search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    புதிய ரேன்ஜ் ரோவர் டெலிவரி அப்டேட்
    X

    புதிய ரேன்ஜ் ரோவர் டெலிவரி அப்டேட்

    • ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் புதிய ரேன்ஜ் ரோவர் டெலிவரி அப்டேட்டை வெளியிட்டு உள்ளது.
    • புதிய ரேன்ஜ் ரோவர் மொத்தம் 25 ட்ரிம்களில் கிடைக்கிறது.

    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் புதிய ரேன்ஜ் ரோவர் டெலிவரி அப்டேட்டை வெளியிட்டு உள்ளது. புதிய ரேன்ஜ் ரோவர் மொத்தம் 25 ட்ரிம்களில் கிடைக்கிறது.ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் மாடலின் வினியோகத்தை இந்தியாவில் துவங்கி உள்ளது. புதிய ரேன்ஜ் ரோவர் மாடல் ஐந்து இருக்கைகளுடன் ஸ்டாண்டர்டு மற்றும் நீண்ட வீல்பேஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதிக இடவசதி விரும்புவோருக்கு மூன்றாம் அடுக்கு கொண்ட பகுதியில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் வழங்கப்படுகிறது.

    புதிய ரேன்ஜ் ரோவர் SE, HSE மற்றும் ஆட்டோபயோகிராபி மாடல்களின் வினியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ரேன்ஜ் ரோவர் மாடல் மொத்தத்தில் 25 ட்ரிம்களில் பெட்ரோல், டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 2 கோடியே 39 லட்சம் என துவங்குகிறது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 4 கோடியே 01 லட்சம் என துவங்குகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


    "புதிய ரேன்ஜ் ரோவர் தனித்துவம் மற்றும் அதிநவீன ஆடம்பரத்தின் உச்ச நிலையை வெளிப்படுத்தி, சமரசம் இல்லா தொழில்நுட்ப நுனுக்கங்களை சீராக கொண்ட மாடல் ஆகும். இந்த வாகனம் தனித்துவம் மிக்க வாடிக்கையாளர்களுக்கு கச்சிதமாக பொருந்தும் வகையை சேர்ந்தது ஆகும்," என ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரோகித் சூரி தெரிவித்து உள்ளார்.

    புதிய ரேன்ஜ் ரோவர் மாடல் 3 லிட்டர், 6 சிலிண்டர் டீசல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட், 4.4 லிட்டர் வி8 என்ஜின் ஆப்ஷ்களில் கிடைக்கிறது. இதன் 3 லிட்டர் டீசல் என்ஜின் 243 ஹெச்.பி. பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இதன் 4.4 லிட்டர் வி8 என்ஜின் 516 ஹெச்.பி. பவர், 750 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் சர்வதேச சந்தையில் 389 ஹெச்.பி. பவர், 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டு இருக்கிறது.

    Next Story
    ×