என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இது புதுசு

புதிய அலாய் வீல்களுடன் உருவாகும் எம்ஜி ஹெக்டார் பிஎஸ்6 2

- எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய ஹெக்டார் மாடல் விவரங்கள் வெளியாகி உள்ளது.
- சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 2023 ஹெக்டார் மாடலில் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் கார் மாடல்கள் விற்பனை இந்தியாவில் கணிசமாக அதிகரித்து வருகிறது. மேலும் கார் மாடல்களை அதிக போட்டியானவையாக மாற்ற எம்ஜி மோட்டார் அடிக்கடி அப்டேட்களை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் எம்ஜி நிறுவனம் 2023 ஹெக்டார் மாடலை அறிமுகம் செய்தது.
புதிய 2023 எம்ஜி ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஏராளமான மாற்றங்களை கொண்டிருந்தது. எனினும், இந்த காரின் அலாய் வீல் அதற்கு முந்தைய வெர்ஷனில் இருந்ததை போன்றே வழங்கப்பட்டது. ஏற்கனவே வெளியான தகவல்களின் 2023 எம்ஜி ஹெக்டார் மாடல் புதிய அலாய் வீல் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
எனினும், இது நடக்காமலேயே இருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் எம்ஜி நிறுவனம் இந்த நிலையை விரைவில் மாற்ற இருப்பது உறுதியாகி இருக்கிறது. 2023 ஹெக்டார் மாடல் விற்பனையகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், 2023 ஹெக்டார் மாடல் புதிய அலாய் வீல் டிசைன் கொண்டிருக்கிறது.
அந்த வகையில், 2023 எம்ஜி ஹெக்டார் மாடல் புதிய அலாய் வீல்களை பெற்று இருக்கிறது. இந்த மாடலில் அலாய் வீல் மட்டுமின்றி என்ஜின் ஆப்ஷன்கள் பிஎஸ்6 2 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக 2023 எம்ஜி ஹெக்டார் மாடலின் விலை ரூ. 14 லட்சத்து 73 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 22 லட்சத்து 43 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய 2023 எம்ஜி ஹெக்டார் மாடலின் விலை இதை விட ரூ. 60 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி ஹெக்டார் 2021 ஆண்டில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்டது. இதில் காஸ்மெடிக் மாற்றங்கள், புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தது.
Photo Courtesy: Rushlane