search icon
என் மலர்tooltip icon

    கார்

    டொயோட்டாவின் எர்டிகா வெர்ஷன் - விரைவில் இந்தியா வரும் லோ-பட்ஜெட் 7 சீட்டர்!
    X

    டொயோட்டாவின் எர்டிகா வெர்ஷன் - விரைவில் இந்தியா வரும் லோ-பட்ஜெட் 7 சீட்டர்!

    • இந்தியாவில் இன்னோவா க்ரிஸ்டா, இன்னோவா ஹைகிராஸ் மாடல்களின் விலை ரூ. 20 லட்சம் ஆகும்.
    • புதிய எம்பிவி மாடலின் என்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் NA 4 சிலின்டர் யூனிட் வழங்கப்படலாம்.

    டொயோட்டா மற்றும் மாருதி சுசுகி நிறுவனங்கள் கூட்டணி அமைத்து பல்வேறு வாகனங்களை ரிபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டுவரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் இரு நிறுவனங்கள் கூட்டணியில் விட்டாரா பிரெஸ்ஸா - அர்பன் குரூயிசர், பலேனோ - கிளான்சா, கிரான்ட் விட்டாரா - அர்பன் குரூயிசர் ஹைரைடர் மற்றும் இன்னோவா ஹைகிராஸ் - இன்விக்டோ போன்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

    அந்த வகையில், டொயோட்டா நிறுவனம் இரண்டு மாருதி சுசுகி கார்களின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ஒன்று மாருதி சுசுகி எர்டிகா காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட ருமியன் எம்பிவி மாடல் ஆகும். டொயோட்டா நிறுவனம் ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் எம்பிவி மாடலை விற்பனை செய்யாத நிலையில், இது அந்நிறுவனத்திற்கு சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது.

    இந்திய சந்தையில் டொயோட்டா விற்பனை செய்து வரும் இன்னோவா க்ரிஸ்டா மற்றும் இன்னோவா ஹைகிராஸ் மாடல்களின் விலை ரூ. 20 லட்சம் பட்ஜெட்டில் துவங்குகின்றன. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ருமியன் மாடலின் விலை ரூ. 8.8 லட்சத்தில் இருந்து துவங்கும் என்று தெரிகிறது. இந்தியாவில் ருமியன் பெயரை பயன்படுத்துவதற்காக டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே காப்புரிமை பெற்றுவிட்டது.

    தென் ஆப்பிரிக்கா மாடலில் உள்ளதை போன்றே புதிய ருமியன் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறம் ஒரே மாதிரியே காட்சியளிக்கும் என்று தெரிகிறது. இதன் முன்புற தோற்றத்தில் மட்டும் சிறு மாற்றம் செய்யப்படலாம். என்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் NA 4 சிலின்டர் யூனிட் வழங்கப்படலாம். இது 103 ஹெச்பி பவர், 138 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் புதிதாக 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படும் என்று தெரிகிறது. மேலும் மாருதி சுசுகி எர்டிகா மாடலை போன்றே இதுவும் 7 சீட்டர் ஆப்ஷனில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    Next Story
    ×