search icon
என் மலர்tooltip icon

    கார்

    லெக்சஸ் LM சார்ந்து உருவாக்கப்பட்ட டொயோட்டா வெல்ஃபயர் அறிமுகம்
    X

    லெக்சஸ் LM சார்ந்து உருவாக்கப்பட்ட டொயோட்டா வெல்ஃபயர் அறிமுகம்

    • புதிய வெல்ஃபயர் மாடல் மூன்று மீட்டர்கள் நீளமான வீல்பேஸ் கொண்டிருக்கிறது.
    • வெல்ஃபயர் எம்பிவி மாடல் டொயோட்டா நிறுவனத்தின் TNGA-K பிளாட்ஃபார்மில் உருவாகிறது.

    டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய வெல்ஃபயர் மாடலின் முதற்கட்ட புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளன. முன்னதாக இந்த புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்த நிலையில், தற்போது இவை வெளியாகி உள்ளன. புதிய டொயோட்டா வெல்ஃபயர் மாடல் லெக்சஸ் LM350h எம்பிவி மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    முதற்கட்டமாக ஜப்பானில் விற்பனைக்கு வரும் புதிய டொயோட்டா வெல்ஃபயர் மாடல் அதன் பிறகு மற்ற நாடுகளில் வெளியாகும். அடுத்த தலைமுறை வெல்ஃபயர் எம்பிவி மாடல் டொயோட்டா நிறுவனத்தின் TNGA-K பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. புதிய மாடல் பாக்சி ஸ்டைலிங், தற்போதைய மாடலை விட நீளமாக உள்ளது.

    புதிய வெல்ஃபயர் மாடலில் மூன்று மீட்டர்கள் நீளமான வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த காரின் பாடி ஸ்டைல் லெக்சஸ் LM மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. புதிய டொயோட்டா வெல்ஃபயர் மாடல் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 2.4 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 275 ஹெச்பி பவர், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 2.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 250 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×