search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    டெஸ்டிங்கில் சிக்கிய கியா செல்டோஸ் பேஸ்லிஃப்ட்
    X

    டெஸ்டிங்கில் சிக்கிய கியா செல்டோஸ் பேஸ்லிஃப்ட்

    • இந்திய சந்தையில் கியா செல்டோஸ் மாடல் விற்பனையில் 5 லட்சங்களை கடந்து இருக்கிறது.
    • 2022 ஆண்டு கியா நிறுவனம் செல்டோஸ் பேஸ்லிஃப்ட் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.

    கியா நிறுவனத்தின் புதிய செல்டோஸ் பேஸ்லிஃப்ட் மாடல் வரும் வாரங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில், புதிய செல்டோஸ் பேஸ்லிஃப்ட் மாடல் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

    2019 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், செல்டோஸ் மாடல் கியா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக இருந்து வருகிறது. இந்த எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. முன்னதாக 2022 ஆண்டு கியா நிறுவனம் செல்டோஸ் பேஸ்லிஃப்ட் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.

    டிசைனை பொருத்தவரை செல்டோஸ் பேஸ்லிஃப்ட் மாடல் அதன் சர்வதேச வேரியண்டை போன்றே காட்சியளிக்கிறது. இதன் முன்புறம் மற்றும் பின்புறம் மாற்றப்பட்டு இருக்கிறது. முன்புறம் கிரில் அளவில் பெரியதாக காட்சியளிக்கிறது. இத்துடன் புதிய எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்படுகின்றன. பம்ப்பரும் இந்த முறை பெரிதாக உள்ளது.

    பக்கவாட்டுகளில் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறம் டெயில் லேம்ப் டிசைன் மாற்றப்பட்டு இருக்கிறது. இதில் L வடிவம் கொண்ட லைட் பார் நடுவில் உள்ள கியா லோகோ வரை நீள்கிறது. பின்புற பம்ப்பரும் சற்று பெரியதாக காட்சியளிக்கிறது. டெயில்கேட் பகுதியில் GT பேட்ஜ் உள்ளது. அந்த வகையில் இந்த கார் GT லைன் மற்றும் டெக்-லைன் வெர்ஷன்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

    என்ஜினை பொருத்தவரை புதிய கியா செல்டோஸ் பேஸ்லிஃப்ட் மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் புதிய கரென்ஸ் மாடலில் உள்ள 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இத்துடன் பெட்ரோல் என்ஜினுடன் ஆட்டோமேடிக் CVT கியர்பாக்ஸ், டீசல் என்ஜினுடன் டார்க் கன்வெர்ட்டர் யூனிட், டர்போ பெட்ரோல் என்ஜினுடன் DCT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

    பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா செல்டோஸ் மாடல் இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா, மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், ஸ்கோடா குஷக், போக்ஸ்வேகன் டைகுன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    Photo Courtesy: Motorbeam

    Next Story
    ×