search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ஹைப்ரிட் ஆப்ஷன், அசத்தல் அப்டேட்ஸ்.. முற்றிலும் புதிய டஸ்டர் அறிமுகம்
    X

    ஹைப்ரிட் ஆப்ஷன், அசத்தல் அப்டேட்ஸ்.. முற்றிலும் புதிய டஸ்டர் அறிமுகம்

    • டேசியா மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது.
    • இந்த கார் 7 சீட்டர் வேரியண்டிலும் அறிமுகம் செய்யப்படலாம்.

    ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முற்றிலும் புதிய டஸ்டர் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனை ரெனால்ட்-இன் துணை பிராண்டு டேசியா அறிமுகம் செய்துள்ளது. புதிய டஸ்டர் மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து மற்ற சந்தைகளில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    இந்திய சந்தையில் முற்றிலும் புதிய டஸ்டர் மாடல் 2025 ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். மூன்றாம் தலைமுறை டஸ்டர் மாடல் CMF-B பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் இதுவரை பல்வேறு டேசியா, ரெனால்ட் மற்றும் நிசான் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன.

    இந்த காரின் முன்புறம் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் டேசியா மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், ரெனால்ட் பிராண்டிங்கில் அறிமுகமாகும் டஸ்டர் மாடலில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. இந்த கார் 7 சீட்டர் வேரியண்டிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    டேசியா டஸ்டர் மாடலில் 1.6 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் 1.2 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங் வசதி வழங்கப்படுகிறது.

    இத்துடன் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் ஸ்டார்டர் மோட்டார் வழங்கப்படுகிறது. முந்தைய மாடலை போன்றே புதிய டஸ்டர் மாடலும் 4x2 மற்றும் 4x4 ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    Next Story
    ×