என் மலர்

  இது புதுசு

  கன்வெர்டிபில் வடிவில் உருவாகும் புதிய தலைமுறை மினி EV
  X

  கன்வெர்டிபில் வடிவில் உருவாகும் புதிய தலைமுறை மினி EV

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மினி நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கார் மாடலில் கன்வெர்டிபில் ஆப்ஷனை வழங்கி சோதனை செய்து வருகிறது.
  • தற்போதைய மினி கன்வெர்டபில் மாடலில் எலெக்ட்ரிக் வெர்ஷன் வழங்கப்படாது.

  பி.எம்.டபிள்யூ. நிறுவனம் அடுத்த தலைமுறை மினி மாடல்கள் வரிசையில் கன்வெர்டிபில் மாடல்களை சேர்க்க இருக்கிறது. இதற்காக முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்ட மினி கன்வெர்டிபில் மாடல் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சந்தையில் இந்த மாடல் எந்த அளவுக்கு நிலைத்து இருக்கும் என்பதை சோதனை செய்ய அந்நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது.

  ஒன்-ஆப் மினி எலெக்ட்ரிக் என அழைக்கப்படும் புது மாடல் ப்ரோடோடைப் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சோதனை அடிப்படையில் இந்த மாடல் இருக்கும் என பி.எம்.டபிள்யூ. தெரிவித்து உள்ளது. முனிச்-இல் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த ப்ரோடோடைப் மாடல் தற்போதைய கூப்பர் S கன்வெர்டபில் மாடலின் உருவில் கூப்பர் SE மாடலில் உள்ள 184 ஹெச்.பி. பவர் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது.


  இதன் காரணமாக ப்ரோடோடைப் மாடலின் எடை ICE கூப்பர் S கன்வெர்டபில் மாடலை விட 140 கிலோ வரை அதிகரித்து இருக்கிறது. இதன் பூட் கொள்ளளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது 160 லிட்டர்கள் கொள்ளளவு வழங்குகிறது.

  தற்போதைய மினி கன்வெர்டபில் மாடல்கள் எலெக்ட்ரிக் வடிவில் மாற்றப்படாது. எலெக்ட்ரிக் கன்வெர்டபில் மாடல்கள் முற்றிலும் புதிதாக உருவாக்கப்படும் என பி.எம்.டபிள்யூ. தெரிவித்து இருக்கிறது. "மினி கன்வெர்டபில் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் அறிமுகமாகும் என நாங்கள் அறிவித்து விட்டோம். ஆனால் அதன் என்ஜின் விவரங்கள் பற்றி இப்போதே அறிவிப்பது சரியாக இருக்காது," என பி.எம்.டபிள்யூ. தெரிவித்து உள்ளது.

  Next Story
  ×