search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ரூ. 57 லட்சம் விலையில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் இந்தியாவில் அறிமுகம்
    X

    ரூ. 57 லட்சம் விலையில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் இந்தியாவில் அறிமுகம்

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புது 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடலில் புது ஒஎஸ் கொண்ட 14.9 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது.
    • இந்த காரின் அளவீடுகளில் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து நீண்ட வீல்பேஸ் கொண்ட மாடலாக நீடிக்கிறது.

    பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் 2023 3 சீரிஸ் கிரான் லிமோசின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 57 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2021 ஜனவரி வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடம்பர செடான் மாடல் தற்போது முதல் முறையாக அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது.

    மாற்றங்களை பொருத்தவரை தோற்றத்தில் புது காரில் ரிடிசைன் செய்யப்பட்ட ஹெட்லேம்ப்கள், ட்வீக் செய்யப்பட்ட கிரில் வழங்கப்பட்டுள்ளது. பம்ப்பர்கள் மாற்றப்பட்டு, புதிய அலாய் வீல்கள், பின்புறம் டெயில் லேம்ப்கள் மாற்றப்பட்டு இருக்கிறது. உள்புறம் i4 செடான் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. ரிடிசைன் செய்யப்பட்ட டேஷ்போர்டு, வளைந்த டிஸ்ப்ளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் ஏசி வெண்ட்களும் ரிடிசைன் செய்யப்பட்டுள்ளது.

    உள்புறம் வளைந்த டூயல் ஸ்கிரீன் செட்டப் உள்ளது. இது 12.3 இன்ச் மற்றும் 14.9 இன்ச் ஃபிரேம்லெஸ் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிநவீன ஒஎஸ் 8 உள்ளது. இதன் செண்டர் கன்சோல் டிசைனில் வழக்கமான கியர் லீவருக்கு மாற்றாக கியர் ஸ்விட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பவர்டு சீட்கள், பானரோமிக் சன்ரூஃப், லெதர் இருக்கை மேற்கவர்கள், ஹார்மன் கார்டன் ஸ்டீரியோ சிஸ்டம் மற்றும் பார்கிங் அசிஸ்டண்ட் உள்ளது.

    என்ஜினை பொருத்தவரை புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி புது காரில் 330i மற்றும் 320d மாடலில் உள்ளதை போன்ற 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் 330i மாடலின் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 254 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 320d டீசல் எனஜின் 187 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் விலை தற்போதைய வெர்ஷனை விட சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும்.

    Next Story
    ×