search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    2023 ஆட்டோ எக்ஸ்போவில் டொயோட்டா GR கொரோலா ஹேச்பேக்!
    X

    2023 ஆட்டோ எக்ஸ்போவில் டொயோட்டா GR கொரோலா ஹேச்பேக்!

    • டொயோட்டா நிறுவனத்தின் GR கொரோலா மாடல் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.
    • சர்வதேச சந்தையில் இந்த கார் சிவிக் டைப் R மற்றும் கொல்ஃப் R மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் மற்றும் LC300 போன்ற மாடல்களை காட்சிக்கு வைக்க திட்டமிட்டுள்ளது. இரு மாடல்களும் கவனத்தை ஈர்க்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. எனினும், இரு கார்கள் மட்டுமின்றி டொயோட்டா நிறுவனம் தனது GR மாடலை முதல் முறையாக இந்தியாவில் காட்சிக்கு வைக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    டொயோட்டா GR கொரோலா மாடல் சர்வதேச சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் கொரோலா ஹேச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் பெர்ஃபார்மன்ஸ் வெர்ஷன் டொயோட்டா GR (கசூ ரேசிங்) பெர்ஃபார்மன்ஸ் பிரிவு மூலம் அதிகளவு மாற்றங்களை எதிர்கொண்டு இருக்கிறது. GR கொரோலா மாடல் டொயோட்டா நிறுவனத்தின் TNGA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஹேச்பேக் மாடலில் 1.6 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட, சிங்கில் ஸ்கிரால் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 304 ஹெச்பி பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடிஸ் AMG A35 மாடலுக்கு இணையான செயல்திறன் ஆகும். எனினும், மெர்சிடிஸ் மாடலில் 2.0 லிட்டர் என்ஜின் உள்ளது.

    டொயோட்டா GR கொரோலா மாடலில் உள்ள என்ஜின் ட்ரிபில்-எக்சிட் எக்சாஸ்ட், மல்டி-ஆயிர் ஜெட் பிஸ்டன் கூலிங் சிஸ்டம், பெரிய எக்சாஸ்ட் வால்வுகள், பார்ட்-மெஷின்டு இண்டேக் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை ஐந்து நொடிகளுக்குள் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.

    Next Story
    ×