search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    இரண்டு புது லேன்ட் குரூயிசர் மாடல்கள் அறிமுகம்.. டொயோட்டா வேற லெவல் சம்பவம்..!
    X

    இரண்டு புது லேன்ட் குரூயிசர் மாடல்கள் அறிமுகம்.. டொயோட்டா வேற லெவல் சம்பவம்..!

    • லேன்ட் குரூயிசர் 200 மாடலின் விற்பனை சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.
    • லேன்ட் குரூயிசர் 300 மாடல் வட அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை.

    டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த இரண்டு லேன்ட் குரூயிசர் எஸ்யுவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. வட அமெரிக்க சந்தையில் லேன்ட் குரூயிசர் 250 மற்றும் லேன்ட் குரூயிசர் 70 என்று அழைக்கப்படுகின்றன. லேன்ட் குரூயிசர் 250 மாடல் லேன்ட் குரூயிசர் பிராடோ என்ற பெயரில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    முற்றிலும் புதிய லேன்ட் குரூயிசர் 250 மாடல் மூலம் வட அமெரிக்க சந்தையில் மீண்டும் லேன்ட் குரூயிசர் பிரான்டு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தான் லேன்ட் குரூயிசர் 200 மாடலின் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட லேன்ட் குரூயிசர் 300 மாடல் வட அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை.

    ஐரோப்பா, ஜப்பான், மத்திய கிழக்கு மற்றும் ஆஸ்திரேலிய சந்தைகளில் புதிய லேன்ட் குரூயிசர் பிராடோ மாடலில் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பார்ச்சூனர் எஸ்யுவி மாடலிலும் இதே என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்படுகிறது.

    லேன்ட் குரூயிசர் 250 மாடலில் 2.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் லெக்சஸ் GX 470 மற்றும் அதிக டொயோட்டா மற்றும் லெக்சஸ் கார்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. லேன்ட் குரூயிசர் 70 மாடலில் 2.8 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இரண்டு புதிய லேன்ட் குரூயிசர் கார்களில், லேன்ட் குரூயிசர் பிராடோ மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த கார் பார்ச்சூனரின் மேல், லேன்ட் குரூயிசர் 300 எஸ்யுவி மாடல்களின் கீழ் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

    Next Story
    ×