search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    Kia Carnival
    X

    ஏகப்பட்ட அப்டேட்களுடன் ரெடியான புது கார்னிவல் மாடல்.. அடுத்தவாரம் முன்பதிவு

    • கார்னிவல் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் ஆகும்.
    • இந்த கார் ஒற்றை வேரியண்டில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

    கியா இந்தியா நிறுவனத்தின் முற்றிலும் புதிய கார்னிவல் மாடல் கார் அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், புதிய கார்னிவல் மாடலுக்கான முன்பதிவு பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய கியா கார்னிவல் மாடலுக்கான முன்பதிவுகள் வருகிற 16 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து விற்பனை அக்டோபர் 3 ஆம் தேதி துவங்குகிறது.

    ஏற்கனவே புதிய கியா கார்னிவல் மாடலுக்கான முன்பதிவுகள் விற்பனை மையங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது கியா இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வ முன்பதிவுகள் செப்டம்பர் 16 ஆம் தேதி துவங்கவுள்ளன. புதிய கார்னிவல் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய கியா கார்னிவல் மாடல் இரண்டடுக்கு சன்ரூஃப், இருக்கைகளை எலெக்ட்ரிக் முறையில் அட்ஜஸ்ட் செய்யும் வசதி, வென்டிலேஷன் மற்றும் கால் வைக்கும் பகுதி, பவர் ஸ்லைடிங் கதவுகள், 12 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம், இரட்டை கர்வ்டு டிஸ்ப்ளேக்கள் மற்றும் ADAS சூட் வழங்கப்படுகிறது.


    இந்த கார் ஒற்றை வேரியண்டில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. முதற்கட்டமாக இந்த கார் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட உள்ளது. அதன்பிறகு, இந்த காரின் பாகங்கள் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, இங்குள்ள ஆலையில் அசெம்பில் செய்யப்படுகிறது.

    புதிய கியா கார்னிவல் மாடலில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் வழங்கப்படும் என்று தெரிகிறது. சர்வதேச சந்தையில் இந்த கார் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் புதிய கியா கார்னிவல் மாடலின் விலை ரூ. 50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. கியா கார்னிவல் மாடலை தொடர்ந்து கியா EV9 மாடலின் விலையும் அறிவிக்கப்பட உள்ளது.

    Next Story
    ×