search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ஹைப்ரிட் முதல் ADAS சூட் வரை.. இந்திய ரீ-என்ட்ரிக்கு கலக்கலாக ரெடியான புதிய ரெனால்ட் டஸ்டர்
    X

    ஹைப்ரிட் முதல் ADAS சூட் வரை.. இந்திய ரீ-என்ட்ரிக்கு கலக்கலாக ரெடியான புதிய ரெனால்ட் டஸ்டர்

    • அதிக அம்சங்கள் நிறைந்த கேபின் உள்ளது.
    • புதிய பவர்டிரெயின் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.

    ரெனால்ட் நிறுவனம் முற்றிலும் புதிய டஸ்டர் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மிட் சைஸ் எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் மாடல் அதிநவீன ஸ்டைலிங், அதிக அம்சங்கள் நிறைந்த கேபின் மற்றும் புதிய பவர்டிரெயின் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.

    புதிய காரின் வெளிப்புறம் ரக்கட் எஸ்.யு.வி. போன்ற தோற்றத்தை வழங்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் Y வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், முன்புறம் மற்றும் பின்புறம் ரிவைஸ் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் பின்புறத்தில் Y வடிவம் கொண்ட ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.


    இத்துடன் பருத்த வீல் ஆர்ச்கள், பாடி கிளாடிங், ரூஃப் ரெயில்கள், பில்லரில் மவுன்ட் செய்யப்பட்ட கைப்பிடிகள், எக்ஸ்டென்ட் செய்யப்பட்ட ரூஃப் ஸ்பாயிலர் மற்றும் முரட்டுத்தனமான பம்ப்பர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    காரின் உள்புறத்தில் 10.1 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி சரவுன்ட் கேமரா, ADAS சூட், Y வடிவம் கொண்ட ஏ.சி. வென்ட்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல்கள், புதிய ஸ்டீரிங் வீல், ரிடிசைன் செய்யப்பட்ட சென்டர் கன்சோல், புதிய கியர் செலக்டர் டயல் உள்ளன.

    பவர்டிரெயினை பொருத்தவரை சர்வதேச சந்தையில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் மாடல் 1.6 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட், 1.2 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் மற்றும் எல்.பி.ஜி. வசதி வழங்கப்படுகிறது. இவற்றில் இரு ஆப்ஷன்கள் இந்திய சந்தையில் கிடைக்கும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர், சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மற்றும் எம்.ஜி. ஆஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    Next Story
    ×