search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    சிட்ரோயன் C3 முன்பதிவு துவக்கம்
    X

    சிட்ரோயன் C3 முன்பதிவு துவக்கம்

    • சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய C3 மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்த கார் இருவித டியூனிங்கில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.

    சிட்ரோயன் நிறுவனம் தனது C3 மாடலை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், புதிய சிட்ரோயன் C3 மாடலுக்கான முன்பதிவு துவங்கி உள்ளது. இந்த மாடலின் விலை விவரங்கள் ஜூலை 20 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்தியாவில் சிட்ரோயன் C3 மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் - லைவ் மற்றும் ஃபீல் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    C5 ஏர்கிராஸ் எஸ்.யு.வி.யை தொடர்ந்து சிட்ரோயன் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கும் இரண்டாவது மாடல் சிட்ரோயன் C3 ஆகும். இந்த மாடல் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப், டூ-டோன் பெயின்ட், சில்வர் ஸ்கிட் பிளேட்கள், பிளாஸ்டிக் கிளாசிங் கொண்டுள்ளது. புதிய சிட்ரோயன் C3 நான்கு மோனோ டோன் மற்றும் இரண்டு டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது.


    காரின் உள்புறம் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 10 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், லெதர் இருக்கை கவர்கள், பிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், மேனுவல் HVAC சிஸ்டம் கொண்டிருக்கிறது.

    புதிய சிட்ரோயன் C3 மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த என்ஜின்கள் முறையே 81 ஹெச்.பி. மற்றும் 109 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×