என் மலர்tooltip icon

    இது புதுசு

    பிஎஸ்6 2 விதிகளுக்கு அப்டேட் செய்யப்பட்ட ஹோண்டா யுனிகான்
    X

    பிஎஸ்6 2 விதிகளுக்கு அப்டேட் செய்யப்பட்ட ஹோண்டா யுனிகான்

    • ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் யுனிகான் மாடலை பிஎஸ்6 2 விதிகளுக்கு அப்டேட் செய்தது.
    • புதிய யுனிகான் மாடலிலும் 160சிசி, PGM-FI என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 2 விதிகளுக்கு பொருந்தும் 2023 ஹோண்டா யுனிகான் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹோண்டா யுனிகான் விலை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இதோடு புதிய மாடல் - பியல் இக்னியஸ் பிளாக், இம்பீரியல் ரெட் மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் மற்றும் பியல் சைரென் புளூ என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. 2023 ஹோண்டா யுனிகான் மாடலில் 160சிசி, PGM-FI என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த என்ஜின் 13.27 ஹெச்பி பவர், 14.58 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளுக்கு பத்து ஆண்டுகள் வரையிலான வாரண்டி வழங்கப்படுகிறது.

    இதன் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் இன்றி, ஒரே மாதிரியான டிசைன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் டைமன்ட் ஃபிரேம், டெலிஸ்கோபிக் முன்புற சஸ்பென்ஷன், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. இத்துடன் 18-இன்ச் அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    Next Story
    ×