search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ஹைப்ரிட் வசதியுடன் சுசுகி எர்டிகா குரூயிஸ் அறிமுகம்
    X

    ஹைப்ரிட் வசதியுடன் சுசுகி எர்டிகா குரூயிஸ் அறிமுகம்

    • சுசுகி எர்டிகா குரூயிஸ் மாடலில் காஸ்மடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
    • இந்த காரில் மைல்டு ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்தோனேசிய சர்வதேச மோட்டார் விழா 2024-இல் சுசுகி நிறுவனம் தனது எர்டிகா குரூயிஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் மூலம் சுசுகி நிறுவனம் எர்டிகாவுக்கு காஸ்மடிக் அப்கிரேடுகளை செய்துள்ளது. புதிய எர்டிகா குரூயிஸ் மாடலின் பேஸ் வேரியன்ட் விலை IDR 288 மில்லியன், இந்திய மதிப்பில் ரூ. 15.3 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இதன் ஆட்டோமேடிக் வெர்ஷனின் விலை IDR 301 மில்லியன், இந்திய மதிப்பில் ரூ. 16 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த காரின் முகப்பு பகுதியில் இன்வெர்ட் செய்யப்பட்ட L வடிவ டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை மேம்பட்ட பம்ப்பரில் பொருத்தப்பட்டுள்ளன. இதனை சுற்றி ஃபாக் லேம்ப்கள் உள்ளன. இவை காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகின்றன.


    இதில் உள்ள கருப்பு நிற கிரில் பகுதியை சுற்றி க்ரோம் ட்ரிம் உள்ளது. இவை ஹெட்லேம்ப்களை சுற்றியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிளாக் டீகல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் கூல் பிளாக் மற்றும் பியல் வைட்/கூல் பிளாக் டூ-டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எர்டிகா ஸ்டான்டர்டு மாடல் ஏழு நிறங்களில் கிடைக்கிறது.

    2024 சுசுகி எர்டிகா குரூயிஸ் மாடலில் பெரிய பேட்டரி பேக் கொண்ட மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 104 பி.எஸ். பவர், 138 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    முற்றிலும் புதிய சுசுகி எர்டிகா குரூயிஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் மாருதி சுசுகி எர்டிகா மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 69 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 13 லட்சத்து 03 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×