என் மலர்
கார்

முற்றிலும் புதிய ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட்... வேரியண்ட் மற்றும் முழு விவரங்கள்..!
- ஐந்து டூயல்-டோன்ஆப்ஷன்களும் கான்ட்ராஸ்ட் பின்க் ரூஃப் பெறுகின்றன.
- இந்த பிரிவில் முதல் முறையாக பின்புற இருக்கை மசாஜ் செயல்பாடும் வழங்கப்படுகிறது.
இந்த வார தொடக்கத்தில், ஸ்கோடா ஆட்டோ இந்தியா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட்டது, அதற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கி உள்ளன. ஸ்கோடா நிறுவனம் புதிய ஃபேஸ் லிஃப்ட் விலைகளை அறிவிக்காத நிலையில், காரை முன்பதிவு செய்யும் போது கிடைக்கும் ஆப்ஷன்களை பார்ப்போம்.
2026 குஷாக் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கும். கிளாசிக்+, சிக்னேச்சர், ஸ்போர்ட்லைன், பிரெஸ்டீஜ் மற்றும் மான்டே கார்லோ. இந்த கார் சிம்லா கிரீன், செர்ரி ரெட், ஸ்டீல் கிரே, பிரில்லியண்ட் சில்வர், கேண்டி ஒயிட், கார்பன் ஸ்டீல், டீப் பிளாக் மற்றும் லாவா புளூ உள்ளிட்ட மோனோ-டோன் விருப்பங்களுடன் 13 வண்ணங்களில் கிடைக்கும். சிம்லா கிரீன், செர்ரி ரெட், ஸ்டீல் கிரே, கேண்டி ஒயிட் மற்றும் பிரில்லியண்ட் சில்வர் ஆகிய ஐந்து டூயல்-டோன்ஆப்ஷன்களும் கான்ட்ராஸ்ட் பின்க் ரூஃப் பெறுகின்றன.
அம்சங்களைப் பொறுத்தவரை, புதிய ஸ்கோடா குஷாக், எலெக்ட்ரிக் சன்ரூஃப், முழு LED விளக்குகள், தொடர்ச்சியான டர்ன் இண்டிகேட்டர்கள், ஆறு ஏர்பேக்குகள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், அலாய் வீல்கள் மற்றும் விரும்புவோர் தேர்வு செய்யும் வகையில் (புதிய) 8-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது. மேலும் இந்த பிரிவில் முதல் முறையாக பின்புற இருக்கை மசாஜ் செயல்பாடும் வழங்கப்படுகிறது.






