search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    எலான் மஸ்க்
    X
    எலான் மஸ்க்

    ஐந்து ஆண்டுகளில் எலெக்ட்ரிக் விமானங்கள் தயாராகிடும் - எலான் மஸ்க் சுவாரஸ்ய அறிவிப்பு

    டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் எலெக்ட்ரிக் திறன் கொண்ட விமானங்கள் பற்றிய சுவாரஸ்ய தகவலை வழங்கி இருக்கிறார்.



    பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்கள் இருக்கின்றன. பல நாடுகளில் எலெக்ட்ரிக் கார், பஸ்கள் போன்ற வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் இருப்பதால் அதனை செயல்படுத்த பல நாடுகள் முயன்று வருகின்றன. தற்போது மின்சாரத்தால் இயக்கப்படும் சிறிய விமானங்கள் நடைமுறையில் உள்ளன. இதில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

    இதற்கிடையே மின்சாரம் மூலம் எலெக்ட்ரிக் விமானங்களை இயக்க ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பரிசோதனைகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரியான எலான் மஸ்க் பெரிய ரக எலெக்ட்ரிக் விமானங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் இயங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

    எலெக்ட்ரிக் துறையில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை புகுத்தி வரும் எலான் மஸ்க் உலக புகழ் பெற்றவர் ஆவார். அவரிடம் ட்விட்டர் மூலம் ஒருவர், பேட்டரிகள் மூலம் விமானங்களை இயக்குவது சாத்தியப்படுமா? அல்லது விமானங்களை இயக்கும் அளவுக்கு போதுமான சக்திமிக்க பேட்டரிகள் இல்லையா? என்று கேள்வி கேட்டிருந்தார்.

    எலெக்ட்ரிக் விமானம் - கோப்புப்படம்

    அதற்கு எலான் மஸ்க் அளித்த பதிலில் கூறிய தாவது:-

    “ஆம், எலெக்ட்ரிக் விமானங்கள் இயக்க சாத்தியம் உள்ளது. ஆனால் இன்னும் வரம்புக்குள் வர வேண்டியது இருக்கிறது. வரும் ஆண்டுகளில் பேட்டரி ஆற்றல் அடர்த்தி மேம்படுவதால் சாத்தியப்படும்.

    மின்சார மோட்டார்கள் மிகக்குறைவான எடையை கொண்டுள்ளன மற்றும் சேமிக்கப்பட்ட ஆற்றலை எரிப்பு இயந்திரங்களை விட அதிக ஆற்றலுடன் மாற்றுகின்றன. ஐந்து ஆண்டுகளில் பேட்டரிகள், விமான எரிபொருளுடன் போட்டியிட முடியும் என்று எதிர்பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×