search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ஆடியின் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார் - இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு!
    X

    ஆடியின் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார் - இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு!

    • ஆடி நிறுவனத்தின் பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் கார் மாடல் விரைவில் அறிமுகமாகிறது.
    • புதிய ஆடி Q8 இ டிரான் மாடலில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன.

    ஆடி Q8 இ டிரான் மாடல் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 18-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. புதிய Q8 இ டிரான் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஆடி Q8 இ டிரான் விலை ரூ. 1 கோடியே 32 லட்சம் முதல் ரூ. 1 கோடியே 35 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

    புதிய Q8 இ-டிரான் மாடலில் பிளாக்டு-அவுட் கிரில் சரவுன்ட்கள், ரிடிசைன் செய்யப்பட்ட கிரில், மெஷ் டிசைன் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆடியின் புதிய மோனோக்ரோம் லோகோ வழங்கப்பட்டு உள்ளது. கிரில் பகுதியின் மேல்புறத்தில் லைட் பார் உள்ளது.

    இந்த காரின் முன்புற பம்ப்பர் ரி-ப்ரோஃபைல் செய்யப்பட்டு, சற்றே அளவில் பெரிய ஏர் இன்டேக்குகளை கொண்டிருக்கிறது. இந்த காரில் 114 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 600 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் கிடைக்கும்.

    புதிய ஆடி Q8 இ டிரான் மாடலில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இவை ஒருங்கிணைந்து 408 ஹெச்பி பவர், 664 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும்.

    Next Story
    ×