்பது வருடங்களுக்கு முன்னாள் காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். தமிழ் படங்கள் திரையிடுவதை நிறுத்தச்சொல்லி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ் திரையுலகின் சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பலரும் ஆவேசமாக பேசினார்கள். அவர்களில் நானும் ஒருவன்.
அதற்கு எதிர்வினையாக என்னுடைய கொடும்பாவி, உருவ பொம்மைகள் கர்நாடகாவில் எரிக்கப்பட்டன. அதேவேளையில், கர்நாடகாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கர்நாடக திரைப்பட கலைஞர்களும் ஆவேசமாக பேசினார்கள். அப்படி நான் பேசியபோதே என்னுடைய சில வார்த்தைகள் கன்னட மக்களின் மனதை புண்படுத்தியதாக அறிகிறேன்.

நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல. அதற்கு உதாரணமே, 35 வருடங்களாக என்னிடம் உதவியாளராக இருக்கும் சேகர் என்பவரின் தாய்மொழி கன்னடம். கடந்த 9 வருடங்களில் ‘பாகுபலி’ பாகம் 1 உள்பட நான் நடித்த சுமார் 30 திரைப்படங்கள் கர்நாடகாவில் வெளியாகியுள்ளன. எந்த பிரச்சினையும் எழவில்லை.
சில கன்னட படங்களில் நடிக்கவும் என்னை அணுகினார்கள். நேரமின்மையால் நடிக்க இயலவில்லை. 9 வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்த கண்டன கூட்டத்தில் நான் பேசிய அந்த வீடியோ பதிவை யூடியூப்பில் பார்த்ததாலும், நான் பேசிய சில வார்த்தைகளால் கன்னட மக்களின் மனம் புண்படுவதாக அவர்கள் கருதுவதாலும் அந்த சில வார்த்தைகளுக்காக 9 வருடங்களுக்கு பிறகு நான் கன்னட மக்களிடம் என் மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தமிழக மக்களுக்கும், என் நலம் விரும்புபவர்களுக்கும் என்மீது வருத்தம் கொள்ளவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம். பாகுபலி என்ற மிகப்பெரிய படத்தின் ஒரு மிகச்சிறிய தொழிலாளிதான் நான். என் ஒருவனுடைய செயலின் பொருட்டு, சொற்களின் பொருட்டு பல ஆயிரம் பேர்களின் உழைப்பும், பணமும் விரயம் ஆவதை நான் விரும்பவில்லை.
அதுமட்டுமில்லாது, கர்நாடகா மாநிலத்திற்கு ‘பாகுபலி-2’ ஆம் பாகத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும், பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பும் எனக்கு உள்ளது என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இயக்குனர் ராஜமௌலி அவர்கள் டுவிட்டரில் கூறிய விளக்கத்தின் மூலமாக தெளிவாக தெரியும். ஆனாலும், இனி வரும் காலங்களில் தமிழக மக்களின் பிரச்சினையாக இருந்தாலும் சரி, காவிரி நதிநீர் பிரச்சினையானாலும் சரி, விவசாயிகள் பிரச்சினையானாலும் சரி, தமிழக மக்களின் நலம் சார்ந்த அனைத்து நியாயமான பிரச்சினைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் இருப்பேன் என்பதை தெள்ளத்தெளிவாக கூறிக் கொள்கிறேன்.
இப்படி நான் கூறுவதால் இந்த சத்யராஜை வைத்து படம் எடுத்தால் எதிர்காலத்தில் தொல்லைகள் வரும் என்று கருதும் தயாரிப்பாளர்கள் தயவுசெய்து இந்த சாதாரண, சின்ன நடிகனை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்யவேண்டாம், என்னால் நஷ்டமடைய வேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஏனென்றால், ஒரு நடிகனாக இருப்பதைவிட, இறப்பதைவிட எந்தவிதமான மூடநம்பிக்கையும் இல்லாத ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும்தான் எனக்கு பெருமை, மகிழ்ச்சி. எனது மனப்பூர்வமான வருத்தத்தை ஏற்றுக்கொண்டு பாகுபலி-2 ஆம் பாகத்தை வெளியிட ஒத்துழைக்குமாறு கன்னட மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
என் உணர்வுகளை புரிந்துகொண்டு எனக்கு உறுதுணையாக நின்ற தமிழ் மக்கள், தமிழ் உணர்வாளர்கள், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம், என் நலவிரும்பிகள் என அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னால் ஏற்பட்ட தொல்லைகளை பொறுத்துக்கொண்ட இயக்குனர் ராஜமௌலி, தயாரிப்பாளர் சோபு, பிரசாத் மற்றும் ‘பாகுபலி’ படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

நடிகை சமந்தாவின் திருமணம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
நடிகை சமந்தாவுக்கும், நாகார்ஜுனாவின் மகனும், தெலுங்கு நடிகருமான நாகசைதன்யாவுக்கும் காதல் மலர்ந்து, இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தமும் நடத்தப்பட்டது. இவர்கள் திருமணம் மே மாதம் நடைபெறும் என்று கூறப்பட்டது. திருமண ஏற்பாடுகளில் இருவரின் பெற்றோர்களும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் சமந்தா-நாகசைதன்யா திருமணத்தை அக்டோபர் மாதத்துக்கு திடீரென்று தள்ளிவைத்து உள்ளனர். இதனை நாகசைதன்யாவின் உறவினர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். சமந்தாவும், நாகசைதன்யாவும் அதிக படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருவதே திருமணம் தள்ளிப்போனதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சமந்தா தற்போது விஜய்யின் 61-வது படத்தில் அவருக்கு ஜோடியாகவும், இரும்புத்திரை படத்தில் விஷால் ஜோடியாகவும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையை மையமாக வைத்து தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்திலும் நடிக்கிறார். இரண்டு தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன. இவற்றை அக்டோபர் மாதத்துக்குள் முடித்து விட திட்டமிட்டு உள்ளார்.

சமந்தாவின் நிச்சயதார்த்தம் நெருங்கிய உறவினர்களை வைத்து எளிமையாக நடந்தது. ஆனால் திருமணத்துக்கு தமிழ், தெலுங்கு பட உலகை சேர்ந்த முன்னணி நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட அனைவரையும் அழைக்க முடிவு செய்து உள்ளனர்.
பாலி தீவு அல்லது பாங்காக்கில் இவர்கள் திருமணத்தை நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த முடிவையும் கைவிட்டு விட்டனர். ஐதராபாத்திலேயே திருமணம் நடக்க உள்ளது. சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் இந்து-கிறிஸ்தவ முறைப்படி இரண்டு முறை இந்த திருமணம் நடக்க இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
நாகார்ஜுனாவின் இளைய மகனான அகிலுக்கும், ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரேயா என்பவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்து திடீரென்று திருமணத்தை ரத்து செய்து விட்டனர். இதனால் தனது திருமணத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்று சமந்தா அவசரம் காட்டி வந்த நிலையில், தற்போது அவரது திருமணமும் தள்ளிப்போய் இருக்கிறது.

நில மோசடி வழக்கில் சமரச பேச்சுவார்த்தைக்காக சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் வடிவேலுவும், சிங்கமுத்துவும் ஆஜரானார்கள். ஆனால், நீதிபதி முன்பு நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் நடிகர் வடிவேலு 2002-ம் ஆண்டு ராமச்சந்திரன் என்பவரின் வாரிசுகளிடம் இருந்து நிலத்தை வாங்கினார். இதற்கு ‘பவர் ஏஜெண்டாக’ நடிகர் சிங்கமுத்து செயல்பட்டார். இந்த நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வடிவேலு முயன்றபோது, பழனியப்பன் என்பவர் நிலத்துக்கு உரிமை கொண்டாடினார்.
இதுகுறித்து விசாரித்தபோது, நிலத்தின் உரிமையாளரான மறைந்த ராமச்சந்திரன், தொழில் முதலீட்டு நிறுவனத்திடம் இந்த நிலத்தை அடமானம் வைத்திருந்தார். கடன் தொகையை திருப்பி செலுத்தாததால் 2006-ம் ஆண்டு தொழில் முதலீட்டு நிறுவனம் அந்த நிலத்தை ஏலம் விட்டது. அதை பழனியப்பன் ஏலம் எடுத்தது வடிவேலுவுக்கு தெரியவந்தது.
இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில், நடிகர் சிங்கமுத்து, ராமச்சந்திரனின் வாரிசுகள் கங்கா, சாந்தகுமாரி உள்ளிட்டோர் மீது நடிகர் வடிவேலு புகார் செய்தார். அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு எழும்பூர் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இவ்வழக்கை ரத்து செய்யக்கோரி கங்கா உள்பட 5 பேர் 2010-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து மற்றும் கங்கா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசமாக போவதாக அவர்களின் வக்கீல்கள் கூறினர்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து உள்ளிட்டோர் ஏப்ரல் 7-ந்தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் அன்று அவர்கள் ஆஜராகவில்லை. அடுத்த விசாரணைக்கு வராவிட்டால் நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்துவுக்கு எதிராக வாரண்டு பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி எம்.வி.முரளிதரன் தன்னுடைய அறையில் வைத்து விசாரித்தார். நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து, மனுதாரர்கள் கங்கா உள்பட அனைவரும் நேரில் ஆஜரானார்கள்.
அப்போது அவர்களிடம் நீதிபதி பேச்சுவார்த்தை நடத்தினார். நிலமோசடி வழக்கு மட்டுமல்லாமல், பிற வழக்குகளும் இருதரப்பினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. பேச்சுவார்த்தை சுமார் 45 நிமிடங்கள் நடந்தும் தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து கங்கா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வடிவேலுவும், சிங்கமுத்துவும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல், தங்கள் காரில் ஏறிச்சென்றனர்.

தனுஷ் யாருடைய மகன்? என்று மதுரை ஐகோர்ட் கிளையில் கதிரேசன்-மீனாட்சி தம்பதியனர் தொடர்ந்த வழக்கை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் -மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும், அவரிடம் இருந்து ஜீவானம்சம் பெற்றுதர நடவடிக்கை எடுக்கக்கோரி மேலூர் கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுவை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் தரப்பு சார்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனுசின் அங்க அடையாளங்களை சரி பார்க்க உத்தரவிட்டனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் தனுசின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தனர்.

மேலும், கதிரேசனின் வக்கீல் டைட்டஸ், தனுஷ் சார்பில் மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் போடப்பட்டுள்ள தனுசின் கையெழுத்து போலியானது என்று மற்றொரு வழக்கையும் போட்டியிருந்தார். இப்படியாக தனுஷ் யாருடைய மகன் என்ற வழக்கு பல்வேறு சர்ச்சைகளுடன் நடந்து வந்தது.
இந்நிலையில், தனுஷின் கோரிக்கையை ஏற்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கதிரேசன்-மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர். இதன்மூலம் நீண்ட நாட்களாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி வந்த இந்த வழக்கில் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் சத்யராஜ் நடித்த ‘பாகுபலி-2’ படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி சத்யராஜ் கட்அவுட்டை தீவைத்து எரித்தனர்.
காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழ் திரைப்பட நடிகர் சத்யராஜ் கன்னடர்களையும், கன்னட அமைப்புகளின் தலைவர்களையும் தரக்குறைவாக பேசியதாக கூறி, அவர் நடித்துள்ள ‘பாகுபலி-2‘ திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிடக் கூடாது என்று கன்னட அமைப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ‘பாகுபலி-2‘ திரைப்படம் வருகிற 28-ந்தேதி நாடு முழுவதும் திரையிடப்பட உள்ளது. அன்றைய தேதி நடிகர் சத்யராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தவும் கன்னட அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடிகர் சத்யராஜின் உருவப்படம் அச்சிடப்பட்டிருந்த கட்-அவுட்டை தீவைத்து எரித்த காட்சி.
இதற்கிடையே நடிகர் சத்யராஜ் நடித்துள்ள ‘பாகுபலி-2‘ படத்தை கர்நாடகத்தில் திரையிடக் கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று கர்நாடக ரக்ஷண வேதிகே என்ற கன்னட அமைப்பு சார்பில் பெங்களூருவில் உள்ள கன்னட திரைப்பட வர்த்தக சபை முன்பு போராட்டம் நடந்தது.
அப்போது அவர்கள் நடிகர் சத்யராஜுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் கர்நாடகத்தில் நடிகர் சத்யராஜ் நடித்த ‘பாகுபலி-2‘ படத்தை திரையிடக் கூடாது எனவும் கோஷம் போட்டனர். அந்த சமயத்தில் சிலர், நடிகர் சத்யராஜின் உருவப்படம் அச்சிடப்பட்டிருந்த கட்- அவுட்டை தீவைத்து எரித்தனர்.