search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    அட.. இது லிஸ்ட்-லயே இல்லையே.. புதிதாக CNG பைக் உருவாக்கும் பஜாஜ்
    X

    அட.. இது லிஸ்ட்-லயே இல்லையே.. புதிதாக CNG பைக் உருவாக்கும் பஜாஜ்

    • புதிய பைக் புருசர் என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
    • இது பிளாட்டினா பிராண்டிங்கில் வெளியிடப்படலாம்.

    பஜாஜ் நிறுவனம் CNG எரிபொருளில் இயங்கும் மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பைக் இன்னும் ஒரே வருடத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்றும் கூறப்படுகிறது.

    இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, புதிய பைக் புருசர் என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த மாடலின் உற்பத்தி இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தெரிகிறது. டெஸ்டிங் செய்வதற்காக இந்த பைக்கின் ப்ரோடோடைப்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    முதற்கட்டமாக இந்த பைக் ஔரங்காபாத் ஆலையிலும், அதன்பிறகு நாகர் ஆலையிலும் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த பைக் பற்றிய தகவல்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், இது பிளாட்டினா பிராண்டிங்கில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. பஜாஜ் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மாடலாக பிளாட்டினா இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிளாகவும் உள்ளது.

    CNG-யில் இயங்கும் பிளாட்டினா மாடல் நகர்ப்புற பகுதிகளில் அதிக கவனம் ஈர்க்கும் என்று தெரிகிறது. முதற்கட்டமாக இந்த மாடல் CNG, பரவலாக கிடைக்கும் டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் பஜாஜ் நிறுவனம் வளர்ந்து வரும் பசுமை எரிபொருள் பிரிவில் கவனம் செலுத்த முடியும்.

    Next Story
    ×