search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஜாகுவார் எக்ஸ்.இ. ஃபேஸ்லிஃப்ட்
    X
    ஜாகுவார் எக்ஸ்.இ. ஃபேஸ்லிஃப்ட்

    இந்தியாவில் ஜாகுவார் எக்ஸ்.இ. ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

    ஜாகுவார் நிறுவனம் இந்தியாவில் புதிய எக்ஸ்.இ. ஃபேஸ்லிஃப்ட் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.



    ஜாகுவார் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எக்ஸ்.இ. ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜாகுவார் எக்ஸ்.இ. ஃபேஸ்லிஃப்ட் விலை ரூ. 44.98 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த செடான் கார்: எஸ் மற்றும் எஸ்.இ. என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இது பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    முந்தைய மாடலை விட புதிய காரில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் இதன் வடிவமைப்பு முந்தைய மாடலை விட அகலமாக இருக்கிறது. முன்புறம் பெரிய கிரில், மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஜாகுவார் எக்ஸ்.இ. ஃபேஸ்லிஃப்ட்

    காரின் பின்புறம் கூர்மையான எல்.இ.டி. டெயில்லைட்களும் பக்கவாட்டில் புதிய வடிவமைப்பு கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை காரின் வெளிப்புறத்தை மேம்படுத்தி ஸ்போர்ட் தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

    உள்புறம் இரட்டை தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் வசதியையும், மற்றொன்று கிளைமேட் கண்ட்ரோல்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே 10.2 இன்ச் தொடுதிரை சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் கிடைக்கிறது.

    ஜாகுவார் எக்ஸ்.இ. ஃபேஸ்லிஃப்ட் மாடலில் முந்தைய காரில் உள்ள என்ஜின்களே வழங்கப்பட்டுள்ளது. இதில் 2.0 லிட்டர் இன்ஜினியம் பெட்ரோல் மற்றும் 2.0 இன்ஜினியம் டீசல் யூனிட்களை கொண்டிருக்கிறது. எனினும், புதிய என்ஜின்கள் பி.எஸ்.6 தரத்திற்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×