search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படும் புதிய கியா கார்னிவல் - வெளியீடு எப்போ தெரியுமா?
    X

    இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படும் புதிய கியா கார்னிவல் - வெளியீடு எப்போ தெரியுமா?

    • ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் KA4 கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
    • இந்த கார் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது.

    கியா நிறுவனம் தனது முற்றிலும் புதிய கார்னிவல் மாடலை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், புதிய கார்னிவல் மாடலுக்கான டெஸ்டிங்கை கியா இந்தியா துவங்கியுள்ளது. முன்னதாக இந்த மாடல் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் KA4 கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    தற்போது இந்த மாடலின் டெஸ்டிங் துவங்கியுள்ள நிலையில், கார்னிவல் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று தெரியவந்துள்ளது. ஸ்பை படங்களின் படி இந்த கார் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது.


    இதில் அளவில் பெரிய எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், "டைகர் நோஸ்" கிரில், ரி-ப்ரோஃபைல் செய்யப்பட்ட பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் எல் வடிவம் கொண்ட எல்.இ.டி. டெயில்லைட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த மாடலில் புதிய அலாய் வீல்கள் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

    புதிய தலைமுறை கியா கார்னிவல் மாடல் பிரீமியம் கேபின் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. உள்புறம் இரண்டு 12.3 இன்ச் ஸ்கிரீன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் ரிவைஸ்டு ஏ.சி. வென்ட்கள், இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீனின் கீழ்புறம் ஆடியோ கண்ட்ரோல்கள் வழங்கப்படுகிறது.


    சர்வதேச சந்தையில் 2024 கியா கார்னிவல் மாடல் 7, 9 மற்றும் 11 பேர் பயணம் செய்யக்கூடிய வகையில் இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இவற்றில் 7 மற்றும் 9 பேர் பயணம் செய்யக்கூடிய மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இத்துடன் சுழலும் வகையிலான டிரைவ் செலக்டர், ஹெட்-அப் டிஸ்ப்ளே, டிஜிட்டல் ரியர்வியூ மிரர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    Next Story
    ×