search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி.
    X
    2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி.

    2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. இந்தியாவில் வெளியானது

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2020 ஜி.எல்.சி. கார் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய 2020 ஜி.எல்.சி. எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 52.75 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த எஸ்.யு.வி.: ஜி.எல்.சி. 200 மற்றும் ஜி.எல்.சி. 220டி 4மேடிக்  வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 57.75 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    வடிவமைப்பை பொருத்தவரை மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. மாடல் பார்க்க முந்தைய ஃபேஸ்லிஃப்ட் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த காரின் முன்புறம் புதிய கிரில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மேம்பட்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மேம்பட்ட எல்.இ.டி. டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி.

    புதிய கார் மெர்சிடிஸ் பென்ஸ் யூசர் எக்ஸ்பீரியன்ஸ் தொழில்நுட்பம் கொண்ட முதல் கார் ஆகும். இந்த தொழில்நுட்பம் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்டீரிங் வீல், வாய்ஸ் மற்றும் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டிங் போன்ற அம்சங்களை கொண்டுடிருக்கிறது.

    2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கார்: 255 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 192 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களுடன் 9-ஸ்பீடு ஜி டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் கொண்டிருக்கிறது.
    Next Story
    ×