search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    மூன்று எஸ்.யு.வி. மாடல்கள்.. 2024-க்கு தயாராகும் கியா இந்தியா
    X

    மூன்று எஸ்.யு.வி. மாடல்கள்.. 2024-க்கு தயாராகும் கியா இந்தியா

    • சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவு துவக்கம்.
    • ஆட்டோ எக்ஸ்போ விழாவில் இந்த மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    கியா இந்தியா நிறுவனம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் மூன்று புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர கியா நிறுவனம் கடந்த வாரம் அறிமுகம் செய்த சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை விவரங்களை அறிவிக்க இருக்கிறது.


    சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவை கியா இந்தியா துவங்கியது. 2024 கியா சொனெட் மாடலின் என்ஜின் ஆப்ஷன்கள் எவ்வித மாற்றமும் இன்றி வழங்கப்படுகிறது. இந்த மாடலில் லெவல் 1 ADAS, 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


    கியா சொனெட்-ஐ தொடர்ந்து EV9 ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் வாகனத்தை கியா இந்தியா அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாத காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம். முன்னதாக இந்த ஆண்டு நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் இந்த மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது.


    இரண்டு மாடல்களின் வரிசையில் முற்றிலும் புதிய கியா கார்னிவல் மாடல் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த கார் அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகளவு ரக்கட், ஸ்போர்ட் தோற்றத்தை கொண்டிருக்கும் வகையில் மாற்றங்களை கொண்டிருக்கிறது.

    இவற்றுடன் கியா இந்தியா நிறுவனம் தனது கியா கிளாவிஸ் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கார் சொனெட் மற்றும் செல்டோஸ் மாடல்களின் இடையில் நிலை நிறுத்தப்பட இருக்கிறது. இது ஐ.சி. என்ஜின் மற்றும் முழுமையான எலெக்ட்ரிக் பவர்-டிரெயின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×