search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    585கிமீ ரேன்ஜ் வழங்கும் ரோல்ஸ் ராய்ஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்
    X

    585கிமீ ரேன்ஜ் வழங்கும் ரோல்ஸ் ராய்ஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

    • 2022 அக்டோபர் மாத வாக்கில் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.




    ஆடம்பர கார் உற்பத்தியாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் கவனம் செலுத்த துவங்கி உள்ளன. இதன் மூலம் பிராண்டு இமேஜ், பிரீமியம் டிரைவிங் அனுபவம், புதிய தொழில்நுட்ப அம்சங்கள் மூலம் புதுமை செய்வது, வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது, புதிய புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்வதில் முக்கியத்துவம் கொடுக்கின்றன.

    எலெக்ட்ரிக் வாகனங்கள் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள், தானியங்கி டிரைவிங் வசதிகளை வழங்குகின்றன. பல்வேறு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள், ஆடம்பர கார் உற்பத்தியாளர்களும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்த துவங்கிவிட்டன. இந்த வரிசையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

    சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஆட்டோ விழாவில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக 2022 அக்டோபர் மாத வாக்கில் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரில் 430 கிலோவாட் மோட்டார் உள்ளது. இது 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். இதில் உள்ள 102 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் முழுமையாக சார்ஜ் செய்தால் 585 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. ரோல்ஸ் ராய்ஸ் எலெக்ட்ரிக் காரின் உள்புறத்தில் ஸ்டார்லைட் டோர்கள், ஸ்டேரி ஸ்கை ரூஃப், ரோல்ஸ் ராய்ஸ் லோகோ கொண்ட தலையணைகள் உள்ளன.

    புதிய ரோல்ஸ் ராய்ஸ் எலெக்ட்ரிக் காரின் விலை 5.75 மில்லியன் யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 6 கோடியே 85 லட்சத்து 95 ஆயிரத்து 085 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் வினியோகம் இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் துவங்க இருக்கிறது.

    Next Story
    ×