search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    விலை ரூ. 93 லட்சம் தான்.. இந்தியாவில் அறிமுகமான ரேன்ஜ் ரோவர் வெலார் பேஸ்லிப்ட்
    X

    விலை ரூ. 93 லட்சம் தான்.. இந்தியாவில் அறிமுகமான ரேன்ஜ் ரோவர் வெலார் பேஸ்லிப்ட்

    • வெலார் பேஸ்லிப்ட் மாடலில் பிக்சல் எல்இடி ஹெட்லைட்கள், ரிவைஸ்டு டேடைம் ரன்னிங் லைட்கள் உள்ளன.
    • புதிய ரேன்ஜ் ரோவர் வெலார் பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் டீசல் என்ஜின் உள்ளது.

    லேன்ட் ரோவர் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் வெலார் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ரேன்ஜ் ரோவர் வெலார் பேஸ்லிப்ட் விலை ரூ. 93 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ரேன்ஜ் ரோவர் ஒற்றை HSE வேரியன்ட் மற்றும் இரண்டு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் ரேன்ஜ் ரோவர் வெலார் பேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவு கடந்த வாரம் துவங்கியது. வினியோகம் செப்டம்பர் மாதம் துவங்கும் என்று தெரிகிறது. புதிய பேஸ்லிப்ட் மாடலின் விலை தற்போது விற்பனை செய்யப்படும் மாடலை விட ரூ. 3 லட்சத்து 59 ஆயிரம் அதிகம் ஆகும்.

    வெலார் பேஸ்லிப்ட் மாடலில் பிக்சல் எல்இடி ஹெட்லைட்கள், ரிவைஸ்டு டேடைம் ரன்னிங் லைட்கள், பின்புறம் ரிடிசைன் செய்யப்பட்ட பம்ப்பர், டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. காரின் உள்புறம் 11.4 இன்ச் டச்-ஸ்கிரீன் பிவி ப்ரோ சிஸ்டம், வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆப்பிள் கார்பிளே வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ரேன்ஜ் ரோவர் வெலார் பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் மோட்டார் 250 ஹெச்பி பவர், 365 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் மோட்டார் 204 ஹெச்பி பவர், 430 நீயூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்த கார் மணிக்கு 217 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. டீசல் என்ஜின் கொண்ட மாடல் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இது மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 8.3 நொடிகளில் எட்டிவிடும்.

    Next Story
    ×