என் மலர்
இது புதுசு

590 கிமீ ரேன்ஜ் வழங்கும் புது பென்ஸ் கார் அறிமுகம்
- மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புதிய பென்ஸ் எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 580 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் உற்பத்தியாளர் மெர்சிடிஸ் முற்றிலும் புதிய EQE எஸ்யுவி-யை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மெர்சிடிஸ் EQE எஸ்யுவி பிளாக்ஷிப் எஸ்யுவி-யான EQS மாடலின் மினி வெர்ஷன் ஆகும். புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQE எலெக்ட்ரிக் கார் மூன்று ரெகுலர் வெர்ஷன்கள், இரண்டு AMG பேட்ஜ் கொண்ட மாடல்கள் என ஐந்து வித வெர்ஷன்களில் கிடைக்கிறது.
புதிய மெர்சிடிஸ் EQE எலெக்ட்ரிக் எஸ்யுவி-யின் எண்ட்ரி-லெவல் வெர்ஷனாக 350+ இருக்கிறது. இது ரியர் வீல் டிரைவ் கொண்ட மாடல் ஆகும். இந்த வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 590 கிலோமீட்டர் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது. இதன் சிங்கில் எலெக்ட்ரிக் மோட்டார் 288 ஹெச்பி பவர், 565 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
EQE 350 4மேடிக் வெர்ஷன் முழு சார்ஜ் செய்தால் 558 கிலோமீட்டர் வரை செல்கிறது. இந்த காரின் செயல்திறன் 765 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. EQE 500 4மேடிக் மாடல் முழு சார்ஜ் செய்தால் 547 கிலோமீட்டர் வரை செல்லும். இதன் டூயல் மோட்டார் செட்டப் 402 ஹெச்பி பவர், 858 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
AMG மாடலின் பேஸ் வேரியண்ட் EQE 43 4மேடிக் மாடல் டூயல் மோட்டார் செட்டப் 469 ஹெச்பி பவர், 858 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. EQE 43 4மேடிக் எஸ்யுவி முழு சார்ஜ் செய்தால் 488 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.3 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.






