search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    வி8 என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் புதிய போர்டு மஸ்டங் அறிமுகம்
    X

    வி8 என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் புதிய போர்டு மஸ்டங் அறிமுகம்

    • போர்டு நிறுவனம் ஏழாம் தலைமுறை மஸ்டங் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய போர்டு மஸ்டங் மாடலில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    அமெரிக்க ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான போர்டு தனது பாரம்பரியம் மிக்க மஸ்டங் மாடலின் ஏழாம் தலைமுறை மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த காரில் புதிய எக்ஸ்டீரியர் மற்றும் இண்டீரியர், சக்திவாய்ந்த வி8 சேர்த்து இருவித என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    போர்டு வரலாற்றில் முதல் முறையாக மஸ்டங் டார்க் ஹார்ஸ் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. இது டிராக் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் சக்திவாய்ந்த வேரியண்ட் ஆகும். இதில் அதிக செயல்திறன் வழங்கும் அப்கிரேடுகளை கொண்டிருக்கிறது.


    புதிய தலைமுறை மஸ்டங் மாடல் ஜிடி மற்றும் இகோபூஸ்ட் ட்ரிம் லெவல்களில் கூப் மற்றும் கன்வெர்டிபில் பாடி ஸ்டைல்களில் கிடைக்கிறது. இதன் எக்ஸ்டீரியர் டிசைன் 1960-க்களில் வெளிவந்த ஒரிஜினல் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. முதல் முறையாக ஜிடி மற்றும் இகோபூஸ்ட் மாடல்கள் வித்தியாசப்படுத்தப்பட்டு உள்ளன.

    ஒட்டுமொத்தத்தில் புதிய மஸ்டங் ஹெக்சகன் வடிவ கிரில், பெரிய ஏர் இன்லெட்கள், மூன்று பார் எல்இடி ஹெட்லைட்கள், எக்ஸ்டெண்ட் செய்யப்பட்ட பூட், கூர்மையான டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் மொத்தத்தில் 11 நிறங்களில் கிடைக்கிறது. இதில் வேப்பர் புளூ மற்றும் எல்லோ ஸ்பிலாஷ் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.

    ஏழாம் தலைமுறை போர்டு மஸ்டங் மாடல் 5.0 லிட்டர் கோயோட் வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் டூயல் கோல்டு ஏர் இண்டேக், டூயல் திராட்டில் பாடி டிசைன் மற்றும் அதிக ஏர்-ஃபுளோ ரேட்களை வழங்குகிறது. இத்துடன் 2.3 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட ட்வின் ஸ்கிரால், இகோபூஸ்ட் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    இகோபூஸ்ட் வெர்ஷனில் 10 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டு அம்சமாகவும், வி8 என்ஜினில் ஆப்ஷனாகவும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின்களின் செயல்திறன் பற்றி போர்டு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    Next Story
    ×