என் மலர்
இது புதுசு

டெஸ்டிங்கில் சிக்கிய மாருதி EVX எலெக்ட்ரிக் - வெளியீடு எப்போ தெரியுமா?
- மாருதி EVX எலெக்ட்ரிக் எஸ்யுவி ஹூண்டாய் கிரெட்டா EV மாடலுக்கு போட்டியாக அமையும்.
- மாருதி EVX மாடல், தோற்றத்தில் அதன் கான்செப்ட் வெர்ஷன் போன்று காட்சியளிக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் EVX எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட மாருதி EVX மாடல் YY8 எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இது மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.
2025 வாக்கில் இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தயில் மாருதி EVX எலெக்ட்ரிக் எஸ்யுவி ஹூண்டாய் கிரெட்டா EV மாடலுக்கு போட்டியாக அமையும் என்று தெரிகிறது. மாருதி EVX தற்போதைய ஸ்பை படங்கள் போலாந்தில் எடுக்கப்பட்டு இருக்கிறது.
முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் டெஸ்டிங் செய்யப்படும் மாருதி EVX மாடல், தோற்றத்தில் அதன் கான்செப்ட் வெர்ஷன் போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலின் ஸ்டைலிங் பெருமளவு குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் முன்புறம் செதுக்கப்பட்டதை போன்ற தோற்றம் கொண்ட பொனெட் டிசைன் மற்றும் தடிமனான கிலாடிங் வழங்கப்படுகிறது.
இத்துடன் டேபரிங் ரூஃப்லைன் காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகிறது. சுசுகி EVX பின்புறம் லேயர்டு ஸ்பாயிலர், ரக்கட் பம்ப்பர் மற்றும் டெயில் லேம்ப்கள், எல்இடி ஸ்ட்ரிப் வழங்கப்படுகிறது. டெஸ்டிங் செய்யப்படும் மாருதி சுசுகி EVX மாடல் முழுக்க தற்காலிக லைட்டிங் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த காரின் கான்செப்ட் வெர்ஷனில் ஏரோடைனமிக் அலாய் வீல்கள், சி-பில்லரில் டோர் ஹேன்டில்கள் மவுன்ட் செய்யப்பட்டு இருந்தது. இத்துடன் ஷார்க் ஃபின் ஆன்டெனா மற்றும் ரியர் வைப்பர் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடப்பத்தது. காரின் உள்புறம் அதிகளவு வயர்கள் காணப்படுகின்றன. இத்துடன் 2-ஸ்போக் ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், ஸ்டீரிங் மவுன்ட் கண்ட்ரோல்கள், சுழலும் கண்ட்ரோல் டயல் வழங்கப்படுகிறது.
Photo Courtesy: Autogaleria






