search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    2023 கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் இந்தியாவில் அறிமுகம்
    X

    2023 கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் இந்தியாவில் அறிமுகம்

    • புதிய செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல் மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்கள், பத்து வித்தியாசமான நிறங்களில் கிடைக்கிறது.
    • 2023 கியா செல்டோஸ் மாடலில் பானரோமிக் சன்ரூஃப், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் உள்ளது.

    கியா இந்தியா நிறுவனம் 2023 செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2023 கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடலின் விலை ரூ. 10 லட்சத்து 89 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2019-இல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து கியா செல்டோஸ் பெற்றிருக்கும் முதல் மிகப்பெரிய அப்டேட் இது ஆகும்.

    புதிய செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல்- டெக் லைன், GT லைன், X லைன் என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் பத்து வித்தியாசமான நிறங்களில் கிடைக்கிறது. டிசைனை பொருத்தவரை செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடலின் முன்புற தோற்றம் புதிதாக மாற்றப்பட்டு, ரிவைஸ்டு ஹெட்லேம்ப்கள், கிரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    பக்கவாட்டில் அலாய் வீல் டிசைன் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. பின்புறம் சிங்கில்-பீஸ் டெயில் லேம்ப், ராப்-அரவுன்ட்களை கொண்டிருக்கிறது. காரின் உள்புறம் புதிய டேஷ்போர்டு, டூயல் ஸ்கிரீன்- 10.1 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், HD டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வேரியன்டிற்கு ஏற்ற பெய்க், பிரவுன் பிளாக் அல்லது கிரே நிற பினிஷ் வழங்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை கியா செல்டோஸ் மாடலில் பானரோமிக் சன்ரூஃப், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ADAS உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜிங், கூல்டு குலோவ் பாக்ஸ், HUD, ஏர் பியூரிபயர், பவர் மிரர்கள், ரிவர்ஸ் கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ஆறு ஏர்பேக், இபிடி கொண்ட ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல், ஐசோபிக்ஸ் சைல்டு மவுன்ட் புதிய காரின் அனைத்து வேரியன்ட்களிலும் வழங்கப்படுகிறது. 2023 கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல்- 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் GDi டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இவை முறையே 113 ஹெச்பி பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT டிரான்ஸ்மிஷன், 158 ஹெச்பி பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க், 6 ஸ்பீடு கிளட்ச்லெஸ் மேனுவல் அல்லது 7 ஸ்பீடு DCT யூனிட் மற்றும் 114 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க், 6 ஸ்பீடு கிளட்ச்லெஸ் மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×