search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    Kia Seltos
    X

    கியா செல்டோஸ் புது வேரியண்ட் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

    • புதிய செல்டோஸ் மாடல் இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • புதிய செல்டோஸ் மாடல் 3 நிறங்களில் கிடைக்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் தனது செல்டோஸ், சொனெட் மற்றும் கரென்ஸ் மாடல்களின் கிராவிட்டி வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. செல்டோஸ் எஸ்யுவி மாடலில் இந்த வேரியண்ட் HTX வெர்ஷனின் மேல் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ. 16 லட்சத்து 63 ஆயிரம் என துவங்குகிறது.

    புதிய செல்டோஸ் கிராவிட்டி மாடலில் டேஷ் கேமரா, 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வென்டிலேட்டெட் இருக்கைகள், போஸ் மியூசிக் சிஸ்டம், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு, 17 இன்ச் அலாய் வீல்கள், ரியர் ஸ்பாயிலர், கிராவிட்டி பேட்ஜ் வழங்கப்படுகிறது.

    இந்த வேரியண்ட் கிளேசியர் வைட் பியல், அரோரா பிளாக் பியல் மற்றும் டார்க் கன் மெட்டல் ஆகிய நிறங்களில் மேட் ஃபினிஷ் உடன் கிடைக்கிறது. செல்டோஸ் கிராவிட்டி வேரியண்டில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டிரான்ஸ்மிஷனுக்கு 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் iMT யூனிட் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×