search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    இணையத்தில் லீக் ஆன டொயோட்டா பார்ச்சூனர் ஹைப்ரிட்
    X

    கோப்புப் படம்

    இணையத்தில் லீக் ஆன டொயோட்டா பார்ச்சூனர் ஹைப்ரிட்

    • டொயோட்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை பார்ச்சூனர் மாடல் TNGA-F பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது.
    • 2024 பார்ச்சூனர் மாடல் முற்றிலும் புதிய டக்கோமா பிக்கப் டிரக்-ஐ தழுவி உருவாக்கப்படும் என்று தெரிகிறது.

    டொயோட்டா நிறுவனம் தனது மூன்றாம் தலைமுறை பார்ச்சூனர் மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து, புதிய பார்ச்சூனர் மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. எனினும், இது பற்றி டொயோட்டா சார்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை.

    புதிய 7 சீட்டர் எஸ்யுவி பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதில் 2024 பார்ச்சூனரின் முற்றிலும் புதிய டிசைன் பற்றிய விவரங்களும் இடம்பெற்று உள்ளது. அதன்படி 2024 பார்ச்சூனர் மாடல் முற்றிலும் புதிய டக்கோமா பிக்கப் டிரக்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    கோப்புப் படம்

    அதன்படி இந்த காரின் முன்புறம் ஹெக்சகோன் வடிவம் கொண்ட கிரில் பகுதி, மூன்றடுக்கு க்ரோம் கிலில் ஸ்லாட்கள், நடுவில் டொயோட்டா பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப் கிளஸ்டர், எல்இடி டிஆர்எல்கள், பம்ப்பரில் அகலமான ஏர் இன்டேக், ஸ்கிட் பிலேட் காணப்படுகிறது.

    பக்கவாட்டில் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள், உயரமான பில்லர்கள், பின்புறத்தில் முற்றிலும் புதிய ராப்-அரவுன்ட் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகிறது. புதிய தலைமுறை பார்ச்சூனர் மற்றும் ஹிலக்ஸ் மாடல்கள் TNGA-F பிளாட்பார்மில் உருவாக்கப்படுகின்றன. இதே பிளாட்பார்மில் ஏற்கனவே டுன்ட்ரா, லேன்ட் குரூயிசர் மற்றும் லெக்சஸ் LX போன்ற மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இவைதவிர புதிய தலைமுறை பார்ச்சூனர் மாடலில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் தற்போது வழங்கப்பட்டு இருக்கும் 2.8 லிட்டர் GD சீரிஸ், நான்கு சிலின்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த யூனிட் முதற்கட்டமாக ஹிலக்ஸ் மாடலில் வழங்கப்படும் என்றும் தெரிகிறது. இதில் 48 வோல்ட் பேட்டரி மற்றும் சிறிய எலெக்ட்ரிக் மோட்டார் ஜெனரேட்டர் வழங்கப்படலாம்.

    Next Story
    ×